அறிவிப்புகள்
◼ புத்தக அளிப்புகள் ஏப்ரல், மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைக்குச் சந்தாக்கள். மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 70.00 ரூபாய். மாதம் ஒருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தாக்களும் 35.00 ரூபாய். மாதம் ஒருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தா கிடையாது. சந்தாக்களைப் பெறுகையில், அனைத்து இந்திய மொழிகளிலும் நேப்பாளியிலும் காவற்கோபுரம் இப்போது மாதம் இருமுறை வெளிவருகிறது, ஆனால் உருதுவில் மாதம் ஒருமுறை என்பதைத் தயவுசெய்து நினைவிற்கொள்ளுங்கள். விழித்தெழு! தமிழிலும் மலையாளத்திலும் மாதம் இருமுறையும், ஆனால் கன்னடம், குஜராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மாதம் ஒருமுறையும் வெளிவருகிறது. விழித்தெழு!-வுக்கான தனிப்பட்ட சந்தாக்கள் நேப்பாளி, பெங்காலி, மராத்தி அல்லது ஹிந்தி மொழிகளில் இல்லை, ஆனால் இந்த நான்கு மொழிகளில் விநியோகிப்போருக்கான கால்வருட பிரதிகள் சபைகளுக்குக் கிடைக்கின்றன. ஜூன்: உயிர்—அது எப்படி இங்கு வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்) 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்திய மொழிகளில் 192-பக்க புதிய பதிப்புகள் எவற்றையேனும் வழக்கமான 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் எந்த 32-பக்க சிற்றேட்டையும் 5.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! வாழ்க்கையின் நோக்கம் என்ன—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட அளிப்புத் திட்டப் பிரசுரங்களை இதுவரை தருவிக்காத சபைகள் தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்ய வேண்டும்.
◼ ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 23 அன்று, சபைக் கூட்டங்களிலும் அந்தத் தேதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வட்டார மாநாடுகள் மற்றும் விசேஷ மாநாட்டு தினங்களிலும் விசேஷ ராஜ்ய செய்தி வெளியிடப்படும். ராஜ்ய செய்தி வெளியிடப்பட்டவுடனேயே அதை விநியோகிக்க ஆரம்பிக்கலாம். மாநாடுகள், வட்டாரக் கண்காணியின் சந்திப்புகள், அல்லது மற்ற நடவடிக்கைகளின் காரணமாக தங்களுடைய கூட்டத்தின் அட்டவணையை மாற்றும்படி கேட்கப்படுகிற சபைகள் உட்பட, இது எல்லா சபைகளுக்கும் பொருந்துகிறது. ஏப்ரல் 24 அன்று ராஜ்ய செய்தியை வெளியிட்டு, விநியோகிக்க ஆரம்பிக்கலாம்.
◼ ஒரு சபையோடு தொடர்புகொள்கிற அனைவரும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வுக்கான எல்லா புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட சந்தாக்களை, தனிப்பட்ட சந்தாக்கள் உட்பட, சபையின் மூலமாக அனுப்ப வேண்டும்.
◼ இதுமுதற்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சபைகள் நினைவு ஆசரிப்பு அழைப்பிதழ்களுக்கான தங்களுடைய தேவையை கேட்க வேண்டும். தயவுசெய்து தேவையான எண்ணிக்கையை ஒவ்வொரு மொழியிலும் 50-ன் மடங்குகளாக கேளுங்கள். 1995 மாநாட்டு பேட்ஜ் கார்டுகள், தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் 1996, 1996 வருடாந்தரப் புத்தகங்கள், காலண்டர்கள், 1996 நினைவு ஆசரிப்பு அழைப்பிதழ்கள் ஆகியவற்றிற்கான ஆர்டர்களை நாங்கள் இப்பொழுது பெற்றுக் கொள்கிறோம். தயவுசெய்து இந்த ஐந்தையும் லிட்ரச்சர் ஆர்டர் நமூனாவில் (S-AB-14) கேட்கவும், மற்றவற்றை இதே நமூனாவில் கேட்க வேண்டாம். பேட்ஜ் கார்டுகள் ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கும். ஆனால், ஆராய்தல் 1996-ம் 1996 நினைவு ஆசரிப்பு அழைப்பிதழ்களும் ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பெங்காலி, மராத்தி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கும். தயவுசெய்து உங்களுடைய ஆர்டர்களை மே 6, 1995-க்கு முன்பாக அனுப்புங்கள்.
◼ மொழி என்ற உபதலைப்பின் கீழுள்ள ‘1994-1995 லிட்ரச்சர் ஆர்டர் நமூனா’வில் (S-AB-14 3/93) உள்ள அறிவுரைகளைத் தயவுசெய்து கவனியுங்கள். வருகிற நாட்களில், நமூனாவின் முன்பக்கத்தில் கேட்டுக் கொள்ளப்படுகிற எல்லா பிரசுரங்களும் உங்களுடைய சபையின் பிரதான மொழியில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்களுடைய சபையின் பிரதான மொழி, உங்களுடைய மாதாந்திர கணக்கு விவரப்பட்டியலில் சபை எண்ணுக்கு அடுத்ததாகவே காண்பிக்கப்பட்டுள்ளது. வேறெந்த மொழியிலும் விருப்பப்படுகிற பிரசுரங்கள் அந்த நமூனாவின் பின்புறம் கேட்க வேண்டும், விருப்பப்படுகிற மொழியையும் குறிப்பிட வேண்டும்.
◼ நீங்கள் கேட்டிருப்பவற்றில் அதிகளவான பிரசுரங்கள், உங்களுடைய சபையின் பிரதான மொழி என்று எங்களுடைய கம்ப்யூட்டரில் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ள மொழிக்கு பதிலாக மற்றொரு மொழியில் இருப்பதை நீங்கள் காண்பீர்களானால், உங்களுடைய சபைக்காக எங்களுடைய கம்ப்யூட்டரில் பதிவுசெய்யப்பட்டுள்ள பிரதான மொழியை மாற்றுவதற்கு சொஸைட்டிக்கு கேட்டு ஒரு கடிதம் எழுதவேண்டும். நீங்கள் கேட்பவற்றில் பெரும்பாலானவற்றை உங்களுடைய லிட்ரச்சர் ஆர்டர் நமூனாவின் முன்புறத்தில் பதிவுசெய்வதை இது நிச்சயப்படுத்தும். அதே நேரத்தில், மற்ற மொழிகளிலுள்ள ஒருசில பிரசுரங்களை மட்டுமே ஒருவேளை மறுபுறத்தில் கேட்டுக்கொள்ளப்பட வேண்டிய தேவையிருக்கலாம்.
◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
ஆங்கிலம்: பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல். தமிழ், மலையாளம், ஹிந்தி: யெகோவாவின் சாட்சிகள்—ஒற்றுமையுடன் உலகமுழுவதும் கடவுளுடைய சித்தத்தைச் செய்துவருகிறார்கள். கன்னடம், மலையாளம்: உங்களுடைய குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல். உருது: பரதீஸுக்கு வழிநடத்தும் பாதையை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் (முஸ்லீம்களுக்கான துண்டுப்பிரதி) பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்.