சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
நவம்பர் 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 92 (51)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். உள்ளூர் பிராந்தியத்தில் பொருத்தமானதாக இருக்கும் இரண்டு விழித்தெழு! அளிப்புகளுக்கு ஆலோசனை கொடுங்கள்.
20 நிமி: “இடைவிடாமல் தொடர்ந்து கற்பியுங்கள்.” கலந்தாலோசிப்பும் நடிப்புகளும். இரண்டாவது பாராவை சிந்தித்தபிறகு, அனுபவமுள்ள பயனியர்களையோ அல்லது பிரஸ்தாபிகளையோ கொண்டு ஒரு சந்தாவை எவ்வாறு அளிப்பது என்பதை நடித்துக்காட்டுங்கள். (ஆங்கில பத்திரிகைகள் ஒவ்வொன்றுக்கும் புதிய சந்தா விலை ரூ50. ஆறு மாத சந்தாக்களுக்கும் மாதாந்திர பத்திரிகைகளுக்கு ஒரு வருட சந்தா ஒவ்வொன்றுக்கும் ரூ25.) இன்னுமதிக உற்சாகமூட்டும் வேதாகம தகவலை கலந்தாலோசிக்க மறுபடியும் வருவதாக முன்வாருங்கள். மூன்றாவது நான்காவது பாராக்களுக்குப் பிறகு உற்சாகமுள்ள இரண்டு பிரஸ்தாபிகள் இந்த ஆலோசனைகளை நவம்பர் மாதத்திலும் வரப்போகும் மாதங்களிலும் எவ்வாறு பொருத்தப் போகிறார்கள் என்பதை சிந்திக்கும்படி செய்யுங்கள்.
15 நிமி: “காலந்தவறாமையும் நீங்களும்.” ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 15, 1990, பக்கங்கள் 26–9 அடிப்படையில் நல்ல ஒழுங்குள்ள மூப்பரின் பேச்சு. (மற்ற மொழிகளில்: km 88/5 பக்கம் 3.)
பாட்டு 195 (105), முடிவு ஜெபம்.
நவம்பர் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 215 (34)
5 நிமி: சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும்.
20 நிமி: பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதிருங்கள். ஜனவர் 22, 1990 ஆங்கில விழித்தெழு! பக்கங்கள் 16, 17; குடும்ப வாழ்க்கை புத்தகம், அதிகாரம் 11-ல் உள்ள உபதலைப்புகள் “தன் மனதில் உள்ளவற்றைத் தெரிவிக்கும்படி உங்கள் பிள்ளையை ஊக்குவியுங்கள்” மேலும் “வளரிளமை பருவத்தினரின் தேவைகளை விளங்கிக் கொள்ளல்” சார்ந்த பேச்சும் நடிப்பும். ஒவ்வொரு பிள்ளையையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ளவும், அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாயும் மற்ற காரியங்களிலும் வளர உதவி செய்ய வேண்டியதன் தேவையை அழுத்திக் காட்டுங்கள். பைபிள் படிப்பின் முடிவில், பெற்றோர் எவ்வாறு பிள்ளைகளை அவர்களுடைய முயற்சிகளுக்காகப் போற்றுகிறார்கள் என்பதை நடித்துக் காட்டுங்கள். அவர்கள் பள்ளி பாடத்தில் உற்சாகம் கொடுப்பதன் மூலமும், அவர்களுக்குப் பிரச்னை இருக்கும் காரியங்களில் உதவுவதன் மூலமும் அக்கறை காட்டப்படுகிறது. பிள்ளையின் அக்கறையை இருதயத்தில் எல்லாச் சமயங்களிலும் கொண்டிருப்பதன் தேவையை அழுத்திக்கூறி அக்ராசினர் முடிக்கிறார்.
20 நிமி: “திறம்பட்ட பைபிள் படிப்புகளின் மூலம் இருதயங்களை எட்டுங்கள்.” கட்டுரை கேள்வி-பதில் மூலம் கலந்தாலோசிப்பு. பாராக்கள் 3 மற்றும் 5-ஐ சிந்திக்கையில், உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து நடித்துக் காட்டுங்கள். ஆகஸ்ட் 1, 1984 ஆங்கில காவற்கோபுரம் இதழில் உள்ள பொருத்தமான குறிப்புகளை அழுத்துங்கள்.
பாட்டு 43 (103), முடிவு ஜெபம்.
நவம்பர் 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 132 (70)
10 நிமி: சபை அறிவிப்புகளும் கணக்கு அறிக்கையும். சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் நன்கொடையைப் பற்றி அறிவிப்பையும் உள்ளூர் சபையின் தேவைகளின் பண ஆதரவிற்காகவும் போற்றுதலை தெரிவியுங்கள். முழு வார இறுதி நாட்களையும் வெளி ஊழியத்திற்காக திட்டமிட்டிருக்கும் ஒரு குடும்பத்தை சுருக்கமாக பேட்டி காணுங்கள், மற்றவர்களுக்கு ஒருவேளை உதவியாக இருக்கும் முக்கிய திட்டங்களை எடுத்துக் கூறுங்கள்.
20 நிமி: “நெருக்கமான குடும்ப உறவுகளை கட்டுதல்” சபையார் பங்கு பெறுதலோடு, மூப்பரின் பேச்சு. எல்லாரும் வெளி ஊழியத்தை அனுபவிப்பதற்கு உதவி செய்யவும், குடும்ப அங்கத்தினர்களில் ஆவிக்குரிய குணாதிசயங்களை கட்டுவதற்கு என்ன செய்யப்படலாம் என்பதற்கான ஆலோசனைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
15 நிமி: வெளி ஊழியத்திற்காக தயார் செய்தல். குடும்ப தொகுதி வெளி ஊழிய அளிப்புகளுக்காக தயார் செய்வதை நடித்துக் காட்டுங்கள். ஒருவர் பத்திரிகைகளை முக்கியப்படுத்தி எடுத்துக் காண்பிக்கிறார், மற்றொருவர் ஒரு துண்டுப்பிரதியை அளிக்கிறார், மூன்றாவது நபர் ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பை அளிக்கிறார். குடும்ப அங்கத்தினர்கள் ஒருவரோடொருவர் பயிற்சி செய்து கொள்வதைக் காட்டுங்கள்.
பாட்டு 42 (18), முடிவு ஜெபம்.
நவம்பர் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 31 (3)
10 நிமி: சபை அறிவிப்புகளும் கேள்விப் பெட்டியும். விழித்தெழு! சந்தா அளிப்பின் முன்னேற்றத்தைப் பற்றி அறிக்கை.
15 நிமி: வட்டார கண்காணியின் வேலையை போற்றுதல். நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தின் பக்கங்கள் 47–50-லுள்ள “வட்டார கண்காணி” என்ற தலைப்பின் கீழுள்ள விஷயங்களை சபையாரோடு கலந்தாலோசியுங்கள். சந்திப்பிற்கு முழுமையான ஆதரவு கொடுப்பதன் மூலம் நாம் எவ்வாறு பயனடையலாம் என்பதை அக்கிராசினர் அழுத்திக் காட்டவேண்டும். வட்டார கண்காணியும் அவர் மனைவியும் அவர்களுடைய நியமிப்பை நிறைவேற்றுவதன் மூலம் வைத்திருக்கும் தேவபக்தியான மாதிரியை நாம் போற்ற வேண்டும்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—ஜனங்களோடு சம்பாஷிப்பதன் மூலம்” கட்டுரையின் பேரில் கேள்வி–பதில் கலந்தாலோசிப்பு. வீடுகளில் சம்பாஷணைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதையும், வீடுகளுக்கு வெளியில் ஆட்களை காணும்போது எவ்வாறு ஆரம்பிப்பது என்பதையும் காண்பிக்க நன்கு தயாரிக்கப்பட்ட இரண்டு நடிப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டு 20 (103), முடிவு ஜெபம்.
டிசம்பர் 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 128 (10)
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: நம் உதவி ஊழியர்களை போற்றுதல். மேடை மற்றும் ஒலி, கணக்குகள், பிரசுரங்கள், பத்திரிகைகள், அட்டென்டென்ட்டின் வேலைகள் இவற்றையெல்லாம் கவனித்துக்கொள்ளும் சகோதரர்களை பேட்டி காணுங்கள். அவர்களுடைய திட்டவட்டமான வேலைகளையும், அவர்களுடைய வேலைகளை அதிக சந்தோஷமுள்ளதாக்க பிரஸ்தாபிகள் எவ்வாறு ஒத்துழைக்கலாம் என்பதையும் விவரித்துக் கூறுங்கள். உள்ளூர் தேவைகளுக்கேற்ப மாற்றியமையுங்கள்.
10 நிமி: உள்ளூர் தேவைகள். அல்லது “நீங்கள் சத்தியத்தில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பீர்களா?” ஆங்கில காவற்கோபுரம் செப்டம்பர் 1, 1990 பக்கங்கள் 29–31 அடிப்படையாகக் கொண்ட பேச்சு. (மற்ற மொழிகளில்: ஜூலை 1987 காவற்கோபுரம் “கடவுளுடைய அன்பிலிருந்து உங்களை ஏதாவது பிரித்து வைக்குமா?”)
15 நிமி: டிசம்பர் ஊழியத்திற்காக தயார் செய்யுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” அல்லது நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? ஆகியவற்றை அளிக்கையில் உபயோகிக்க உள்ளூர் பிராந்தியத்திற்கு பொருத்தமாயிருக்கும் பேச்சு குறிப்புகளை கலந்தாலோசியுங்கள். பைபிளை வாசிப்பதற்கான முக்கியத்துவத்தைப் பற்றி எவ்வாறு பிரஸ்தாபி வீட்டுக்காரரிடம் பேசலாம் என்று நடித்துக்காட்டுங்கள். கடவுளுடைய வார்த்தை ஏவப்பட்டும், பிரயோஜனமுள்ளதாயும் இருக்கிறது என்பதைக் காண்பிக்க 2 தீமோத்தேயு 3:16, 17-ஐ உபயோகிக்கலாம். அதைத் தொடர்ந்து திட்டவட்டமான நன்மையைக் குறிப்பிட்டுக் காட்ட யோவான் 17:3-ஐ உபயோகிக்கலாம். டிசம்பர் அளிப்பை இணைத்துக் காட்டவும்.
பாட்டு 8 (84), முடிவு ஜெபம்.