ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூன் 11-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். நாசி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நிற்கின்றனர் என்ற வீடியோவை ஜூன் 25-ம் தேதி துவங்கும் வாரத்தில் நடைபெறும் ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும் அதைப் பார்த்து வரும்படி உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:“தொடர்ந்து ‘நன்மை செய்யுங்கள்.’” பைபிள் அடிப்படையில் மூப்பர் தரும் உற்சாகமான பேச்சு.
20 நிமி:“உங்கள் மாணாக்கரின் இதயத்தை எட்டுங்கள்.”a புதியவர்கள் யெகோவாவிலும் இயேசுவிலும் தங்கள் விசுவாசத்தையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள எப்படி உதவலாம் என்பதற்கு நடைமுறையான ஆலோசனைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஜூலை 15, 1999, காவற்கோபுரம், பக்கம் 14, பாராக்கள் 18-20-லுள்ள முக்கிய குறிப்புகளை உபயோகியுங்கள்.
பாட்டு 184, முடிவு ஜெபம்.
ஜூன் 18-ல் துவங்கும் வாரம்
5 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
10 நிமி:உரையாடலை நிறுத்த முயலுபவர்களை சமாளித்தல். சபையாரோடு கலந்தாலோசிப்பு. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 15-16-லுள்ள “குறிப்புகள்” பகுதியை கலந்தாராயுங்கள். உங்கள் பிராந்தியத்தில் சந்திக்கும் சில எதிர்ப்புகளைப் பக்கங்கள் 16-20-லிருந்து தேர்ந்தெடுங்கள். பலனளிக்கும் விதத்தில் எப்படி பதிலளித்தார்கள், ஏன் என்பவற்றை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி:இளைஞர்கள்—உங்கள் வேலையை ஞானமாய் தேர்ந்தெடுங்கள். துணைக் கல்வியுடன் சம்பந்தப்பட்ட பைபிள் நியமங்களைப் பற்றி மூன்று பகுதிகளாக ஊழியக் கூட்டத்தில் கலந்தாராயப்படும். அதில் இது முதல் பகுதி. சில கிறிஸ்தவ இளைஞர்கள் உத்தியோகத்திற்காக உயர் கல்வி கற்கிறார்கள். இது அவர்களுடைய ஆன்மீகத்தைப் பாதிக்கிறது. வாலிப மகனுடனோ மகளுடனோ பெற்றோர் இருவரும் கலந்துரையாடும் விதமாக இந்தப் பகுதியை கையாள வேண்டும். தன்னுடைய எதிர்கால இலக்கைக் குறித்து திட்டவட்டமாக தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்தில் அந்த இளைஞர் இருக்கிறார். கைநிறைய சம்பாதிக்க, பேரும் புகழும் கிடைக்க, அல்லது சொகுசான வாழ்க்கை வாழ சிலர் விரும்பினாலும் அது சம்பந்தமாக பைபிள் என்ன சொல்கிறது என்பதை குடும்பமாக ஆராய்கின்றனர். (காண்க: இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் பக்கங்கள் 174-5; காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1997, பக்கம் 21 மற்றும் செப்டம்பர் 1, 1999, பக்கங்கள் 19-21, பாராக்கள் 1-3-ம் 5-6-ம்.) ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு தேவராஜ்ய இலக்குகளை அடைய தனக்கு உதவும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்பதை அந்த இளைஞர் ஒப்புக்கொள்கிறார்.
15 நிமி:“சோர்வை உங்களால் சமாளிக்க முடியும்!” காவற்கோபுரம், பிப்ரவரி 1, 2001, பக்கங்கள் 20-23-ன் அடிப்படையில் மூப்பரின் பேச்சு.
பாட்டு 197, முடிவு ஜெபம்.
ஜூன் 25-ல் துவங்கும் வாரம்
15 நிமி:சபை அறிவிப்புகள். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான பிரசுர அளிப்பை கலந்தாலோசியுங்கள். சபையின் கையிருப்பில் இருக்கும் இரண்டு சிற்றேடுகளைப் பற்றி குறிப்பிடுங்கள். ஊழியத்தில் அவற்றை எப்படி அளிக்கலாம் என்பதைக் காட்டும் நன்கு தயாரிக்கப்பட்ட நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். மாதிரி பிரசங்க அளிப்புகளைப் பற்றி அறிய 1995 முதல் 1998 வரையான ஜூலை, ஆகஸ்ட் மாத நம் ராஜ்ய ஊழிய இதழ்களின் கடைசிப் பக்கத்தைக் காண்க.
30 நிமி:“நான் உறுதியாக நிற்கிறேன்! உறுதியாக நிற்கிறேன்! உறுதியாக நிற்கிறேன்!” பாரா 2-லுள்ள கேள்விகளைப் பயன்படுத்தி உறுதியாக நிற்கின்றனர் வீடியோவை சபையாரோடு கலந்தாலோசித்தல். பின்னர் பாராக்கள் 3-4-ஐக் கலந்தாலோசியுங்கள். முடிவில், 1999, நவம்பர் 22, விழித்தெழு!, பக்கம் 31-லுள்ள அனுபவத்தை சொல்லுங்கள். ஆகஸ்ட் மாதத்தில் புதிய உலக சமுதாயம் செயலில் என்ற ஆங்கில வீடியோவைப் பற்றி கலந்தாலோசிப்போம் என எதிர்பார்க்கிறோம்.
பாட்டு 29, முடிவு ஜெபம்.
ஜூலை 2-ல் துவங்கும் வாரம்
13 நிமி:சபை அறிவிப்புகள். ஜூன் மாத ஊழிய அறிக்கையைப் போடும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். “உங்கள் நூலகத்தில் ஏதாவது இயர்புக் இல்லாமல் இருக்கிறதா?” பெட்டியை கலந்தாலோசியுங்கள். 1997 முதல் 2000 வரையான இயர்புக்குகளில் உள்ள தகவல்கள் எவ்வளவு மதிப்புமிக்கவை என்பதை விளக்குவதற்கு அவற்றிலுள்ள சில அனுபவங்களை சுருக்கமாக சொல்லுங்கள். கையிருப்பில் உள்ளவை தீர்ந்துபோவதற்கு முன் தங்கள் நூலகங்களில் இந்த இயர்புக்குகள் இல்லாதவர்கள் அனைவரும் ஆர்டர் செய்யும்படி உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:சபை தேவைகள்.
17 நிமி:“உங்கள் பிராந்தியத்தில் காதுகேளாதவர்களை கண்டுபிடிப்பதில் கவனமாய் இருங்கள்.” அக்டோபர் 15, 1998 என தேதியிடப்பட்ட இந்தியாவிலுள்ள அனைத்து சபைகளுக்கான கடிதத்தில் “வேற்றுமொழி பேசும் நபர்களை கண்டுபிடித்தல்” பகுதியை கலந்தாலோசியுங்கள். 2001, ஏப்ரல் 22, ஆங்கில விழித்தெழு!-வில் பக்கங்கள் 19-23-லுள்ள அனுபவத்தை சுருக்கமாக சொல்லுங்கள்.
பாட்டு 32, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்பு]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.