உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/00 பக். 3-6
  • 2001 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2001 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
  • நம் ராஜ்ய ஊழியம்—2000
  • துணை தலைப்புகள்
  • அறிவுரைகள்
  • அட்டவணை
நம் ராஜ்ய ஊழியம்—2000
km 10/00 பக். 3-6

2001 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை

அறிவுரைகள்

2001-⁠ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.

பாடப்புத்தகங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) [bi12], காவற்கோபுரம் [w-TL], ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ [si-TL], வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் [rs-TL] ஆகியவற்றிலிருந்து பேச்சுக்கள் நியமிக்கப்படும்.

பாட்டு, ஜெபம், வரவேற்புரையுடன் பள்ளி சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படும். பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும் எல்லா பகுதிகளையும் பற்றி முன்னதாகவே சொல்ல வேண்டியதில்லை. பள்ளியை நடத்துபவர் ஒவ்வொரு பேச்சையும் அறிமுகப்படுத்தும்போது கேட்கப்போகும் பேச்சின் பொருளை சொல்லுவார். பள்ளி பின்வருமாறு நடத்தப்பட வேண்டும்:

பேச்சு நியமிப்பு எண் 1: 15 நிமிடங்கள். இது மூப்பர் அல்லது உதவி ஊழியர் ஒருவரால் கையாளப்பட வேண்டும்; காவற்கோபுரம் [w-TL] அல்லது ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ [si-TL] புத்தகத்திலிருந்து பேச்சு கொடுக்கப்பட வேண்டும். காவற்கோபுரத்திலிருந்து பேச்சு கொடுக்கப்படுகையில் கேள்வி மறுபார்வையின்றி 15 நிமிட போதனா பேச்சாக அளிக்க வேண்டும். ‘வேதாகமம் முழுவதும்’ புத்தகத்திலிருந்து கொடுக்கப்படுகையில், 10 முதல் 12 நிமிட பேச்சுக்குப் பின்பு புத்தகத்திலுள்ள கேள்விகளைப் பயன்படுத்தி 3 முதல் 5 நிமிடத்திற்கு கேள்வி பதில் முறையில் மறுபார்வை செய்ய வேண்டும். நியமிக்கப்பட்ட பகுதியைச் சிந்திப்பது மட்டுமே இதன் குறிக்கோளல்ல; ஆனால் சபைக்கு அதிக பயனுள்ள விஷயத்தை வலியுறுத்திக் காட்டி, சிந்திக்கப்படும் விஷயங்கள் எவ்வளவு நடைமுறையானவை என்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் வேண்டும். அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பையே பயன்படுத்த வேண்டும்.

இந்தப் பேச்சு கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தேவைப்பட்டால், அல்லது பேச்சாளர் கேட்டுக்கொண்டால், தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கப்படலாம்.

பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 6 நிமிடங்கள். இது, மூப்பரால் அல்லது உதவி ஊழியரால் கையாளப்பட வேண்டும்; அவர் விஷயத்தை சபையின் தேவைகளுக்கேற்ப பலன்தரத்தக்க முறையில் பொருத்திக் காட்டுவார். தலைப்பு தேவையில்லை. நியமிக்கப்பட்ட வாசிப்புப் பகுதியின் சுருக்கமாக மட்டுமே இது இருக்கக்கூடாது. 30 முதல் 60 விநாடிகளுக்கு, நியமிக்கப்பட்ட அதிகாரங்களின்பேரில் மொத்த மறுபார்வையையும் உட்படுத்திக்கொள்ளலாம். என்றாலும், முக்கிய குறிக்கோளானது, அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு நமக்குப் பயனுள்ளது என்பதை சபையார் மதித்துணர உதவி செய்வதேயாகும். பின்பு மாணாக்கர்கள் வெவ்வேறு வகுப்பறைகளுக்குச் செல்லும்படி பள்ளி கண்காணி சொல்வார்.

பேச்சு நியமிப்பு எண் 2: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரர் அளிக்கும் நியமிக்கப்பட்ட பகுதியின் பைபிள் வாசிப்பாகும். மன்றத்திலுள்ள பள்ளிக்கும் மற்ற வகுப்பறைகளுக்கும் இது பொருந்தும். மாணாக்கர் முன்னுரையிலும் முடிவுரையிலும் சுருக்கமான விளக்கக் குறிப்பைக் கொடுக்க வசதியாக வாசிப்பு நியமிப்புகள் பொதுவாய் ஓரளவு சிறியவையாக இருக்கின்றன. சரித்திரப் பின்னணி, தீர்க்கதரிசன அல்லது கோட்பாட்டுக்குரிய முக்கியத்துவம், நியமங்களின் பொருத்தம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். கொடுக்கப்பட்ட எல்லா வசனங்களையும் இடைவிடாமல் வாசிக்க வேண்டும். ஆனால், வாசிக்க வேண்டிய வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாத சந்தர்ப்பத்தில் வாசிப்பு தொடரவிருக்கும் வசன எண்ணை மாணாக்கர் குறிப்பிடலாம்.

பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்தப் பேச்சு, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது போலவோ, மறுசந்திப்பு செய்வது போலவோ, வீட்டு பைபிள் படிப்பு நடத்துவது போலவோ பேச்சை அமைக்கலாம். பங்கெடுப்போர் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ பேச்சு கொடுக்கலாம். மாணாக்கர், நியமிக்கப்பட்ட பொருளை எவ்வாறு படிப்படியாக விவரித்துப் பேசுகிறார் என்றும், வீட்டுக்காரர் வேதவசனங்களை பகுத்தாராய்வதற்கு எவ்வாறு உதவுகிறார் என்றும் பள்ளி கண்காணி முக்கியமாக கவனிப்பார். இந்தப் பேச்சைக் கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் மாணாக்கருக்கு வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உதவியாளர் ஒருவரை பள்ளி கண்காணியே நியமிப்பார், தேவைப்பட்டால் இன்னொரு உதவியாளர் ஒருவரை வைத்துக்கொள்ளலாம். பேச்சின் அமைப்புக்கு அல்ல, ஆனால் திறம்பட்ட விதத்தில் பைபிள் உபயோகிக்கப்படுகிறதா என்பதற்கே முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

பேச்சு நியமிப்பு எண் 4: 5 நிமிடங்கள். இந்த நியமிப்பு, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்தப் பேச்சு நியமிப்பு எண் 4, ஒரு சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு நியமிக்கப்படும். ஒரு சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், ஒரு பேச்சாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும். ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படுகையில், பேச்சு எண் 3-⁠ஐப்போல் இந்தப் பேச்சைக் கொடுக்க வேண்டும்.

பைபிள் வாசிப்பு அட்டவணை: சபையார் அனைவரும் வாராந்தர பைபிள் வாசிப்பு அட்டவணையில் உள்ள பகுதியை வாசிக்கும்படி ஊக்கமளிக்கப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு ஒரு பக்கத்தை வாசித்தாலே போதும்.

குறிப்பு: அறிவுரை, நேரம், எழுத்துமுறை மறுபார்வைகள், நியமிப்புகளுக்கு தயாரித்தல் ஆகியவை சம்பந்தமாக கூடுதலான தகவலுக்கும் ஆலோசனைக்கும் தயவுசெய்து அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-ஐக் காண்க.

அட்டவணை

ஜன. 1 பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 13-16

பாட்டு எண் 62

எண் 1: மன்னிப்பு இரட்சிப்புக்கு வழிதிறக்கிறது (w-TL99 1/1 பக். 30-1)

எண் 2: 2 இராஜாக்கள் 14:1-14

எண் 3: கருச்சிதைவு​—⁠ஏன் தடைசெய்யப்பட்டிருக்கிறது? (rs-TL பக். 25-6 பாரா 4)

எண் 4: ‘என்னுடைய உடலைப் பாதிக்கும் காரியங்களைப்பற்றித் தீர்மானிக்க எனக்கு உரிமையுண்டு’ என சொல்லுபவருக்கு பதிலளித்தல் (rs-TL பக். 26 பாரா 5)

ஜன. 8 பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 17-20

பாட்டு எண் 116

எண் 1: எளிதில் ஏற்றுக்கொள்ளத்தக்க அறிவுரை (w-TL99 1/15 பக். 21-4)

எண் 2: 2 இராஜாக்கள் 18:1-16

எண் 3: ஆதாமும் ஏவாளும்​—⁠நிஜமாகவே வாழ்ந்தார்களா? (rs-TL பக். 27-8 பாரா 5)

எண் 4: ‘ஆதாமின் பாவம், கடவுளுடைய சித்தமாயிருந்தது, கடவுளுடைய திட்டமாயிருந்தது’ என சொல்லுபவருக்கு பதிலளித்தல் (rs-TL பக். 29 பாரா. 1-2)

ஜன. 15 பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 21-25

பாட்டு எண் 61

எண் 1: 2 இராஜாக்கள்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 74 பாரா. 33-6)

எண் 2: 2 இராஜாக்கள் 21:1-16

எண் 3: மூதாதையர் வணக்கம் ஏன் வீணானது? (rs-TL பக். 29-31 பாரா 2)

எண் 4: ஏன் மூதாதையர் வணக்கம் யெகோவா தேவனுக்குப் பிரியமற்றது (rs-TL பக். 31 பாரா 3–​பக். 32 பாரா 1)

ஜன. 22 பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 1-5

பாட்டு எண் 16

எண் 1: 1 நாளாகமத்திற்கு முன்னுரை (si-TL பக். 75-6 பாரா. 1-7)

எண் 2: 1 நாளாகமம் 1:1-27

எண் 3: அந்திக்கிறிஸ்துகள் யார்? (rs-TL பக். 32-3)

எண் 4: விசுவாச துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளுதல் (rs-TL பக். 34-6 பாரா 1)

ஜன. 29 பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 6-10

பாட்டு எண் 73

எண் 1: உள்ளப்பூர்வமான பணிவை எப்படி காட்டுவது (w-TL99 2/1 பக். 6-7)

எண் 2: 1 நாளாகமம் 9:1-21

எண் 3: விசுவாச துரோகிகளை நாம் எப்படி கருத வேண்டும்? (rs-TL பக். 36 பாரா 2–​பக். 37 பாரா 2)

எண் 4: பேதுருவின்மீது கிறிஸ்து சர்ச்சைக் கட்டவில்லை (rs-TL பக். 37-9 பாரா 3)

பிப். 5 பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 11-16

பாட்டு எண் 65

எண் 1: உற்சாகத்தின் ஊற்றாகுங்கள் (w-TL99 2/15 பக். 26-9)

எண் 2: 1 நாளாகமம் 11:1-19

எண் 3: பேதுரு உபயோகித்த திறவுகோல்கள் யாவை? (rs-TL பக். 39 பாரா 4–​பக். 41 பாரா 5)

எண் 4: “அப்போஸ்தல வாரிசுதாரர்கள்” உண்மை கிறிஸ்தவர்கள் அல்ல (rs-TL பக். 42 பாரா 1–​பக். 44 பாரா 3)

பிப். 12 பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 17-23

பாட்டு எண் 122

எண் 1: மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள் (w-TL99 3/1 பக். 30-1)

எண் 2: 1 நாளாகமம் 18:1-17

எண் 3: எங்கு அர்மகெதோன் யுத்தம் நடைபெறும்? (rs-TL பக். 44-6 பாரா 4)

எண் 4: அர்மகெதோனில் யார் அல்லது எது அழிக்கப்படும்? (rs-TL பக். 46 பாரா 5–​பக். 47 பாரா 2)

பிப். 19 பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 24-29

பாட்டு எண் 119

எண் 1: 1 நாளாகமம்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 78-9 பாரா. 22-5)

எண் 2: 1 நாளாகமம் 29:1-13

எண் 3: அர்மகெதோனில் யார் தப்பிப்பிழைப்பார்கள்? (rs-TL பக். 47 பாரா. 3-8)

எண் 4: அர்மகெதோன்​—⁠கடவுளுடைய அன்புக்கு எதிரானதல்ல (rs-TL பக். 48 பாரா. 1-3)

பிப். 26 பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 1-5

பாட்டு எண் 168

எண் 1: 2 நாளாகமத்திற்கு முன்னுரை (si-TL பக். 79-80 பாரா. 1-6)

எண் 2: 2 நாளாகமம் 1:1-17

எண் 3: அர்மகெதோனில் நடுநிலை வகிக்க முடியாது (rs-TL பக். 48 பாரா. 4-7)

எண் 4: யாருடைய செல்வாக்கு அர்மகெதோன் நிலைமைக்குத் தேசங்களை உந்துவிக்கிறது? (rs-TL பக். 48 பாரா 8–​பக். 49 பாரா 1)

மார்ச் 5 பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 6-9

பாட்டு எண் 103

எண் 1: கவலைக் கடலில் மூழ்கிவிடாதீர்கள் (w-TL99 3/15 பக். 21-3)

எண் 2: 2 நாளாகமம் 8:1-16

எண் 3: வெளிப்படுத்துதலிலுள்ள பாபிலோனை அடையாளம் கண்டுகொள்ளுதல் (rs-TL பக். 49 பாரா. 2-3)

எண் 4: பூர்வ பாபிலோன் எதற்குப் பெயர்போனது? (rs-TL பக். 50 பாரா 1–​பக். 51 பாரா 5)

மார்ச் 12 பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 10-15

பாட்டு எண் 59

எண் 1: உங்கள் சிந்தனையை வடிவமைப்பவர் யார்? (w-TL99 4/1 பக். 20-2)

எண் 2: 2 நாளாகமம் 10:1-16

எண் 3: கிறிஸ்தவமென உரிமைபாராட்டும் மதங்கள் ஏன் மகா பாபிலோனின் பாகமானவை (rs-TL பக். 52 பாரா 1–​பக். 53 பாரா 1)

எண் 4: மகா பாபிலோனைவிட்டு வெளியேறுவது ஏன் அவசரமானது (rs-TL பக். 53 பாரா. 2-7)

மார்ச் 19 பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 16-20

பாட்டு எண் 69

எண் 1: பாகால் வணக்கத்தாரின் மனப்பான்மையிலிருந்து உங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் (w-TL99 4/1 பக். 28-31)

எண் 2: 2 நாளாகமம் 16:1-14

எண் 3: முழுக்காட்டுதல் என்றால் என்ன, ஏன் விசுவாசிகள் முழுக்காட்டுதல் எடுக்கின்றனர்? (rs-TL பக். 54 பாரா. 1-4)

எண் 4: கிறிஸ்தவ முழுக்காட்டுதல்​—⁠தெளிப்பதன் மூலம் அல்ல; குழந்தைகளுக்குரியதும் அல்ல (rs-TL பக். 54 பாரா 5–​பக். 55 பாரா 4)

மார்ச் 26 பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 21-25

பாட்டு எண் 212

எண் 1: பாராட்டு தெரிவிக்க மறக்காதீர்கள் (w-TL99 4/15 பக். 15-17)

எண் 2: 2 நாளாகமம் 22:1-12

எண் 3: தண்ணீர் முழுக்காட்டுதலில் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை (rs-TL பக். 55 பாரா 5–​பக். 56 பாரா 1)

எண் 4: யார் பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்படுவார்கள்? (rs-TL பக். 56 பாரா 2–​பக். 57 பாரா 3)

ஏப்ரல் 2 பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 26-29

பாட்டு எண் 49

எண் 1: “கோணலான” வழிகளில் கடவுள் செயல்படுகிறாரா? (w-TL99 5/1 பக். 28-9)

எண் 2: 2 நாளாகமம் 28:1-15

எண் 3: அக்கினியில் முழுக்காட்டப்படுவதும் பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்படுவதும் ஒன்றல்ல (rs-TL பக். 57 பாரா 4–​பக். 58 பாரா 2)

எண் 4: பைபிளைக் கருத்துடன் கவனிக்க வேண்டியதற்குக் காரணங்கள் (rs-TL பக். 58-60 பாரா 3)

ஏப்ரல் 9 பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 30-33

பாட்டு எண் 1

எண் 1: மனிதர்கள் எப்படி யெகோவா தேவனை ஸ்தோத்திரிக்க முடியும்? (w-TL99 5/15 பக். 21-4)

எண் 2: 2 நாளாகமம் 33:1-13

எண் 3: ஏசாயாவிலிருந்தும் எரேமியாவிலிருந்தும் பைபிள் ஏவப்பட்டதற்கான அத்தாட்சிகள் (rs-TL பக். 60 பாரா 3–​பக். 61 பாரா 3)

எண் 4: நிறைவேறிய இயேசுவின் தீர்க்கதரிசனங்கள் பைபிள் ஏவப்பட்டதை நிரூபிக்கின்றன (rs-TL பக். 61 பாரா 4–​பக். 62 பாரா 1)

ஏப்ரல் 16 பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 34-36

பாட்டு எண் 144

எண் 1: 2 நாளாகமம்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 84 பாரா. 34-6)

எண் 2: 2 நாளாகமம் 36:1-16

எண் 3: பைபிள் விஞ்ஞானப்படி திருத்தமாயுள்ளது (rs-TL பக். 62 பாரா 2–​பக். 64 பாரா 3)

எண் 4: * பைபிளுக்கு எதிரான ஆட்சேபணைகளுக்கு பதிலளித்தல் (rs-TL பக். 64 பாரா 4–​பக். 68 பாரா 1)

ஏப்ரல் 23 பைபிள் வாசிப்பு: எஸ்றா 1-6

பாட்டு எண் 90

எண் 1: எஸ்றாவிற்கு முன்னுரை மற்றும் ஏன் பயனுள்ளது (si-TL பக். 85 பாரா. 1-7; பக். 87 பாரா. 14-18)

எண் 2: எஸ்றா 4:1-16

எண் 3: கிறிஸ்தவர்கள் ஏன் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதில்லை? (rs-TL பக். 68-70 பாரா 2)

எண் 4: கிறிஸ்தவர்கள் ஏன் இரத்தத்திற்கு விலகியிருக்கிறார்கள்? (rs-TL பக். 70-2 பாரா 3)

ஏப்ரல் 30 எழுத்துமுறை மறுபார்வை. பைபிள் வாசிப்பு: எஸ்றா 7-10

பாட்டு எண் 203

மே 7 பைபிள் வாசிப்பு: நெகேமியா 1-5

பாட்டு எண் 56

எண் 1: நெகேமியாவுக்கு முன்னுரை (si-TL பக். 88 பாரா. 1-5)

எண் 2: நெகேமியா 1:1-11

எண் 3: கிறிஸ்தவர்கள் ஏன் இரத்தமேற்றிக் கொள்வதில்லை? (rs-TL பக். 72 பாரா 4–​பக். 73 பாரா 3)

எண் 4: * இரத்தமேற்றுதல்கள் பற்றிய பிடிவாதமான கருத்துக்களுக்குப் பதிலளித்தல் (rs-TL பக். 74 பாரா 1–​பக். 76 பாரா 2)

மே 14 பைபிள் வாசிப்பு: நெகேமியா 6-9

பாட்டு எண் 155

எண் 1: கிறிஸ்தவ சபை ஆறுதலின் பிறப்பிடம் (w-TL99 5/15 பக். 25-8)

எண் 2: நெகேமியா 9:1-15

எண் 3: மறுபடியும் பிறத்தல் என்பதன் அர்த்தமென்ன? (rs-TL பக். 76-7 பாரா 7)

எண் 4: இரட்சிப்பு மறுபடியும் பிறத்தலை சார்ந்தில்லை (rs-TL பக். 78 பாரா 1–​பக். 79 பாரா 1)

மே 21 பைபிள் வாசிப்பு: நெகேமியா 10-13

பாட்டு எண் 46

எண் 1: நெகேமியா​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 90-1 பாரா. 16-19)

எண் 2: நெகேமியா 12:27-43

எண் 3: * மறுபடியும் பிறத்தல் சம்பந்தப்பட்ட கருத்துவேறுபாடுகளுக்கு பதிலளித்தல் (rs-TL பக். 79 பாரா 3–​பக். 80 பாரா 2)

எண் 4: பாதிரியிடம் பாவ அறிக்கையிடுதல்​—⁠வேதப்பூர்வமானதா? (rs-TL பக். 80-1 பாரா 9)

மே 28 பைபிள் வாசிப்பு: எஸ்தர் 1-4

பாட்டு எண் 38

எண் 1: எஸ்தருக்கு முன்னுரை (si-TL பக். 91-2 பாரா. 1-6)

எண் 2: எஸ்தர் 1:1-15

எண் 3: கடவுளுக்கும் மனிதனுக்கும் எதிரான பாவங்களை அறிக்கையிடுதல் (rs-TL பக். 83 பாரா. 3-9)

எண் 4: வினைமையான தவறுகளை ஏன் மூப்பர்களிடம் அறிக்கையிட வேண்டும் (rs-TL பக். 84 பாரா 1-5)

ஜூன் 4 பைபிள் வாசிப்பு: எஸ்தர் 5-10

பாட்டு எண் 37

எண் 1: எஸ்தர்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 94 பாரா. 16-18)

எண் 2: எஸ்தர் 5:1-14

எண் 3: சிருஷ்டிப்பில் நம்புவது பகுத்தறிவுக்கு ஒத்ததாயிருக்கிறதா? (rs-TL பக். 84-6 பாரா 2)

எண் 4: பைபிளிலுள்ள சிருஷ்டிப்பின் விவரப் பதிவை புரிந்துகொள்ளுதல் (rs-TL பக். 86 பாரா 3–​பக். 88 பாரா 4)

ஜூன் 11 பைபிள் வாசிப்பு: யோபு 1-7

பாட்டு எண் 84

எண் 1: யோபுவுக்கு முன்னுரை (si-TL பக். 95-6 பாரா. 1-6)

எண் 2: யோபு 1:6-22

எண் 3: சிலுவை வணக்கம் ஏன் வேதப்பூர்வமற்ற பழக்கம்? (rs-TL பக். 92 பாரா 1–​பக். 93 பாரா 1)

எண் 4: மனிதர் ஏன் மரிக்கின்றனர்? (rs-TL பக். 98-9 பாரா 6)

ஜூன் 18 பைபிள் வாசிப்பு: யோபு 8-14

பாட்டு எண் 192

எண் 1: சவுல்​—⁠கர்த்தர் தெரிந்துகொண்ட பாத்திரம் (w-TL99 5/15 பக். 29-31)

எண் 2: யோபு 8:1-22

எண் 3: மரித்தோர் எங்கே இருக்கின்றனர், அவர்களுடைய நிலைமை என்ன? (rs-TL பக். 100 பாரா 1–​பக். 101 பாரா 4)

எண் 4: துக்கங்கொண்டாடும் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் யெகோவாவின் சாட்சிகள் ஏன் பங்குகொள்வதில்லை? (rs-TL பக். 102 பாரா 1–​பக். 103 பாரா 2)

ஜூன் 25 பைபிள் வாசிப்பு: யோபு 15-21

பாட்டு எண் 81

எண் 1: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் கடவுள் தாமதிக்கவில்லை (w-TL99 6/1 பக். 4-7)

எண் 2: யோபு 17:1-16

எண் 3: * மரணத்தைப் பற்றிய தவறான கருத்துக்களுக்குப் பதிலளித்தல் (rs-TL பக். 103 பாரா 3–​பக். 104 பாரா 1)

எண் 4: கனவுகள்: கடவுளிடமிருந்து வந்தவையும் வராதவையும் (rs-TL பக். 104-6 பாரா 4)

ஜூலை 2 பைபிள் வாசிப்பு: யோபு 22-29

பாட்டு எண் 173

எண் 1: உங்களுடைய சிந்தையை விரிவாக்க வேண்டுமா? (w-TL99 6/15 பக். 10-13)

எண் 2: யோபு 27:1-23

எண் 3: போதைப்பொருட்கள்​—⁠எப்போது கிறிஸ்தவர்களுக்கு தடைசெய்யப்படுகிறது (rs-TL பக். 106-8 பாரா 1)

எண் 4: மரிஹுவானாவை (கஞ்சா) கிறிஸ்தவர்கள் ஏன் தவிர்க்கின்றனர் (rs-TL பக். 108 பாரா 2–​பக். 109 பாரா 3)

ஜூலை 9 பைபிள் வாசிப்பு: யோபு 30-35

பாட்டு எண் 108

எண் 1: பைபிள் தீர்க்கதரிசனம்​—⁠இதை நீங்களும் நம்பலாம் (w-TL99 7/15 பக். 4-8)

எண் 2: யோபு 31:1-22

எண் 3: புகையிலையை ஏன் கிறிஸ்தவர்கள் உபயோகிப்பதில்லை? (rs-TL பக். 110-111 பாரா 3)

எண் 4: கெட்ட பழக்கங்களை விட்டுவிடுதல்​—⁠எப்படி? (rs-TL பக். 111 பாரா 5–​பக் 112 பாரா 3)

ஜூலை 16 பைபிள் வாசிப்பு: யோபு 36-42

பாட்டு எண் 160

எண் 1: யோபு​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 100 பாரா. 39-43)

எண் 2: யோபு 36:1-22

எண் 3: பூமியைக் குறித்தக் கடவுளுடைய நோக்கத்தை தேசங்கள் தடைசெய்ய முடியாது (rs-TL பக். 112-13 பாரா 6)

எண் 4: யெகோவா இந்தப் பூமியை அக்கினியினால் அழிப்பாரா? (rs-TL பக். 114 பாரா 1–​பக். 115 பாரா 1)

ஜூலை 23 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 1-10

பாட்டு எண் 5

எண் 1: சங்கீதத்திற்கு முன்னுரை​—⁠பகுதி 1 (si-TL பக். 101 பாரா. 1-5)

எண் 2: சங்கீதம் 3:1–​4:8

எண் 3: புதிய எருசலேமின் அங்கத்தினர்கள் பொல்லாதவர்கள் அழிக்கப்பட்ட பின்பு பூமிக்குத் திரும்ப அனுப்பப்பட மாட்டார்கள் (rs-TL பக். 115 பாரா 2–​பக். 116 பாரா 1)

எண் 4: பூமியைக் குறித்த கடவுளுடைய ஆதி நோக்கம் மாறிவிட்டதா? (rs-TL பக். 116 பாரா 2–​பக். 117 பாரா 3)

ஜூலை 30 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 11-18

பாட்டு எண் 48

எண் 1: சங்கீதத்திற்கு முன்னுரை​—⁠பகுதி 2 (si-TL பக். 102 பாரா. 6-11)

எண் 2: சங்கீதம் 11:1–​13:6

எண் 3: நோயுற்றோரை நாம் எப்படி ஊக்கமூட்டலாம்? (rs-TL பக். 117-18 பாரா 3)

எண் 4: துக்கித்துக் கொண்டிருப்போருக்கு நாம் எப்படி ஊக்கமூட்டலாம்? (rs-TL பக். 118 பாரா. 4-8)

ஆக. 6 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 19-26

பாட்டு எண் 117

எண் 1: பேச்சு பரிமாற்றம்​—⁠குடும்ப ஆரோக்கியத்தின் சாவி (w-TL99 7/15 பக். 21-3)

எண் 2: சங்கீதம் 20:1–​21:13

எண் 3: கடவுளுடைய சித்தத்தைச் செய்வதனால் துன்புறுத்தலை எதிர்ப்படுவோருக்கு ஊக்கமூட்டுதல் (rs-TL பக். 119 பாரா. 1-6)

எண் 4: அநீதியினிமித்தம் மனமுறிவுற்றோருக்கு நீங்கள் எப்படி ஊக்கமூட்டலாம்? (rs-TL பக். 119 பாரா 7–​பக். 120 பாரா 2)

ஆக. 13 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 27-34

பாட்டு எண் 130

எண் 1: பிலிப்பு​—⁠வைராக்கியமுள்ள ஒரு சுவிசேஷகன் (w-TL99 7/15 பக். 24-5)

எண் 2: சங்கீதம் 28:1–​29:11

எண் 3: பொருளாதாரப் பிரச்சினையின் நெருக்கடியிலிருப்போருக்கு என்ன ஊக்கமூட்டுதல் உள்ளது? (rs-TL பக். 120 பாரா. 3-7)

எண் 4: குற்றங்களினிமித்தம் சோர்வுற்றிருப்போருக்கு ஊக்கமூட்டுதல் (rs-TL பக். 120 பாரா 8–​பக். 121 பாரா 2)

ஆக. 20 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 35-39

பாட்டு எண் 18

எண் 1: சகாக்களின் சகவாசம்​—⁠சகாயமளிக்குமா? (w-TL99 8/1 பக். 22-5)

எண் 2: சங்கீதம் 38:1-22

எண் 3: பரிணாமம்​—⁠விஞ்ஞான இரண்டக நிலை (rs-TL பக். 121-2 பாரா 5)

எண் 4: பரிணாமம், புதைபடிவ பதிவு, நியாயத்தன்மை (rs-TL பக். 123 பாரா 1–​பக். 126 பாரா 2)

ஆக. 27 எழுத்துமுறை மறுபார்வை. பைபிள் வாசிப்பு: சங்கீதம் 40-47

பாட்டு எண் 91

செப். 3 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 48-55

பாட்டு எண் 36

எண் 1: கோபத்தால் இடறலடையாதீர்கள் (w-TL99 8/15 பக். 8-9)

எண் 2: சங்கீதம் 49:1-20

எண் 3: * பரிணாமவாதிகளுடைய பிடிவாதமான கருத்துக்களுக்குப் பதிலளித்தல் (rs-TL பக். 126 பாரா 3–​பக். 128 பாரா 3)

எண் 4: ஏன் பலருக்கு விசுவாசமில்லை? (rs-TL பக். 129-130 பாரா 2)

செப். 10 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 56-65

பாட்டு எண் 44

எண் 1: பேயால் நோயா? (w-TL99 9/1 பக். 4-7)

எண் 2: சங்கீதம் 59:1-17

எண் 3: ஒருவர் விசுவாசத்தை அடைவது எவ்வாறு? (rs-TL பக். 130 பாரா 3–​பக். 131 பாரா 3)

எண் 4: நீதியுள்ள ஒரு புதிய காரிய ஒழுங்குமுறையின் எதிர்பார்ப்பில் விசுவாசம் இருப்பது செயல்களில் தெரியும் (rs-TL பக். 131 பாரா 5–​பக். 132 பாரா 2)

செப். 17 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 66-71

பாட்டு எண் 210

எண் 1: “நல்ல பங்கைத்” தெரிந்துகொள்ளுங்கள் (w-TL99 9/1 பக். 30-1)

எண் 2: சங்கீதம் 69:1-19

எண் 3: கள்ளத் தீர்க்கதரிசிகளை எவ்வாறு அடையாளம் கண்டுபிடிப்பது? (rs-TL பக். 132-4 பாரா 3)

எண் 4: எப்படி, எப்பொழுது முன்னறிவிக்கப்பட்டவை நிறைவேற்றமடைகின்றன என்பதை உண்மையான தீர்க்கதரிசிகள் எப்போதுமே அறிந்திருக்கவில்லை (rs-TL பக். 134 பாரா. 4-9)

செப். 24 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 72-77

பாட்டு எண் 217

எண் 1: கொடுத்த வாக்கை ஏன் காப்பாற்ற வேண்டும்? (w-TL99 9/15 பக். 8-11)

எண் 2: சங்கீதம் 73:1-24

எண் 3: உண்மையான தீர்க்கதரிசியின் அறிவிப்புகள் உண்மையான வணக்கத்தை முன்னேற்றுவிக்கின்றன (rs-TL பக். 135 பாரா. 1-2)

எண் 4: உண்மையான தீர்க்கதரிசிகள் தாங்கள் வெளிப்படுத்தும் கனிகளால் அடையாளம் கண்டுகொள்ளப்படுவர் (rs-TL பக். 135 பாரா 3–​பக். 137 பாரா 1)

அக். 1 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 78-81

பாட்டு எண் 88

எண் 1: ஞானத்தை சம்பாதித்து சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள் (w-TL99 9/15 பக். 12-15)

எண் 2: சங்கீதம் 78:1-22

எண் 3: நம்மை பொய்த் தீர்க்கதரிசிகள் என அழைப்பவர்களுக்குப் பதிலளித்தல் (rs-TL பக். 137 பாரா. 2-4)

எண் 4: ஒவ்வொருவருக்கும் இறக்க ஒரு காலத்தை கடவுள் முன்பே தீர்மானிக்கிறதில்லை (rs-TL பக். 138 பாரா. 1-3)

அக். 8 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 82-89

பாட்டு எண் 221

எண் 1: தீமோத்தேயு​—⁠‘விசுவாசத்தில் உத்தம குமாரன்’ (w-TL99 9/15 பக். 29-31)

எண் 2: சங்கீதம் 88:1-18

எண் 3: நடக்கும் ஒவ்வொன்றும் கடவுளுடைய சித்தம் அல்ல (rs-TL பக். 139 பாரா 1–​பக். 140 பாரா 4)

எண் 4: எல்லாவற்றையும் கடவுள் முன்னறிந்து முன்குறித்து வைக்கிறதில்லை (rs-TL பக். 140 பாரா. 5-7)

அக். 15 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 90-98

பாட்டு எண் 134

எண் 1: தப்புதண்டா செய்யமாட்டேனு சொல்ல தைரியம் வேணும் (w-TL99 10/1 பக். 28-31)

எண் 2: சங்கீதம் 90:1-17

எண் 3: நிகழ்ச்சிகளை முன்னறியவும் முன்குறித்து வைக்கவும் கடவுளுக்கு இருக்கும் திறமை (rs-TL பக். 141 பாரா. 1-4)

எண் 4: ஆதாமைக் குறித்ததில் கடவுள் ஏன் தம்முடைய முன்னறியும் திறமையை பயன்படுத்தவில்லை (rs-TL பக். 142 பாரா. 1-3)

அக். 22 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 99-105

பாட்டு எண் 89

எண் 1: அன்பின் மிகச் சிறந்த அடிச்சுவட்டை பயிலுதல் (w-TL99 10/15 பக். 8-11)

எண் 2: சங்கீதம் 103:1-22

எண் 3: கடவுள் யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் யூதாஸுக்கும் விதியை முன்முடிவு செய்யவில்லை (rs-TL பக். 142 பாரா 4–​பக். 143 பாரா 2)

எண் 4: எந்த விதத்தில் கிறிஸ்தவ சபை முன்விதிக்கப்பட்டது? (rs-TL பக். 143 பாரா 3–​பக். 144 பாரா 1)

அக். 29 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 106-109

பாட்டு எண் 214

எண் 1: “யெகோவாவே ஞானத்தை தருகிறார்” (w-TL99 11/15 பக். 24-7)

எண் 2: சங்கீதம் 107:1-19

எண் 3: வான் கணிப்பைப் பற்றியதில் பைபிள் நோக்குநிலை என்ன? (rs-TL பக். 144 பாரா 2–​பக். 145 பாரா 2)

எண் 4: கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு சில நல்ல காரணங்கள் யாவை? (rs-TL பக். 145-6 பாரா 5)

நவ. 5 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 110-118

பாட்டு எண் 14

எண் 1: உலக அழிவு​—⁠அஞ்ச வேண்டுமா, நம்பிக்கையோடு எதிர்நோக்க வேண்டுமா? (w-TL99 12/1 பக். 5-8)

எண் 2: சங்கீதம் 112:1–​113:9

எண் 3: அக்கிரமமும் துன்பமும் கடவுள் இல்லையென்று நிரூபிப்பதில்லை (rs-TL பக். 146 பாரா 6–​பக். 147 பாரா 1)

எண் 4: கடவுள் உண்மையான ஓர் ஆள், உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர் (rs-TL பக். 147 பாரா 2–​பக். 148 பாரா 3)

நவ. 12 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 119

பாட்டு எண் 35

எண் 1: பலமே பலவீனமானால்? (w-TL99 12/1 பக். 26-9)

எண் 2: சங்கீதம் 119:1-24

எண் 3: கடவுளுக்கு தொடக்கம் இல்லை (rs-TL பக். 148 பாரா. 4-7)

எண் 4: இரட்சிப்படைய கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது முக்கியம் (rs-TL பக். 149 பாரா. 1-4)

நவ. 19 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 120-137

பாட்டு எண் 175

எண் 1: சங்கீதம்​—⁠ஏன் பயனுள்ளது​—⁠பகுதி 1 (si-TL பக். 104-5 பாரா. 23-7)

எண் 2: சங்கீதம் 120:1–​122:9

எண் 3: எல்லா மதங்களும் சரியானவையா? (rs-TL பக். 149 பாரா. 5-8)

எண் 4: இயேசு என்ன வகையான “கடவுள்”? (rs-TL பக். 149 பாரா 9–​பக். 150 பாரா 1)

நவ. 26 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 138-150

பாட்டு எண் 135

எண் 1: சங்கீதம்​—⁠ஏன் பயனுள்ளது​—⁠பகுதி 2 (si-TL பக். 105-6 பாரா. 28-32)

எண் 2: சங்கீதம் 139:1-24

எண் 3: a கடவுள் நம்பிக்கையைப் பற்றிய கருத்துவேறுபாடுகளுக்கு பதிலளித்தல் (rs-TL பக். 150 பாரா 2–​பக். 151 பாரா 3)

எண் 4: நீதியான ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்த மனிதரால் ஏன் முடியவில்லை (rs-TL பக். 152-3 பாரா 1)

டிச. 3 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 1-7

பாட்டு எண் 132

எண் 1: நீதிமொழிகளுக்கு முன்னுரை​—⁠பகுதி 1 (si-TL பக். 106-7 பாரா. 1-5)

எண் 2: நீதிமொழிகள் 4:1-27

எண் 3: விடுதலை பெறுவதற்கான மனித முயற்சிகள் ஏன் வெற்றியடைவதில்லை (rs-TL பக். 153 பாரா 2–​பக். 154 பாரா 1)

எண் 4: மனித குலத்தின் தேவைகளை கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே பூர்த்திசெய்ய முடியும் (rs-TL பக். 154 பாரா 2–​பக். 155 பாரா 1)

டிச. 10 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 8-13

பாட்டு எண் 51

எண் 1: நீதிமொழிகளுக்கு முன்னுரை​—⁠பகுதி 2 (si-TL பக். 107-8 பாரா. 6-11)

எண் 2: நீதிமொழிகள் 13:1-25

எண் 3: பைபிள் தீர்க்கதரிசனங்கள் முற்றிலும் நம்பத்தக்கவையாக நிரூபிக்கின்றன (rs-TL பக். 155 பாரா. 2-5)

எண் 4: நம்முடைய நாளில் கடவுளுடைய ஆவியைக்கொண்டு அற்புதச் சுகப்படுத்துதல் செய்யப்படுகிறதில்லை (rs-TL பக். 156-7 பாரா 3)

டிச. 17 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 14-19

பாட்டு எண் 111

எண் 1: நீதிமொழிகள்​—⁠ஏன் பயனுள்ளது​—⁠பகுதி 1 (si-TL பக். 109-10 பாரா. 19-28)

எண் 2: நீதிமொழிகள் 16:1-25

எண் 3: இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் இன்றுள்ளவர்களும் நடப்பிக்கும் சுகப்படுத்துதல்களுக்கு இடையேயுள்ள வித்தியாசம் (rs-TL பக். 157 பாரா 4–​பக். 158 பாரா 2)

எண் 4: இன்று உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றனர் (rs-TL பக். 158 பாரா 3–​பக். 159 பாரா 1)

டிச. 24 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 20-25

பாட்டு எண் 9

எண் 1: நீதிமொழிகள்​—⁠ஏன் பயனுள்ளது​—⁠பகுதி 2 (si-TL பக். 110-11 பாரா. 29-38)

எண் 2: நீதிமொழிகள் 20:1-30

எண் 3: சுகப்படுத்தலைச் செய்வதற்கான வரங்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டன (rs-TL பக். 159 பாரா 2–​பக். 160 பாரா 2)

எண் 4: மனிதகுலம் முழுவதும் உண்மையான சுகமடைவதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? (rs-TL பக். 160 பாரா. 3-5)

டிச. 31 எழுத்துமுறை மறுபார்வை. பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 26-31

பாட்டு எண் 180

[அடிக்குறிப்பு]

a பிடிவாதமான கருத்துக்கள், ஆட்சேபணைகள் போன்றவற்றை பிராந்தியத்தில் எதிர்ப்படுகையில் எப்படி சமாளிக்கலாம் என்பதை நேரம் அனுமதிப்பதைப் பொருத்து சிந்திக்கவும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்