அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம். செப்டம்பர்: இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள் சிற்றேடும் உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்) புத்தகமும். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். அக்கறை காட்டுபவர்களிடம் பத்திரிகை மார்க்கத்தை ஏற்படுத்துமாறு மறுசந்திப்புகளை செய்யுங்கள். பத்திரிகை மார்க்கம் நடைமுறையானதாக இல்லாதபட்சத்தில் மட்டுமே சந்தா அளிக்கலாம். நவம்பர்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. நாம் சந்திப்பவர்களிடம் இவை ஏற்கெனவே இருந்தால், கடவுளைத் தேடி (ஆங்கிலம்) அல்லது பழைய பிரசுரம் எதையாவது அளிக்கலாம்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்கை தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்ததும் அடுத்த முறை சபையில் கணக்கு அறிக்கையை படித்த பிறகு, இதையும் சபையாருக்கு அறிவித்துவிடுங்கள்.
◼ உங்கள் கவனத்திற்கு: கிளை அலுவலகம் பெங்களூருக்கு மாற்றப்பட வேண்டிய சமயம் நெருங்குவதால், 2002, 2003 ஊழிய ஆண்டுகளில் தேவைப்படும் ஃபார்ம்கள் தனித்தனி பாக்கெட்டுகளில் ஒவ்வொரு சபைக்கும் இவ்வருடம் அனுப்பி வைக்கப்படுகிறது. தயவுசெய்து இவற்றை ஞானமாக பயன்படுத்துங்கள். அந்தந்த ஃபார்ம்களை அதனதன் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தவும். 2003 ஊழிய ஆண்டிற்கான பாக்கெட்டை அப்போது பயன்படுத்துவதற்காக பாதுகாப்பான இடத்தில் வைத்து பத்திரப்படுத்த வேண்டும்.
◼ இந்த வருடத்திலிருந்து, பயனியர் ஊழியப் பள்ளிக்கு செல்ல விரும்பும் ஒழுங்கான பயனியர்களுக்கு, அந்த வருடத்தில் செப்டம்பர் 1-ம் தேதி 16 வயதாவது நிறைவாகி இருந்தால்தான் அப்பள்ளிக்கு தகுதி பெறுவர். ஆனால் இந்த வயதை எட்டாதவர்களின் பெற்றோர் அதே பயனியர் பள்ளிக்குச் செல்ல தகுதிபெற்றிருந்தால் விலக்கு அளிக்கப்படும்.
◼ முடிந்தவரை ஆகஸ்ட் 31, 2001 தேதிக்குள் கையிருப்பிலுள்ள எல்லா புத்தகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் வருடாந்தர இன்வென்ட்ரி எடுக்க வேண்டும். பிரசுர ஒருங்கமைப்பாளர் ஒவ்வொரு மாதமும் எண்ணிக்கையை சரிபார்ப்பதைப் போலவேதான் இந்த இன்வென்ட்ரியும். மொத்த எண்ணிக்கையை லிட்ரேச்சர் இன்வென்ட்ரி ஃபார்மில் (S-18-TL) எழுத வேண்டும். கையிருப்பிலுள்ள மொத்த பத்திரிகைகளின் எண்ணிக்கையை பிரசுர தொகுதியிலுள்ள ஒவ்வொரு சபையிலுமுள்ள பத்திரிகை ஊழியரிடமிருந்து தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு ஒருங்கமைப்பு சபைக்கும் மூன்று லிட்ரேச்சர் இன்வென்ட்ரி ஃபார்ம்கள் (S-18-TL) அனுப்பி வைக்கப்படும். தயவுசெய்து செப்டம்பர் 6-ம் தேதிக்குள் ஒரிஜினலை சொஸைட்டிக்கு அனுப்பவும். கார்பன் காப்பியை உங்களுடைய ஃபைல்களில் வைத்துக்கொள்ளவும். மூன்றாம் காப்பியை ‘ரஃப்’ ஷீட்டாக பயன்படுத்தலாம். ஒருங்கமைப்பு சபையின் செயலர் இன்வென்ட்ரி எடுப்பதை மேற்பார்வை செய்ய வேண்டும். ஒருங்கமைப்பு சபையின் செயலரும் நடத்தும் கண்காணியும் ஃபார்மில் கையெழுத்திடுவார்கள்.
◼ ஆகஸ்ட் 24, 2001 முதல் ஆகஸ்ட் 31, 2001 வரை, லோனாவ்லா பெத்தேலில் எல்லா பிரசுரங்களுக்கும் சொஸைட்டி இன்வென்ட்ரி எடுக்கும். இதனால் இந்த நாட்களில் லிட்ரேச்சர் எதுவும் அனுப்பப்பட மாட்டாது.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I—கன்னடா, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி
இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி—ஹிந்தி