எல்லாருக்கும் ஒரு விசேஷித்த ராஜ்ய செய்தி
1 ஏப்ரல் 24-ம் தேதியிலிருந்து விசேஷித்த ராஜ்ய செய்தியின் பொது விநியோகிப்பை நாம் ஆரம்பித்தோம்; எங்குமுள்ள அக்கறைகாட்டுகிற மக்களின் ஆர்வத்தை அது தூண்டியிருக்கிறது! அதன் செய்தி சமயோசிதமானது மட்டுமல்லாமல் அவசரமானதாகவும் இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களிடம் இந்தச் செய்தியை அளிக்க விரும்பியவர்களாய், ஒவ்வொரு சபையிலும் உள்ள பிரஸ்தாபிகள் முழு இருதயத்தோடுகூடிய ஆதரவை வெளிக்காட்டி இருக்கின்றனர். முழுமையான ஒரு பங்கைக் கொண்டிருக்க நீங்கள் முயலுகிறீர்களா?
2 ஒவ்வொரு பிரஸ்தாபிக்கும் சுமார் 50 மற்றும் ஒவ்வொரு பயனியருக்கும் சுமார் 250 என்ற வீதத்தில் கொடுக்கப்படும்படி ராஜ்ய செய்தி ஒவ்வொரு சபைக்கும் அனுப்பப்பட்டது. உங்களால் எத்தனை விநியோகிக்க முடிந்திருக்கிறது? நீங்கள் எதிர்பார்த்திருந்த அளவுக்கு உங்களால் செய்ய முடியவில்லையென்றாலும், மே 14 அன்று அந்த விநியோகிப்பு முடிவதற்குள் அதிகத்தைச் செய்வதற்கான வழிமுறைகளை நீங்கள் எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா? ஒரு துணைப் பயனியராகச் சேர்ந்துகொள்வதைப் பற்றியென்ன? மாலைநேர சாட்சிகொடுத்தலுக்கு ஏற்பாடு செய்யப்படுபவற்றை போன்று, வாரத்தில் ஏற்பாடு செய்யப்படும் ஊழியத்திற்கான கூடுதலான கூட்டங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியுமா?
3 பிராந்தியம் திட்டமிடப்பட்டபடி செய்துமுடிக்கப்பட்டிருக்கிறதா என மூப்பர்கள் கவனமாக மறுபார்வை செய்வார்கள். ஒரு சபையால் அதன் முழு பிராந்தியத்தையும் முடிக்க முடியாமல் இருக்கக்கூடும், ஆகவே அருகாமையில் உள்ள சபை அதன் பிராந்தியம் முழுவதும் துண்டுப்பிரதியை அளித்து முடித்திருந்தால், (இது சிலசமயங்களில் மட்டுமே நிகழக்கூடும்), மூப்பர்கள் அந்தச் சபையின் உதவியைப் பெற்றுக்கொள்ளும்படி அணுகலாம். முழு இருதயத்தோடுகூடிய நம்முடைய முயற்சிகளும், சபைகளுக்கிடையிலுள்ள ஒத்துழைப்பும் அந்த வேலையைச் செய்துமுடிக்க உதவும்.
4 புதிய பிரஸ்தாபிகளும் இளைஞரும் உட்பட, அவ்வளவு அதிகம்பேர் இந்த வேலையில் பங்கெடுக்க முடிந்திருப்பதால், நீங்கள் அதிகப்படியான சந்தோஷத்தை அனுபவித்திருக்கக்கூடும். சாதகமாகப் பிரதிபலித்திருப்பவர்களை மறுசந்திப்புச் செய்யும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துவதன்மூலம் இந்தச் சந்தோஷமுள்ள மனநிலை தொடர்ந்து காத்துக்கொள்ளப்படும் என்று நம்புகிறோம். அக்கறை காண்பித்தவர்களைப்பற்றிய குறிப்புகளைக் குறித்துவைத்து, திருத்தமான வீட்டுக்கு வீடு பதிவுகளை வைத்திருக்கும்படி நாம் உற்சாகப்படுத்தப்பட்டோம். புதிய படிப்புகளைத் தொடங்கும் நோக்குடன் மறுசந்திப்புகளைச் செய்வதில் கவனம் செலுத்துவதற்கு மே மாதத்தின் பிற்பகுதி சிறந்த சமயமாக இருக்கும்.
5 திரும்பவும் போகும்போது நாம் என்ன சொல்லலாம்? இவ்வாறு சொல்வது பலன்தருவதாய் இருப்பதாக நீங்கள் காணக்கூடும்: “அச்சடிக்கப்பட்ட தகவலை சமீபத்தில் உங்களிடம் நாங்கள் விட்டுச்சென்றது நினைவிருக்கலாம்; அதை வாசித்து, அதைக்குறித்துச் சிந்தித்துப்பார்க்க உங்களுக்கு வாய்ப்பிருந்திருக்கும் என நம்புகிறேன். அதன் செய்தி நிச்சயமாகவே நம்முடைய சமுதாயத்தில் அதிக விவாதத்தை எழுப்பியிருக்கிறது, ஏனென்றால் மனிதவர்க்கத்தினர் அனைவரும் எதிர்ப்படும் முக்கிய பிரச்சினைகளைப்பற்றியும் அது பேசுகிறது.” இரண்டாம் பக்கத்திலுள்ள சிந்தனையைத் தூண்டும் சில கூற்றுகளுக்குக் கவனத்தைத் திருப்பி, பின்னர் இவ்வாறு கேளுங்கள்: “எதிர்காலம் கொண்டு வரப்போகும் காரியங்களுக்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” பதிலுக்காக அனுமதியுங்கள். அக்கறை காண்பிக்கப்பட்டால் ராஜ்ய செய்தியில் 2-4-வது பக்கங்களிலுள்ள மற்ற குறிப்புகளைக் கலந்துபேசி, பைபிள் படிப்பை அளியுங்கள், அல்லது அதற்கான சாத்தியம் இல்லையென்றால் புதிய பத்திரிகைகளை அளியுங்கள்.
6 மற்றொரு சபையின் பிராந்தியத்தில் நீங்கள் வேலை செய்யும்படி அழைக்கப்பட்டால், நீங்கள் கண்டுபிடிக்கும் அக்கறையுள்ள ஆட்கள் அந்தச் சபையிலுள்ள பிரஸ்தாபிகளால் மறுசந்திப்புகள் செய்யப்படும்படியாக அந்தப் பெயர்களை அங்குக் கொடுத்துவிட நிச்சயமாயிருங்கள். அதேவிதமாக, தொடர்ந்து சந்திப்புகளைச் செய்யும்படி உங்களிடம் சிலருடைய பெயர்கள் கொடுக்கப்பட்டால் தவறாமல் மறுபடியும் சென்று பாருங்கள்.
7 இந்த ராஜ்ய செய்தியின் விசேஷித்த விநியோகிப்பு கிளர்ச்சியை ஏற்படுத்தி, ராஜ்ய பிரசங்க வேலையில் நம் முயற்சிகளை அதிகரிக்கும்படி நம்மெல்லாரையும் தூண்டியிருக்கிறது. யெகோவாவின் மகத்தான பெயரையும் நோக்கத்தையும் பற்றி எங்குமுள்ள மக்களின் விழிப்புணர்ச்சியை அதிகரிப்பதோடு, அது ஒரு பெரிய வெற்றியாகவே இருக்கும் என்று நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். (ஏசா. 12:4, 5) நம்மால் எவ்வளவு அதிகமாகச் செய்யமுடிகிறதோ அவ்வளவு அதிக சந்தோஷத்தை உடையவர்களாய் இருப்போம்.—சங். 126:3.