தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
செப்டம்பர் 2 முதல் டிசம்பர் 23, 2002 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. யெகோவாவின் அற்புதமான பண்புகளை தியானிப்பது அவரிடம் நெருங்கி வர உதவும் முக்கிய படியாகும். (சங். 143:5) [w-TL00 10/15 பக். 4 பாரா 6]
2. எசேக்கியேல் 37:15-24-ல் குறிப்பிடப்பட்ட இரண்டு கோல்களை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச் செய்வதற்கு இணையான தற்கால பொருத்தம் உள்ளது; அதாவது, 1919-ல் உண்மையோடிருந்த அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் தங்களுடைய “ஒரே ராஜா”வும் “ஒரே மேய்ப்பரு”மாகிய கிறிஸ்துவின்கீழ் ஐக்கியப்படுத்தப்பட்டார்கள். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 11/1 பக். 25 பாரா 13-ஐக் காண்க.]
3. பைபிள் விமர்சகர்கள் சிலர் தானியேல் புத்தகம் சரித்திரப்பூர்வமானதா என கேள்வி எழுப்பியுள்ளனர். என்றபோதிலும், பல ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகள் அவர்களுடைய கருத்துக்கள் முற்றிலும் பொய் என நிரூபித்துள்ளன. [si-TL பக். 138 பாரா 4]
4. நாம் கேட்கும் விஷயம், அதிகாரப்பூர்வமான ஓர் இடத்திலிருந்து வருவது போல் தோன்றினாலோ, அறிவுக்களஞ்சியமென தன்னை சொல்லிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து வந்தாலோ, அதை தவறென நிராகரிக்க வலுவான காரணம் இருக்க முடியாது. [w-TL00 12/1 பக். 29 பாரா. 7-8]
5. எபிரெய வேதாகமத்தின் கடைசி 12 புத்தகங்களை “சிறிய தீர்க்கதரிசிகள்” என்று குறிப்பிடுவது அவற்றின் குறைந்த முக்கியத்துவத்தை பொருத்தமாகவே சுட்டிக்காட்டுகிறது. [si-TL பக். 143 பாரா 1]
6. யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆமோஸை யெகோவா அனுப்புகையில், அவர் “தீர்க்கதரிசிகளின் புத்திரர்”களில் ஒருவராக இருந்தார். (2 இரா. 2:3) [si-TL பக். 148 பாரா 1]
7. யூதாவை பகைத்ததால் ஏதோமியர் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவார்கள் என ஒபதியா 16 முன்னுரைத்தது. (ஒப. 12) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 4/1 பக். 29-ல் உள்ள பெட்டியைக் காண்க.]
8. செப்பனியா 3:9-ல் குறிப்பிடப்படும் “சுத்தமான பாஷை,” கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய உண்மையை சரிவர புரிந்துகொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL01 2/15 பக். 27 பாரா 18-ஐக் காண்க.]
9. கெத்செமனே தோட்டத்தில் இயேசு மிகவும் வியாகுலப்பட்டதற்குக் காரணம், மோசமான ஒரு குற்றவாளியாக தாம் மரிக்கப் போவது யெகோவாவையும் அவருடைய பரிசுத்த பெயரையும் எவ்வாறு பாதிக்குமோ என்பதைக் குறித்த கவலையே. (மத். 26:38; லூக். 22:44) [w-TL00 11/15 பக். 23 பாரா 1]
10. சகரியா 9:6, 7-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, ‘பெலிஸ்தர்,’ ‘யூதாவிலே பிரபுவைப்போல்’ ஆவது, தீர்க்கதரிசன ரீதியில் தற்கால வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களுக்குப் பொருந்துகிறது; இவர்களுக்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாரால் பயிற்சி அளிக்கப்படுகிறது; தேவைப்படும் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. (மத். 24:45, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 7/1 பக். 23 பாரா 14-ஐக் காண்க.]
பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
11. பிரசங்கிக்கும் நம் பொறுப்பை காவற்காரனாக எசேக்கியேலின் பொறுப்புடன் எவ்வாறு ஒப்பிடலாம்? (எசேக். 33:1-11) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 3/1 பக். 29 பாரா 13-ஐக் காண்க.]
12. எசேக்கியேல் கண்ட உலர்ந்த எலும்புகள் பற்றிய தரிசனத்துக்கு இணையான தற்கால பொருத்தம் எது? (எசே. 37:5-10) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 11/1 பக். 24 பாரா 12-ஐக் காண்க.]
13. சகரியா புத்தகம் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதற்கு நம்பகமான மிகச் சிறந்த அத்தாட்சி எது? [si-TL பக். 169 பாரா 5]
14. தரிசனத்தில் எசேக்கியேல் கண்ட நகரம் எதைக் குறிக்கிறது? (எசேக். 48:15-17) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL99 3/1 பக். 18 பாரா 22-ஐக் காண்க.]
15. இஸ்ரேலில் இன்று நடக்கும் நிகழ்ச்சிகள், உண்மையில் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இல்லை என்பதை ஏசாயா 2:2-4-ன் அடிப்படையில் எவ்வாறு நியாயங்காட்டலாம்? [rs-TL பக். 223 பாரா 3]
16. முப்பது நாள் வரையில் ராஜாவைத் தவிர வேறு எந்த தேவனையோ மனுஷனையோ நோக்கி எந்த விண்ணப்பமும் செய்யக்கூடாது என்ற அரசாணையை அறிந்து தானியேல் நடந்துகொண்ட விதத்திலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்? (தானி. 6:7-10) [வாராந்தர பைபிள் வாசிப்பு; dp-TL பக். 125 பாரா. 25-8-ஐக் காண்க.]
17. யெகோவாவின் எந்த செய்தியை அறிவிப்பதில் மீதியானவர்கள் ஜாதிகளுக்குள் சிங்கத்தைப் போல் இருப்பார்கள்? (மீ. 5:8) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w81 7/15 பக். 23 பாரா 10-ஐக் காண்க.]
18. ஆபகூக் 3:14-ல், (NW) “அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய போர் வீரர்களின் தலையை உருவக் குத்தினீர்” என சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL00 2/1 பக். 22 பாரா 15; w81 8/1 பக். 29 பாரா. 6-7-ஐக் காண்க.]
19. செப்பனியா 2:3-ல் காணப்படும் “ஒருவேளை” என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL01 2/15 பக். 19 பாரா 8-ஐக் காண்க.]
20. சகரியா 8:6-ன்படி, 1919-ம் ஆண்டிற்குப் பின்னான காலப்பகுதியில், மனித கண்ணோட்டத்தில் மிக கடினமாக தோன்றிய எதை யெகோவா நிறைவேற்றியுள்ளார்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 1/1 பக். 16 பாரா. 18-19-ஐக் காண்க.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. நாம் யெகோவாவிடம் _________________________ மூலமாக பேசுகிறோம்; அது கடவுளிடம் வணக்கத்துக்குரிய பாணியில் பேசுவது; அதே சமயத்தில் அவர் நம்மிடம் பேசும் முக்கியமான வழி, அவருடைய _________________________ மூலமாக ஆகும். (சங். 65:2; 2 தீ. 3:16) [w-TL00 10/15 பக். 5 பாரா. 2-3]
22. யூதா 9-ஐயும், உயிர்த்தெழுதல் துவங்குவதற்கு இயேசு கிறிஸ்து பிறப்பிக்கும் கட்டளையை _________________________ என்று விவரிக்கும் 1 தெசலோனிக்கேயர் 4:16-ஐயும் ஒப்பிடுவதன் மூலம் இயேசு கிறிஸ்துவே மிகாவேல் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம்; மேலும், மிகாவேல் என்பதற்கு _________________________ என்று அர்த்தம்; இவ்வாறு இந்தப் பெயர், யெகோவாவின் ஈடற்ற உன்னத பேரரசை உறுதியாய் பிரதிநிதித்துவம் செய்வதிலும் கடவுளுடைய சத்துருக்களை அழிப்பதிலும் மிகாவேலே தலைமை தாங்குகிறவரென சந்தேகமில்லாமல் குறித்துக் காட்டுகிறது. [rs-TL பக். 218 பாரா. 1-2]
23. “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது” _________________________-ல் நிகழ்ந்தது; அது 69 வார வருடங்களின் ஆரம்பத்தை குறித்தது; அந்த வருடங்கள் மேசியா தோன்றின ஆண்டாகிய _________________________-ல் முடிவடைந்தது. (தானி. 9:25) [வாராந்தர பைபிள் வாசிப்பு; dp-TL பக். 190 பாரா 20-பக். 191 பாரா 22-ஐக் காண்க.]
24. சூரியன் இருளடைவதாக கூறும் யோவேல் 2:31, மத்தேயு 24:29, 30-க்கு இணையாக உள்ளது; அதில் _________________________ மனுஷகுமாரனாக _________________________ தாம் வருவதாக விவரிக்கிறார். [si-TL பக். 147 பாரா 13]
25. அசீரியாவையும் அதன் தலைநகரான _________________________-யையும் பற்றிய _________________________ தீர்க்கதரிசனம், யெகோவாவின் நீதியையும் ஈடற்ற உன்னத பேரரசையும் மேன்மைப்படுத்திக் காட்டுவதுடன், யெகோவா கெட்டவர்கள் அனைவருக்கும் எதிராக நீதியைச் சரிக்கட்டுவார் என்ற நம்பிக்கையையும் நமக்கு அளிக்கிறது. [si-TL பக். 160 பாரா 11]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. எசேக்கியேல் புத்தகம், யெகோவா (தயாள குணமுள்ளவர்; தாழ்மையுள்ளவர்; பரிசுத்தர்) என வலியுறுத்துகிறது; அத்துடன், (ஒருவருடைய ஆளுமையின் முன்னேற்றமே; யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதே; நல்ல அயலாராய் இருப்பதே) எல்லாவற்றையும்விட மிக முக்கியம் என்பதை தெரியப்படுத்துகிறது. [si-TL பக். 137 பாரா 33]
27. தானியேல் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த எசேக்கியேல், தானியேலின் பெயரை (நோவாவுடனும் யோபுடனும்; மோசேயுடனும் யோசுவாவுடனும்; எலியாவுடனும் எலிசாவுடனும்) சேர்த்து குறிப்பிடுவதன் மூலம் அவர் ஓர் உண்மையான நபர் என்பதை உறுதிப்படுத்துகிறார். [si-TL பக். 138 பாரா 2]
28. தானியேல் 2:34, 35, 45-க்கு இசைவாக, அந்தச் சிலைமீது மோதி அதை நொறுக்கிய கல் (அர்மகெதோனை; கடவுளுடைய ஜனங்களால் அறிவிக்கப்படும் கடுமையான நியாயத்தீர்ப்பு செய்திகளை; மேசியானிய ராஜ்யத்தை) குறிக்கிறது. [si-TL பக். 142 பாரா. 20, 23]
29. யோவேல் 1:4-6-ல் கூறப்பட்டுள்ள அடையாளப்பூர்வ வெட்டுக்கிளியைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு ஜனம், (இஸ்ரவேல் ஜனத்தை; அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை; ரோம சேனையை) குறிப்பிடுகிறது. (அப். 2:1, 14-17) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL98 5/1 பக். 9 பாரா 9-ஐக் காண்க.]
30. கொலோசெயர் 1:13-ல் கூறப்பட்டுள்ள ‘தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யம்’ என்பது, (மேசியானிய ராஜ்யத்தை; பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாள் முதல் கிறிஸ்தவ சபைமீது கிறிஸ்துவின் ஆளுகையை; கிறிஸ்துவின் ஆயிர வருட ஆளுகையை) குறிக்கிறது. [rs-TL பக். 232 பாரா 2]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
ஓசி. 6:6; யோவே. 2:32; சக. 4:6, 7; 13:3; ரோ. 12:2
31. இந்தக் காரிய ஒழுங்குமுறையின், சமுதாயத்தின், அல்லது இந்த உலகத்தின் தராதரங்கள் எதுவும் நம் சிந்தனைகளை அவற்றிற்கு இசைவாக திருப்ப அனுமதிக்கக் கூடாது. [w-TL00 11/1 பக். 21 பாரா 5]
32. கடவுளை மகிழ்விப்பது, சம்பிரதாயப்படி ஏறெடுக்கப்படும் ஏராளமான பலிகள் அல்ல, அவரைப் பற்றிய அறிவின் அடிப்படையில் காட்டப்படும் உண்மையான அன்பே. [வாராந்தர பைபிள் வாசிப்பு; si-TL பக். 145 பாரா 16-ஐக் காண்க.]
33. இரட்சிக்கப்படுவதற்கு, கடவுளுடைய பெயரை அறிந்திருப்பதும், அதை முழுமையாக கனப்படுத்துவதும், அப்பெயரை தரித்திருப்பவர்களின் மீது முழுமையாக சார்ந்திருப்பதும் அவசியம். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 2/1 பக். 26-ல் உள்ள பெட்டியைக் காண்க.]
34. எந்தவொரு மனித பலத்தாலும் அல்லாமல், கடவுளுடைய ஆவியினாலேயே அவருடைய நோக்கம் நிறைவேற்றப்படுகிறது; அதுவே மலைபோன்ற தடைகளை சமாளித்து கடவுளுடைய சேவையில் நிலைத்திருக்க அவருடைய ஊழியர்களுக்கு சக்தியளிக்கிறது. [si-TL பக். 169 பாரா 2]
35. யெகோவாவின் அமைப்பை அடையாளம் காட்டும் உண்மைப்பற்றுறுதி, மிக நெருங்கிய இரத்த சம்பந்தமான உறவுகளான மனித உறவுகளுக்கும் மேலாக இருக்கிறது. [si-TL பக். 171 பாரா 24]