தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜனவரி 2 துவங்கி ஏப்ரல் 17, 1995 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுரம் மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றுக்கும் சரி அல்லது தவறு என விடையளியுங்கள்:
1. பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்கான மனந்திரும்புதலைக் கடவுள் ஏற்றுக்கொண்ட போது, தாவீதும் அவர் வீட்டாரும் அவருடைய தவறான நடத்தையின் கெட்ட விளைவுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். [uw பக். 127 பா. 5]
2. நீதிமொழிகள் 11:1-ல் வலியுறுத்தப்பட்டுள்ள நியமமானது, நமக்கு யெகோவாவின் தயவு வேண்டுமாயின் நம்முடைய எல்லா தொழில் நடவடிக்கைகளிலும் நன்னெறியோடும் நேர்மையோடும் இருத்தல் வேண்டும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 11/15 பக். 19-ஐப் பார்க்கவும்.]
3. அறிவுரையை ஏற்பது பலவீனத்தின் அடையாளமாகும். [uw பக். 127 பா. 4]
4. நீதிமொழிகள் 14:17, உணர்ச்சிகளுக்கு முதலில் கவனம் செலுத்துகின்றது, ஏனெனில் அவை பெரும்பாலும் செயல்களுக்கு முன் தோன்றுகின்றன. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL93 8/15 பக். 20-1-ஐப் பார்க்கவும்.]
5. இயேசுவை கர்த்தர் என்று அழைப்பவர் அனைவரும் இரட்சிக்கப்படுவர். [uw பக். 105 பா. 5]
6. பொ.ச. 33-ல் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு கடவுளுடைய வலதுபாரிசத்தில் இருக்கையில், தம்முடைய அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்கள் மீது அந்தச் சமயத்தில் ஆட்சியைத் தொடங்கிவிட்டார். (கொலோ. 1:13) [gt அதி. 132]
7. மரபணுக் குறியீட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்பே, இதைப் பற்றிய அறிவு சங்கீதம் 139:13-16-ல் பதிவுசெய்யப்பட்டது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL92 8/15 பக். 4-ஐப் பார்க்கவும்.]
8. நீதிமொழிகள் 8:22-31 வெறுமனே ஞானத்தின் ஒரு விவரிப்புதான். [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL87 10/15 பக். 27-ஐப் பார்க்கவும்.]
9. உண்மை கிறிஸ்தவர் ஒருவர் எதையும் வெறுக்கக் கூடாது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL92 4/1 பக். 17-ஐப் பார்க்கவும்.]
10. நீதிமொழிகள் 11:25 எபிரெய கவிதை நடையில் உள்ள இணையொத்த எண்ணங்களுக்கோ கருத்துக்களுக்கோ ஓர் உதாரணமாகும். மேலும் நீதிமொழிகள் 10:7 மாறுபாடான இணையொத்ததற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். [si பக். 107 பா. 7]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. ஏன் சங்கீதங்கள் சிறந்த இலக்கியமாக இருப்பதைவிட மிக அதிக மேம்பட்டவை? [si பக். 104 பா. 23]
12. சங்கீதங்களின் அறிவினால் இயேசுவுக்கு என்ன பயன் விளைந்தது? [si பக். 105 பா. 30]
13. சாலொமோனுக்கு அவருடைய ஞானத்தை அருளினது யார், இது நாம் நீதிமொழிகளைப் படிக்கும்போது எதை மதித்துணர செய்யவேண்டும்? [si பக். 106 பா. 1]
14. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தோட்டத்தில் மகதலேனா மரியாளிடம் பேசிய போது அவரை யார் என்று நினைத்தாள், அவரை சரியாக அடையாளம் கண்டுகொள்ள எது உதவியது? [gt அதி. 128]
15. இயேசுவோடு சேர்ந்தவர்களாக தங்களை அடையாளம் காட்ட பயந்த, நியாயசங்கத்தைச் சேர்ந்த எந்த இரண்டு அங்கத்தினர்கள் அவரின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆயத்தப்படுத்த உதவினர்? [gt அதி. 127]
16. நாம் நம் சகோதரரிடத்தில் சுயதியாக அன்பை வைத்துள்ளோம் என்று எவ்வாறு அன்றாட நடவடிக்கைகளில் காண்பிக்கலாம்? [uw பக். 132-3 பா. 3, 4]
17. என்ன வரலாற்று சம்பவத்தை சங்கீதம் 136:10-15 கூறுகிறது, பார்வோனுக்கு என்ன நேர்ந்தது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL93 6/15 பக். 5-ஐப் பார்க்கவும்.]
18. கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தம் என்ன இரண்டு விதமான நோக்கத்தைச் சேவிக்கிறது? [uw பக். 115, பா. 13]
19. உண்மையுள்ள அப்போஸ்தலரும் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன் யாக்கோபும் 500-க்கும் மேற்பட்ட சீஷர்களும் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்று ஏன் நம்பினர்? [gt அதி. 131]
20. எது இயேசுவை எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதராக ஆக்கியது? [gt முகவுரை குறிப்புகள்]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு தன்னுடைய பிரசித்திப் பெற்ற பிரசங்கத்தின்போது, மீண்டும் மீண்டும் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டினார்; அந்தச் சந்தர்ப்பத்தில் சுமார் ஆட்கள் முழுக்காட்டப்பட்டு சபைக்குள் சேர்க்கப்பட்டனர். [si பக். 105 பா. 25, 26]
22. இயேசுவுக்கு குடிக்க அளிக்கப்படும், அவருடைய மேல் சீட்டுப் போடப்படும், அவரை கைவிடுவதைப் போல் தோன்றும் என சங்கீதங்கள் முன்னறிவித்தன. [si பக். 105 பா. 30]
23. யெகோவாவின் அமைப்பு தேவாட்சியாக இருக்கிறது என்பதன் அர்த்தமானது அது ; யெகோவா வழிநடத்துதலை சபையின் தலைவராகிய மூலமும் தம்முடைய வார்த்தையாகிய மூலமும் அளிக்கிறார்; இயேசு விசேஷித்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார் என்பதாகும். (மத். 24:45, NW) [uw பக். 118-19, பா. 4-6]
24. பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் 1,44,000 பேரிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ள ஒருவராலும் எண்ணமுடியாத அவர்கள், இங்கு இதே தப்பிப்பிழைப்பார்கள். (வெளி. 7:9, 14, NW) [uw பக். 104 பா. 3, 4]
25. முதல் நூற்றாண்டு நிர்வாகக் குழு கடவுள் அங்கீகரிக்கும் தீர்மானத்தை அடைய, விவாதத்திற்கான விஷயத்தின் பேரில் ஏவப்பட்டெழுதப்பட்ட சொல்லப்பட்டவற்றையும் அதோடு செயல்பட்டதன் அத்தாட்சியையும் கவனமாக ஆராய்ந்தது. (அப். 15:6-29) [uw பக். 120 பா. 8]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. இயேசு கழுமரத்தில் அறையப்பட்ட போது, அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சரசம் கொடுக்கப்பட்டது; ஆனால் அவர் குடிப்பதற்கு மறுத்துவிட்டார், ஏனென்றால் (நியாயப்பிரமாணம் அதைத் தடைசெய்தது; அவர் ஒரு நசரேயன்; தம்முடைய எல்லா மனவல்லமைகளையும் முழுவதுமாக தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவர் விரும்பினார்). [gt அதி. 125]
27. நம்முடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுப்பது என்பது நாம் (பாவம் செய்வதை நிறுத்திவிட்டோம்; இயேசுவினுடைய பலியின் பாவ நிவாரண விலைமதிப்பு நமக்குத் தேவை என உணர்கிறோம்; நம்முடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுகிறோம்) என்பதை அர்த்தப்படுத்துகிறது. [uw பக். 106 பா. 7]
28. இயேசு குற்றமற்றவர் என்று குறைந்தது ஐந்து முறை அறிவித்த (ஏரோது; பிலாத்து; பேலிக்ஸ்) பின்பு யூதர்களின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு இணங்கி, இயேசு கொல்லப்படுவதற்கு ஒப்படைத்து விடுகிறான். [gt அதி. 124]
29. பொ.ச. (36; 35; 33)-ல் பெந்தெகொஸ்தேவுக்கு முன்னால் மரித்த மற்றும் மரித்த நிலையிலேயே இருந்த கடவுளுடைய ஊழியர் எல்லாரும் பரலோக வாழ்க்கைக்காகப் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்படவில்லை. [uw பக். 111 பா. 5]
30. மனிதர்கள் எல்லாரும் (அன்பால்; வெறுப்பால்; சொந்த இலாபத்திற்கான ஆசையால்) தூண்டப்படுகிறார்கள் என்றும், அவர்களுடைய முதன்மையான அக்கறை (கடவுளுடைய நாமத்தின்மீது; மற்றவர்களின்மீது; தன்னலத்தின்மீது) இருக்கிறது என்றும் சாத்தான் வாதாடுகிறான். [uw பக். 124 பா. 14]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
நீதி. 3:27, 28; யோவா. 19:4-6; 19:25-27; ரோ. 15:2, 3; வெளி. 7:16, 17
31. கிறிஸ்தவர்கள் தங்களுடைய வயதான பெற்றோரைக் கவனிப்பதற்கான பொறுப்பை உடையவர்களாக இருக்கிறார்கள். [gt அதி. 126]
32. நம் தோற்றம் மற்றவர்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்பைக் குறித்து உண்மையில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம், ஆகவே நம்மைநாமே பிரியப்படுத்திக்கொள்வதை மனமுவந்து தியாகம் செய்கிறோம். [uw பக். 130 பா. 10, 11]
33. எப்பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு நன்மைசெய்ய சந்தர்ப்பத்தை உடையவர்களாக நாம் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் ஆவிக்குரிய வகையிலோ பொருள் சம்பந்தமாகவோ உதவிசெய்யும் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக்கொண்டு உடன் மனிதனுக்கு, விசேஷமாக ஆவிக்குரிய சகோதரர்களுக்கு, உதவ வேண்டும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL93 12/15 பக். 20-ஐப் பார்க்கவும்.]
34. இன்னல்கள் மத்தியில், அமைதியான கண்ணியமும் சாந்தமும் யெகோவாவுக்குக் கனத்தைக் கொண்டுவரக்கூடும், மனிதர்களுடைய மரியாதையையும் சம்பாதிக்கக்கூடும். [gt அதி. 123]
35. “ஆவிக்குரிய பரதீஸ்” என்று பொருத்தமாகவே அழைக்கப்படுகின்ற வாக்குப்பண்ணப்பட்ட இந்த நிலைமைகளை நாம் ஏற்கெனவே அனுபவித்து மகிழத் தொடங்கியுள்ளோம். [uw பக். 107-8 பா. 9-11]