நீங்கள் வராதது எங்களுக்கு ஏமாற்றமே!
1 ‘நான் வரலேன்னு யாரு கவலப்படப் போறாங்க; நான் வராததை கவனிச்சுகூட இருக்க மாட்டாங்க’ என நினைத்துக் கொண்டு அவ்வப்போது நாம் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான சபைக் கூட்டங்களைத் தவறவிடலாம். உண்மை நிலை அதுவல்ல! நம்முடைய சரீரத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் சபையின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறோம். (1 கொ. 12:12) வாராந்தரக் கூட்டத்தை நாம் தவறவிடுவது, ஆஜராகும் மற்றவர்களுடைய ஆவிக்குரிய நலத்தைப் பாதிக்கலாம். நீங்கள் வர தவறினால், நீங்கள் வராதது எங்களுக்கு ஏமாற்றமே! என்பதை மறந்துவிடாதீர்கள்.
2 நீங்கள் வகிக்கும் முக்கியப் பங்கு: பவுல் தன் சகோதரர்களோடு கூட்டுறவுகொள்ள வாஞ்சையாய் இருந்தார். காரணத்தை ரோமர் 1:10, 11 விளக்குகிறது: “ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கி[றேன்].” அதேபோலவே, நம்முடைய பதில்களின் மூலமும், கூட்டத்தில் நம்முடைய நியமிப்புப் பகுதிகளின் மூலமும், நாம் வெறுமனே ஆஜராகியிருப்பதன் மூலமும் விசுவாசத்தில் தொடருவதற்கு ஒருவரையொருவர் கட்டியமைக்க நாம் அதிகத்தைச் செய்வோம்.—1 தெ. 5:11.
3 சபைக் கூட்டங்களில் மற்றவர்களைச் சந்திக்க நீங்கள் எதிர்நோக்கி இருக்க மாட்டீர்களா என்ன? நீங்கள் அவர்களுடைய பதில்களைக் கவனமாக கேட்டு, அவர்களுடைய விசுவாசத்தின் வெளிக்காட்டுதல்களைப் போற்றுகிறீர்கள். உங்களைக் கட்டியெழுப்புவதில் அவர்களுடைய ஆவிக்குரிய வரங்கள் உதவிசெய்கின்றன. அப்படிப்பட்டவர்கள் கூட்டத்தைத் தவறவிட்டிருந்தால், அவர்கள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாய் நீங்கள் உணருவீர்கள். நீங்கள் செல்ல தவறினாலும், உங்களைக் குறித்து உங்கள் சகோதர சகோதரிகள் அவ்வாறே உணருகிறார்கள்.
4 கூட்டங்கள் வகிக்கும் முக்கியப் பங்கு: நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், கூட்டங்கள் எந்தளவுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதைப் பற்றி காவற்கோபுரம் பின்வருமாறு முன்பு குறிப்பு சொல்லியிருந்தது: “துன்பம்நிறைந்த, ஒழுக்கங்கெட்ட இந்த உலகத்தில், கிறிஸ்தவச் சபை உண்மையான ஓர் ஆவிக்குரிய கோட்டை ஆகும். . . . சமாதானம் மற்றும் அன்பின் புகலிடமாக இருக்கிறது. எனவே, அதன் எல்லா கூட்டங்களுக்கும் ஒழுங்காக ஆஜராகியிருப்பவர்களாக இரு[ங்கள்].” (w-TL93 8/15 11) ஒவ்வொரு நாளும், ஆவிக்குரிய விதமாக நம்மை பிழிந்தெடுத்துவிடும் சூழ்நிலைமைகளை நாம் எதிர்ப்படுகிறோம். நாம் கவனமாக இராவிட்டால், அதிமுக்கியமான ஆவிக்குரிய காரியங்களுக்குக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக நம்முடைய சொந்த கவலைகளிலேயே நாம் வெகுவாக மூழ்கிவிடக்கூடும். கடவுளுடைய சேவையில் ஐக்கியப்பட்டும், வைராக்கியத்தோடும் தொடர்ந்திருப்பதற்கு தேவையான உற்சாகமூட்டுதலுக்காக நாம் அனைவருமே ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம்.—எபி. 10:24, 25.
5 நாம் கூட்டங்களில் ஆஜராவது மிக முக்கியம். எப்போதாவது ஒரு சமயம் வியாதியோ எதிர்பாராத சூழ்நிலையோ நாம் ஆஜராவதை தடைசெய்யலாம். மற்ற சமயங்களில், யெகோவாவை ஒன்றாக சேர்ந்து துதிக்கும் சபையாரின் மத்தியில் எப்போதும் இருப்பதற்கு நாம் திடதீர்மானமாய் இருப்போமாக!—சங். 26:12.