ஒளி கொண்டுசெல்வோராக நமக்கு முன்மாதிரியானவரைப் பின்பற்றுதல்
1 இயேசு தம்மைப்பற்றி இவ்வாறு அறிவித்தார்: “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.” அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதன்மூலம், இயேசுவின் சீஷர்களும் ‘உலகத்துக்கு வெளிச்சமாய்’ இருந்தார்கள். (மத். 5:14) இயேசு ‘உலகத்திற்கு ஒளியாக’ இருப்பதால், தம்மைப் பின்பற்றுபவர்கள் “ஜீவஒளியை” கொண்டிருப்பார்கள் என்று அவரால் சொல்ல முடிந்தது. (யோவா. 8:12) அந்த ஒளியை மறைப்பதற்கு எதையும் ஒருபோதும் அனுமதிக்காத ஆவிக்குரிய ஒளி கொண்டுசெல்வோராக அது நம்மை ஆக்குகிறது.
2 திறம்பட்டவிதத்தில் ஒளி கொண்டுசெல்வோராக நாம் எவ்வாறு இருப்பது என்பதற்கு யெகோவாவின் அமைப்பு பயிற்சி அளிக்கிறது. நாம் பெறக்கூடிய ஆலோசனையையும் வழிநடத்துதலையும் நெருங்கப் பின்பற்றினால், ராஜ்ய சத்தியத்தைப்பற்றி எல்லா வகையான மக்களுக்கும் அறிவொளியூட்ட முடியும். (1 தீ. 4:6) ஒளி கொண்டுசெல்வோராகச் சேவைசெய்வது, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சத்தியத்தைப் பற்றி பேசுவதை மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களாக நல்ல நடத்தையைக் காத்துக்கொள்வதையும் உட்படுத்துகிறது. நமக்கு முன்மாதிரியானவருடைய நடத்தை நிந்திக்கப்பட முடியாததாக இருந்தது. அவரைப் பின்பற்றுகிறவர்களாக, கிறிஸ்தவம் நம்முடைய தினசரி வாழ்க்கை முறையாக இருக்கிறது என்பதை செயல்படுத்திக் காட்டவேண்டும். (எபே. 5:9; தீத். 2:7, 8, 10) மற்றவர்கள் கடவுளை மகிமைப்படுத்தும்படி தூண்டும்விதத்தில், அவர்களால் காணமுடிகிற நல்ல கிரியைகளை நாம் செய்ய வேண்டும்.—மத். 5:16.
3 வீட்டுக்கு வீடு ஊழியத்தைச் செய்து கொண்டிருக்கும்போது ஒரு சாட்சி வழக்கத்திற்கு மாறான ஒரு வேண்டுகோளை எதிர்ப்பட்டார். வீட்டுக்காரரும் அவருடைய மனைவியும் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தனர்; ஆனால் அவர்களுக்கு வங்கியில் போடுவதற்கு பணம் கொஞ்சம் இருந்தது. அந்தச் சாட்சியால் அதைச் செய்ய முடியுமா என்று கேட்டனர். அவர் ஒத்துக்கொண்டார்; வங்கிக்குக் கொண்டுபோகும்படி அவரிடம் பணமாக $2,000 கொடுக்கப்பட்டது! திரும்பி வந்தபின் அவர் கேட்டார்: “யாரென்றுகூட தெரியாமல் எப்படி என்னை நம்பினீர்கள்?” அதற்கான பதில்: “யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே நம்பத்தக்கவர்கள் என்பது எங்களுக்கும், மற்ற எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.” பைபிளின் ஒழுக்க நியமங்களை நெருங்கப் பின்பற்றுவது, கடவுளை கனப்படுத்தக்கூடிய நற்பெயரை உருவாக்குவதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்!
4 ஹாலோவீன் கொண்டாட்டம் சம்பந்தமான படங்களுக்கு வண்ணந்தீட்டுவதில் ஆறு வயது சிறுமி ஒருத்தி ஏன் கலந்துகொள்ளவில்லை என்று முதலாம் வகுப்பு ஆசிரியை ஒருவர் தன் வகுப்புக்கு விளக்கினார். தான் எதை நம்புகிறாளோ அதற்காக மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு நிற்பதற்கான தைரியத்தைக் கொண்டிருப்பதற்காக அந்த ஆசிரியை அவளைக்குறித்துப் பெருமைப்படுவதாகச் சொன்னார். ஏதாவது ஒன்றை நாம் உறுதியாக நம்பினால், அதை ஆதரித்து நிற்பதற்கான தைரியத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்று அந்த ஆசிரியை குறிப்பிட்டார். அன்றிரவு அந்த ஆசிரியை தன் சொந்த நம்பிக்கைகளைச் சோதித்துப் பார்த்தார்; தன்னுடைய நம்பிக்கைகளை ஆதரித்து நிற்கும்படி தான் அதேவிதமான தைரியத்தைக் காண்பித்திருக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. இனிமேல் வரக்கூடிய எந்தப் பண்டிகை கொண்டாட்டங்களிலும் தன் வகுப்பை ஈடுபடுத்தப்போவதில்லை என்று அவர் அடுத்த நாள் அறிவித்தார்; அவற்றில் சிலவற்றை அவர்தாமே நம்பாதவராக இருந்தார்!
5 யெகோவாவின் மக்கள் எங்கு இருந்தாலும் சரி, தங்களுடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய ஆவலுள்ளவர்களாய் இருக்கிறார்கள். பள்ளியில் இளைஞரின் சிறந்த நடத்தை பள்ளிசகாக்கள் மற்றும் ஆசிரியர்களின் மனதில் சாதகமான பதிவை ஏற்படுத்தி இருக்கிறது. சுற்று வட்டாரத்தில் நன்னடத்தையைக் காண்பித்திருக்கும் வயதுவந்த சாட்சிகள், ராஜ்ய செய்தியைப் பற்றி மற்றவர்கள் சாதகமாகப் பேசும்படி தூண்டியிருக்கின்றனர். எண்ணற்ற சூழ்நிலைகளின்கீழ் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது இன்னும் அதிகத்தைக் கற்றுக்கொள்ள விரும்பும் நேர்மையான மக்களைக் கவருகிறது. நாம் வேலை செய்யுமிடத்தில் ஊக்கமாகவும் நேர்மையாகவும் இருப்பதுகூட ஒரு சாட்சி கொடுக்கும். ஆம், நாம் எங்கிருந்தாலும் சரி அல்லது என்ன செய்துகொண்டிருந்தாலும் சரி, சத்தியத்திற்கான அக்கறையை தூண்டிவிட முடியும்.
6 குறையற்ற நம்முடைய சிறந்த முன்மாதிரியானவரின் வாழ்க்கை முறைக்குக் கவனம் செலுத்துவதன்மூலம், அவருடைய சீஷர்களாக நம்முடைய திறமைகளைத் தொடர்ந்து முன்னேற்றுவிக்க முடியும். அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவது, நம்முடைய வெளிச்சத்தை ‘யாவர் மீதும்’ பிரகாசிக்கும்படி செய்யும்.—மத். 5:15; 1 பே. 2:21.