உங்கள் பிராந்தியத்தில் காதுகேளாதவர்களை கண்டுபிடிப்பதில் கவனமாய் இருங்கள்
1 “வா . . . விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்” என்ற அழைப்பை யெகோவா விடுக்கிறார். (வெளி. 22:17) காதுகேளாத அநேகரும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்கின்றனர். இதன் காரணமாக, ஐக்கிய மாகாணங்களின் கிளை அலுவலக மேற்பார்வையில் கடந்த 13 வருடங்களில் 27 சைகை மொழி சபைகளும் 43 சைகை மொழி தொகுதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2 உலகெங்கும் அநேக நாடுகளிலுள்ள சைகை மொழி சபைகளும் தொகுதிகளும் தங்கள் பிராந்தியங்களிலுள்ள காதுகேளாதவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு பிரசங்கிப்பதிலேயே கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன; இதில் அவர்கள் பெருமளவு வெற்றி பெற்றிருக்கின்றனர். இந்தியாவில் இன்னும் அநேக காதுகேளாதோரை சந்தித்து, சாட்சி கொடுக்க வேண்டியுள்ளது. நாடு முழுவதும் காதுகேளாதோர் லட்சக்கணக்கில் உள்ளதால் இவர்களுக்கு பிரசங்கிக்கும் விசேஷ ஊழியத்தை விஸ்தரிக்க உண்மையிலேயே அதிக வாய்ப்புள்ளது!
3 நீங்கள் எப்படி உதவலாம்? பொது இடங்களில் சைகை மொழியில் பேசிக்கொள்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உங்களுடன் வேலை செய்கிறவருடைய அல்லது சக மாணவருடைய குடும்பத்தாரில் உள்ள காதுகேளாதவர் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? அன்றாட அலுவலில் நீங்கள் ஈடுபட்டிருக்கையில் காதுகேளாதவர் யாரையேனும் உள்ளனரா என எப்போதும் கவனியுங்கள். ஆனால் அவர்களும் ராஜ்ய செய்தியைத் தெரிந்துகொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?
4 சாட்சி கொடுத்தல்: ஒரு பயனியர் சகோதரி தன் பிராந்தியத்தில் காதுகேளாதவர்கள் அநேகரை சந்தித்தார். ஒருநாள் அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருந்த போது காதுகேளாத ஒரு பெண் இந்த சகோதரியை அணுகினாள்; ஒரு பொருளைக் கண்டுபிடிக்க உதவும்படி துண்டு சீட்டில் எழுதிக் கேட்டாள். அவளுக்கு உதவியபின் அந்தப் பகுதியிலுள்ள காதுகேளாதவர்களுக்கு உதவ சைகை மொழி கற்றுக்கொள்ள தான் விரும்புவதாக அந்தப் பயனியர் சகோதரி எழுதிக் காட்டினார். “நீங்கள் ஏன் காதுகேளாதவர்களுக்கு உதவ விரும்புகிறீர்கள்?” என அந்தப் பெண் எழுதிக் கேட்டாள். “நான் ஒரு யெகோவாவின் சாட்சி. பைபிளைப் புரிந்துகொள்ள காதுகேளாதவர்களுக்கு உதவ விரும்புகிறேன். நீங்கள் எனக்கு சைகை மொழி கற்றுக்கொடுங்கள், நான் உங்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்கிறேன்” என அந்த பெண்ணின் கேள்விக்கு பதில் எழுதினார் அந்த சகோதரி. “‘ஓ.கே.’ என அவள் ஒப்புக்கொண்டபோது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை நீங்கள் கற்பனை செய்ய முடியாது” என அந்த சகோதரி சொல்கிறார். அச்சகோதரி ஆறு வாரங்களுக்கு ஒவ்வொரு நாள் மாலையிலும் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்று சைகை மொழியைக் கற்றுக்கொண்டார். அந்தக் காதுகேளாத பெண்ணும் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு முழுக்காட்டுதல் பெற்றாள்!
5 உங்கள் பகுதியிலுள்ள காதுகேளாதவர்களுக்கு ஆவிக்குரிய உதவி அளிக்க உங்கள் சபையில் யாருமே இல்லாவிட்டால் என்ன செய்வது? நீங்கள் எப்படி உதவலாம்? நீங்கள் மறுசந்திப்பு செய்து அவருடைய வீட்டில் காதுகேட்பவர் யாராவது இருந்தால் அவர்களிடம் பேசிப் பார்க்கலாம் அல்லவா? பொதுவாக உபயோகிக்கப்படும் சைகை மொழி எது என கண்டுபிடியுங்கள். காதுகேளாதவருக்கும் திறம்பட்ட விதத்தில் சத்தியத்தை அறிவிப்பதற்காகவே சைகை மொழியை சில பிரஸ்தாபிகள் கற்றிருக்கின்றனர். (அப். 16:9, 10) யெகோவாவின் ஆசீர்வாதத்தாலும் நம்முடைய ஊக்கமான முயற்சியாலும் அநேக நற்பலன்கள் கிடைக்கும்.
6 உங்கள் பகுதியிலுள்ள காதுகேளாதவர்களைக் கண்டுபிடிப்பதில் கவனமாய் இருப்பதன் மூலம் ஜீவ தண்ணீரை அவர்களும் இலவசமாய் பெற்றுக்கொள்ள நீங்கள் வாய்ப்பை அளிக்கலாம்.—மத். 10:11.