திறம்பட்ட பைபிள் படிப்புகளின் மூலம்இருதயங்களை எட்டுங்கள்
1 தன் தகப்பனின் சித்தத்தைச் செய்வதில் இயேசு பெரும் மகிழ்ச்சி கண்டார், மேலும் மற்றவர்களும் யெகோவாவைச் சேவிப்பதற்கு உதவிசெய்வதில் மகிழ்ச்சி அடைந்தார். (சங். 40:8; மத். 9:37, 38; 11:28–30) தன் செய்தியை அறிவிப்பதோடு மட்டும் இயேசு திருப்தியடைந்துவிடவில்லை. சுவிசேஷ வேலையில் மற்றவர்களை உற்சாகப்படுத்தி நம்முடன் சேர்ந்துகொள்வதில் நாம் வெற்றிகரமாக இருக்கவேண்டுமென்றால், நம் பைபிள் மாணாக்கர்களின் இருதயங்களை நாம் எட்ட வேண்டும். ஒரு பிரசுரத்தில் கேள்வி–பதில் கலந்தாலோசிப்பை நடத்துவதைவிட அதிகம் இதில் உட்பட்டிருக்கிறது. இருதயத்தை எட்ட வேண்டுமென்றால் நம் மாணாக்கரை மனதில் கொண்டு நாம் தயாரிப்பது அவசியம்.
2 இயேசு மற்றவர்களில் தனிப்பட்ட அக்கறையை காண்பித்தார். அவர்களுடைய நோக்குநிலையை அவர் எண்ணிப்பார்த்தார். புரிந்துகொள்வதற்கு கடினமான விஷயங்களை எளிதாக்குவதற்கு உவமைகளை உபயோகித்தார். (மத். அதி. 5–7) அவர்கள் எதிர்ப்பட போகும் பிரச்னைகளை தெளிவாக அறிந்துகொண்டு, இயேசு பொருத்தமான ஆலோசனையைக் கொடுத்தார். (மாற்கு 9:33–37) கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அவருடைய போதகத்தின் குறிப்பை முதலில் புரிந்துகொள்ளமுடியவில்லையென்றால் பொறுமையாக உவமைகளால் அவர் சொல்ல வந்ததை சொன்னார். (மத். 16:5–12) இயேசுவுக்கு மற்றவர்களில் இருந்த ஆழ்ந்த அக்கறை, நம்மை இவ்வாறு கேட்குமாறு உந்துவிக்க வேண்டும், ‘நான் ஒரு மாணாக்கனாக இருந்தால், கற்பிக்கப்பட்டதை புரிந்துகொள்ளவும் மேலும் உந்துவிக்கப்படவும் நான் எதை அறிந்திருக்க தேவை இருக்கிறது?’—1971 வருடாந்தர புத்தகம், பக். 246–7 பார்க்கவும்.
பைபிளை முக்கியப்படுத்திக் காட்டுங்கள்
3 சாட்சி கொடுக்கப்பட்ட போது எது அவர்களை உடனடியாக பிரதிபலிக்கும்படிச் செய்தது என்று ஒரு தம்பதியைக் கேட்டபோது, அவர்கள் பதிலளித்தனர்: “அது பைபிளில் இருந்தது.” ஆம், கடவுளுடைய வார்த்தை இருதயங்களை எட்டுகிறது. (எபி. 4:12) பாராக்களிலுள்ள வசனங்களைத் தாராளமாக உபயோகித்து, அதை அடிக்கடி எடுத்துப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட வழி ஏன் ஞானமானது அல்லது முட்டாள்தனமானது என்பதைக் காண மாணாக்கருக்கு உதவிசெய்யுங்கள். கடவுளுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவது அவருக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை நியாயக்காரணம் காட்டி அவருடன் சிந்தியுங்கள்.—ஆங்கில காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1984 பக். 15–16-ஐ பார்க்கவும்.
4 பைபிளை சிறப்பித்துக் காட்டுவதற்கு நியாயங்கள் புத்தகத்தை உபயோகிப்பது மிகவும் திறம்பட்டதாக இருக்கிறது என்பதை அநேக பிரஸ்தாபிகள் கண்டிருக்கின்றனர். உதாரணமாக என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கம் 124, பாரா 13-ஐ சிந்திக்கையில் கடவுள் தன்னோடு பிள்ளைகள் பரலோகத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புவதால் பிள்ளைகள் மரிக்கின்றனர் என்று அவருடைய பாதிரி ஏன் சொல்கிறார் என்று ஒரு வீட்டுக்காரர் ஒருவேளை கேட்கலாம். நியாயங்கள் புத்தகத்தில் “குழந்தைகள் ஏன் மரிக்கின்றனர்?” என்பதன் கீழ் பக்கம் 99-ல் உள்ள விஷயங்களை சிந்தித்துப் பார்த்தல் குடும்ப ஏற்பாட்டை பாதுகாப்பதில் யெகோவாவின் அக்கறையை அழுத்திக் காட்டும். அதன் தகவல்கள் மனிதவர்க்கத்தின் பேரில் யெகோவாவின் அன்பை அந்த ஆள் நம்பும்படியாகச் செய்யும்.
கேள்விகள் கேளுங்கள்
5 இயேசு திறம்பட்ட விதத்தில் கேள்விகளை உபயோகித்தது ஜனங்கள் யோசிக்கவும் நியாயக்காரணங்களைச் சிந்திக்கும்படியும் உதவியது. (மத். 17:24–27) மாணாக்கரின் பதில்கள் அவர் என்ன கற்றுக்கொள்கிறார் என்பதை தீர்மானிக்கவும் அதோடு அவர் என்ன வேதப்பூர்வமற்ற எண்ணங்களை இன்னும் வைத்திருக்கிறார் என்பதையும் அறிய நமக்கு உதவிசெய்யும். ஒருவேளை மாணாக்கர் புகைபிடிக்கும் பழக்கத்தோடு போராடிக்கொண்டிருக்கலாம். என்றும் வாழலாம் புத்தகத்தில் அதிகாரம் 27-ல் உள்ள விஷயங்களையும், ஆங்கில விழித்தெழு! ஜூலை 8, 1989 இதழின் பக்கங்கள் 13–16-லுள்ள தகவல்களையும் நீங்கள் விமர்சித்திருக்கலாம். (தமிழ் விழித்தெழு! செப்டம்பர் 8, 1990) அவர் நிறுத்துவதற்கான தேவையைக் காண்கிறார். இருந்தபோதிலும் அதிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்று உண்மையிலேயே நம்புகிறாரா? நீங்கள் ஒருவேளை கேட்கலாம்: “இதைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? ஆனால் ஒருவேளை இப்பொழுதே நீங்கள் அதை நிறுத்தினால் உங்கள் நண்பர்களில் சிலர் உங்களைப் பார்த்து கேலிசெய்வார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்?”
6 ஆனால் ஓர் எச்சரிக்கும் வார்த்தை. சில சமயங்களில் இப்பேர்ப்பட்ட கேள்விகள் நாம் வியப்போ அல்லது ஏமாற்றமோ அடையச் செய்யும் பதில்களை ஒருவேளை கொண்டுவரலாம். அப்பொழுது என்ன? அது வீட்டுக்காரரை உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய விஷயமாக இருந்தால் பிரச்னையை கட்டாயப்படுத்தாமலிருப்பது ஒருவேளை மேலானது. ஆனால் சொல்லலாம்: “இப்பொழுது நாம் இதை விட்டுவிட்டு பிறகு நாம் இதற்கு வரலாம்.” அல்லது “நல்லது, இது சிந்திப்பதற்குரிய காரியம் இல்லையா?” (யோ. 16:12) இந்த விஷயத்தைக் குறித்து மாணாக்கர் உண்மையிலேயே எவ்வாறு உணருகிறார் என்பதை அறிந்து, அவர் மேலும் முன்னேற்றம் அடைய அவருக்கு ஒருவேளை உதவியாக இருக்கும் தகவல்களை நீங்கள் தயார் செய்யலாம். ஓர் ஆளின் இருதயத்தை உந்துவிக்க நாம் முயற்சி செய்யவேண்டும். மேலும் அவர் ஆவிக்குரிய பிரகாரமாய் வளர யெகோவா அவருக்கு உதவிசெய்ய நாம் ஜெபிக்கலாம்.—1 கொரி. 3:5–9.
7 ஒரு பைபிள் படிப்பை நடத்தும்போது, மாணாக்கரோடு போதுமான நேரமெடுத்து சிந்திக்கப்படும் விஷயங்களை காரணம் காட்டி பேசவேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். அவருடைய குறிப்பிட்ட தேவைகளுக்கு பொருந்துமாறு உங்கள் கற்பிக்கும் முறைகளை மாற்றி அமையுங்கள். அவருடைய இருதயத்திற்குள் யெகோவாவுக்கும், பைபிளுக்கும், யெகோவாவின் அமைப்புக்கும் ஆழ்ந்த அன்பையும் மரியாதையையும் வளர்க்க உழையுங்கள். திறம்பட்ட பைபிள் படிப்புகளை நடத்த ஆழ்ந்த முயற்சி எடுப்பதன் மூலம் மற்றவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்கு உதவி செய்ய நாம் நம் பங்கைச் செய்வோமாக.—அப். 2:41–46.