உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/94 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1994
நம் ராஜ்ய ஊழியம்—1994
km 6/94 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: ஜூன்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகம் 40.00 ரூபாய் நன்கொடைக்கு. இது ஏற்கப்படாவிடில், 192 பக்க புத்தகம் ஏதாவது ஒன்றை வழக்கமான நன்கொடை 12.00 ரூபாய்க்கு அளிக்கலாம். ஆங்கிலத்தில், உயிர்—அது எவ்வாறு இங்கு வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? என்ற புத்தகத்தையும் 40.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். (சிறிய அளவு 20.00 ரூபாய்.) ஜூலை: 32 பக்கச் சிறுபுத்தகங்கள் ஏதாவது மூன்று, 3.00 ரூபாய் நன்கொடைக்கு. கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள சிறுபுத்தகங்கள் எங்களிடம் மிகுதியாக உள்ளன. ஆங்கிலம், மராத்தி: பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—இதை நீங்கள் எப்படிக் கண்டடையலாம்; ஆங்கிலம், மராத்தி, பஞ்சாபி: குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும்; ஆங்கிலம்: தகப்பனைத் தேடுதல் (In Search of a Father) (புத்த மதத்தினருக்கு), ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கொங்கணி (கன்னடம் மற்றும் கோவன்), மணிப்புரி, மலையாளம், பஞ்சாபி, தமிழ்: அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?; ஆங்கிலம், லூஷாய், மலையாளம், தமிழ்: விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை; ஆங்கிலம், ஹிந்தி, லூஷாய், மராத்தி, பஞ்சாபி, தமிழ்: வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது!; குஜராத்தி, காஸி, கொங்கணி (கன்னடம் மற்றும் கோவன்), லூஷாய், மணிப்புரி, மராத்தி, மலையாளம், தமிழ்: “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி”; ஆங்கிலம், ஹிந்தி, நேப்பாளி, பஞ்சாபி: மரணத்தின் மேல் வெற்றி—உங்களுக்குச் சாத்தியமா? உங்கள் மொழியில் சிறுபுத்தகங்கள் கிடைக்காவிடில், பள்ளி சிற்றேட்டைத் தவிர வேறு எந்தச் சிற்றேட்டையாகிலும், 4.00 ரூபாய் நன்கொடைக்கு அளியுங்கள். ஆகஸ்ட்: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? என்ற சிற்றேடு 4.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காவிடில், அல்லது மற்றொரு பொருள் அதிகப் பொருத்தமாகவுள்ள இடத்தில், கீழ்க்காணும் 32 பக்க சிற்றேடுகள் ஏதாவதொன்று உபயோகிக்கப்படலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?; பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!; “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”; நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா?; கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும் (The Divine Name That Will Endure Forever); பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்; வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? செப்டம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. (பெரிய அளவு புத்தகம் 40.00 ரூபாய்) குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளிப்புத் திட்டத்திற்கான பிரசுரங்கள் எதையாவது இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் தங்களுடைய அடுத்த லிட்ரச்சர் ஆர்டர் நமூனாவில் (S-14) ஆர்டர் செய்யவேண்டும்.

◼ பகல் வெளிச்சமுள்ள மணிநேரங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதால், நடைமுறையாக இருக்கும் இடங்களில், சபையினர் சாயங்கால சாட்சி கொடுத்தலில் பங்குகொள்ளும்படி மூப்பர்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.

◼ நிலம் வாங்குவதற்கு அல்லது ராஜ்ய மன்றம் கட்டும் திட்டத்தை மேற்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட சபையின் மூப்பர்கள், தங்களுடைய திட்டங்களின் விவரங்களை அனுப்பி சங்கத்தோடு தொடர்புகொள்ள வேண்டும். சங்கம் திட்டத்தை அங்கீகரிப்பதற்கு முன் சில ஆலோசனைகளைக் கொடுக்க விரும்பலாம்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஜூன் 1-ல் அல்லது அதற்குப்பிறகு கூடுமானவரை சீக்கிரத்தில் சபையின் கணக்குகளை தணிக்கை செய்யவேண்டும். இது செய்யப்பட்டதும் சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.

◼ ‘REPORT DESK’ என்று குறிப்பிடப்பட்டுள்ள சிறிய ப்ரெளன் கவருக்குள் தயவுசெய்து வேறு எதையும் வைத்து அனுப்பாதீர்கள். இந்தக் கவர் உங்கள் CONGRERATION REPORT (S-1)-ஐ அனுப்புவதற்காக மட்டும் உரியது. இதை ஒவ்வொரு மாதமும் ஆறாம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

◼ 1994, செப்டம்பரின் நான்கு வாரங்களுக்கு, வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ற சிற்றேட்டை நாம் சபை புத்தகப்படிப்பில் சிந்திக்கவிருக்கிறோம். இந்தச் சிற்றேடு பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், நேப்பாளி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. இப்போதே சிற்றேட்டின் பிரதிகளை போதுமானளவு ஆர்டர் செய்யுங்கள்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

மலையாளம்: யெகோவாவுக்குத் துதிபாடுங்கள் (பெரிய அளவு புத்தகம்).

◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கங்கள்:

ஆங்கிலம், தமிழ், தெலுங்கு: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்