கேள்விப் பெட்டி
◼ நம் ராஜ்ய ஊழியம் இதழ்களின் கோப்பு ஒன்றை சபை வைக்க வேண்டுமா?
தேவையானபோது எடுத்துப் பார்ப்பதற்காக நம் ராஜ்ய ஊழியம் மாதாந்தர பதிப்புகளுக்கு ராஜ்ய மன்ற நூலகத்தில் ஒரு கோப்பு வைப்பது பொருத்தமானது என்று ராஜ்ய ஊழியம் மே 1972 இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. மூப்பர்களும் பிரஸ்தாபிகளும் உபயோகிப்பதற்கு அப்படிப்பட்ட ஒரு கோப்பு ஒவ்வொரு ராஜ்ய மன்ற நூலகத்திலும் காத்து வருவது இன்னும் பொருத்தமானதாயிருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு கோப்பு இருக்குமேயானால், வெளி ஊழிய அளிப்புகள், பைபிள் படிப்புகள் நடத்துவது, மறு சந்திப்புகள் செய்வது ஆகியவற்றைப் பற்றி கடந்த காலங்களில் கொடுக்கப்பட்டிருந்த விஷயங்களை பிரஸ்தாபிகள் எடுத்துப் பார்க்கலாம். ஊழியத்தில் உபயோகிப்பதற்கு நல்ல கருத்துக்களை கண்டுபிடிக்கலாம். அவ்வப்போது நம் ராஜ்ய ஊழியத்தின் தற்போதைய இதழ்கள், சகோதரர்களில் சிலர் சபையோடு கூட்டுறவு கொள்வதற்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட இதழ்களுக்கு சுட்டுக் குறியீடுகளை கொடுக்கின்றன. ஒரு கோப்பு இருந்தால் புதிதாக கூட்டுறவு கொள்பவர்கள் பயனடைவர். இதழ்களை ஒழுங்காக வைப்பதற்கு ஒரு பொருத்தமான உறையை உபயோகியுங்கள்.
இந்தக் கோப்பு ஒவ்வொரு மாதமும் சேர்க்கப்பட்டு வருகிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள, தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணியையோ அல்லது தகுதி வாய்ந்த உதவி ஊழியரையோ மூப்பர்கள் நியமிக்க வேண்டும். நம் ராஜ்ய ஊழியம் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் கண்டிப்பான விதிகளாக இல்லாமல், ஆலோசனைகள் வடிவில் இருப்பதால், வேண்டும் போது பார்ப்பதற்குரிய விஷயங்களை கொண்ட சிறந்த ஊற்றுமூலமாய் அது இன்னும் இருக்கிறது, அது ஒவ்வொரு சபையின் ராஜ்ய மன்ற நூலகத்தின் பாகமாயிருக்க வேண்டும். நம் ராஜ்ய ஊழியம் பழைய இதழ்களை புரூக்லினிலிருந்து ஆர்டர் செய்து தருவித்துக் கொள்ள முடியாது.