கேள்விப் பெட்டி
◼ நாம் குடியிருக்கும் பிராந்தியத்திலுள்ள சபைக்கு செல்வதால் என்ன நன்மைகள்?
சபை ஏற்பாட்டின் மூலமாக “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி” உற்சாகத்தைப் பெறுகிறோம். (எபி. 10:24, 25) சபையின் மூலமாக நாம் சத்தியத்தை கற்றுக்கொள்கிறோம், சீஷராக்கும் வேலையை செய்து முடிப்பதற்காக தயார்படுத்தப்படுகிறோம். (மத். 28:19, 20) சோதனைகளை உண்மையுடன் சகிக்கவும் பலப்படுத்தப்படுகிறோம், அதிகரித்துவரும் அழுத்தங்களையும் கவலைகளையும் சமாளிக்க அன்பான கண்காணிகளையும் பெற்றிருக்கிறோம். ஆன்மீக ரீதியில் நாம் பிழைத்திருக்க சபை அத்தியாவசியம் என்பது தெளிவாக உள்ளது. என்றாலும், நாம் குடியிருக்கும் பிராந்தியத்திலுள்ள சபைக்கு செல்வதால் நன்மைகள் உண்டா?
சூழ்நிலைகள் நபருக்கு நபர் வித்தியாசப்படும்; மேலும், உலகப்பிரகாரமான வேலை, சத்தியத்தில் இல்லாத துணை, பயண வசதிகள் போன்ற காரணிகளும் இந்த விஷயத்தில் நம் தீர்மானத்தை பாதிக்கலாம். ஆனாலும், ஒருவர் தான் குடியிருக்கும் பிராந்தியத்திலுள்ள சபைக்கு செல்லுகையில் ஆன்மீக ரீதியிலும் மற்றபடியும் நிச்சயமான நன்மைகள் உண்டு. அவசர காலக்கட்டத்தில் அங்குள்ள மூப்பர்கள் எல்லா பிரஸ்தாபிகளோடும் எளிதில் தொடர்புகொள்ள முடியலாம். மற்ற அநேக நன்மைகள் முந்தைய கேள்விப் பெட்டிகளிலும் சிந்திக்கப்பட்டிருக்கின்றன.—ஜூன் 1991, மார்ச் 1976, (ஆங்கிலம்) மார்ச் 1967 (ஆங்கிலம்).
பொதுவாக, அருகிலுள்ள சபை கூட்டங்களுக்கு செல்வது அதிக வசதியாக உள்ளது. மற்றவர்களுடன் பேசவும், அவசியமான காரியங்களுக்கு கவனம் செலுத்தவும், தொடக்க பாட்டிலும் ஜெபத்திலும் கலந்துகொள்ளவும் முடியுமளவுக்கு முன்கூட்டியே வர முடிகிறது. புதிதாக அக்கறை காட்டுகிறவர்கள் நம் அண்டை அயலில் இருக்கையில், அவர்களை சென்று பார்ப்பது, பைபிள் படிப்புகள் நடத்துவது, அவர்களுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும் இடத்தில் சபை கூட்டங்களுக்கு வரச் சொல்வது நமக்கு அதிக சுலபமாக இருக்கும்.
குடும்பத் தலைவர்கள் இந்த விஷயத்தில் உட்பட்டுள்ள எல்லா காரணங்களையும் ஜெப சிந்தையுடன் சீர்தூக்கிப் பார்த்து தங்கள் குடும்பத்தின் ஆவிக்குரிய நலனுக்கும் நடைமுறையான பயனுக்கும் எது சிறந்தது என்பதை தீர்மானிப்பார்கள் என்று நிச்சயமாக இருக்கிறோம்.—1 தீ. 5:8.