நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்
சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம்
1 சீஷர்கள் தங்களுடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யும்படி இயேசு அவர்களுக்கு போதித்தார். (மத். 5:14-16) ஏற்ற சந்தர்ப்பங்கள் எல்லாவற்றிலும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்கு அவர்கள் எடுத்து செல்ல வேண்டும் என அவர் விரும்பினார். இந்த விஷயத்தில் இயேசு ஒரு முன்மாதிரியாக இருந்தார். சீகோரில் உள்ள கிணற்றருகே சத்தியத்தைப் பற்றி ஒரு சமாரிய ஸ்திரீயிடம் பேச சந்தர்ப்பத்தை விடாது பற்றிக்கொண்டது இதற்கு ஓர் உதாரணம். (யோவான் 4:5-30) நம்மைப் பற்றியென்ன? சாட்சி கொடுக்க நாம் அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுகிறோமா?
2 நாம் எல்லாருமே ஒவ்வொரு நாளும் வெளி ஊழியத்தில் ஈடுபடமுடியாது. ஆனால் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் சாட்சி கொடுக்க நமக்கு சந்தர்ப்பங்கள் இருக்கக்கூடும். எந்த முறையில்? சந்தர்ப்ப சாட்சியின் மூலம். அநேக ஆயிரக்கணக்கானோர் இவ்வழியில் சத்தியத்தோடு அறிமுகமாகி இருக்கின்றனர். சந்தர்ப்பங்களை கண்டுணர நாம் விழிப்புள்ளவர்களாக இருந்து, பிறகு முயற்சி எடுக்கும்போது இன்னும் அநேக ஆட்களை சென்றெட்டலாம்.
யாரிடமாக நாம் பிரசங்கிக்கலாம்?
3 முறைப்படியான வீட்டுக்கு வீடு ஊழியம், மறுசந்திப்புகள், பைபிள் படிப்புகள் இவற்றோடு கூடுதலாக நம்மோடு வேலை செய்பவர்கள், பள்ளி தோழர்கள், வியாபார கூட்டாளிகள், உறவினர்கள் மேலும் மற்ற அறிமுகமானவர்களிடம் முறைப்படியல்லாத அடிப்படையில் நாம் சாட்சி கொடுக்கலாம். பேருந்து, இரயில் அல்லது விமானத்தில் பயணம் செய்யும்போது நம் உடன் பயணிகளுடன் ஒரு சம்பாஷணையை ஆரம்பிக்கலாம். விடுமுறையில் இருக்கும்போது ஹோட்டலில் வேலை செய்பவர்கள், பெட்ரோல் நிலையங்களிலும் உணவு விடுதிகளிலும் உள்ள வேலையாட்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோரிடம் நற்செய்தியை பகிர்ந்துகொள்ளலாம். மருத்துவர் அலுவலகத்திலோ அல்லது பொது சலவை மனைகளில் காத்துக் கொண்டிருக்கும்போதோ நாம் மற்றவர்களிடம் பேசலாம். வீட்டில் இருக்கும்போது நாம் ஒருவேளை அயலகத்தாரிடம் விற்பனையாளர்களிடம் அல்லது வீட்டிற்கு பொருட்களை கொண்டுவருபவர்களிடம் சாட்சி கொடுக்கலாம். நாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும்கூட மருத்துவர்கள், தாதிகள் மேலும் மற்ற நோயாளிகளிடம் சாட்சி கொடுக்கலாம்.
எவ்வாறு அதை ஆரம்பிப்பது
4 நாம் ஒருவரை சந்திக்க முன்பாகவே ஏற்பாடு செய்திருக்கிறோம், அதற்காக காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருந்தால், சமீபத்தில் வெளியான பத்திரிகைகளை நம்மோடு எடுத்துச் சென்று நாம் சந்திக்க நேரிடும் எவரிடமாவது அக்கறையூட்டும் ஒரு கட்டுரையை கலந்தாலோசிக்க தயாராயிருங்கள். அல்லது ஒரு துண்டுப்பிரதியை அல்லது புரோஷுரை சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கு ஓர் அடிப்படையாக உபயோகிக்கலாம். அப்பேர்ப்பட்ட சூழமைவில் சிலர் சமீபத்தில் நேரிட்ட ஒரு சம்பவத்தின் அடிப்படையில் சிந்தனையைத் தூண்டும் ஒரு கூற்றை சொல்லி பிறகு அந்த நபரின் பிரதிபலிப்பிற்காக கேட்பதன் மூலம் ஒரு சம்பாஷணையை ஆரம்பிப்பதை திறம்பட்டதாக கண்டிருக்கின்றனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் பேரில் சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வியை கேட்பது ஒரு சிறந்த சாட்சி கொடுப்பதற்கு வழிநடத்தும் என்பதை வேறு சிலர் கண்டிருக்கின்றனர். காரியங்கள் நடக்க எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாம் முதற்படி எடுப்பதுதான் தேவைப்படுகிறது.
வேலை செய்யும் இடங்களில் சாட்சி கொடுத்தல்
5 தங்களுடன் வேலை செய்பவர்களுக்குச் சாட்சி கொடுக்க வேலைக்கு செல்பவர்கள் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். சத்தியத்தில் ஒருவேளை அக்கறை காட்டலாம் என்று தாங்கள் நினைத்த சக வேலை செய்பவர்களின் பெயர்களை ஜார்ஜியாவில் உள்ள இரண்டு சகோதரிகள் பட்டியல் போட்டனர். பட்டியலில் இருப்பவர்களுடனும் மற்றும் சிலருடனும் பேசுவதன் மூலம் 65-ற்கும் மேலான வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகங்களை கொடுத்தனர். மேலும் அதிக அக்கறையையும் வளர்த்தனர்.
6 மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு சகோதரர் வேலையில் 15 நிமிட இடைவெளியின்போது தன் பக்கத்தில் உட்காரும் முதல் ஆளிடம் சாட்சி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அவர் பேசின அந்த ஆள் ஏற்கெனவே சத்தியத்தைப் பற்றி அறிந்திருந்தார். ஆகையால் அதைப்பற்றி அவர் தொடர்ந்து பேச விரும்பவில்லை. இருந்தபோதிலும் நம் சகோதரர் அவர் எளிதில் எடுக்கக்கூடிய ஓர் இடத்தில் நம் பிரசுரங்களை விட்டுச் சென்றார். ஆறு மாதங்களுக்குள் அந்த நபரும் அவருடைய குடும்பத்தார் எல்லாரும் முழுக்காட்டப்பட்டனர்.
7 “உலகத்தின் வெளிச்சமாக” இயேசு சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டார். (யோ. 8:12) பைபிளை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையை பகிர்ந்து கொள்ள நாமும் விழிப்பும் விருப்பமும் உள்ளவர்களாய் இருப்போமேயானால் நாமும் சாட்சி கொடுப்பதற்கான சந்தர்ப்பங்களை தவறவிட மாட்டோம். இவ்வாறு இயேசுவின் சீஷர்களைப் போல ‘உலகத்திலே சுடர்களைப்போல பிரகாசிப்போம்.’—பிலி. 2:15, 16.