‘கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அதிகமுள்ளது’
1 ஏப்ரல் மற்றும் மே மாதங்களின்போது எதிர்நோக்கியிருப்பதற்கு தேவராஜ்ய நடவடிக்கைகள் நிறைந்த அட்டவணையை நிச்சயமாகவே நாம் கொண்டிருக்கிறோம்! ஏப்ரல் 14-ல் கிறிஸ்துவினுடைய மரண நினைவு ஆசரிப்பை நாம் அனுசரிப்போம். அந்த முக்கியமான நிகழ்ச்சியில் ஆஜராகும்படிக்கு முடிந்தளவு அநேக ஆட்களை உற்சாகப்படுத்த வேண்டும்: தொழில்ரீதியில் அறிமுகமானவர்கள், விசுவாசத்தில் இல்லாத உறவினர்கள், பள்ளி தோழர்கள், புதிதாக அக்கறைகாண்பிக்கிற நபர்கள், பைபிள் மாணாக்கர்கள் ஆகியோர். ஒருவரும் விடுபட்டு போகாதபடிக்கு, நீங்கள் அழைப்பதற்குத் திட்டமிட்டவர்களைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.
2 அதைத் தொடர்ந்து வருகிற வாரத்தில் “பொய் மதத்தின் முடிவு சமீபம்” என்ற பொருளின் பேரில் ஏப்ரல் 23-ல் நடக்கும் விசேஷ பொதுப் பேச்சைக் கேட்பதற்கு, நினைவு ஆசரிப்புக்கு ஆஜரான அனைவரையும் நாம் உற்சாகப்படுத்துவோம். விசேஷ நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, ஒழுங்கான அடிப்படையில் சபையோடு கூட்டுறவுகொள்வதற்கான அவசியத்தை இந்த ஒளிவுமறைவற்ற செய்தியைக் கேட்கும் அக்கறையுள்ள அநேகர் உணருவர் என்பதாக நம்பப்படுகிறது.
3 விசேஷ ராஜ்ய செய்தி வெளியிடப்படவிருக்கிறது: ஏப்ரல் 23 அன்று நடக்கும் கூட்டத்தின் முக்கியம்சம் காலத்திற்கேற்ற நான்கு-பக்க அளவுள்ள ராஜ்ய செய்தி எண் 34 வெளியிடுதலாக இருக்கும், அது மே 14-ம் தேதி வரையாக பரவலான விநியோகிப்பு செய்யப்படும். இந்த நினைவு ஆசரிப்பு காலத்தின்போது ‘கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அதிகமிருக்கும்’ என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களல்லவா?—1 கொ. 15:58, NW.
4 தேவையான ராஜ்ய செய்தி ஒவ்வொரு சபைக்கும் அனுப்பி வைக்கப்படும். ராஜ்ய செய்தி அடங்கியுள்ள அந்த அட்டைப் பெட்டிகள் பாதுகாப்பான ஓர் இடத்தில் வைக்கப்பட வேண்டும். மேலும், ஏப்ரல் 23-ல் நடக்கும் நிகழ்ச்சிநிரலின் முடிவு வரையாக அதைத் திறக்கக் கூடாது. அந்தச் சமயத்தில் ராஜ்ய செய்தி, சகோதரர்களுக்கும் பொது மக்களுக்கும் விநியோகிப்புக்காக கிடைக்கும். சபைக் கூட்டங்கள், வட்டார மாநாடுகள், அல்லது விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்களின் முடிவில், ஆஜராயிருக்கும் ஒவ்வொருவரும் ஒரு பிரதியைப் பெறுவர், அதன்மூலம் அவர்கள் அதிலுள்ள பொருளடக்கங்களோடு அறிமுகமாகி, அதை விநியோகிப்பதற்காக ஆயத்தப்பட்டவர்களாய் ஆகமுடியும்.
5 மூப்பர்கள் செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருப்பர்: இம்மாதத்தின் ஆரம்பத்திலேயே மூப்பர்களின் குழு இந்த விசேஷ அளிப்புத் திட்டத்தைப் பற்றிய விவரங்களைக் கலந்து பேசுவதற்காக சந்திக்க வேண்டும். சபைகள் தங்களுடைய நியமிக்கப்பட்ட பிராந்தியம் முழுவதையும் செய்து முடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அளிப்புத் திட்டம் முடிவடைவதற்கு முன்பாக, கடந்த ஆறு மாதங்களில் செய்து முடிக்கப்படாத பிராந்தியங்களில் ஊழியம் செய்வதற்கு விசேஷ முயற்சி செய்யுங்கள். இந்த வேலையின் முக்கியத்துவத்தைக் கவனிக்கையில், இந்த ஊழியத்திற்காக முடிந்தளவு அதிகமான நேரத்தை ஒதுக்கி வைக்க நாம் விரும்புவோம். சந்தேகமில்லாமல் வழக்கத்தைவிட அதிகமான பிரஸ்தாபிகள் துணைப் பயனியர்களாக சேர்ந்துகொள்வார்கள். புதிதாக அங்கீகரிக்கப்பட்ட முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக அநேக பைபிள் மாணாக்கர்களும்கூட நம்முடன் சேர்ந்துகொள்ளக்கூடும். கர்த்தருடைய இந்த வேலையில் ஒன்றாகச் சேர்ந்து உழைக்கையில், நாம் என்னே ஒரு மகிழ்ந்தனுபவிக்கத்தக்க நேரத்தைக் கொண்டிருப்போம்!
6 சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொகுதியாக சாட்சி கொடுப்பதற்காக, சபை புத்தகப் படிப்பு நடத்துபவர்கள் திட்டவட்டமான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சுறுசுறுப்பான ஒரு பங்கைக் கொண்டிருப்பதற்கு ஒவ்வொருவரும் உற்சாகப்படுத்தப்பட வேண்டும். வாரயிறுதி நாட்களில் ஊழியம் செய்வதோடுகூட, அளிப்புத் திட்டத்தின்போது வாரத்திற்கு ஒரு முறையாவது மாலைநேர ஊழியம் திட்டமிடப்பட வேண்டும். கூடுதலான ஒரு பங்கைக் கொண்டிருக்க விரும்புகிற மாணாக்கர்கள் சேர்ந்துகொள்ளும்படிக்கு பள்ளி முடிந்த பிறகு ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு சிலர் விரும்பலாம்.
7 பயனியர்களும் பிரஸ்தாபிகளும் ஒவ்வொரு நாளும் ஊழியத்தில் சீக்கிரமாகக் கலந்துகொள்ளும் விதத்தில் ஊழியத்திற்கான கூட்டங்கள் திட்டமிடப்பட வேண்டும். இந்தக் கூட்டங்கள் சுருக்கமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கூட்டமும் ராஜ்ய செய்தி பற்றிய எளிய பிரசங்கத்தை முக்கியப்படுத்திக் காட்ட வேண்டும். ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொண்டவர்களை மறுசந்திப்பு செய்வதற்காக ஓரிரண்டு ஆலோசனையையும் பிற்பகல் ஊழியத்திற்கான கூட்டங்களில் சேர்த்துக் கொள்ளலாம். என்றபோதிலும், சில பிரஸ்தாபிகள் காலை மற்றும் பிற்பகல் விநியோகிப்பில் ஈடுபடுவதற்கு விரும்பலாம். அதைச் செய்வதற்காக, போதுமான பிராந்தியம் இருக்கிறதா என்பதை ஊழியக் கண்காணி உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவார். அக்கறைகாட்டுகிறவர்கள் அனைவரின் பெயரையும் விலாசத்தையும் வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்புகள் என்ற பகுதியில், சுருக்கமான சம்பாஷணையைப் பற்றிய முக்கிய குறிப்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இது, பின்பு அந்த வாரத்தில் அல்லது மாதத்தில் மறுசந்திப்பு செய்வதற்கான அஸ்திவாரத்தைப் போடும்.
8 ஒரு சபையானது அதன் பிராந்தியத்தை முடிப்பதற்கு மற்றொன்றிற்கு உதவி செய்தால், அந்தப் பிராந்தியத்திற்குப் பொறுப்புள்ள சபையிடம் அக்கறைகாண்பித்த நபர்களின் பெயர்களையும் விலாசங்களையும் ஒப்படைக்க வேண்டும்.
9 பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாவதற்கு முன்னேற முயலுகிறீர்களா? சில சபைகளில், நல்நடத்தையுள்ள பிள்ளைகள் அநேக ஆண்டுகளாக ஊழியத்தில் தங்களுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட பெற்றோர்களுடன் சேர்ந்து சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கப்படுகிறது. அவர்கள் இன்னும் நற்செய்தியின் பிரஸ்தாபிகளாக இல்லாதபோதிலும், அந்தக் குழந்தைகள் நன்றாகச் செய்கிறார்கள். இந்தச் சிலாக்கியத்திற்குத் தங்களுடைய பிள்ளைகள் உண்மையிலேயே தகுதியுடையவர்களா என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். மூப்பர்களில் இருவர் எல்லா அம்சங்களையும் குடும்பத் தலைவருடன் கலந்தாலோசித்து, அந்தப் பிள்ளையை முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக கருதலாமா என்பதைத் தீர்மானிக்கலாம்.—om பக். 99-100.
10 யெகோவாவுக்குத் துதியின் பலியைச் செலுத்துவதில் உங்களுடைய சபைப் பிராந்தியத்தில் உள்ள பிரஸ்தாபிகள் எவரும் இனிமேலும் சுறுசுறுப்பானவர்களாக இல்லையா? (எபி. 13:15) பைபிளின் ஒழுக்கத் தராதரங்களைத் தொடர்ந்து பின்பற்றுகிறபோதிலும், சுறுசுறுப்பில்லாமல் இருப்பவர்கள் மனச்சோர்வினாலும் வாழ்க்கையின் கவலைகளினாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். மூப்பர்களில் ஒருவரால் செய்யப்படுகிற சிநேகப்பான்மையான சந்திப்பினால், சபையுடன் ஒழுங்காக கூட்டுறவுகொள்ளவும் தகுந்த சமயத்தில் ஊழியத்தில் புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைக்குத் திரும்பி வருவதற்கும் அவர்கள் தூண்டப்படலாம்.
11 மகிழ்ந்தனுபவிக்கத்தக்க இந்த வேலையில் தகுதிபெறுகிற அனைவரும் பங்குபெறலாம்: வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்வதை உங்களில் சிலராகிய பிள்ளைகள் அல்லது பருவ வயதினர் கடினமாக காண்கிறீர்களா? பிரசங்க வேலையில் குறைந்த அனுபவமுள்ள புதியவர்களாகிய உங்களைப் பற்றியென்ன? இந்த விசேஷ ராஜ்ய செய்தியுடன் வேலை செய்வது அதிகமாக மகிழ்ந்தனுபவிக்கத்தக்கதாய் இருக்கிறதென்பதை நீங்கள் காண்பீர்கள்! தேவைப்படுவதெல்லாம் ஓர் எளிய பிரசங்கமே.
இதுபோன்ற ஒன்றை நீங்கள் செய்யலாம்:
◼ “இந்த மாதத்தில் நாங்கள் ஒரு முக்கியமான செய்தியை 232 நாடுகளில் விநியோகித்து வருகிறோம். இன்று நாம் எதிர்ப்படுகிற பிரச்சினைகளுக்குப் பரிகாரம் இருக்கிறது என்பதை நம்புவதற்கான பலமான காரணங்களை இந்தச் செய்தி தருவதால் இது முக்கியமானதாயிருக்கிறது. உங்களுடைய தனிப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ளும்படி நாங்கள் விரும்புகிறோம்.”
அல்லது இதை நீங்கள் முயன்று பார்க்கலாம்:
◼ “இந்த மாதத்தில் ஏறக்குறைய ஐம்பது லட்சம் வாலண்டியர்கள் ஒரு முக்கியமான செய்தியை எண்ணற்ற மொழிகளில் விநியோகித்து வருகிறார்கள். இன்றைக்கு நாம் அனைவரும் எதிர்ப்படுகிற பிரச்சினைகள் முடிவடைவதைக் காண விரும்புகிற மக்களுக்காக இது தயார்செய்யப்பட்டிருக்கிறது. இது உங்களுடைய தனிப்பட்ட பிரதி.”
இந்த எளிய பிரசங்கம் உங்களுக்குப் பொருந்தலாம்:
◼ “[ராஜ்ய செய்தியின் தலைப்பை வாசித்து] என்று தலைப்பிடப்பட்ட இந்த முக்கியமான செய்தியை வாசிக்கும்படி நாங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறோம். அதிகரித்துக்கொண்டுவருகிற . . . இந்தப் பிரச்சினைகள் சம்பந்தமாக பக்கம் 2-ல் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள். [ராஜ்ய செய்தியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட வாக்கியத்தை வாசியுங்கள்.] காலத்திற்கேற்ற இந்தச் செய்தியின் மீதி பாகத்தை வாசிப்பதை நீங்கள் மகிழ்ந்தனுபவிப்பீர்கள் என்பதைக் குறித்து நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம். இது உங்களுடைய பிரதி.”
12 ராஜ்ய செய்தியைப் பெற்றுக்கொள்கிற ஒவ்வொருவரிலும் தனிப்பட்ட அக்கறை கொள்ளுங்கள். மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள்; உங்களுடைய பிரசங்கத்தை ஒரே மூச்சில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. நம் பிராந்தியத்தை முற்றுமுழுக்க செய்து ராஜ்ய செய்தியை வாசிப்பதில் அக்கறை காட்டுகிற அனைவரும் தனிப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள நாம் விரும்புகிறோம். வீட்டில் யாரும் இல்லாதபோது, உங்களுடைய வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டில் கவனமாக குறித்துக்கொள்ளுங்கள், இதன்மூலம் வீட்டுக்காரருக்கு ராஜ்ய செய்தியை அளிப்பதற்குப் பொருத்தமான சமயத்தில் மீண்டும் செல்லலாம். அந்த விஷயத்தை வாசிப்பதில் தனிப்பட்ட நபர்கள் அக்கறை காட்டும்போது, தெரு ஊழியத்தில் இந்த ராஜ்ய செய்தியைப் பயன்படுத்தலாம். கைப்பிரதிகளைப் போல அந்தப் பிரதிகளை இஷ்டம்போல அனைவருக்கும் அளிக்கக்கூடாது. பதிலாக, வழியில் போகிறவர்களை அணுகி, சிறப்பித்துக் காட்டப்படுகிற செய்தியின் முக்கியத்துவத்தை விளக்கிக்கூறுங்கள். சந்தர்ப்ப சாட்சிகொடுக்கையில், பயணம் செய்கையில், அல்லது மதிய இடைவேளையின் போது உடன் வேலையாட்களுக்குச் சாட்சிகொடுக்கையில் ராஜ்ய செய்தியைப் பயன்படுத்துங்கள். வெளியில் செல்ல முடியாதவர்கள் அல்லது மற்றபடி உடல்நலம் சரியில்லாதவர்கள், சந்திக்க வருபவர்கள், மருத்துவர்கள், நர்ஸ்கள், வியாபாரிகள், தங்களுடைய வீட்டிற்கு வரும் மற்றவர்கள் போன்றோருக்கு அவற்றை அளிக்கலாம்.
13 அளிப்புத் திட்டத்தின்போது நீங்கள் எத்தனை மறுசந்திப்புகளை செய்வீர்கள்? சந்தேகமில்லாமல் நிறைய செய்வீர்கள், ஏனெனில் ராஜ்ய செய்தியில் அக்கறைகாண்பித்த அனைவரையும் மீண்டும் சந்திக்க வேண்டும். முதல் சந்திப்பில், ராஜ்ய செய்தியை மட்டும் சிறப்பித்துக் காண்பிப்பது மிகச் சிறந்தது. பின்பு, நீங்கள் மறுபடியும் செல்கையில், ராஜ்ய செய்தியிலுள்ள தகவலின் காலத்திற்கேற்றத் தன்மையைக் குறித்து ஒருசில குறிப்பு சொல்லுங்கள். வீட்டுக்காரர் என்ன வாசித்தார் என்பதன் பேரில் தன்னுடைய கருத்தைச் சொல்கையில், கவனமாக செவிகொடுத்துக் கேளுங்கள். தற்போதைய பத்திரிகைகளில் எதை அளிப்பது, ஒருவேளை மேலுமான கலந்தாலோசிப்புக்காக எவ்வாறு தயார்செய்வது என்பதை அறிந்துகொள்வதற்கு அவருடைய குறிப்புகள் உங்களுக்கு உதவிசெய்யும். மறுசந்திப்பில் சாதகமான பிரதிபலிப்பைப் பெறுவீர்களென்றால், பைபிள் படிப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கு முயலுங்கள்.—1 கொ. 3:6, 7.
14 ‘நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராது’: இந்த வேலையெல்லாம் பயனுள்ளதா? ‘கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராது.’ (1 கொ. 15:58) பல ஆண்டுகளாக, ராஜ்ய செய்தியை விநியோகிப்பதற்கான நம்முடைய முயற்சிகள் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தம்பதியினர் காலியான அபார்ட்மெண்டுக்குக் குடியேறியபோது ஒரு மேசையறையில் ராஜ்ய செய்தியின் பழைய பிரதியொன்றைக் கண்டார்கள். அந்த முழு அபார்ட்மெண்டில் விட்டுச் செல்லப்பட்ட ஒரே பொருள் அதுதான். அதை வாசித்தப் பிறகு, உள்ளூர் சபையுடன் தொடர்புகொண்டு, ஒரு பைபிள் படிப்புக்காகக் கேட்டுக்கொண்டார்கள். எல்லா கூட்டங்களுக்கும் அவர்கள் ஆஜராக ஆரம்பித்தார்கள். பின்பு முழுக்காட்டப்படுவதற்கான ஆசையைத் தெரிவித்தார்கள். நீங்கள் விட்டுச்செல்கிற ஒரு பிரதி இதுபோன்ற விளைவுகளைக் கொண்டுவரலாம்!—km 12/74 பக். 1; ஆங்கில விழித்தெழு! நவம்பர் 8, 1976, பக்கம் 15-ஐயும் காண்க.
15 பிரமாண்டமான வேலை நமக்கு முன்பாக இருக்கிறது. நம் இலக்கானது மே 14-ம் தேதிக்குள் ஒவ்வொரு சபையும் அதன் பிராந்திய நியமிப்பை முடிக்க வேண்டும் என்பதாகும், அல்லது ராஜ்ய செய்தியை விநியோகிப்பதற்கான காலத்தை நீட்டுவது அவசியமானால், அந்த மாத முடிவிற்குள் செய்ய வேண்டும். பயனியர்கள் 250 ராஜ்ய செய்தி பிரதிகள் வரையாகப் பெற்றுக்கொள்ளும்படிக்கு அனுப்பப்பட்டுள்ளன. சபையிலுள்ள ஒவ்வொரு பிரஸ்தாபியும் 50 பிரதிகள் வரையாக பெற்றுக்கொள்வார். இவை பிரஸ்தாபிகள், பயனியர்கள் ஆகிய இருவருக்கும் ஒரு துண்டுப்பிரதி பத்து பைசாவுக்கு லிட்ரச்சர் கவுன்டரில் கிடைக்கும். ஆனால் அவை பொது மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும். பிரஸ்தாபிகளும் பயனியர்களும் தங்களால் விநியோகிக்கக்கூடிய அளவு பிரதிகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். மீதமுள்ள துண்டுப்பிரதிகளை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு விட்டுவிட வேண்டும். இதன் சம்பந்தமாக நல்ல ஒத்துழைப்பானது, இந்த முக்கியமான செய்தியை முடிந்தளவு விரிவாக விநியோகிப்பதை நிச்சயப்படுத்தும். பெரிய பிராந்திய நியமிப்பின் காரணமாக சில சபைகள் தங்களுடைய பிராந்தியத்தை மே மாத மத்திபத்திற்குள்ளாக செய்துமுடிக்காமலிருந்து பிரதிகள் இன்னும் இருந்தால், உதவிக்காக அருகிலுள்ள சபைகளைக் கூப்பிடுவது நடைமுறையானதாக இருக்கலாம். மற்ற சபைகளில், பிரஸ்தாபிகள் துணைப் பயனியர்களாக சேர்ந்துகொள்வதன் மூலம் அல்லது அடிக்கடி அதிகமாக ஊழியத்தில் ஈடுபடுவதன்மூலம் தங்களுடைய ஊழியத்தை அதிகரித்தால், தேவையை உள்ளூரிலேயே பூர்த்தி செய்து கொள்ளலாம்.
16 நம்முடைய ஊழியத்தை நாம் நிறைவேற்றப் போகிறோமென்றால், யெகோவாவுக்கு முழு இருதயத்தோடுகூடிய பக்தி தேவைப்படுகிறது. (கொலோ. 3:23) உயிர்கள் உட்பட்டிருக்கின்றன. இன்றைய உலக நிலைமைகளின் அர்த்தத்தை மக்கள் அசட்டை செய்ய முடியாது. காலம் கடந்துகொண்டே போகிறது. இந்த உலகப் பிரச்சினைகளுக்கு மனிதனிடம் பரிகாரம் இல்லை என்ற உண்மையை அவர்கள் எதிர்ப்பட வேண்டும். கடவுளிடம் பரிகாரம் இருக்கிறது. கடவுளுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள், தாமதமில்லாமல், அவர் நம்மிடம் கேட்கிறவற்றிற்கு இசைவாக திடதீர்மானத்துடன் செயல்பட வேண்டும்.
17 மே 14 அன்று நடக்கும் விசேஷ அளிப்புத் திட்டத்தின் இறுதியில், நம்முடைய நடவடிக்கையில் தளர்ந்துவிடுவோமா? இல்லை! ஏவப்பட்டெழுதப்பட்ட பவுலினுடைய ஆலோசனைக்கு இசைவாக நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வோம்.