தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
மே 7 முதல் ஆகஸ்ட் 20, 2001 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. நெகேமியா 2:4-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஜெபம், செய்வதறியாமல், கடைசி கட்டத்தில் செய்யப்பட்டது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 2/15 பக். 25 பாரா 8-ஐக் காண்க.]
2. “சபை” என்ற வார்த்தை எக்லிஸியா என்ற கிரேக்க பதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; ஒருமைப்பாடும் பரஸ்பர ஆதரவும் இந்த வார்த்தையில் பொதிந்துள்ள கருத்துக்கள். [w-TL99 5/15 பக். 25 பாரா 4]
3. யெகோவாவின் ஊழியர்கள் கடவுளுடைய வார்த்தைக்கு முரண்படும் பழக்கவழக்கங்களைத் தவிர்த்தாலும், மரணத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாப் பழக்கங்களையும் அவர்கள் மறுப்பதில்லை. (யோவா. 19:40) [rs-TL பக். 102 பாரா 4]
4. யோபு வாழ்ந்த காலப்பகுதியில், அவர் மட்டுமே யெகோவாவுக்கு உண்மையுள்ள மனிதனாக இருந்தார். (யோபு 1:8) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL92 11/1 பக். 31 பாரா. 3-4-ஐக் காண்க.]
5. சவுல் அல்லது பவுல் கூடாரத் தொழில் மூலம் தன்னை பராமரித்துக் கொண்டார் என்ற உண்மை அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை காட்டுகிறது. (அப். 18:2, 3) [w-TL99 5/15 பக். 30 பாரா 2-பக். 31 பாரா 1]
6. தாவீது பெரும் பாவங்களைச் செய்தபோதிலும், மனந்திரும்பியதாலும் நல்ல பண்புகளினாலும் ‘தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின தாவீது’ என்று யெகோவாவால் சொல்ல முடிந்தது. (1 இரா. 14:8) [w-TL99 6/15 பக். 11 பாரா 4]
7. செய்வதாக வாக்குக்கொடுத்த ஒரு காரியம் வேதப்பூர்வமற்றதாக இருந்தாலொழிய, அது கடினமானது என்று பின்னால் தெரிய வந்தாலும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். (சங். 15:4) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL91 8/1 பக். 30 பாரா 5-ஐக் காண்க.]
8. அழுத்தத்தின்கீழ் தாவீது தற்காலிகமாக விசுவாசத்தை இழந்தார் என்று சங்கீதம் 22:1 குறிப்பிடுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL86 9/1 பக். 29 பாரா 6-ஐக் காண்க.]
9. மனக்குழப்பங்கள், ஏமாற்றங்கள், சட்ட அல்லது நிதி நிலையில் ஏற்படும் திருப்பங்களைப் பொறுத்தவரையில் ஒரு கிறிஸ்தவர் ‘விழலாம்’; ஆனால் கடவுளுடைய ஆவியாலும் அவருடைய அன்பான வணக்கத்தாரின் உதவியாலும் அவர் ஆவிக்குரிய விதத்தில் முற்றிலுமாக “தள்ளுண்டு போவதில்லை.” (சங். 37:23, 24) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 11/1 பக். 30 பாரா 14-ஐக் காண்க.]
10. பூமியிலுள்ள அனைத்தையும் கடவுள் 24 மணிநேரம் கொண்ட ஆறு நாட்களில் படைத்ததாக ஆதியாகமம் 1-ம் அதிகாரம் கற்பிக்கிறது. [rs-TL பக். 126 பாரா 1]
பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
11. எஸ்றாவும் அவருடைய உதவியாளர்களும் எப்படி நியாயப்பிரமாணத்துக்கு ‘அர்த்தம் சொன்னார்கள்’? (நெ. 8:8) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 2/15 பக். 26 பாரா 4-ஐக் காண்க.]
12. “யெகோவாவுக்குள் மகிழ்ச்சி” எதனால் ஏற்படுகிறது? (நெ. 8:10, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 2/15 பக். 26 பாரா 9-ஐக் காண்க.]
13. “எருசலேமில் குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்” ஏன் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்? (நெ. 11:2) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 2/15 பக். 26 பாரா 12-ஐக் காண்க.]
14. எஸ்தர் தன் முக்கிய உள்நோக்கத்தை ராஜாவிடம் தெரிவிக்க ஏன் தாமதித்தாள்? (எஸ்தர் 5:6-8) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 3/15 பக். 24 பாரா 18-ஐக் காண்க.]
15. யோபு புத்தகம் எந்த இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறது? [si-TL பக். 95 பாரா 1]
16. எலிப்பாஸின் அறிவுரை ஏன் யோபுவை உற்சாகப்படுத்தாமல் சோர்வடையச் செய்தது? (யோபு 21:34; 22:2, 3) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 2/15 பக். 27 பாரா. 5-6-ஐக் காண்க.]
17. சங்கீதம் என்றால் என்ன? [si-TL பக். 101 பாரா 2]
18. சங்கீதம் 2:1-ல் குறிப்பிட்டுள்ளபடி எந்த “விருதாக்காரியத்தை” தேசங்கள் ‘சிந்திக்கின்றன’? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL86 9/1 பக். 28 பாரா 5-ஐக் காண்க.]
19. பிலிப்பு தன் ஊழியத்தில் சமாரியர்களையும், எத்தியோப்பிய அதிகாரியையும் சந்தித்ததிலிருந்து பட்சபாதமற்ற தன்மையைக் குறித்து என்ன நடைமுறையான பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்? (அப். 8:6-13, 26-39) [w-TL99 7/15 பக். 25 பாரா 2]
20. பிரச்சினைகளிலிருந்து மறைந்துகொள்ள முடிந்த இடமாக யோபு கருதிய பாதாளத்தில் இருந்து கடவுள் அவரை உயிர்த்தெழுப்புவார் என்று உறுதியாக நம்புவதை அவர் எவ்வாறு உதாரணத்தோடு விளக்கினார்? (யோபு 14:7, 13-15) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL00 5/15 பக். 27 பாரா 7-பக். 28 பாரா 1-ஐக் காண்க.]
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. மக்களில் அநேகர் “யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்” என்பதாக எஸ்தர் 8:17 சொல்கிறது; அதேவிதமாக இன்று, ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த _________________________, _________________________ பக்கமாக நிலைநிற்கை எடுத்திருக்கின்றனர். (வெளி. 7:9; யோவா. 10:16; சக. 8:23) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 3/15 பக். 25 பாரா 14-ஐக் காண்க.]
22. அப்போஸ்தலர் 1:7 குறிப்பிடுகிறபடி, யெகோவா _________________________ குறித்து உணர்வுள்ளவராய் இருந்தாலும், அவர் நியாயம் தீர்க்கும் நாள் யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு _________________________ போல வரும். (2 பே. 3:10) [w-TL99 6/1 பக். 5 பாரா. 1-2]
23. 2 பேதுரு 3:7, 10-ல், ‘வானங்கள்,’ ‘பூமி’ என்ற பதங்கள் _________________________ பயன்படுத்தப்பட்டிருக்கின்றன; சூழமைவு காண்பிக்கிறபடி, “பூமி” _________________________ குறிக்கிறது. [rs-TL பக். 114 பாரா. 3-5]
24. நம்பிக்கை, நாணயம், பரஸ்பர புரிந்துகொள்ளுதல் ஆகியவை இருந்தால் நல்ல பேச்சுத்தொடர்பு கொள்ள முடிகிறது; திருமணத்தை _________________________ பந்தமாக கருதி, அதன் வெற்றிக்கு உண்மையான _________________________ உழைத்தால் இந்த பண்புகள் வளர்கின்றன. [w-TL99 7/15 பக். 21 பாரா 3]
25. நல்ல சகாக்களின் செல்வாக்கு ஒழுக்க மற்றும் ஆன்மீக தேவைகளை _________________________ உதவி செய்யலாம்; இவ்வாறு அது யெகோவாவை _________________________ சேவிக்கவும் உதவும். [w-TL99 8/1 பக். 24 பாரா 4]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. மொர்தெகாய் ‘அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தது’ அவன் (ராஜாவின் மெய்க்காவலன்; அகாஸ்வேரு ராஜாவின் அதிகாரிகளில் ஒருவன்; ராஜாவை சந்திக்க காத்திருந்தான்) என்பதைக் குறிக்கிறது. (எஸ்தர் 2:19, 20) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 3/15 பக். 24 பாரா 9-ஐக் காண்க.]
27. யோபு 19:25-27-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி, யோபு “தேவனைப் பார்ப்பேன்” என விசுவாசத்தோடு சொன்னபோது, (ஒரு தரிசனத்தை காண்பார்; பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்; யெகோவாவைப் பற்றிய உண்மைக்குத் தன்னுடைய புரிந்துகொள்ளுதலின் கண்களைத் திறந்து வைத்திருப்பார்) என்பதை குறிப்பிட்டார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL94 11/15 பக். 19 பாரா 17-ஐக் காண்க.]
28. யோபு பெரும்பாலும் அவருடைய (அன்புக்காக; தயவுக்காக; சகிப்புத்தன்மைக்காக) நினைவுகூரப்படுகிறார். (யாக். 5:11) [si-TL பக். 100 பாரா 41]
29. சங்கீத புத்தகத்தை எழுதுவதற்கு ஏறக்குறைய (முந்நூறு; ஐந்நூறு; ஆயிரம்) ஆண்டுகள் எடுத்தன. [si-TL பக். 101 பாரா 4]
30. கடைசியாக சங்கீத புத்தகத்தை (தாவீது; ஆசாப்; எஸ்றா) தொகுத்திருக்க வேண்டும். [si-TL பக். 102 பாரா 6]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
நெ. 3:5; சங். 12:2; 19:7; 2 தீ. 3:16, 17; யாக். 5:14-16
31. கடினமான வேலையை மதிப்புக் குறைவாக எடைபோட்டு, பெருமையோடு பின்வாங்காமல் மனப்பூர்வமாக செய்ய வேண்டும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 2/15 பக். 25 பாரா. 12, 19-ஐக் காண்க.]
32. பெருந்தவறை செய்துவிட்ட ஒரு கிறிஸ்தவர் தன் பாவத்தை மூப்பர்களிடம் தெரிவிக்க வேண்டும். [rs-TL பக். 84 பாரா 1]
33. முற்காலத்தில் எச்சரிப்பு, கட்டளை, தீர்க்கதரிசனம் ஆகியவற்றை கொடுப்பதற்கு கடவுள் சொப்பனங்களை பயன்படுத்திய போதிலும், இப்பொழுது இரட்சிப்புக்குரிய விஷயங்களை தம்மால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் அளிக்கிறார். [rs-TL பக். 106 பாரா 3]
34. கடவுளுடைய சிநேகிதத்தை நாம் விரும்பினால், நாம் உள்ளூர நேர்மையுள்ளவர்களாக, மாயமற்றவர்களாக இருக்க வேண்டும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL91 8/1 பக். 28 பாரா 7-ஐக் காண்க.]
35. கடவுளுடைய சட்டத்துக்கு கீழ்ப்படிவது ஒருவருக்கு புத்துணர்ச்சி அளித்து அவருடைய நலனை மேம்படுத்துகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL00 10/1 பக். 13 பாரா 4-ஐக் காண்க.]