அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் டிசம்பர், ஜனவரி: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். அதற்குப் பதிலாக என்னுடைய பைபிள் கதை புத்தகம், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்), இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் ஆகியவற்றை அளிக்கலாம். இந்தப் புத்தகங்கள் எதுவுமே உங்கள் சபையில் இல்லையென்றால், பக்கத்து சபைகளில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றனவா என்று தயவுசெய்து கேளுங்கள்; இருந்தால் வாங்கி பயன்படுத்துங்கள். பிப்ரவரி: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுக்க வேண்டும்.
◼ 2004-ம் ஆண்டிற்கான நினைவு ஆசரிப்பு ஞாயிறு, ஏப்ரல் 4, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைபெறும் என்பதை தயவுசெய்து கவனியுங்கள். இது முன்னதாகவே அறிவிக்கப்படுவதன் நோக்கம், ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் பயன்படுத்துகையில் சகோதரர்கள் வேறொரு மன்றத்தை புக் செய்ய அல்லது ரிசர்வ் செய்ய, மற்ற வசதிகளை செய்யவுமே. நினைவு ஆசரிப்பு அமைதியாகவும் சுமுகமாகவும் நடப்பதற்காக, அந்தக் கட்டடத்தில் நடக்கும் மற்ற நிகழ்ச்சிகளால் எந்தவித இடையூறும் குழப்பமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு அந்த மன்றத்து நிர்வாகத்திடம் மூப்பர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருப்பதால், நினைவு ஆசரிப்பு பேச்சாளரை நியமிக்கையில், ஒவ்வொரு வருடமும் ஒரே சகோதரரை நியமிக்காமல் அல்லது சுற்றுமுறையில் ஒருவர் மாறி ஒருவராக நியமிக்காமல், அதிக தகுதி வாய்ந்த மூப்பர்களில் ஒருவரை மூப்பர் குழு தேர்ந்தெடுக்க வேண்டும். அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் திறம்பட்ட மூப்பர் ஒருவர் பேச்சு கொடுக்கும் நிலையில் இருந்தால் அப்போது அவரை உபயோகிக்க வேண்டும்.
◼ வட்டார ஊழியரின் சந்திப்பின் போது தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடைபெறும் விதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி 2003 முதல், ஆரம்ப பாட்டுக்கும் ஜெபத்திற்கும் பின்பு பள்ளி சுமார் 25 நிமிடத்துக்கு நடைபெறும். பேச்சு பண்பு ஒன்றின் பேரில் 5 நிமிட பேச்சும், பத்து நிமிட போதனா பேச்சும், பத்து நிமிட பைபிள் சிறப்புக் குறிப்புகளும் இருக்கும். நியமிப்பு எண் 2, 3, 4 ஆகியவை இருக்காது. பள்ளிக்குப் பின்பு 30 நிமிட ஊழியக் கூட்டம் நடைபெறும். பாட்டுக்குப் பின்பு 30 நிமிடத்தை வட்டார கண்காணி எடுத்துக்கொள்வார், பிறகு முடிவான பாட்டும் ஜெபமும் இருக்கும்.
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் —நேப்பாளி
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? —குஜராத்தி
பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? (துண்டுப்பிரதி எண் 26) —குஜராத்தி, தமிழ்
நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா?—அல்லது நம்மிடம் கடவுள் கணக்கு கேட்பாரா? (துண்டுப்பிரதி எண் 71) —உருது, ஹிந்தி
மிக மகத்தான பெயர் (துண்டுப்பிரதி எண் 72) —ஹிந்தி
யெகோவாவின் சாட்சிகள் யார்? (துண்டுப்பிரதி எண் 73) —ஹிந்தி
நரக தண்டனை தேவ நீதியா? (துண்டுப்பிரதி எண் 74) —ஹிந்தி