அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்யும்போது ஆர்வம் காட்டினால், பத்திரிகைகளுக்கான சந்தா பற்றி சொல்லவும். நவம்பர்: ராஜ்ய செய்தி எண் 36 அளிக்கப்படும். சபையார் தங்கள் பிராந்தியங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் ராஜ்ய செய்தி எண் 36-ஐ அளித்த பிறகு, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அல்லது அறிவு புத்தகத்தை அளிக்கலாம். ஏற்கனவே வீட்டுக்காரரிடம் இவை அளிக்கப்பட்டிருந்தால் பரதீஸில் என்றும் வாழலாம் அல்லது படைப்பு (ஆங்கிலம்) புத்தகத்தை அளிக்கலாம். டிசம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகமும் ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும். ஜனவரி: சிற்றேடுகள்: இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள் மற்றும் யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள். அத்துடன் 192 பக்க பழைய புத்தகங்களை அளிக்கலாம்.
◼ நம் ராஜ்ய ஊழியத்தின் இந்த இதழ் உட்சேர்க்கையில் “2001 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை” உள்ளது. 2001-வது ஆண்டு முழுவதற்கும் இது உங்கள் கைவசம் இருக்கட்டும்.
◼ ஜனவரி 1 முதல் உங்கள் சபை கூட்டங்களின் நேரம் மாறவிருக்குமானால், சபைக் கூட்டங்களின் தகவல் மற்றும் கைப்பிரதி விண்ணப்ப படிவத்தை (S-5) சபையின் செயலர் சங்கத்திற்கு அனுப்பி மாற்றத்தை தெரியப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் அதே படிவத்தில் புதிய கைப்பிரதிகளுக்கு ஆர்டர் செய்யலாம். கைப்பிரதிகள் உங்களுக்கு எப்போது வேண்டுமோ அதற்கு குறைந்தபட்சம் எட்டு வாரங்களுக்கு முன்பே சங்கத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.