கற்பிக்கப்படத்தக்கவருக்காக தேடுங்கள்
1 “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” (யோவா. 6:44) இருதயத்தை ஆராய்கிறவராகிய யெகோவா, கற்பிக்கப்படத்தக்கவர்களாயும் கற்றுக்கொண்டதன்படி செயல்படுகிறவர்களாயும் உள்ளவர்களுக்குப் பலனளிப்பார். (எரே. 17:10; யோவா. 6:45) ஓர் புதிய உலகுக்காக வாஞ்சையோடிருக்கிற சாந்தகுணமுள்ளோருக்காக தேடுவதில் அவருடைய உடன் வேலையாட்களாக இருக்கும் சிலாக்கியத்தை நாம் கொண்டிருக்கிறோம்.—சங். 37:11; 1 கொ. 3:9.
2 இயேசு தம்முடைய சீஷர்களை ‘மனுஷரைப் பிடிக்கிறவர்களாக’ விவரித்தார். (மத். 4:19) அந்த விதமான வேலை சிலசமயங்களில் கடினமானதாக இருக்கிறபோதிலும், நல்ல பலன்களைப் பெறுவதில் அதிக திருப்தி இருக்கிறது. நம்முடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக வேலை செய்வதற்குப் பதிலாக, நாம் உண்மையில் ஏதோ அழிவிலிருந்து அந்த ‘மீனைக்’ காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். மீனைக் கவருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெற்றிகரமான மீனவன் அறிந்திருக்க வேண்டும். அதைப் போலவே, நாம் ராஜ்ய செய்தியை நமக்குச் செவிகொடுத்துக் கேட்பவர்களின் அக்கறையைத் தூண்டும் வண்ணமாக கவரத்தக்க முறையில் அளிக்க வேண்டும், அது நமக்கு செவிகொடுத்துக் கேட்பவர்களின் அக்கறையைத் தூண்டும். நாம் மறுசந்திப்புகள் செய்கையில் இது விசேஷமாக உண்மையாக இருக்கிறது. நாம் என்ன சொல்லலாம்?
3 மதத்தைப் பற்றி கலந்துபேசுகிற “காவற்கோபுரம்” கட்டுரைகளில் அக்கறை காட்டினால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “மதத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஏன் அநேக ஆட்கள் விரும்புவதில்லை என்பதைப் பற்றி இதற்கு முன்பு நாம் பேசினோம். நம் அயலகத்தாரில் பெரும்பாலானோர் மதப்பற்றுள்ளவர்களாக உரிமைபாராட்டுவதால், அது உங்களுக்கு வினோதமாய் இருப்பதாக நீங்கள் உணரவில்லையா? மதம் ஏன் இத்தகைய பிரிவினையுண்டாக்குகிற, விவாதத்திற்குரிய பொருளாக இருக்கிறது என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம்.” பதிலுக்காக அனுமதியுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 322-க்குத் திருப்பி, “இத்தனை பல மதங்கள் இருப்பதேன்?” என்ற தலைப்பக்குக் கீழுள்ள ஒருசில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
4 மதத்தைப் பற்றிய பொருளின் பேரில் ஒரு கலந்துரையாடலைத் தொடங்குவதற்கு இதுபோன்ற ஓர் அணுகுமுறையை நீங்கள் பயன்படுத்தலாம்:
◼ “நாம் உண்மை மதத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] வித்தியாசப்பட்ட மதங்கள் நிறைய இருப்பதால், அநேக ஆட்கள் குழப்பமடைந்தவர்களாகவும் நிச்சயமற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.” நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கம் 328-9-ல், “எந்த மதம் சரியென ஒருவன் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?” என்ற கேள்வியைக் கலந்தாலோசிக்கிற பகுதிக்குத் திருப்புங்கள். “அதன் உறுப்பினர் ஒருவரையொருவர் உண்மையில் நேசிக்கிறார்களா?” என்ற கேள்வி எண் 5-ன்பேரில் சுருக்கமாக குறிப்புச் சொல்லுங்கள். தனிப்பட்ட பைபிள் படிப்பின் மூலம் எவ்வாறு அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை விளக்கிக்கூறுங்கள்.
5 வீட்டுக்காரர் உலக நிலைமைகளைப் பற்றி அக்கறையுடையவராகத் தோன்றினால், இவ்விதமாக முயன்றுபார்க்க நீங்கள் விரும்பலாம்:
◼ “வாழ்வதிலும் குடும்பங்களைப் பராமரிப்பதிலும் நாம் சமாளிக்க வேண்டிய மோசமான நிலைமைகளைப் பற்றி உண்மையிலேயே நீங்கள் அக்கறைகொள்கிறீர்கள். சமீப எதிர்காலத்தில் கடவுள் நிறைவேற்றப்போகிற ஓர் வியக்கத்தக்க வாக்குத்தத்தத்தை பைபிள் வெளிப்படுத்துகிறது.” நீதிமொழிகள் 2:21, 22-ஐ வாசித்து, நித்திய சமாதானமுள்ள ஒரு உலகை யெகோவா எவ்வாறு வாக்களித்திருக்கிறார் என்பதை விளக்கிக்கூறுங்கள்.
6 விசேஷ ராஜ்ய செய்தி அளிப்புத் திட்டத்தை ஆரம்பித்த பிறகு மறுசந்திப்புகள் செய்யும்போது, ராஜ்ய செய்தி பிரதி ஒன்றைப் பெறாத வீட்டுக்காரர்களிடம் தயவுசெய்து அதை விட்டுவருவதைக்குறித்து நிச்சயமாயிருங்கள். ராஜ்ய செய்தியை அளித்த பிறகு மறுசந்திப்பில் என்ன சொல்லலாம் என்பது மே மாத நம் ராஜ்ய ஊழிய இதழில் கலந்தாலோசிக்கப்படும்.
7 கடவுளுடைய வார்த்தை ‘வல்லமையுள்ளதாக’ இருப்பதால், நம்முடைய அளிப்புகளில் அதைப் பயன்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். (எபி. 4:12) வீட்டுக்காரர் தானேயும் பைபிளை வாசிக்கும்படி நீங்கள் அவரை உற்சாகப்படுத்துவதைக் குறித்து நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். (அப்போஸ்தலர் 17:11-ஐ ஒப்பிடுக.) நமது பங்கை ஊக்கத்துடன் செய்வோமாகில், யெகோவா நம் முயற்சியை ஆசீர்வதிப்பார்.