ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூன் 10-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். ஜூன் 24-ல் துவங்கும் வார ஊழிய கூட்டத்தில் கலந்தாலோசிப்பதற்கு தயாரிக்கும் வகையில் நம் சகோதர கூட்டுறவு வீடியோவைப் பார்க்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, ஜூன் 8 தேதியிட்ட விழித்தெழு! (பத்திரிகைகளைப் பற்றி என்ன சொல்வது என்ற பகுதியில் முதலாவது) மற்றும் ஜூன் 15, காவற்கோபுரம் ஆகியவற்றை தனித்தனியே அளிப்பதைக் காட்டும் நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும் ‘எனக்கு மதத்தில் அக்கறையில்லை’ என உரையாடலை இடையே நிறுத்துவோரிடம் எப்படி வெவ்வேறு விதங்களில் பதிலளிக்கலாம் என்பதை காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 17-ஐக் காண்க.
10 நிமி: கேள்விப் பெட்டி. முழு கட்டுரையையும் அதிலுள்ள வசனங்களையும் வாசிக்கவும். பின்பு, மார்ச் 1998, நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள கேள்விப் பெட்டியில் காணப்படும் குறிப்புகளுடன் கூடுதலான குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: “பெருக விதைத்தால் பெருக அறுப்போம்.”a மார்ச் 1, 1993, காவற்கோபுரம், பக்கங்கள் 15-16, பாராக்கள் 14-17-லுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 220, முடிவு ஜெபம்.
ஜூன் 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “உங்களுக்கு இருப்பவற்றில் திருப்தியாய் இருங்கள்.”b நேரம் அனுமதிப்பதைப் பொருத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்து கலந்தாலோசிக்கவும், அந்தப் புத்திமதிக்கான வேதப்பூர்வ ஆதாரத்தை வலியுறுத்தவும்.
பாட்டு 197, முடிவு ஜெபம்.
ஜூன் 24-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். ஊழியத்தை சேர்ந்து செய்யும் ஒரு தம்பதியினர், பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி ஜூன் 8 (பத்திரிகைகளைப் பற்றி என்ன சொல்வது என்ற பகுதியில் மூன்றாவது), ஜூலை 1 தேதியிட்ட பத்திரிகைகளை அளிப்பதை நடித்துக் காட்டுகிறார்கள். மனைவி காவற்கோபுரத்தையும் கணவர் விழித்தெழு!-வையும் அளிக்கிறார்கள்.
12 நிமி: (1) வேறு மொழி பேசுகிறவர்களிடம் சாட்சி கொடுக்கும்போது அல்லது (2) வீட்டுக்கு வீடு ஊழியம், தெரு ஊழியம் தவிர வேறு சூழ்நிலையில் சாட்சி கொடுக்கும்போது உள்ளூர் பிரஸ்தாபிகளுக்குக் கிடைத்த அனுபவங்களை சொல்ல சொல்லுங்கள் அல்லது நடித்து காட்ட சொல்லுங்கள். அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்கு வரும்போது, ஜூலையிலும் ஆகஸ்ட்டிலும் அளிக்கப் போகிற சிற்றேடுகளில் ஏதாவது ஒன்றை அளிப்பதற்குரிய ஒரு பிரசங்கத்தை தேர்ந்தெடுத்து, தயாரித்து வரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்தவும்.—ஜனவரி மாத நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் “மற்ற பிரசுரங்கள்” என்ற பெட்டியைக் காண்க.
25 நிமி: “நம் சகோதர கூட்டுறவை ஏன் நேசிக்கிறோம்.” எந்த அறிமுக குறிப்புகளையும் சொல்லாமல் நேரடியாக கேள்விகளை பயன்படுத்தி சகோதர கூட்டுறவு வீடியோவைப் பற்றி சபையாருடன் கலந்தாலோசிப்பு.
பாட்டு 95, முடிவு ஜெபம்.
ஜூலை 1-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். ஜூன் மாத வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவுபடுத்துங்கள். ஜூலை மாதம் எந்த சிற்றேட்டை அளிக்க திட்டமிடுகிறார்கள் என்றும், எந்த அளிப்பை பயன்படுத்தப் போகிறார்கள் என்றும் பிரஸ்தாபிகளிடம் கேளுங்கள்.
15 நிமி: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். பிள்ளைகளுக்கும் படிப்பறிவோ வாசிக்கும் திறமையோ இல்லாதவர்களுக்கும் யெகோவாவைப் பற்றி கற்பிக்க இந்த சிற்றேட்டின் அம்சங்கள் எவ்வாறு சிறந்த ஏதுவாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுங்கள். அதிலுள்ள எளிய, நியாயமான விளக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உதாரணங்களை கலந்து பேசுங்கள். மாணாக்கரின் இதயத்தை சென்றெட்ட படங்களை எப்படி பயன்படுத்தலாம் என்று காட்டுங்கள். இந்த சிற்றேட்டை திறம்பட பயன்படுத்த உதவும் வழிமுறைகளை குறிப்பிடுங்கள். பெற்றோர் தங்கள் இளம் பிள்ளைகளோடு சேர்ந்து இதை படிக்க வேண்டும். பொருத்தமான சமயங்களில் இதை ஊழியத்தில் அளிக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: மற்றவர்களுக்கு உதவ ‘விரும்புகிறீர்களா’?c உதவி செய்ய மனமுள்ளவர்களாய் இருக்கும்படி சபையிலுள்ள அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 156, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.