2002 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
அறிவுரைகள்
2002-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.
பாடப்புத்தகங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) [bi12], காவற்கோபுரம் [w-TL], ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ [si-TL], வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் [rs-TL] ஆகியவற்றிலிருந்து பேச்சுக்கள் நியமிக்கப்படும்.
பாட்டு, ஜெபம், சுருக்கமான வரவேற்புரையுடன் பள்ளி சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படும். பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும் எல்லா பகுதிகளையும் பற்றி முன்னதாகவே சொல்ல வேண்டியதில்லை. பள்ளியை நடத்துபவர் ஒவ்வொரு பேச்சையும் அறிமுகப்படுத்தும்போது கேட்கப்போகும் பேச்சின் பொருளை சொல்லுவார். பள்ளி பின்வருமாறு நடத்தப்பட வேண்டும்:
பேச்சு நியமிப்பு எண் 1: 15 நிமிடங்கள். இது மூப்பர் அல்லது உதவி ஊழியர் ஒருவரால் கையாளப்பட வேண்டும்; காவற்கோபுரம் அல்லது ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ புத்தகத்திலிருந்து பேச்சு கொடுக்கப்பட வேண்டும். காவற்கோபுரத்திலிருந்து பேச்சு கொடுக்கப்படுகையில் கேள்வி மறுபார்வையின்றி 15 நிமிட போதனா பேச்சாக அளிக்க வேண்டும். ‘வேதாகமம் முழுவதும்’ புத்தகத்திலிருந்து கொடுக்கப்படுகையில், 10 முதல் 12 நிமிட பேச்சுக்குப் பின்பு புத்தகத்திலுள்ள கேள்விகளைப் பயன்படுத்தி 3 முதல் 5 நிமிடத்திற்கு கேள்வி பதில் முறையில் மறுபார்வை செய்ய வேண்டும். நியமிக்கப்பட்ட பகுதியைச் சிந்திப்பது மட்டுமே இதன் குறிக்கோளல்ல; ஆனால் சபைக்கு அதிக பயனுள்ள விஷயத்தை வலியுறுத்திக் காட்டி, சிந்திக்கப்படும் விஷயங்கள் எவ்வளவு நடைமுறையானவை என்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் வேண்டும். அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பையே பயன்படுத்த வேண்டும்.
இந்தப் பேச்சு கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தேவைப்பட்டால், அல்லது பேச்சாளர் கேட்டுக்கொண்டால், தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கப்படலாம்.
பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 6 நிமிடங்கள். இது, மூப்பரால் அல்லது உதவி ஊழியரால் கையாளப்பட வேண்டும்; அவர் விஷயத்தை சபையின் தேவைகளுக்கேற்ப பலன்தரத்தக்க முறையில் பொருத்திக் காட்டுவார். தலைப்பு தேவையில்லை. நியமிக்கப்பட்ட வாசிப்புப் பகுதியின் சுருக்கமாக மட்டுமே இது இருக்கக்கூடாது. 30 முதல் 60 விநாடிகளுக்கு, நியமிக்கப்பட்ட அதிகாரங்களின்பேரில் மொத்த மறுபார்வையையும் உட்படுத்திக்கொள்ளலாம். என்றாலும், முக்கிய குறிக்கோளானது, அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு நமக்குப் பயனுள்ளது என்பதை சபையார் மதித்துணர உதவி செய்வதேயாகும். பின்பு மாணாக்கர்கள் வெவ்வேறு வகுப்பறைகளுக்குச் செல்லும்படி பள்ளி கண்காணி சொல்வார்.
பேச்சு நியமிப்பு எண் 2: 5 நிமிடங்கள். நியமிக்கப்பட்ட பைபிள் பகுதியை ஒரு சகோதரர் வாசிப்பார். மன்றத்திலுள்ள பள்ளிக்கும் மற்ற வகுப்பறைகளுக்கும் இது பொருந்தும். மாணாக்கர் முன்னுரையிலும் முடிவுரையிலும் சுருக்கமான விளக்கக் குறிப்பைக் கொடுக்க வசதியாக வாசிப்பு நியமிப்புகள் பொதுவாய் ஓரளவு சிறியவையாக இருக்கின்றன. சரித்திரப் பின்னணி, தீர்க்கதரிசன அல்லது கோட்பாட்டுக்குரிய முக்கியத்துவம், நியமங்களின் பொருத்தம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். கொடுக்கப்பட்ட எல்லா வசனங்களையும் இடையிடையே குறிப்புகள் எதுவும் சொல்லாமல் தொடர்ந்து வாசிக்க வேண்டும். ஆனால், வாசிக்க வேண்டிய வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாத சந்தர்ப்பத்தில் வாசிப்பு தொடரவிருக்கும் வசன எண்ணை மாணாக்கர் குறிப்பிடலாம்.
பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்தப் பேச்சு, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான ஏதாவது ஒரு விதத்தில் பேச்சை அமைக்கலாம். பங்கெடுப்போர் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ பேச்சு கொடுக்கலாம். மாணாக்கர், நியமிக்கப்பட்ட பொருளை எவ்வாறு படிப்படியாக விவரித்துப் பேசுகிறார் என்றும், வீட்டுக்காரர் வேதவசனங்களை பகுத்தாராய்வதற்கு எவ்வாறு உதவுகிறார் என்றும் பள்ளி கண்காணி முக்கியமாக கவனிப்பார். இந்தப் பேச்சைக் கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் மாணாக்கருக்கு வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உதவியாளர் ஒருவரை பள்ளி கண்காணியே நியமிப்பார், தேவைப்பட்டால் இன்னொரு உதவியாளர் ஒருவரை வைத்துக்கொள்ளலாம். பேச்சின் அமைப்புக்கு அல்ல, ஆனால் திறம்பட்ட விதத்தில் பைபிள் உபயோகிக்கப்படுகிறதா என்பதற்கே முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
பேச்சு நியமிப்பு எண் 4: 5 நிமிடங்கள். இந்த நியமிப்பு, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்தப் பேச்சு நியமிப்பு எண் 4, ஒரு சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு நியமிக்கப்படும். ஒரு சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், ஒரு பேச்சாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும். ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படுகையில், பேச்சு எண் 3-ஐப்போல் இந்தப் பேச்சைக் கொடுக்க வேண்டும்.
பைபிள் வாசிப்பு அட்டவணை: சபையார் அனைவரும் வாராந்தர பைபிள் வாசிப்பு அட்டவணையில் உள்ள பகுதியை வாசிக்கும்படி ஊக்கமளிக்கப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு ஒரு பக்கத்தை வாசித்தாலே போதும்.
குறிப்பு: அறிவுரை, நேரம், எழுத்துமுறை மறுபார்வைகள், நியமிப்புகளுக்கு தயாரித்தல் ஆகியவை சம்பந்தமாக கூடுதலான தகவலுக்கும் ஆலோசனைக்கும் தயவுசெய்து அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-ஐக் காண்க.
அட்டவணை
ஜன. 7 பைபிள் வாசிப்பு: பிரசங்கி 1-6
பாட்டு எண் 59
எண் 1: பிரசங்கிக்கு முன்னுரை (si-TL பக். 112-13 பாரா. 1-8)
எண் 3: a‘சுகப்படுத்துதலில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’ (rs-TL பக். 160 பாரா 6-பக். 161 பாரா 1)
எண் 4: மனிதராகப் பிறப்பதற்கு முன் நாம் எல்லாரும் அந்த ஆவி மண்டலத்தில் இருந்தோமா? (rs-TL பக். 161 பாரா 2-பக். 162 பாரா 3)
ஜன. 14 பைபிள் வாசிப்பு: பிரசங்கி 7-12
பாட்டு எண் 25
எண் 1: பிரசங்கி—ஏன் பயனுள்ளது (si-TL பக். 114 பாரா. 15-19)
எண் 3: ஆதாம் பாவஞ்செய்திராவிடில் அவன் முடிவில் பரலோகத்துக்குச் சென்றிருப்பானா? (rs-TL பக். 162 பாரா. 4-5)
எண் 4: உண்மையில் மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் கொண்டிருக்க ஒருவன் பரலோகத்துக்குச் செல்லவேண்டுமா? (rs-TL பக். 162 பாரா 6-பக். 163 பாரா 2)
ஜன. 21 பைபிள் வாசிப்பு: உன்னதப்பாட்டு 1-8
பாட்டு எண் 11
எண் 1: உன்னதப்பாட்டிற்கு முன்னுரை மற்றும் அது ஏன் பயனுள்ளது (si-TL பக். 115-17 பாரா. 1-4, 16-18)
எண் 3: 1 பேதுரு 3:19, 20 குறிப்பதென்ன? (rs-TL பக். 163 பாரா 3)
எண் 4: 1 பேதுரு 4:6-ன் பொருளென்ன? (rs-TL பக். 163 பாரா 4)
ஜன. 28 பைபிள் வாசிப்பு: ஏசாயா 1-6
பாட்டு எண் 204
எண் 1: ஏசாயாவிற்கு முன்னுரை (si-TL பக். 118-19 பாரா. 1-8)
எண் 3: பரலோக வாழ்க்கை எல்லாக் கிறிஸ்தவர்களுக்குமுரிய நம்பிக்கையா? (rs-TL பக். 164 பாரா. 1-3)
எண் 4: பூமியில் நித்திய ஜீவன் குறித்து “புதிய ஏற்பாடு” என்ன சொல்கிறது? (rs-TL பக். 165 பாரா 1-பக். 166 பாரா 2)
பிப். 4 பைபிள் வாசிப்பு: ஏசாயா 7-11
பாட்டு எண் 89
எண் 1: யெகோவாவின் அமைப்பு நமக்கு தேவை (w-TL00 1/1 பக். 30-1)
எண் 3: பரலோக வாழ்க்கையின் நம்பிக்கை பைபிளில் எத்தனை ஆட்களுக்கு அளிக்கப்படுகிறது? (rs-TL பக். 166 பாரா. 3-4)
எண் 4: இந்த 1,44,000 பேர் மாம்சத்தின்படியான யூதர் மாத்திரமா? (rs-TL பக். 166 பாரா 5-பக். 167 பாரா 2)
பிப். 11 பைபிள் வாசிப்பு: ஏசாயா 12-19
பாட்டு எண் 177
எண் 1: என்ன நினைப்பு மனதிலே? (w-TL00 1/15 பக். 20-2)
எண் 3: இந்த “திரள் கூட்டத்தாரின்” வேதப்பூர்வ நம்பிக்கை என்ன? (rs-TL பக். 167 பாரா. 3-5)
எண் 4: பரலோகத்துக்குச் செல்கிறவர்கள் அங்கே என்ன செய்வார்கள்? (rs-TL பக். 168 பாரா. 1-5)
பிப். 18 பைபிள் வாசிப்பு: ஏசாயா 20-26
பாட்டு எண் 225
எண் 1: யெகோவாவுடன் நெருங்கிய நட்பு மலர (w-TL00 1/15 பக். 23-6)
எண் 3: உடல் செத்தபின் ஆத்துமா பிழைத்திருக்கிறதென பைபிள் காட்டுகிறதா? (rs-TL பக். 169 பாரா. 1-5)
எண் 4: என்ன வகையான ஆட்கள் பைபிள் நரகத்துக்குச் செல்கின்றனர்? (rs-TL பக். 169 பாரா 6-பக். 170 பாரா 2)
பிப். 25 பைபிள் வாசிப்பு: ஏசாயா 27-31
பாட்டு எண் 192
எண் 1: கொடியவரின் கண்ணைப் பறித்த பேரொளி (w-TL00 1/15 பக். 27-9)
எண் 3: பைபிள் நரகத்திலிருந்து எவராவது எப்போதாவது வெளியேறுகிறார்களா? (rs-TL பக். 170 பாரா 3-5)
எண் 4: பொல்லாதவர்களுக்கு நித்திய தண்டனை உண்டா? (rs-TL பக். 171 பாரா 1-3)
மார்ச் 4 பைபிள் வாசிப்பு: ஏசாயா 32-37
பாட்டு எண் 98
எண் 1: விடாமுயற்சியே வெற்றிக்கு வழி (w-TL00 2/1 பக். 4-6)
எண் 3: வெளிப்படுத்துதலில் குறிப்பிட்டுள்ள ‘சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவதன்’ பொருளென்ன? (rs-TL பக். 172 பாரா. 1-2)
எண் 4: இயேசு குறிப்பிட்ட ‘எரிகிற கெஹென்னா’ என்ன? (rs-TL பக். 173 பாரா. 1-3)
மார்ச் 11 பைபிள் வாசிப்பு: ஏசாயா 38-42
பாட்டு எண் 132
எண் 1: ஒரு தாயின் ஞானமான அறிவுரை (w-TL00 2/1 பக். 30-1)
எண் 3: பாவத்துக்குத் தண்டனை என்ன? (rs-TL பக். 174 பாரா. 1-4)
எண் 4: மரணத்துக்குப்பின் பொல்லாதவர்கள் வாதிக்கப்படுவதை இயேசு கற்பித்தாரா? (rs-TL பக். 174 பாரா 5)
மார்ச் 18 பைபிள் வாசிப்பு: ஏசாயா 43-47
பாட்டு எண் 160
எண் 1: அபாய எல்லையை தாண்டாதீர்! (w-TL00 2/15 பக். 4-7)
எண் 3: ஐசுவரியவானையும் லாசருவையும் பற்றி இயேசு சொன்ன உவமை குறிப்பதென்ன? (rs-TL பக். 175 பாரா. 1-3)
எண் 4: கிறிஸ்மஸ் பைபிளில் ஆதாரங்கொண்ட கொண்டாட்டமா? (rs-TL பக். 176 பாரா. 1-4)
மார்ச் 25 பைபிள் வாசிப்பு: ஏசாயா 48-52
பாட்டு எண் 161
எண் 1: ஜெபத்தின் வல்லமை (w-TL00 3/1 பக். 3-4)
எண் 3: நட்சத்திரத்தால் இயேசுவிடம் வழிநடத்தப்பட்ட ஞானிகள், அல்லது சாஸ்திரிகள் யார்? (rs-TL பக். 177 பாரா. 1-3)
எண் 4: கிறிஸ்மஸ் பாரம்பரியங்களை ஆராய்கையில் நாம் எதை கருத்தில் கொள்ள வேண்டும்? (rs-TL பக். 177 பாரா 4-பக். 178 பாரா 2)
ஏப்ரல் 1 பைபிள் வாசிப்பு: ஏசாயா 53-59
பாட்டு எண் 210
எண் 1: பக்குவப்படுத்தப்பட்ட இருதயத்தோடு யெகோவாவை தேடுதல் (w-TL00 3/1 பக். 29-31)
எண் 3: கொண்டாட்டங்கள் சம்பந்தமாக என்ன நியமங்கள் நம்மை வழிநடத்த வேண்டும்? (rs-TL பக். 178 பாரா 3-பக். 179 பாரா 2)
எண் 4: ஈஸ்டர் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டியது என்ன? (rs-TL பக். 179 பாரா 3–பக். 180 பாரா 3)
ஏப்ரல் 8 பைபிள் வாசிப்பு: ஏசாயா 60-66
பாட்டு எண் 111
எண் 1: ஏசாயா—ஏன் பயனுள்ளது (si-TL பக். 123 பாரா. 34-9)
எண் 3: “மரித்தோரின் ஆவிகளின்” நினைவுக் குறிப்பான விடுமுறைநாட்களின் அடிப்படையில் இருப்பதென்ன? (rs-TL பக். 180 பாரா 4–பக். 181 பாரா 3)
எண் 4: வாலென்டீனின் நாள், தாய்மார்களின் நாள், தேசிய கொண்டாட்டங்கள் பற்றி நமக்கு தெரிந்திருப்பது என்ன? (rs-TL பக். 182 பாரா. 1-6)
ஏப்ரல் 15 பைபிள் வாசிப்பு: எரேமியா 1-4
பாட்டு எண் 70
எண் 1: எரேமியாவிற்கு முன்னுரை (si-TL பக். 124 1-5)
எண் 3: வணக்கப் பொருட்களாக சிலைகளைப் பயன்படுத்துவது பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (rs-TL பக். 183 பாரா. 1–4)
எண் 4: உண்மையான கடவுளின் வணக்கத்துக்கு வெறும் உதவிகளாகச் சிலைகளைப் பயன்படுத்தலாமா? (rs-TL பக். 184 பாரா. 1–5)
ஏப்ரல் 22 பைபிள் வாசிப்பு: எரேமியா 5-8
பாட்டு எண் 205
எண் 1: மனிதருக்கு ஏன் ஒரு சகாயர் தேவை (w-TL00 3/15 பக். 3-4)
எண் 3: “பரிசுத்தவான்களைக்” கடவுளிடம் பரிந்துபேசுவோராக நினைத்து அவர்களின் சிலைகளை நாம் வணங்கலாமா? (rs-TL பக். 184 பாரா 6–பக். 185 பாரா 3)
எண் 4: வணக்கத்துக்குரிய பொருட்களாயுள்ள சிலைகளைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார்? (rs-TL பக். 185 பாரா 4–பக். 186 பாரா 2)
ஏப்ரல் 29 எழுத்துமுறை மறுபார்வை. பைபிள் வாசிப்பு: எரேமியா 9-13
பாட்டு எண் 46
மே 6 பைபிள் வாசிப்பு: எரேமியா 14-18
பாட்டு எண் 224
எண் 1: நமக்கு கைகொடுப்பவர் இயேசு கிறிஸ்து (w-TL00 3/15 பக். 5-9)
எண் 3: முற்காலத்தில் நாம் ஒருவேளை வணங்கின ஏதாவது சிலைகளைப் பற்றி நாம் எவ்வாறு உணரவேண்டும்? (rs-TL பக். 186 பாரா 3-பக். 187 பாரா 2)
எண் 4: வணக்கத்தில் சிலைகளைப் பயன்படுத்துதல் நம்முடைய சொந்த எதிர்காலத்தின்பேரில் என்ன விளைவுண்டாக்கலாம்? (rs-TL பக். 187 பாரா. 3-6)
மே 13 பைபிள் வாசிப்பு: எரேமியா 19-23
பாட்டு எண் 73
எண் 1: அடக்கம்—சமாதான பூங்காவின் வாசல் (w-TL00 3/15 பக். 21-4)
எண் 3: ஆட்கள் பைபிள் தராதரங்களை ஒருபுறம் தள்ளிவிடுகையில், அவர்கள் உண்மையில் சுதந்திரத்தை அடைகிறார்களா? (rs-TL பக். 188 பாரா. 1–3)
எண் 4: பொருட்களில் நாட்டங்கொண்டு தேடுதல் மற்றும் மட்டுக்கு மீறிய மதுபானக் குடிவெறி பற்றி பைபிளின் புத்திமதி என்ன? (rs-TL பக். 188 பாரா 4–பக். 189 பாரா 1)
மே 20 பைபிள் வாசிப்பு: எரேமியா 24-28
பாட்டு எண் 140
எண் 1: திருத்தத்திற்கு தலைவணங்கிய சிறந்த மனிதர் (w-TL00 3/15 பக். 25-28)
எண் 3: கடவுளோடுள்ள உங்கள் உறவை மதிப்பாக கருதுங்கள், துர்ச்சகவாசங்களை தவிருங்கள் (rs-TL பக். 189 பாரா 3)
எண் 4: கடவுளுடைய கட்டளைகளை புறக்கணிக்க மனிதரைத் தூண்டுவித்தவன் யார்? (rs-TL பக். 189 பாரா 4–பக். 190 பாரா 1)
மே 27 பைபிள் வாசிப்பு: எரேமியா 29-31
பாட்டு எண் 42
எண் 1: இன்று கடவுளுடைய ஆவி எவ்வாறு செயல்படுகிறது? (w-TL00 4/1 பக். 8-11)
எண் 3: என்ன மனப்பான்மைகளை நாம் தவிர்க்க வேண்டும்? (rs-TL பக். 190 பாரா. 2–7)
எண் 4: சுதந்திரம் ஒருவனை உலகத்தின் மாதிரியைப் பின்பற்ற வழிநடத்துகையில், அவன் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் வருகிறான்? (rs-TL பக். 191 பாரா. 1-2)
ஜூன் 3 பைபிள் வாசிப்பு: எரேமியா 32-35
பாட்டு எண் 85
எண் 1: யெகோவா தரும் ஆறுதலே ஆறுதல் (w-TL00 4/15 பக். 4-7)
எண் 3: இன்று பொதுவாய்ப் பயன்படுத்தும் பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் எங்கே காணப்படுகிறது? (rs-TL பக். 191 பாரா 3-பக். 193 பாரா 8)
எண் 4: பைபிள் மொழிபெயர்ப்புகள் பல ஏன் கடவுளுடைய சொந்தப் பெயரைப் பயன்படுத்துகிறதில்லை (rs-TL பக். 193 பாரா 9-பக். 194 பாரா 4)
ஜூன் 10 பைபிள் வாசிப்பு: எரேமியா 36-40
பாட்டு எண் 159
எண் 1: வன்முறையாளர்களை கடவுளுடைய நோக்குநிலையில் பார்க்கிறீர்களா? (w-TL00 4/15 பக். 26-9)
எண் 3: தெய்வீகப் பெயரின் எந்த அமைப்பு திருத்தமானது—ஜெஹோவா அல்லது யஹ்வே? (rs-TL பக். 195 பாரா 1-பக். 197 பாரா 8)
எண் 4: “பழைய ஏற்பாட்டில்” உள்ள யெகோவா “புதிய ஏற்பாட்டில்” இயேசு கிறிஸ்துவா? (rs-TL பக். 198 பாரா 1–4)
ஜூன் 17 பைபிள் வாசிப்பு: எரேமியா 41-45
பாட்டு எண் 26
எண் 1: “உன் இருதயத்தைக் காத்துக்கொள்” (w-TL00 5/15 பக். 20-4)
எண் 3: ஒருவன் யெகோவாவுக்குப் பயப்படவும் வேண்டுமென்றால் அவரை எவ்வாறு நேசிக்கமுடியும்? (rs-TL பக். 198 பாரா 5–பக். 199 பாரா 1)
எண் 4: யெகோவாவின் சாட்சிகளின் என்ன நம்பிக்கைகள் அவர்களை மற்ற மதங்களிலிருந்து வேறுபட்டவர்களாக்குகின்றன? (rs-TL பக். 199 பாரா 2-பக். 201 பாரா 1)
ஜூன் 24 பைபிள் வாசிப்பு: எரேமியா 46-49
பாட்டு எண் 15
எண் 1: பரிபூரண வாழ்க்கை—கனவல்ல (w-TL00 6/15 பக். 5-7)
எண் 3: யெகோவாவின் சாட்சிகள் ஓர் அமெரிக்க மதத்தினரா? (rs-TL பக். 201 பாரா 2–பக். 202 பாரா 1)
எண் 4: யெகோவாவின் சாட்சிகள் ஒரு மத உட்பிரிவா? (rs-TL பக். 202 பாரா 2–பக். 203 பாரா 3)
ஜூலை 1 பைபிள் வாசிப்பு: எரேமியா 50-52
பாட்டு எண் 100
எண் 1: எரேமியா—ஏன் பயனுள்ளது (si-TL பக். 129 பாரா. 36-39)
எண் 3: தங்கள் மதம் ஒன்றே சரியானதென்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்களா? (rs-TL பக். 203 பாரா. 4–5)
எண் 4: உண்மை மதம் பைபிளைக் கடைப்பிடிக்கிறது (rs-TL பக். 204 பாரா 1)
ஜூலை 8 பைபிள் வாசிப்பு: புலம்பல் 1-2
பாட்டு எண் 8
எண் 1: புலம்பலுக்கு முன்னுரை (si-TL பக். 130-1 பாரா. 1-7)
எண் 3: யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப்பற்றிய தங்கள் விளக்கத்தை எவ்வாறு அடைகின்றனர்? (rs-TL பக். 204 பாரா 2-பக். 205 பாரா 3)
எண் 4: யெகோவாவின் சாட்சிகளின் போதகங்களில் ஏன் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? (rs-TL பக். 205 பாரா 4)
ஜூலை 15 பைபிள் வாசிப்பு: புலம்பல் 3-5
பாட்டு எண் 145
எண் 1: புலம்பல்—ஏன் பயனுள்ளது (si-TL பக். 132 பாரா. 13-15)
எண் 3: யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய்ப் பிரசங்கிக்கிறார்கள்? (rs-TL பக். 206 பாரா. 1-4)
எண் 4: யெகோவாவின் சாட்சிகள் ஏன் துன்புறுத்தப்படுகின்றனர்? (rs-TL பக். 207 பாரா. 1–2)
ஜூலை 22 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 1-6
பாட்டு எண் 94
எண் 1: எசேக்கியேலுக்கு முன்னுரை (si-TL பக். 132-3 பாரா. 1-6)
எண் 3: b‘இந்த உலகத்தை வாழ்வதற்கு மேம்பட்ட நலமுடைய இடமாக்குவதற்கு உதவிசெய்யும் காரியங்களைச் செய்வதில் நீங்கள் ஏன் ஈடுபடக்கூடாது? (rs-TL பக். 207 பாரா 3-பக். 208 பாரா 2)
எண் 4: c‘கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கே சாட்சிகளாயிருக்கும்படி கருதப்படுகிறார்கள், யெகோவாவுக்கு அல்ல’ (rs-TL பக். 208 பாரா 3)
ஜூலை 29 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 7-12
பாட்டு எண் 221
எண் 1: நல்ல முன்மாதிரிகளிலிருந்து பயனடையுங்கள் (w-TL00 7/1 பக். 19-21)
எண் 3: இயேசு கிறிஸ்து மெய்யான ஓர் ஆளா? (rs-TL பக். 209 பாரா 1–பக். 210 பாரா 1)
எண் 4: இயேசு கிறிஸ்து வெறும் ஒரு நல்ல ஆள் மட்டுமேதானா? (rs-TL பக். 210 பாரா 2)
ஆகஸ்ட் 5 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 13-16
பாட்டு எண் 106
எண் 1: ஒழுக்கங்கெட்ட உலகில் கற்பு (w-TL00 7/15 பக். 28-31)
எண் 3: இயேசு வெறும் மற்றொரு மதத் தலைவரா? (rs-TL பக். 210 பாரா 3)
எண் 4: பொதுவில் யூதர் ஏன் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? (rs-TL பக். 211 பாரா. 1-2)
ஆக. 12 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 17-20
பாட்டு எண் 214
எண் 1: அதிகாரத்தை ஏன் மதிக்க வேண்டும்? (w-TL00 8/1 பக். 4-7)
எண் 3: இயேசு கிறிஸ்து உண்மையில் கடவுளா? (rs-TL பக். 212 பாரா. 1-2)
எண் 4: இயேசு கடவுள் என்று யோவான் 1:1 நிரூபிக்கிறதா? (rs-TL பக். 212 பாரா 4–பக். 213 பாரா 1)
ஆக. 19 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 21-23
பாட்டு எண் 86
எண் 1: மனத்தாங்கல்களை எப்படி சரிசெய்துகொள்கிறீர்கள்? (w-TL00 8/15 பக். 23-25)
எண் 3: யோவான் 20:28-ல் தோமா வியந்து கூறினது இயேசு உண்மையில் கடவுளென நிரூபிக்கிறதா? (rs-TL பக். 213 பாரா. 2-4)
எண் 4: இயேசு பூமியிலிருந்தபோது கடவுளாயிருந்தாரென மத்தேயு 1:23 காட்டுகிறதா? (rs-TL பக். 214 பாரா. 1–3)
ஆக. 26 எழுத்துமுறை மறுபார்வை. பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 24-28
பாட்டு எண் 18
செப். 2 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 29-32
பாட்டு எண் 40
எண் 1: தியாக மனப்பான்மை தேவையா? (w-TL00 9/15 பக். 21-4)
எண் 3: யோவான் 5:18-ன் பொருள் என்ன? (rs-TL பக். 214 பாரா. 4-5)
எண் 4: இயேசுவுக்கு வணக்கத்தைக் கொடுப்பது அவர் கடவுளென நிரூபிக்கிறதா? (rs-TL பக். 215 பாரா. 1–3)
செப். 9 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 33-36
பாட்டு எண் 49
எண் 1: நீங்கள் கடவுளிடம் நெருங்கிவர (w-TL00 10/15 பக். 4-7)
எண் 3: இயேசு நடப்பித்த அற்புதங்கள் அவரைக் கடவுளென நிரூபிக்கின்றனவா? (rs-TL பக். 215 பாரா 4–பக். 216 பாரா 2)
எண் 4: இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதே இரட்சிக்கப்படுவதற்குத் தேவைப்பட்ட எல்லாமா? (rs-TL பக். 216 பாரா 4)
செப். 16 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 37-40
பாட்டு எண் 34
எண் 1: நீங்கள் வெற்றியை எப்படி அளவிடுகிறீர்கள்? (w-TL00 11/1 பக். 18-21)
எண் 3: இயேசு மனிதனாவதற்கு முன்னால் பரலோக வாழ்க்கையைக் கொண்டிருந்தாரா? (rs-TL பக். 217 பாரா. 1–2)
எண் 4: இயேசு பரலோகத்தில் தம்முடைய மாம்ச உடலைக் கொண்டிருக்கிறாரா? (rs-TL பக். 217 பாரா. 3–6)
செப். 23 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 41-45
பாட்டு எண் 50
எண் 1: மனமுவந்து கடவுளை சேவியுங்கள் (w-TL00 11/15 பக். 21-3)
எண் 3: பிரதான தூதன் மிகாவேலும் இயேசு கிறிஸ்துவும் ஒருவரேதானா? (rs-TL பக். 218 பாரா. 1-3)
எண் 4: d‘நீங்கள் இயேசுவை விசுவாசிப்பதில்லை’ (rs-TL பக். 219 பாரா. 1-3)
செப். 30 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 46-48
பாட்டு எண் 112
எண் 1: எசேக்கியேல்—ஏன் பயனுள்ளது (si-TL பக். 137 பாரா. 29-33)
எண் 3: e‘இயேசுவை உங்கள் சொந்த மீட்பராக ஏற்கிறீர்களா?’ (rs-TL பக். 219 பாரா 4-பக். 220 பாரா 1)
எண் 4: f‘நான் இயேசுவை என் சொந்த மீட்பராக ஏற்றிருக்கிறேன்’ (rs-TL பக். 220 பாரா 2)
அக். 7 பைபிள் வாசிப்பு: தானியேல் 1-4
பாட்டு எண் 10
எண் 1: தானியேலுக்கு முன்னுரை (si-TL பக். 138-9 பாரா. 1-6)
எண் 3: இன்று மாம்சப்படியான யூதர்கள் கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களா? (rs-TL பக். 220 பாரா 3-பக். 222 பாரா. 1)
எண் 4: எல்லா யூதரும் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதற்கு மதம் மாற்றப்படுவார்களா? (rs-TL பக். 222 பாரா. 2-3)
அக். 14 பைபிள் வாசிப்பு: தானியேல் 5-8
பாட்டு எண் 191
எண் 1: நீங்கள் ‘ஞானிகள்’ சொல்வதை எப்போதும் நம்பவேண்டுமா? (w-TL00 12/1 பக். 29-31)
எண் 3: இரட்சிக்கப்படுவதற்கு யூதர்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க வேண்டுமா? (rs-TL பக். 222 பாரா 4–பக். 223 பாரா 1)
எண் 4: இன்று இஸ்ரவேலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமா? (rs-TL பக். 223 பாரா 2-பக். 224 பாரா 2)
அக். 21 பைபிள் வாசிப்பு: தானியேல் 9-12
பாட்டு எண் 108
எண் 1: தானியேல்—ஏன் பயனுள்ளது (si-TL 141-2 பாரா. 19-23)
எண் 3: இஸ்ரவேல் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இன்று நிறைவேற்றமடைகின்றனவா? (rs-TL பக். 224 பாரா 3-பக். 225 பாரா 3)
எண் 4: கடவுளுடைய ராஜ்யம் உண்மையான அரசாங்கமா? (rs-TL பக். 226 பாரா. 1-2)
அக். 28 பைபிள் வாசிப்பு: ஓசியா 1-14
பாட்டு எண் 23
எண் 1: ஓசியாவுக்கு முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 143-5 பாரா. 1-8, 14-17)
எண் 3: இந்த ராஜ்யத்தில் ஆளுபவர்கள் யாவர்? (rs-TL பக். 226 பாரா. 3–5)
எண் 4: மனித அரசாங்கங்களின்மேல் இந்த ராஜ்யத்தின் பாதிப்பு என்னவாயிருக்கும்? (rs-TL பக். 227 பாரா. 1–2)
நவ. 4 பைபிள் வாசிப்பு: யோவேல் 1-3
பாட்டு எண் 166
எண் 1: யோவேலுக்கு முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 146-8 பாரா. 1-5, 12-14)
எண் 3: கடவுளுடைய ராஜ்யம் யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்தும் (rs-TL பக். 227 பாரா. 3–5)
எண் 4: கடவுளுடைய ராஜ்யம் எல்லாச் சிருஷ்டிப்பையும் தூய வணக்கத்தில் ஒன்றுபடுத்தும் (rs-TL பக். 228 பாரா. 1-2)
நவ. 11 பைபிள் வாசிப்பு: ஆமோஸ் 1-9
பாட்டு எண் 80
எண் 1: ஆமோஸுக்கு முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 148-50 பாரா. 1-6, 13-17)
எண் 3: கடவுளுடைய ராஜ்யம் போரையும் ஊழலையும் முடிவுகட்டும் (rs-TL பக். 228 பாரா 3–பக். 229 பாரா 2)
எண் 4: கடவுளுடைய ராஜ்யம் எல்லாருக்கும் உணவளிக்கும், எல்லா நோயையும் நீக்கும் (rs-TL பக். 229 பாரா. 3–5)
நவ. 18 பைபிள் வாசிப்பு: ஒபதியா 1-யோனா 4
பாட்டு எண் 96
எண் 1: ஒபதியா, யோனாவுக்கு முன்னுரை; ஏன் பயனுள்ளவை (si-TL பக். 151-3 பாரா. 1-5, 10-14; பக். 153-5 பாரா. 1-4, 9-12)
எண் 2: ஒபதியா 1:1-16
எண் 3: கடவுளுடைய ராஜ்யம் எல்லாருக்கும் வீடு, வேலை, பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்கும் (rs-TL பக். 229 பாரா 6-பக். 230 பாரா 2)
எண் 4: கடவுளுடைய ராஜ்யம் நீதியும் நியாயமும் நிலவியிருக்கச் செய்யும் (rs-TL பக். 230 பாரா. 3-5)
நவ. 25 பைபிள் வாசிப்பு: மீகா 1-7
பாட்டு எண் 138
எண் 1: மீகாவுக்கு முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 155-8 பாரா. 1-8, 16-19)
எண் 3: கடவுளுடைய ராஜ்யம் மரித்தோரை உயிர்த்தெழுப்பும் (rs-TL பக். 230 பாரா 6-பக். 231 பாரா 2)
எண் 4: கடவுளுடைய ராஜ்யம் நேசமும் இணக்கமும் உள்ள ஓர் உலகத்தை அளிக்கும் (rs-TL பக். 231 பாரா. 3–5)
டிச. 2 பைபிள் வாசிப்பு: நாகூம் 1-ஆபகூக் 3
பாட்டு எண் 137
எண் 1: நாகூம், ஆபகூக்குக்கு முன்னுரை; ஏன் பயனுள்ளவை (si-TL பக். 158-60 பாரா. 1-7, 11-12; பக். 161-3 பாரா. 1-5, 12-14)
எண் 3: கடவுளுடைய ராஜ்யம் இந்தப் பூமியை ஒரு பரதீஸாக்கும் (rs-TL பக். 231 பாரா 6–பக். 232 பாரா 1)
எண் 4: கடவுளுடைய ராஜ்யம் முதல் நூற்றாண்டில் ஆட்சிசெய்யத் தொடங்கியதா? (rs-TL பக். 232 பாரா. 2-4)
டிச. 9 பைபிள் வாசிப்பு: செப்பனியா 1-ஆகாய் 2
பாட்டு எண் 146
எண் 1: செப்பனியா, ஆகாய்க்கு முன்னுரை, ஏன் பயனுள்ளவை (si-TL பக். 163-6 பாரா. 1-6, 10-12; பக். 166-8 பாரா. 1-7, 13-16)
எண் 3: கடவுளுடைய ராஜ்யம் வருவது உலக மதமாற்றத்துக்காகக் காத்திருக்கவேண்டுமா? (rs-TL பக். 232 பாரா 5–பக். 233 பாரா 1)
எண் 4: g‘கடவுளுடைய ராஜ்யம் என் வாழ்நாளில் வராது’ (rs-TL பக். 233 பாரா. 3–4)
டிச. 16 பைபிள் வாசிப்பு: சகரியா 1-8
பாட்டு எண் 1
எண் 1: சகரியாவுக்கு முன்னுரை (si-TL பக். 168-9 பாரா. 1-7)
எண் 3: நாம் “கடைசி நாட்களில்” வாழ்ந்துகொண்டிருக்கிறோமென எது குறித்துக் காட்டுகிறது (rs-TL பக். 234 பாரா 1)
எண் 4: யுத்தங்களும் பஞ்சங்களும் அந்த ‘அடையாளத்தின்’ ஒரு பாகமாய் இருப்பது எப்படி? (rs-TL பக். 234 பாரா 2-பக். 236 பாரா 1)
டிச. 23 பைபிள் வாசிப்பு: சகரியா 9-14
பாட்டு எண் 176
எண் 1: சகரியா—ஏன் பயனுள்ளது (si-TL பக். 171-2 பாரா. 23-7)
எண் 3: லூக்கா 21:11 எவ்வாறு 1914 முதல் நிறைவேற்றம் அடைந்து வருகிறது? (rs-TL பக். 236 பாரா. 2–4)
எண் 4: அக்கிரமம் மிகுதியாவது எதை காட்டுகிறது? (rs-TL பக். 237 பாரா. 1–2)
டிச. 30 எழுத்துமுறை மறுபார்வை. பைபிள் வாசிப்பு: மல்கியா 1-4
பாட்டு எண் 118
[அடிக்குறிப்பு]
a நேரம் அனுமதித்தால், வீட்டுக்காரரின் பிடிவாதமான கருத்துக்களை, ஆட்சேபணைகளை, அல்லது பிராந்தியத்தில் எதிர்ப்படும் மற்ற பிரதிபலிப்புகளை எப்படி சமாளிப்பது என பேச்சில் காட்டலாம்.
b நேரம் அனுமதித்தால், வீட்டுக்காரரின் பிடிவாதமான கருத்துக்களை, ஆட்சேபணைகளை, அல்லது பிராந்தியத்தில் எதிர்ப்படும் மற்ற பிரதிபலிப்புகளை எப்படி சமாளிப்பது என பேச்சில் காட்டலாம்.
c நேரம் அனுமதித்தால், வீட்டுக்காரரின் பிடிவாதமான கருத்துக்களை, ஆட்சேபணைகளை, அல்லது பிராந்தியத்தில் எதிர்ப்படும் மற்ற பிரதிபலிப்புகளை எப்படி சமாளிப்பது என பேச்சில் காட்டலாம்.
d நேரம் அனுமதித்தால், வீட்டுக்காரரின் பிடிவாதமான கருத்துக்களை, ஆட்சேபணைகளை, அல்லது பிராந்தியத்தில் எதிர்ப்படும் மற்ற பிரதிபலிப்புகளை எப்படி சமாளிப்பது என பேச்சில் காட்டலாம்.
e நேரம் அனுமதித்தால், வீட்டுக்காரரின் பிடிவாதமான கருத்துக்களை, ஆட்சேபணைகளை, அல்லது பிராந்தியத்தில் எதிர்ப்படும் மற்ற பிரதிபலிப்புகளை எப்படி சமாளிப்பது என பேச்சில் காட்டலாம்.
f நேரம் அனுமதித்தால், வீட்டுக்காரரின் பிடிவாதமான கருத்துக்களை, ஆட்சேபணைகளை, அல்லது பிராந்தியத்தில் எதிர்ப்படும் மற்ற பிரதிபலிப்புகளை எப்படி சமாளிப்பது என பேச்சில் காட்டலாம்.
g நேரம் அனுமதித்தால், வீட்டுக்காரரின் பிடிவாதமான கருத்துக்களை, ஆட்சேபணைகளை, அல்லது பிராந்தியத்தில் எதிர்ப்படும் மற்ற பிரதிபலிப்புகளை எப்படி சமாளிப்பது என பேச்சில் காட்டலாம்.