பலன்தரும் முதல் சந்திப்புகள்
1 ஜனங்கள் தங்கள் சொந்த அலுவல்களில் அவ்வளவு முழுவதுமாக ஈடுபட்டிருப்பதாலும் அல்லது மதத்தைக் குறித்து வைராக்கியமான எண்ணங்களை கொண்டிருப்பதாலும் ஊழியத்தில் சம்பாஷணைகளை ஆரம்பிப்பது சவாலாக இருக்கக்கூடும். நம்முடைய முதல் சந்திப்பை பலன்தருவதாக ஆக்குவதில் நமக்கு உதவி செய்யக்கூடிய எதை நாம் மனதில் கொண்டிருக்கலாம்?
2 “மெய்யான சுயாதீனம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?” என்ற கட்டுரையைக் கொண்ட ஏப்ரல் 1 இதழை அளிக்கையில், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
▪ “உலகமுழுவதிலும் உள்ள ஜனங்கள் சுயாதீனத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மனித அரசாங்கங்கள் கொடுக்கும் சுயாதீன வாக்குகள் நிறைவுபெற தவறியிருக்கின்றன. மெய்யான கடவுளாகிய யெகோவாவை வணங்குவது நிரந்தரமான சுயாதீனத்தை கொண்டு வருகிறது.” 2 கொரிந்தியர் 3:17-ஐ வாசியுங்கள், காவற்கோபுரம் பத்திரிகையின் இந்த இதழ் கடவுளுடைய வாக்கை சிறப்பித்துக் காட்டுகிறது, மேலும் நம்முடைய விடுதலை வெகு அருகாமையில் இருக்கிறது என்பதை உலக சம்பவங்கள் ஏன் உறுதிப்படுத்துகிறது என்பதையும் காண்பிக்கிறது என்று குறிப்பிட்டுக் காட்டுங்கள்.
3 ஜெபம் என்ற பொருளை சிறப்பித்துக் காட்டுவதன் மூலம் நீங்கள் ஏப்ரல் 15, 1992, “காவற்கோபுரம்” பத்திரிகையை இவ்வாறு சொல்லி அறிமுகப்படுத்தலாம்:
▪ “போர்க் காலங்களில் ஜனங்கள் பொதுவாக வெற்றிக்காக ஜெபிக்கின்றனர். கடவுள் அப்படிப்பட்ட ஜெபங்களைக் கேட்டு, இரு பக்கங்களில் ஒரு பக்கத்தின் சார்பாக நிலைநிற்கை எடுப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலுக்காக நேரம் அனுமதியுங்கள்.] பைபிளின் பதிலை சிந்தித்துப் பாருங்கள்.” பிறகு 1 பேதுரு 3:12-ஐ வாசித்து குறிப்பு சொல்லுங்கள். சுருக்கமான விளக்கத்துக்குப் பிறகு, பத்திரிகையை வாசிப்பதில் அந்த நபரின் அக்கறையைத் தூண்டும் ஏதாவது ஒரு குறிப்பை காவற்கோபுரம் கட்டுரையிலிருந்து குறிப்பிட்டுக் காட்டுங்கள். பிறகு சந்தாவை அளியுங்கள்.
4 “நீங்கள் நினைப்பதை விட காலம் பிந்தி விட்டதா?” என்ற கட்டுரையைக் கொண்ட ஏப்ரல் 1 இந்திய மொழி பத்திரிகையை அளிக்கையில் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
▪ “சமாதானமான ஒரு புதிய சகாப்தம் தோன்றும் என உலகமுழுவதிலும் உள்ள ஜனங்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மனித அரசாங்கங்களால் கொடுக்கப்படும் சமாதான வாக்குகள் நிறைவேற்றமடைய தவறியிருக்கின்றன. மெய்யான, நிரந்தரமான சமாதானம் கடவுளிடமிருந்து மட்டும் தான் வரும்.” சங்கீதம் 46:8, 9-ஐ வாசித்து, சமாதானமான புதிய உலகம் அநேகர் நினைப்பதை விட வெகு அருகாமையில் இருக்கிறது என்பதை குறிப்பிட்டுக் காட்டுங்கள். “இதற்கு அத்தாட்சி இங்கே இப்பத்திரிகையில் இருக்கிறது.”
5 பைபிள் படிப்புகளை நடத்துவது நம்முடைய இலக்கு என்பதை மனதில் வையுங்கள். மே மாதத்தில் அநேகர் துணைப் பயனியர் ஊழியம் செய்யப் போவதால், பைபிளை படிப்பதில் ஆர்வமாயிருக்கும் நபர்களை கண்டுபிடிப்பதற்கு நமக்கு இன்னும் கூடுதலான சந்தர்ப்பங்கள் இருக்கும். ஆனால் மே மாதத்தின் போது துணைப்பயனியர் ஊழியம் செய்வதற்கு நம்முடைய சூழ்நிலைமைகள் நம்மை அனுமதிக்காவிட்டாலும், ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்ற இலக்கை நாம் அனைவரும் வைக்கலாம்.
6 முதல் சந்திப்பில் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு சில பிரஸ்தாபிகள் துண்டுப்பிரதிகளை உபயோகித்திருக்கின்றனர்.
“சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை” என்ற துண்டுப்பிரதியை அளிக்கையில், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
▪ “நாங்கள் உங்களுடைய சுற்றுவட்டாரத்தில் உள்ள தொண்டர்கள். எங்களுடைய வேலையின் தன்மையை அடையாளங் காட்டும் இந்தத் துண்டுப்பிரதியை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். இந்த உலகம் எப்போதாவது இவ்வாறு தோற்றமளிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” பதில் கிடைத்த பிறகு, முதலில் இருக்கும் சில பாராக்களை நீங்கள் அந்த நபரோடு கலந்தாலோசிக்கலாம், மத்தேயு 6:9, 10, சங்கீதம் 37:29-ஐ சிறப்பித்துக் காட்டுங்கள்.
7 நீங்கள் எவ்வாறு உங்களை அறிமுகப்படுத்திக் கொள்வீர்கள் என்பதைக் குறித்து கவனமாக சிந்தியுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 9-15 வரை மிகச் சிறந்த ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட முன்னுரைகளை திறமையுடன் பயன்படுத்திக் கொள்வது உங்களுடைய முதல் சந்திப்புகளை திறம்பட்டதாக ஆக்குவதற்கு உதவி செய்யும்.