அக்டோபர் ஊழியக் கூட்டங்கள்
குறிப்பு: வரவிருக்கும் மாதங்களில் ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணையை நம் ராஜ்ய ஊழியம் ஒவ்வொரு வாரத்திற்கும் அளிக்கும். ஆனால், “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மாநாட்டிற்கு செல்வதற்கும், அதன்பின் அதைப் பின்தொடரும் வாரத்தில் நிகழ்ச்சிநிரல் சிறப்புக் குறிப்புகளை 30 நிமிடம் மறுபார்வை செய்வதற்கும் ஏதுவாக, சபைகள் தேவையான மாற்றங்களை செய்துகொள்ளலாம். மாநாட்டின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிநிரலின் முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்ய தகுதிபெற்ற இரண்டு அல்லது மூன்று சகோதரர்களை முன்கூட்டியே நியமிக்க வேண்டும். நன்கு தயாரிக்கப்பட்ட இந்த மறுபார்வை, தனிப்பட்ட விதமாய் பொருத்துவதற்கும் வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்குமான முக்கிய குறிப்புகளை நினைவில் வைக்க சபைக்கு உதவும். சபையாரின் விமர்சனங்களும் அனுபவங்களும் சுருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கவேண்டும்.
அக்டோபர் 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: “மறுசந்திப்புகள்—தடைகளை மேற்கொள்ளுங்கள்.” ஊழியக் கண்காணி பேச்சு கொடுக்கிறார்; பார்வையாளர்களோடு கலந்தாலோசிக்கிறார். பாரா 5-ஐ சிந்தித்த பிறகு, சபையில் இந்த அம்சத்தில் உள்ள குறைபாட்டை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை குறிப்பிடுங்கள்.
20 நிமி: “பத்திரிகை மார்க்கத்தின் மூலம் ‘ராஜ்ய விதை விதைத்தல்.’ ” சபையாரோடு கலந்துரையாடல். பத்திரிகை மார்க்கத்தை துவக்கி அதை எவ்வாறு தொடர்வது என்பதை அனுபவம் வாய்ந்த ஒரு பிரஸ்தாபி விளக்குகிறார். பிறகு ஒரு பத்திரிகை அளிப்பை நடித்துக் காட்டச் செய்யுங்கள்; அதில் புதிய இதழ்களுடன் மீண்டும் வந்து சந்திப்பதற்கான ஏற்பாட்டை பிரஸ்தாபி செய்கிறார்.
பாட்டு 133, முடிவு ஜெபம்.
அக்டோபர் 12-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
10 நிமி: “முன்நின்று வழிநடத்தும் கண்காணிகள்—செயலர்.” சபை செயலர் கொடுக்கும் பேச்சு. தனது நியமிக்கப்பட்ட வேலைகளை மறுபார்வை செய்கிறார். அனைவரும் ஊழிய அறிக்கைகளை கொடுப்பதில் தாமதிக்காமல் இருப்பதன்மூலம் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்கிறார்.
10 நிமி: அவர்களுக்கு ஆர்வம் ததும்பும் பயனியர் மனப்பான்மை இருக்கிறது. 1998 வருடாந்தர புத்தகம், (ஆங்கிலம்) பக்கங்கள் 104-7-ன் அடிப்படையில் கொடுக்கப்படும் உற்சாகமூட்டும் பேச்சு. ஜப்பானில் ஏன் அதிக பயனியர்கள் இருக்கின்றனர், வீட்டிலிருக்கும் சகோதரிகள் எவ்வாறு ஆவிக்குரிய செயல்களுக்கு முதலிடம் கொடுக்கின்றனர், பயனியர் சேவைக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருடைய பின்னணி என்ன, பயனியர் அணியில் அதிகமாக சேருவது யார் போன்ற குறிப்புகளை விளக்குங்கள். பயனியர்களாக உள்ள பெற்றோர்களின் நல்ல செல்வாக்கை எடுத்துக்காட்டுங்கள். பயனியராவதற்கு ஒருவருடைய வாழ்க்கையில் சரிப்படுத்தல்கள் தேவைப்படுகின்றன. இதைச் செய்வதற்கு எது தூண்டுகோலாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுங்கள். பயனியராவதற்கு தங்களுடைய சூழ்நிலைமைகளை மிகுந்த கவனத்தோடும் ஜெபசிந்தையோடும் மறுபரிசீலனை செய்யும்படி உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “பத்திரிகைகளை படிக்கிறீர்களா?” கேள்விகளும் பதில்களும். தனிப்பட்ட படிப்பிற்கு நேரத்தை ஒதுக்குவது குறித்து பள்ளி துணைநூல், பாடம் 4, பாராக்கள் 5-6-ல் உள்ள நடைமுறை ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள்.
பாட்டு 107, முடிவு ஜெபம்.
அக்டோபர் 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். புதிய பத்திரிகைகளிலிருந்து பேச்சுக்குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். 1997 வருடாந்தர புத்தகம், (ஆங்கிலம்) பக்கம் 45-லும் விழித்தெழு! அக்டோபர் 22, 1996, பக்கம் 32-லும் உள்ள அனுபவங்களைக் கூறுங்கள். வார இறுதியில் அனைவரையும் பத்திரிகை விநியோகிப்பில் பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: சபையின் தேவைகள்.
20 நிமி: காவற்கோபுர படிப்பிற்கு தயாரிப்பது எப்படி. காவற்கோபுரம் (ஆங்கிலம்), மே 15, 1986, பக்கங்கள் 19-20, பாராக்கள் 16-18, மற்றும் பள்ளி துணைநூல், பாடம் 7, பாரா 11, பாடம் 18, பாராக்கள் 4-6-ன் அடிப்படையில் காவற்கோபுர படிப்பை நடத்துபவர் சபையாருடன் கலந்துரையாடுகிறார். பின்வரும் கேள்விகளை சபையாரிடம் கேளுங்கள். (1) ஒவ்வொரு காவற்கோபுரத்திலிருந்தும் முழு பலனை பெறுவது ஏன் முக்கியம்? (2) புதிய பிரதியை பெறுகையில் என்ன செய்ய வேண்டும்? (3) காவற்கோபுர படிப்பை தயாரிப்பதற்கு சிறந்த வழி என்ன? (4) இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களுக்கு எத்தகைய கவனம் செலுத்த வேண்டும்? (5) கற்றுக்கொண்டவற்றை நாம் எவ்வாறு மறுபார்வை செய்யலாம்? (6) ஒரு கட்டுரையை சொந்தமாக படித்து முடிக்கையில் என்ன முக்கிய குறிப்புகளை தியானிக்க வேண்டும்? (7) ஒரு பதிலை எவ்வாறு தயாரிக்க வேண்டும்? (8) ஒரே கேள்விக்கு எவ்வாறு வித்தியாசமான பதில்களை கொடுக்கலாம்? காவற்கோபுர படிப்பிலிருந்து முழு பலனை பெறுவதற்கு சிலர் என்ன செய்தார்கள் என்பதை விளக்கச் சொல்லுங்கள்.—நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 65-7-ஐப் பாருங்கள்.
பாட்டு 95 முடிவு ஜெபம்
அக்டோபர் 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். சபை கையிருப்பில் உள்ள பழைய புத்தகங்களை குறிப்பிட்டு, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அவற்றை அளிக்கலாம் என்பதைத் தெரிவியுங்கள். டிசம்பர் மாதத்தில் விடுமுறை கிடைப்பதால், முழுக்காட்டப்பட்ட இளைஞர்களும் மற்றவர்களும் துணைப் பயனியர் செய்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
20 நிமி: “மத நம்பிக்கையில் பிளவுபட்ட குடும்பத்தில் தெய்வீக கீழ்ப்படிதல்.” காவற்கோபுரம், ஜூன் 1, 1995, பக்கங்கள் 26-9-ன் அடிப்படையில் கொடுக்கப்படும் பேச்சு. சத்தியத்தில் இல்லாத துணையை உடையவர்கள் நம்பிக்கையான மனப்பான்மையுடன் இருக்கவும் சபையுடன் சுறுசுறுப்பாக கூட்டுறவு கொள்ளவும் உதவும் வகையில் தயவான உற்சாகமூட்டுதலையும் அறிவுரையையும் கொடுங்கள்.
15 நிமி: கூட்டங்களுக்கு நேரத்தோடு வருதல். கூட்டங்களுக்கு லேட்டாக வரும் பிரச்சினையைக் குறித்து புத்தகப் படிப்பு நடத்தும் இரண்டு மூன்று சகோதரர்களோ உதவி ஊழியர்களோ கலந்தாலோசிக்கிறார்கள். எதிர்பாராத சம்பவம், சீதோஷ்ண நிலை, டிராபிக், இன்னும் இதுபோன்ற வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைமைகளால் ஒருவர் கூட்டத்திற்கு லேட்டாக வரலாம் என்பதை ஒத்துக்கொள்கின்றனர். இருந்தாலும், சிலருக்கு லேட்டாக வருவதே வழக்கமாகிவிட்டது. நம்பிக்கையூட்டும் விதத்தில், காலம் தவறாமல் வருவதற்கு எது தேவைப்படுகிறது என்பதை அவர்கள் உதாரணத்தோடு விளக்குகிறார்கள்: (1) கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான சிலாக்கியத்தையும், அங்கு கிடைக்கும் ஆவிக்குரிய உணவு, கூட்டுறவு ஆகியவற்றையும் மனப்பூர்வமாக மதித்தல், (2) நன்றாக முன்கூட்டியே திட்டமிட்டு சொந்த விஷயங்களை ஒழுங்கமைத்தல், (3) குடும்ப அங்கத்தினர்கள் மனமுவந்து ஒத்துழைத்தல், (4) எதிர்பாராத பிரச்சினைகள் வந்துவிட்டால், அதற்கு நேரம் அனுமதிப்பதற்காக சீக்கிரமாகவே வீட்டைவிட்டு கிளம்பிவிடுதல் (5) கடைசியாக, கூட்டங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தக்கூடாதென்ற உண்மையான அக்கறை. முன்னேற்றம் செய்வதற்கு தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் கூட்டத்திற்கு லேட்டாக வரும் பிரச்சினையை தவிர்க்கலாம் என்பதை எல்லாரும் ஒத்துக்கொள்கின்றனர்.
பாட்டு 86, முடிவு ஜெபம்.