ஏப்ரல் ஊழியக் கூட்டங்கள்
ஏப்ரல் 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 203 (43)
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். “நினைவு ஆசரிப்புக்காக தயார்செய்யுங்கள்.”
15 நிமி:“நாம் பெற்றிருக்கிறவற்றிற்கு நன்றியுடனிருத்தல்.” கேள்விகளும் பதில்களும். நேரம் அனுமதிக்கிறபடி, அக்டோபர் 1, 1991, காவற்கோபுரம், பக்கங்கள் 14-15, பாராக்கள் 15-20 அடிப்படையில் கூடுதலான குறிப்புகள் சொல்லுங்கள்.
20 நிமி:“காவற்கோபுரம், விழித்தெழு!—நம் அவசர காலத்திற்கான பத்திரிகைகள்!” சபையாருடன் கலந்தாலோசியுங்கள். பத்திரிகைகளுக்கான போற்றுதலைத் தெரிவிக்கிற அனுபவங்களைக் கூறுங்கள். (gTL92 8/8 பக். 9) கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, ஒரு பிரசங்கத்தை எவ்வாறு தயார்செய்வது என்பதை இரண்டு பிரஸ்தாபிகள் காண்பிக்கும்படி செய்து, பின்பு தங்களுடைய பிரசங்கங்களை ஒருவருக்கொருவர் கொடுப்பதன்மூலம் நடித்துக் காட்டும்படிச் சொல்லுங்கள்.
பாட்டு 219 (50), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 212 (110)
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையும் நன்கொடை ஒப்புகைகளும். “யெஹோவா கே சாக்ஷி” என்ற பெட்டிக்கு கவனத்தைத் திருப்புங்கள். தேவராஜ்ய செய்திகள். நினைவு ஆசரிப்புக்கு ஆஜராவதற்கு அக்கறை காண்பிப்பவர்களுக்கு உதவிசெய்வதற்கான தேவையை அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள். இந்த வாரயிறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் பங்கு கொள்வதற்கு விசேஷ முயற்சி செய்யும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:“நம் ராஜ்ய ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுதல்.” சபையாருடன் கலந்தாலோசிப்பு.
20 நிமி:‘கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அதிகமுள்ளது.’ ஊழியக் கண்காணியால் நடத்தப்படும் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. விசேஷ ராஜ்ய செய்தியை வீட்டுக்கு வீடு விநியோகிப்பதற்காக செய்யப்பட்ட விரிவான ஏற்பாடுகளை மறுபார்வை செய்யுங்கள். உள்ளூர் சபையின் நியமிக்கப்பட்ட பிராந்தியத்தை, முழுவதையும் இல்லையென்றாலும், முடிந்தவரை அதிகளவு செய்துமுடிப்பதற்கான திட்டங்களைக் கலந்தாலோசியுங்கள். முதல் முறையாக ஊழியத்தில் பங்குகொள்ள புதியவர்களுக்கு உதவ என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கிக்கூறுங்கள். (மார்ச் 1995 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 1-ஐக் காண்க).
பாட்டு 150 (83), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 214 (82)
13 நிமி:சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். நினைவு ஆசரிப்பை அனுசரிப்பதைப் பற்றிய உற்சாகமூட்டுகிற சிறப்புக் குறிப்புகளை விவரியுங்கள். மேலும் ஆஜரான புதியவர்களுக்குக் கூடுதலான உதவி கொடுக்கும்படியான வழிகளை மறுபார்வை செய்யுங்கள். ஏப்ரல் 23 அன்று கொடுக்கப்படும் விசேஷ பேச்சுக்கு ஆஜராகவும் புதிதாக அக்கறை காண்பித்தவர்கள் மீண்டும் வருவதற்கு உதவி செய்யவும் அனைவரையும் உந்துவியுங்கள். ராஜ்ய செய்தி விநியோகிப்புக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளை மறுபார்வை செய்யுங்கள்.
15 நிமி:“ஒரு தேவையிருப்பதை நீங்கள் காண்கிறீர்களா?” கேள்விகளும் பதில்களும். மூப்பர்கள் தங்களுடைய மேய்க்கும் வேலையில் அவர்கள் சாதிப்பதற்கு முயற்சித்து வருகிற தற்போதைய இலக்குகளைச் சுருக்கமாக கூறுங்கள். உதவிசெய்ய தனிப்பட்ட நபர்கள் என்ன செய்யலாம் என்பதை விளக்குங்கள்.
17 நிமி:“கற்பிக்கப்படத்தக்கவருக்காக தேடுங்கள்.” மறுசந்திப்புகள் செய்வதன் முக்கியத்துவத்தை கலந்தாலோசியுங்கள். பைபிளைப் பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்துங்கள். ஓரிரண்டு பிரசங்கங்களைச் சுருக்கமாக நடித்துக் காட்டும்படி செய்யுங்கள்.
பாட்டு 197 (57), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 167 (42)
15 நிமி:சபை அறிவிப்புகள். பிராந்தியத்தில் ராஜ்ய செய்தி விநியோகிப்பின் முன்னேற்றத்தை மறுபார்வை செய்யுங்கள். ராஜ்ய செய்தியை அளிப்பதில் அனுபவித்த அனுபவங்களைக் கூறும்படி பிரஸ்தாபிகளை அழையுங்கள். உள்ளூர் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருக்கும் பத்திரிகை பிரசங்கங்களைக் கூறுங்கள். பகற்பொழுது அதிகரிக்கிறபடியால் மாலைநேரம் சாட்சி கொடுப்பதில் பங்குகொள்ளும்படி சபைக்கான எந்த ஏற்பாடுகளையும் அறிவியுங்கள்.
12 நிமி:சபையின் தேவைகள். அல்லது ஜனவரி 15, 1995, காவற்கோபுரம், பக்கங்கள் 21-3-ன் அடிப்படையில், மற்றவர்களுக்கு உற்சாகமளிப்பவர்களாய் இருங்கள் என்ற பேச்சைக் கொடுங்கள்.
18 நிமி:உங்களுடைய குடும்பப் படிப்பை ஒழுங்காக நடத்துங்கள். கணவனும் மனைவியும் தங்களுடைய பிள்ளைகளின் பாகத்தில் ஆவிக்குரிய முன்னேற்றம் குறைவுபடுவதைப் பற்றி கவலை தெரிவிக்கின்றனர். குடும்பப் படிப்பை நடத்துவதன் சம்பந்தமாக தான் அசட்டையாக இருந்திருப்பதைக் கணவன் ஒத்துக்கொள்கிறார்; சில சமயங்களில் எந்தவொரு குடும்ப போதனையும் இன்றி பல வாரங்கள் கடந்து விடுகின்றன. பள்ளி துணைநூல், (ஆங்கிலம்) பக்கங்கள் 37-8, பாராக்கள் 12-14-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையையும் வழிநடத்துதலையும் அவர்கள் மறுபார்வை செய்கிறார்கள். மற்ற நடவடிக்கைகள் குறுக்கிட அனுமதிக்காமல், ஒவ்வொரு வாரமும் குடும்பப் படிப்புக்கு முதலிடம் கொடுக்கும்படி இருவரும் சம்மதிக்கின்றனர்.
பாட்டு 142 (93), முடிவு ஜெபம்.