ஜூலை ஊழியக் கூட்டங்கள்
ஜூலை 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 194 (105)
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும்.
17 நிமி:“தொடர்ந்து விழித்திருங்கள்.” கேள்விகளும் பதில்களும்.
18 நிமி:“பல்வகை சிற்றேடுகளை உங்கள் ஊழியத்தில் பயன்படுத்துங்கள்.” ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களைச் சபையாருடன் கலந்தாலோசியுங்கள். சிற்றேடுகளிலுள்ள அக்கறையூட்டும் அம்சங்களைப்பற்றி சுருக்கமான குறிப்புகளைச் சொல்லுங்கள். அவை எவ்வாறு அளிக்கப்படலாம் என்பதைக் காண்பிக்க இரண்டு அல்லது மூன்று சுருக்கமான நடிப்புகளைக் கொண்டிருங்கள்.
பாட்டு 213 (36), முடிவு ஜெபம்.
ஜூலை 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 110 (56)
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
20 நிமி:“யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நம்மை ஆவிக்குரியவிதத்தில் தூண்டியெழுப்புகின்றனவா?” கேள்விகளும் பதில்களும்.
15 நிமி:ஒரு வீட்டு பைபிள் படிப்பை நடத்துதல். முன்னேற்றமுள்ள பைபிள் படிப்புகளை நடத்தும் மூப்பரால் கொடுக்கப்படும் ஒரு பேச்சு. பைபிள் படிப்புகளைத் தொடங்கும்படி அதிக முயற்சி எடுக்க உற்சாகப்படுத்துங்கள். நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் பக்கங்கள் 89-91-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள். சுருக்கமான உள்ளூர் அனுபவங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
பாட்டு 154 (72), முடிவு ஜெபம்.
ஜூலை 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 192 (103)
10 நிமி:சபை அறிவிப்புகள்.
20 நிமி:“சிற்றேடுகள் கொடுக்கப்பட்ட எல்லாரிடமும் மறுசந்திப்புகளைச் செய்யுங்கள்.” அக்கறை காண்பித்த அனைவரையும் பிரசுரம் அளிக்கப்பட்டவர்களையும் மீண்டும் சந்திப்பது ஏன் முக்கியம் என்பதை, இந்தப் பாகத்தைக் கையாள நியமிக்கப்பட்ட சகோதரர் இன்னும் மூன்று பிரஸ்தாபிகளுடன் கலந்துபேசுகிறார். ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கிற பிரசங்கங்களை அவர்கள் மறுபார்வை செய்து, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஒருவருக்கொருவர் நடித்துக் காண்பிக்கிறார்கள்.
15 நிமி:“1995 ‘சந்தோஷமாய் துதிப்போர்’ யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு.” உட்சேர்க்கை. பாராக்கள் 1-9-ன்பேரில் பேச்சு, நடத்தும் கண்காணியால் கையாளப்படவேண்டும். எளிமையாக்கப்பட்ட உணவு ஏற்பாட்டு மாற்றத்தின் நற்பயன்களை அழுத்திக்கூறவும்.
பாட்டு 164 (73), முடிவு ஜெபம்.
ஜூலை 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 126 (10)
5 நிமி:சபை அறிவிப்புகள்.
20 நிமி:“1995 ‘சந்தோஷமாய் துதிப்போர்’ யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு.” உட்சேர்க்கை. பாராக்கள் 10-21-ன்பேரில் கேள்விகளும் பதில்களும், சபை செயலாளரால் கையாளப்பட வேண்டும். முடிவில், நினைப்பூட்டுதல்கள் அடங்கிய பெட்டிக்குக் கவனத்தைத் திருப்புங்கள். தேவையான உணவையும் சம்பந்தப்பட்ட பொருள்களையும் மட்டுமே மாநாட்டுக்குக் கொண்டுவருவதில் சாதுரியமாக செயல்படுவதை அழுத்திக்கூறுங்கள்.
20 நிமி:அயலார் என்ன நினைப்பார்கள்? ஏப்ரல் 1, 1974, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 201-3-ன் அடிப்படையில் பேச்சும் நடிப்பும். நாம் ஏன் அடிக்கடி நம்முடைய உலகப்பிரகாரமான அயலாரால் அழுத்தத்திற்குள்ளாக்கப்படுகிறோம் என்பதன்பேரில் பேச்சு கொடுங்கள். (பக்கம் 201-ஐயும் பக்கம் 202-ல் முதல் பாராவையும் சிந்தியுங்கள்.) யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிப்பதை எதிர்க்கும் உலகப்பிரகாரமான அயலாரால் அச்சுறுத்தப்படும் புதிதாக அக்கறைகாட்டும் ஒரு குடும்பத்துடன் அனுபவமுள்ள ஒரு தம்பதி பைபிள் படிப்பு நடத்துவதைக் காட்டும் ஒரு நடிப்பைக் கொண்டிருங்கள். (கட்டுரையின் மீதி பகுதியிலுள்ள முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.) புதிதாக அக்கறைகாட்டும் குடும்பம் ஏன் சோர்ந்துவிடவோ விட்டுக்கொடுத்துவிடவோ கூடாது என்பதற்கான காரணங்களை அழுத்திக்காண்பியுங்கள்.
பாட்டு 169 (81), முடிவு ஜெபம்.
ஜூலை 31-ல் துவங்கும் வாரம்
பாட்டு 136 (28)
10 நிமி:சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள்.
15 நிமி:“கட்டியெழுப்புகிறவர்களாய் இருங்கள்.” மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சும் கலந்தாலோசிப்பும்.
20 நிமி:ஆகஸ்ட் மாதத்திற்கான பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். பயன்படுத்தப்படக்கூடிய 32-பக்க சிற்றேடுகளைக் குறிப்பிடுங்கள். ஜூலையில் சிற்றேடுகளை அளிப்பதில் கிடைத்த அக்கறைக்குரிய அனுபவங்கள் ஏதேனும் இருந்தால் அதைச் சொல்லும்படி பிரஸ்தாபிகளிடம் கேளுங்கள். கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பைத் தொடங்குவது எப்படி என்பதை நடித்துக் காட்டுங்கள். பகுதி 1, பாரா 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள கேள்வியை எழுப்புங்கள். பாராக்கள் 2-4-ல் கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துக்களிடமாக வீட்டுக்காரருடைய பிரதிபலிப்பு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். கடவுள் உண்மையிலேயே அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்றும் வரப்போகும் அவருடைய புதிய உலகிலே துன்பம் இல்லாத ஓர் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழலாம் என்றும் இந்தச் சிற்றேடு காண்பிக்கிறது என்பதை விவரியுங்கள். மேலுமான கலந்தாலோசிப்புக்குத் திரும்பிவருவதாகச் சொல்லுங்கள்.
பாட்டு 179 (29), முடிவு ஜெபம்.