நம் ராஜ்ய ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுதல்
1 கடவுளுடைய ராஜ்யம் வல்லமையையும் அதிகாரத்தையும் கொண்ட உண்மையான அரசாங்கமாகும். அதுவே இயேசுவினுடைய பிரசங்கத்தின் பொருளாக இருந்தது. (மத். 4:17) மற்றவர்களுக்கு போதிப்பதும் ராஜ்ய சத்தியத்தைக் குறித்து சாட்சிபகருவதுமே இயேசுவினுடைய ஊழியத்தின் முக்கிய பாகமாயிருந்தது. இராஜ்யத்திற்காக ஜெபிக்கவும் முதலாவதாக அதைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கவும் அவர் நமக்கு கற்பித்தார். (மத். 6:9, 10, 33, NW) யெகோவாவுடனும் அவருடைய அமைப்புடனும் நெருங்கியிருத்தல், பிரசங்கிப்பதற்கான நமது பொறுப்பை நிறைவேற்றுதல், உலகத்திலிருந்து பிரிந்திருத்தல் ஆகியவை நாம் ராஜ்ய ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு உதவுகின்றன. நம்முடைய வார்த்தைகளின் மூலமும் செயல்களின் மூலமும், ராஜ்யத்தின் சார்பாக நாம் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—யோவா. 18:37.
2 1914 முதற்கொண்டு, இலட்சக்கணக்கான பிரஜைகளுக்கு ராஜ்யம் மெய்யான ஒன்றாக ஆகியிருக்கிறது. இராஜ்யத்தின் இந்தப் பிரஜைகளினால் வெளிப்படுத்திக் காண்பிக்கப்படுகிற ஒற்றுமை பிளவுபட்டுள்ள உலகத்திற்கு பெரும் வித்தியாசமாக நிற்கிறது. இராஜ்யம் ஒற்றுமைப்படுத்தும் சக்தியாக இருக்க வேண்டுமானால், நம்முடைய வாழ்க்கையில் அதை மெய்யானதாக நாம் ஆக்கவேண்டும். எது நமக்கு அதை மெய்யானதாக்குகிறது?
3 மற்ற அரசாங்கங்களைப் போல, அந்த ராஜ்யம் சட்டத் தொகுப்பைக் கொண்டுள்ளது. என்றாலும், அதன் சட்டங்கள் பைபிளில் காணப்படுகின்றன என்பதில் அது வித்தியாசப்படுகிறது. கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காக வாசிப்பதானது, ராஜ்ய பிரஜைகளாக நம்மிடத்தில் கேட்கப்படுவது என்ன என்பதைப் பற்றிய தேவையான நினைப்பூட்டுதல்களை அளிக்கிறது. நமது பிரசுரங்களைத் தனிப்பட்ட விதமாகப் படிப்பதும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையிடமிருந்து’ வருகிற வழிநடத்துதலும் நம்முடைய அன்றாடக வாழ்க்கையில் கடவுளுடைய சட்டங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதற்கு நமக்கு உதவி செய்கின்றன. (மத். 24:45, NW) நாம் இத்தகைய தனிப்பட்ட பொருத்தத்தைச் செய்கையில், ராஜ்யம் நமக்கு அதிகதிகமாக மெய்யானதாக ஆகிவரும். மேலும் நம்மை இயேசுவினுடைய அரசாட்சியின் கீழிருக்கிற ஐக்கியப்பட்ட வணக்கத்தார்களின் குடும்பமாகச் செய்து, உலகளாவிய சகோதரத்துவத்தில் மிக நெருக்கமாக ஒன்றுசேர்க்கிறது.
4 இராஜ்ய பிரசங்கிப்பின் மூலம் ஒற்றுமை: நம்முடைய பொறுப்பானது, “பூமியின் கடைசிபரியந்தமும்” ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதாகும். (அப். 1:8) நாம் யெகோவாவை ‘மகிமைப்படுத்த’ பிரயாசப்படுகையில், ‘ஏகசிந்தையுள்ளவர்களாக’ பிரசங்கிப்பது நம்மை ஒற்றுமைப்படுத்துகிறது. (ரோ. 15:5, 6) பூமி முழுவதுமுள்ள நம்முடைய உடன் வேலையாட்களுடன் வைராக்கியமாக பங்குகொள்வதானது, நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தி, யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு அவருடைய ஆவி நம் மூலமாக செயல்படும்படி அனுமதிக்கிறது. ‘கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருப்பதானது,’ நம்மை ‘உறுதிப்பட்டவர்களாகவும் அசையாதவர்களாகவும்’ ஆக்குகிறது.—1 கொ. 15:58, NW.
5 அநேக தேசங்களில், சாத்தான் பிரசங்க வேலையில் குறுக்கிடுவதன் மூலமாக நம்முடைய ஒற்றுமையைக் குலைக்கப் பார்க்கிறான். பூசலைத் தூண்டி தப்பெண்ணங்களையும் உருவாக்குவதற்கு, சச்சரவையும் சண்டையையும் உண்டாக்க முயற்சி செய்வதற்கு, தன்னால் முடிந்த எல்லா ஏதுக்களையும் பயன்படுத்துகிறான். (நீதி. 6:19; கலா. 5:19-21, 26) உலக விவாதங்களில் ஈடுபடும்படியும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஆதரிக்கும்படியும்கூட அவன் விரும்புகிறான். (யாக். 3:14-16) அவனுடைய செல்வாக்கை எதிர்த்து நிற்கும்படி வேதவசனங்கள் நம்மை பலமாக உந்துவிக்கின்றன; இல்லையென்றால், நம்மை அவனுடைய இரையாக விழுங்கிவிடுவான். (1 பே. 5:8, 9) நம்முடைய இருதயங்களிலிருந்தும் மனங்களிலிருந்தும் ராஜ்ய நம்பிக்கையைப் பற்றிய மெய்மை மறைந்து போகும்படி அனுமதிக்கக்கூடாது.
6 நமது ஒற்றுமையைக் காத்துக்கொள்வதானது, நல்மனதையும் பரத்திலிருந்து வருகிற ஞானத்தையும் தேவைப்படுத்துகிறது. பிரச்சினைகள் எழும்புகையில், விசேஷமாக அவை நம்முடைய சகோதரர்களை உட்படுத்துமானால், சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்கு ஆவியின் கனிகளை நாம் வெளிப்படுத்த வேண்டும். தற்பெருமை, பொறாமை, தான் என்ற அகம்பாவம் போன்ற உலகப்பிரகாரமான போக்குகள் பிரிவினையுண்டாக்குகின்றன, ஆகவே அவற்றை மேற்கொள்ள வேண்டும். (எபே. 4:13; கொலோ. 3:5-10, 12-14) நம்முடைய மனங்களை நம்பிக்கையான, கட்டியமைக்கிற எண்ணங்களால் நிரப்புவது அவசியம். நம்முடைய வாழ்க்கையில் ராஜ்யம் மெய்யானதாக இருக்கிறது! ஆனால் அதை அவ்விதமாக வைத்துக்கொள்வதற்கு நாம் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்!—எபே. 6:11, 13.
7 நம்முடைய ராஜ்ய நம்பிக்கையின் மெய்மை, என்றும் முடிவுறாத ஒற்றுமை மனப்பான்மையில் நம்மை ஒன்றுசேர்க்கிறது.—சங். 133:1.