நினைவு ஆசரிப்புக்காக தயார்செய்யுங்கள்
ஆசரிப்பைப் பற்றிய சரியான நேரமும் இடமும், பேச்சாளர் உட்பட, அனைவருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறதா? நிகழ்ச்சிநிரல் 45 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடாது என்பதைப் பேச்சாளர் அறிந்திருக்கிறாரா?
அடையாளச் சின்னங்களைத் தயார்செய்வதற்கு யாராவது ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறாரா? (காவற்கோபுரம், பிப்ரவரி 1, 1991, பக்கங்கள் 26-28-ஐக் காண்க.) சுத்தமான மேசை-விரிப்புடனும், போதுமான எண்ணிக்கை கிளாஸ்கள் மற்றும் பிளேட்டுகளுடனும் மேசையை ஆயத்தப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா?
இராஜ்ய மன்றத்தைக் கூட்டத்திற்கு முன்பாகவும் பின்பாகவும் சுத்தம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கின்றனவா? அட்டன்டண்டுகளும் பரிமாறுபவர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனரா? அவர்களுடைய வேலைகளைக் கவனமாகவும் கிரமமாகவும் செய்யும்படிக்கு, அவர்களுடன் கலந்தாலோசிப்பதற்குக் கூட்டமானது நடத்தப்பட்டிருக்கிறதா? அனைவருக்கும் திறமையாக பரிமாறப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த என்ன செய்முறை பின்பற்றப்படும்?
வயதான மற்றும் ஊனமுற்ற சகோதர சகோதரிகள் ஆஜராக உதவி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா? வெளியே செல்ல முடியாததால் ஆஜராகாத அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் எவராவது இருந்தால், அவர்களுக்குப் பரிமாறுவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா?