டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்
டிசம்பர் 1-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி:“ஒவ்வொரு நாளும் யெகோவாவைப் பற்றிப் பேசுங்கள்.” கேள்விகளும் பதில்களும். 4-வது பாராவை சிந்திக்கையில், பள்ளி துணைநூல், படிப்பு 16, பாராக்கள் 14-16-ல் உள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி:“பபிள்—எல்லா மக்களுக்குமுரிய கடவுளுடைய வழிகாட்டி.” ஒரு மூப்பர் இக்கட்டுரையை கலந்தாலோசிக்கிறார்; பைபிளை ஆராயும்படி ஏன் அனைவரும் உந்துவிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களையும் அளிக்கிறார். பாராக்கள் 3-8-ல் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை எவ்வாறு தயாரித்திருக்கிறார்கள் என்பதைக் குறித்து இரண்டு பிரஸ்தாபிகளை சுருக்கமாக பேட்டி காணுங்கள். அவற்றில் ஒன்றை முதல் சந்திப்பாகவும் மற்றொன்றை அதைத் தொடர்ந்து வரும் மறுசந்திப்பாகவும் நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 165 மற்றும் முடிவு ஜெபம்.
டிசம்பர் 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
20 நிமி:தவறை ஏன் தெரிவிக்க வேண்டும்? ஆகஸ்ட் 15, 1997, காவற்கோபுரம், பக்கங்கள் 26-30-ன் அடிப்படையில் மூப்பரின் பேச்சு.
15 நிமி:“நீங்கள் வராதது எங்களுக்கு ஏமாற்றமே!” மூப்பர் நடத்தும் சபை கலந்தாலோசிப்பு. சபைக் கூட்டத்திற்கு ஆஜராவோரின் சராசரி எண்ணிக்கையைக் குறிப்பிடுங்கள். கூட்டங்களில் ஒன்றுகூடி வருவது தங்களுக்கு ஏன் புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதற்கான காரணங்களைச் சொல்லும்படி சிலரை அழையுங்கள்.
பாட்டு 172 மற்றும் முடிவு ஜெபம்.
டிசம்பர் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். உலகப்பிரகாரமான விடுமுறை தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டால் எவ்வாறு சாதுரியமாக பிரதிபலிப்பது என்பதன்பேரில் ஆலோசனை அளியுங்கள். டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளுக்காக செய்யப்பட்டுள்ள விசேஷ வெளி ஊழிய ஏற்பாடுகளைத் தெரிவியுங்கள்.
10 நிமி:சபை தேவைகள்.
25 நிமி:“நாம் வெறும் பிரசங்கிகளாய் இராமல், போதகர்களாய் இருக்க வேண்டும்.” கேள்விகளும் பதில்களும். பாரா 11-ஐ சிந்திக்கையில், பள்ளி துணைநூல், படிப்பு 15, பாரா 11-ஐ வாசியுங்கள்.
பாட்டு 174 மற்றும் முடிவு ஜெபம்.
டிசம்பர் 22-ல் துவங்கும் வாரம்
8 நிமி:சபை அறிவிப்புகள்.
17 நிமி:“1998-க்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி.” பள்ளி கண்காணியின் பேச்சு. வரும் ஆண்டில் பள்ளியிலிருந்து அனைவரும் முழு பயனைப் பெறுவதற்கான வழிகளை மறுபார்வை செய்யுங்கள். புதிய “கூடுதலான பைபிள் வாசிப்பு அட்டவணை”-ஐ ஒவ்வொரு வாரமும் தவறாமல் பின்பற்றும்படி உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி:எங்கும் நற்செய்தியை பிரசங்கியுங்கள். நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 92-7-ஐ சபையாரோடு கலந்தாலோசித்தல்; பின்வரும் கேள்விகளைப் பயன்படுத்தவேண்டும்: (1) நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் நம் பிரசுரங்களைப் பயன்படுத்துவது ஏன் பயனளிக்கும்? ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஏன் பிரசுரங்களை அளிக்கவேண்டும்? (2) சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதைக் குறித்து நாம் ஏன் உணர்வுள்ளவர்களாய் இருக்கவேண்டும்? சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான சில வழிகள் யாவை? (சந்தர்ப்ப சாட்சி கொடுத்த அனுபவங்களைச் சொல்லும்படி சிலரை அழையுங்கள்.) (3) சபை, நியமிக்கப்பட்டிருக்கும் அதன் பிராந்தியத்தை முழுமையாய் முடிப்பதற்கு ஏன் உழைக்கவேண்டும்? பெரிய பிராந்தியமாய் இருக்கும்போது, தனிப்பட்ட பிராந்தியத்தை வைத்துக்கொள்வது ஏன் பிரயோஜனமானது? (4) தொகுதியாக சாட்சிகொடுப்பதற்கான ஏற்பாடுகளிலிருந்து நாம் எவ்வாறு பயனடைகிறோம்? நம் நேரத்தை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்தும் பொருட்டு, சாட்சிபகரும் நடவடிக்கையை எவ்வாறு திட்டமிடலாம்?
பாட்டு 222 மற்றும் முடிவு ஜெபம்.
டிசம்பர் 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி அனைவரையும் நினைப்பூட்டுங்கள். புதிய ஆண்டில் கூட்ட நேரங்களை உங்கள் சபை மாற்றியமைக்கப்போவதாய் இருந்தால், அந்தப் புதிய நேரங்களில் சபையில் தவறாமல் ஆஜராக முயற்சி எடுக்கும்படி அனைவரையும் அன்பாக உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி:“புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்.” கட்டுரையை சபையாரோடு மறுபார்வை செய்து, ஆஜராகும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மாநாடு நடக்கவிருக்கும் தேதிகளையும் இடத்தையும், அறிந்திருந்தால் குறிப்பிடுங்கள். குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரும் மாநாட்டில் ஆஜராகும்படி, எவ்வாறு குடும்பத்தினர் தங்கள் வீட்டு வேலைகளைத் திட்டமிடலாம் என்பதற்கு ஆலோசனை அளியுங்கள். மாநாட்டிற்கு வரும்படி பைபிள் மாணாக்கர்களை எவ்வாறு உற்சாகப்படுத்தி, உதவியும் அளிப்பது என்பதைக் கலந்தாலோசியுங்கள்; அது ஆவிக்குரிய விதத்தில் அவர்களுக்கு அதிக பயனளிக்கும்.
25 நிமி :ஜனவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். சபையில் மிகுதியாயுள்ள பழைய புத்தகங்களைக் காண்பித்து, பிரசங்கங்களைத் தயாரிப்பதற்கு உதவும் ஆர்வமளிக்கும் பேச்சுப் பொருட்களை குறிப்பிடுங்கள். சபையிலுள்ள புத்தகங்களை அளிப்பது எப்படி என்பதன்பேரில் நடிப்புகளையும் ஏற்பாடு செய்யுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்தோ அறிவு புத்தகத்திலிருந்தோ படிப்புகள் ஆரம்பிப்பதற்கு நாம் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்.
பாட்டு 215 மற்றும் முடிவு ஜெபம்.