உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/01 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2001
நம் ராஜ்ய ஊழியம்—2001
km 10/01 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். அக்கறை காட்டுபவர்களிடம் பத்திரிகை மார்க்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தில் மறுசந்திப்புகளை செய்யுங்கள். பத்திரிகை மார்க்கம் நடைமுறையானதாக இல்லாதபட்சத்தில் மட்டுமே சந்தா அளிக்கலாம். நவம்பர்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. நாம் சந்திப்பவர்களிடம் இவை ஏற்கெனவே இருந்தால், கடவுளைத் தேடி (ஆங்கிலம்) அல்லது ஏதாவதொரு பழைய பிரசுரத்தை அளிக்கலாம். டிசம்பர்: இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர். இல்லையென்றால், பைபிள்​—⁠கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்) அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை அளிக்கலாம். ஜனவரி: சபையில் இருக்கும் ஏதாவதொரு பழைய 192-பக்க புத்தகத்தை அளிக்கலாம். குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தை வைத்திருக்கும் சபைகள் அதையும் அளிக்கலாம்.

◼ நம் ராஜ்ய ஊழியத்தின் இந்த இதழ் உட்சேர்க்கையில் “2002 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை” உள்ளது. 2002-வது ஆண்டு முழுவதற்கும் இது உங்கள் கைவசம் இருக்கட்டும்.

◼ செப்டம்பர் மாதத்துக்கான ஸ்டேட்மென்ட்டுடன் சபைக் கூட்டங்களின் தகவல் படிவத்தில் (S-5) மூன்று பிரதிகள் ஒவ்வொரு சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட ஒரு படிவத்தை சபையின் செயலர் அக்டோபர் 20, 2001 தேதிக்குள் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்; ராஜ்ய மன்ற விலாசத்திலோ கூட்ட நேரங்களிலோ மாற்றம் இல்லாவிடினும் அவ்வாறே அனுப்ப வேண்டும். சபை விலாசத்திலோ கூட்ட நேரங்களிலோ வேறு எப்பொழுதாவது மாற்றம் ஏற்படும்போது சங்கத்திற்கு தெரியப்படுத்துவதற்காக அந்தப் படிவத்தின் மீதமான இரண்டு பிரதிகளை வைத்துக்கொள்ள வேண்டும். கூடுதலான கைப்பிரதிகள் சபைக்கு தேவைப்பட்டால், கைப்பிரதி விண்ணப்ப படிவத்தை (S-16) பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். கைப்பிரதிகள் உங்களுக்கு எப்போது வேண்டுமோ அதற்கு குறைந்தபட்சம் எட்டு வாரங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்.

◼ ஜூலை மாத ஸ்டேட்மென்ட்டுகளுடன் செப்டம்பர் 1, 2001, லிட்ரேச்சர் இன்வென்ட்ரி (S-18) ஃபார்ம்களில் மூன்று பிரதிகள் எல்லா சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. தங்கள் இன்வென்ட்ரிகளை இதுவரை அனுப்பியிராத சபைகள் மேற்கூறப்பட்ட ஃபார்ம்களை நிரப்பி உடனே சங்கத்திற்கு அனுப்ப வேண்டும். ஒரே “ராஜ்ய மன்ற பிரசுர தொகுதி”யாக இருக்கும் சபைகளுக்கு, ஒருங்கமைப்பு சபை இந்த ஃபார்மை பூர்த்தி செய்து சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

◼ கீழ்க்காணும் பிரசுரங்களுக்கு லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் (S-14) ஃபார்ம்களை தயவுசெய்து அனுப்பாதீர்கள். அவை தற்சமயம் கையிருப்பில் இல்லை. அவை மீண்டும் கிடைக்கையில் நம் ராஜ்ய ஊழியத்தில் அறிவிக்கப்படும்.

◼ இந்தியாவில் கையிருப்பில் இல்லாதவை:

பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (bi12)​—⁠ஆங்கிலம்

எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்​—⁠மலையாளம்

என்னுடைய பைபிள் கதை புத்தகம் ​—⁠மலையாளம்

நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் ​—⁠ஆங்கிலம், தமிழ், மலையாளம்

வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்​—⁠தமிழ்

யெகோவா​—⁠யார்? (துண்டுப்பிரதி எண் 23) ​—⁠குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி

நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறதா?​—⁠அல்லது நம்மிடம் கடவுள் கணக்கு கேட்பாரா? (துண்டுப்பிரதி எண் 71)​—⁠ஆங்கிலம், கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி

மிக மகத்தான பெயர் (துண்டுப்பிரதி எண் 72) ​—⁠கன்னடம், ஹிந்தி

யெகோவாவின் சாட்சிகள் யார்? (துண்டுப்பிரதி எண் 73)​—⁠ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி

நரக தண்டனை தேவ நீதியா? (துண்டுப்பிரதி எண் 74)​—⁠ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்