ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மே 8-ல் துவங்கும் வாரம்
8 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும்.
17 நிமி:மே மாதத்தில் ஆவியில் அனலாயிருங்கள். பேச்சும் பேட்டிகளும். இது ஊழியக் கண்காணியால் நடத்தப்படும். ஏப்ரல் மாதம் சபையாக ஊழியத்திற்காக எடுத்த முயற்சிகளை சிறப்பித்துக் காட்டுங்கள். ஊழியத்தில் தங்கள் பங்கை அதிகரித்த அல்லது துணைப் பயனியர் ஊழியம் செய்த இரு பிரஸ்தாபிகளை பேட்டி காணுங்கள். என்ன ஆசீர்வாதங்களை அடைந்தார்கள்? வைராக்கியமான இந்த ஊழிய நடவடிக்கை மே மாதத்திலும் தொடருமா? ஊழியத்தின் பல அம்சங்களில் கலந்துகொள்ள அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். இந்த மாதம், விடுமுறையில் இருக்கும் இளம் பிரஸ்தாபிகள் ஊழியத்தை அதிகம் செய்ய உற்சாகப்படுத்துங்கள். ஒழுங்கற்ற பிரஸ்தாபிகள் அனைவரும் இந்த மாதத்தில் கலந்துகொள்ளும்படி நாம் செய்ய முடியுமா? அப்படிப்பட்டவர்களுக்கு உதவ செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சொல்லுங்கள். நினைவு ஆசரிப்புக்கு வந்த எல்லாருடைய ஆர்வத்தை மறுபடியும் தூண்ட முடியுமா? அவர்களுடைய ஆவிக்குரிய நலனில் அக்கறை காட்டுங்கள். பைபிள் படிப்பு ஏற்பாட்டை விளக்குங்கள். சகோதர்கள் ஊழியத்திற்காக காட்டும் வைராக்கியத்தையும் ஆர்வத்தையும் போற்றுங்கள்.
20 நிமி:“கடவுளின் வார்த்தையின்படி நடப்போர்” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு. உட்சேர்க்கையிலுள்ள பகுதியைக் கேள்வி-பதில் முறையில் செயலர் கையாளுகிறார். கொடுக்கப்பட்டுள்ள பைபிள் வசனங்களை எடுத்துப் பார்த்து, சொஸைட்டியின் அறிவுரைகளை முடிந்த மட்டும் அப்படியே பின்பற்ற வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள செய்யுங்கள். வெள்ளிக்கிழமை உட்பட, எல்லா நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்கூட்டியே விடுமுறைக்கான ஏற்பாடுகளை எல்லாரும் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். சொஸைட்டியின் ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தரும் சகோதரர்களை பாராட்டுங்கள்.
பாட்டு 201, முடிவு ஜெபம்.
மே 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
20 நிமி:“தொலைபேசி—அநேகருக்கு சாட்சிகொடுக்க சிறந்த வழி.” உட்சேர்க்கையிலுள்ள முதல் 13 பாராக்களை கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள். நேரம் இருந்தால் சில பாராக்களை தெரிந்தெடுத்து வாசியுங்கள். இதற்கு எப்படி தயாரிப்பது என்று பாராக்கள் 12, 13-ல் கொடுக்கப்பட்டுள்ளன, அதை நடித்துக் காட்டுங்கள். அடுத்த வாரம் கூட்டத்திற்கு வருகையில் மீதமுள்ள ஏழு பாராக்களை தயாரித்து வரும்படியும் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைக் கொண்டு வரும்படியும் சபையாருக்கு நினைப்பூட்டுங்கள்.
15 நிமி:“என்ன நினைப்பு மனதிலே?” ஜனவரி 15, 2000, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 20-22-லுள்ள கட்டுரையின் அடிப்படையில் மூப்பரின் பேச்சு.
பாட்டு 203, முடிவு ஜெபம்.
மே 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டியை மறுபார்வை செய்யுங்கள்.
15 நிமி:“விழிப்பாயிருங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. நாளையும் நேரத்தையும் நாம் அறியாதிருந்தாலும் ஆவிக்குரிய விதமாக நாம் விழிப்புள்ளவர்களாய் இருப்பதன் அவசியத்தை விளக்குங்கள்.—1995, நவம்பர் 1, காவற்கோபுரம், பக்கம் 20-ஐக் காண்க.
20 நிமி:“தொலைபேசி—அநேகருக்கு சாட்சிகொடுக்க சிறந்த வழி.” கேள்வி-பதில் முறையில் பாராக்கள் 14-20-ன் கலந்தாலோசிப்பு. நேரம் இருந்தால் சில பாராக்களைத் தெரிந்தெடுத்து வாசிக்கவும். பாரா 16-ஐ சிந்திக்கையில், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் காணப்படும் குறிப்புகளைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். 1990, ஆகஸ்ட் நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 4-லிலிருந்து கூடுதல் குறிப்புகளைச் சொல்லவும். எப்படி தொலைபேசி சாட்சி கொடுக்கலாம் என்பதற்கு பாரா 16-ல் சில ‘சாம்பிள்கள்’ கொடுக்கப்பட்டுள்ளன, அதில் ஒன்றை பயன்படுத்தி நடித்துக் காட்டுங்கள். இந்த முறையில் சாட்சி கொடுப்பதற்கு இருக்கும் அதிகமான வாய்ப்புகளை மறுபார்வை செய்து உற்சாகத்தோடு நிறைவு செய்யுங்கள்.
பாட்டு 83, முடிவு ஜெபம்.
மே 29-ல் துவங்கும் வாரம்
12 நிமி:சபை அறிவிப்புகள். எல்லாரும் மே மாத ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி நினைப்பூட்டுங்கள். ஜூன் மாத பிரசுர அளிப்பை சுருக்கமாக நடித்துக்காட்டவும். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் பாடம் 13-ஐ உபயோகித்து பைபிள் படிப்பு நடத்தும் ஏற்பாட்டைப் பற்றி எவ்வாறு சொல்லலாம் என்பதைக் காட்டுங்கள்.
15 நிமி:“பரிசுத்த சேவையில் மகிழ்ச்சி காணுங்கள்.” பேச்சு. நம்முடைய ஊழியத்தில் சந்தோஷத்தை பெற முடியும் என்பதற்கான காரணங்களைக் கலந்தாலோசியுங்கள்.—உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 2, பக்கம் 120-ஐக் காண்க.
18 நிமி:பயன் தரும் பைபிள் வாசிப்பு. பள்ளி துணைநூல், பக்கங்கள் 34-5-ல் பாராக்கள் 6-7-ன் அடிப்படையில் பேச்சும் நடிப்பும். வழக்கமான பைபிள் வாசிப்பு திட்டத்தின் அடிப்படையிலேயே பைபிள் சிறப்புக் குறிப்புகள் அளிக்கப்படுகின்றன; இது தேவராஜ்ய ஊழியப் பள்ளி பாடத் திட்டத்தின் ஓர் அம்சம். (1999, டிசம்பர், நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 7) பள்ளி அட்டவணையிலுள்ள இந்த வார பைபிள் வாசிப்பின் ஒரு பகுதியை எப்படி குடும்பமாக கலந்தாலோசிக்கலாம் என்பதை ஒரு குடும்பம் நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். ஓரிரு ஆர்வமிக்க குறிப்புகளை அக்குடும்பத்தார் தெரிந்தெடுத்து, உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் அல்லது வேதாகமத்தின்பேரில் உட்பார்வை புத்தகத்தை உபயோகித்து அதிகம் தெரிந்துகொள்ள ஆராய்ச்சி செய்கின்றனர். பைபிளை வாசிப்பது எப்படி அதிக அர்த்தமுள்ளதாகவும் ‘சத்திய வசனத்தை திருத்தமாக போதிக்க’ நம்மை நன்கு ஆயத்தப்படுத்துவதாகவும் இருக்கும் என்பதை காட்டுங்கள்.—2 தீ. 2:15, தி.மொ.
பாட்டு 95, முடிவு ஜெபம்.
ஜூன் 5-ல் துவங்கும் வாரம்
5 நிமி:சபை அறிவிப்புகள்.
10 நிமி:சபை தேவைகள்.
15 நிமி:“இளைஞரின் சிலாக்கியம்.” பேச்சும் சபையாரோடு கலந்தாலோசிப்பும். 1996, டிசம்பர் 1, காவற்கோபுரம், பக்கம் 13, பாரா 15-லுள்ள அனுபவங்களை சொல்லுங்கள். பத்திரிகைகளை அளிப்பதில் பெற்ற சந்தோஷத்தை சொல்லும்படி இளைஞர்களிடம் கேளுங்கள். ஓரிரு இளைஞர்கள் எளிய வீட்டுக்கு வீடு அளிப்பை நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். வாரந்தவறாமல் பத்திரிகை ஊழியத்திற்கு தங்கள் பிள்ளைகளையும் அழைத்துச் செல்லும்படி பெற்றோர்களுக்குச் சொல்லுங்கள்.
15 நிமி:“‘தகுதியை சோதித்தறிவது’ எப்படி?” மூப்பரின் பேச்சு. சபையில் உதவி ஊழியர்கள் இருப்பதற்கான வேதப்பூர்வ ஏற்பாட்டை மறுபார்வை செய்யுங்கள். (உட்பார்வை, தொகுதி 2, பக்கம் 409-ஐக் காண்க.) அப்படி நியமிக்கப்பட எத்தகைய தகுதிகளைப் பெறுவது அவசியம் என்பதைக் காட்டுங்கள். (நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 55-7-ஐக் காண்க.) சபையில் உதவி ஊழியர்கள் எந்தெந்த விதங்களில் உதவலாம் என்பதைக் குறிப்பிட்டு அநேக சகோதரர்கள் இந்தச் சிலாக்கியத்தை அடைய முயற்சி செய்யும்படி உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 82, முடிவு ஜெபம்.