அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் நவம்பர்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. ஜனங்களிடம் இவை ஏற்கெனவே இருந்தால், ஏதாவதொரு பழைய பிரசுரத்தை அளிக்கலாம். டிசம்பர்: இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள். ஜனவரி: சபையிலிருக்கும் ஏதாவதொரு 192-பக்க புத்தகம். இவை எதுவுமே உங்கள் சபையில் இல்லையென்றால் நீங்கள் உபயோகிப்பதற்குத் தேவையானளவு பழைய புத்தகங்கள் பக்கத்து சபைகளில் இருக்கிறதா என்று தயவுசெய்து கேளுங்கள். பழைய புத்தகங்கள் இல்லாத சபைகள் கடவுளைத் தேடி (ஆங்கிலம்) புத்தகத்தை அளிக்கலாம். பிப்ரவரி: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம்.
◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ டிசம்பர் 1 அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்த பின்பு, அதை அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கையில் அறிவிக்க வேண்டும்.
◼ தங்கள் முக்கிய மொழியில் பிரசுரங்களுக்காக சபைகள் ஆர்டர் செய்யும்போது பிரசுர ரிக்வெஸ்ட் படிவத்தில் (S-14), “முக்கிய மொழி” என்ற கட்டத்தில் தேவைப்படும் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும். ஆங்கிலம் என்று குறிப்பிட்ட கட்டத்தில் ஆங்கிலத்தில் தேவைப்படும் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும். மற்ற மொழிகளில் தேவைப்படும் பிரசுரங்களை, அந்த படிவத்தின் மூன்றாம் பக்கத்தில் குறிப்பிட வேண்டும். ஒரு சபையில் பெரும்பாலான கூட்டங்கள் எந்த மொழியில் நடக்கிறதோ அதுவே அந்த சபையின் முக்கிய மொழியும் பிரதான மொழியும் ஆகும் என்பதை தயவுசெய்து கவனத்தில் வையுங்கள். மாதாமாதம் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட்டதை தெரிவிக்கும் ஷிப்பிங் அக்னாலெஜ்மண்டில் சபை எண்ணின் பக்கத்தில் அந்த சபையின் முக்கிய மொழி குறிப்பிடப்பட்டிருக்கும்.
◼ வட்டார மாநாடுகளில், விசேஷ மாநாட்டு தினங்களில், மாவட்ட மாநாடுகளில் நன்கொடையாக கொடுக்கும் செக்குகளிலும் கிளை அலுவலகத்துக்கு அனுப்புகிறவற்றிலும் உலகளாவிய வேலைக்காகவும் ராஜ்ய மன்ற நிதிக்காகவும் உள்ளூர் ராஜ்ய மன்ற நன்கொடைப் பெட்டிகளில் போடும் செக்குகளிலும் “The Watch Tower Society”-க்கு செலுத்தப்பட வேண்டியதென குறிப்பிடவும். நிதி சம்பந்தமான விஷயங்களுக்கு கிளை அலுவலகத்துடன் பதிவு தபால் மூலம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: The Watch Tower Bible and Tract Society of India, c/o Post Master, Yelahanka P O, Bangalore 560 064 KAR.
◼ சோதனைகளின்கீழ் உண்மையுடன் இருத்தல்—சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் என்ற வீடியோ பிப்ரவரி மாதம், ஊழியக் கூட்டத்தில் சிந்திக்கப்படும். தங்கள் நூலகத்திற்காக இந்த வீடியோவைப் பெற விரும்பும் சபைகள் பிரசுர ரிக்வெஸ்ட் படிவத்தில் (S-14) கூடிய விரைவில் ஆர்டர் செய்ய வேண்டும்.
◼ உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் 2001 பிரசுரம் ஆங்கிலத்தில் சில பிரதிகள் உள்ளன. சபை நூலகத்திற்காக ஒவ்வொரு சபையும் ஒரே ஒரு பிரதிக்கு ஆர்டர் செய்யலாம். பிரசுர ரிக்வெஸ்ட் படிவத்தில் ‘சபை உபயோகத்திற்கு’ என்ற கட்டத்தில் அதை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் 2001 —ஆங்கிலம்
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (சிறிய அளவு) —ஆங்கிலம்
ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு II —பஞ்சாபி