சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஜனவரி 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 51 (24)
10 நிமி: சபை அறிவிப்புகள். சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்திற்கு ஆதரவு கொடுக்க உற்சாகப்படுத்துங்கள்.
25 நிமி: “மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—நீங்கள் அதை எவ்வாறு கண்டடையலாம்?” இந்தப் புத்தகத்தை மூப்பர் கலந்தாலோசிக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரங்களைக் கலந்தாலோசியுங்கள். பக்கங்கள் 13 மற்றும் 21-ல் உள்ள படச்சித்தரிப்புகளை கவனியுங்கள். பக்கம் 4 மற்றும் 98-ல் காணப்படுபவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுங்கள். அதிகாரம் 9-ம்கூட சிறந்த குறிப்புகளை கொண்டிருக்கிறது. அவை சிறப்பித்துக் காட்டப்படலாம். மெய்ச் சமாதானம் புத்தகத்தை வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு எல்லாரும் தயார் செய்ய வேண்டும்.
10 நிமி: சபைக் கூட்டங்களில் வரவேற்பாளர்களின் கடமைகள். ஒரு மூப்பரும் ஒன்று அல்லது இரண்டு தகுதிவாய்ந்த வரவேற்பாளர்களும் கேள்விப் பெட்டியை கலந்தாலோசிக்கிறார்கள். சபையிலுள்ள எல்லாரும் வரவேற்பாளர்களோடு ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தைக் காட்டுங்கள்.
பாட்டு 40 (31), முடிவு ஜெபம்.
ஜனவரி 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 138 (71)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். கணக்கு அறிக்கையையும் சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் நன்கொடையைப் பற்றி அறிவிப்புச் செய்யவும். சபையின் வெளி ஊழிய ஏற்பாடுகளை அறிவிக்கவும்.
20 நிமி: “குடும்ப பைபிள் படிப்பு—கிறிஸ்தவர்களுக்கு முதன்மையான ஒன்று.” சபையாருடன் மூப்பர் கலந்தாலோசிக்கிறார். சபையில் நடப்த்தப்படும் குடும்ப பைபிள் படிப்புகளின் எண்ணிக்கையை குறிப்பிடுங்கள். எல்லாக் குடும்பத்தலைவர்களும் ஓர் ஒழுங்கான குடும்ப படிப்பு நடத்தவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுங்கள்.
15 நிமி: ராஜ்ய மன்றத்திலிருக்கையில் நல்ல நன்நடத்தையை வெளிக்காட்டுதல். ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 15, 1989 பக்கங்கள் 16, 17 பேரில் சார்ந்த பேச்சு. பின்வரும் தேவைகளை வலியுறுத்துங்கள். (1) சரியான நேரத்திற்கு வருவது, (2) நிகழ்ச்சிநிரலைக் கூர்ந்து கவனிப்பது, (3) மற்றவர்களில் அனலான தனிப்பட்ட அக்கறை காண்பிப்பது.. (நம் ராஜ்ய ஊழியம் 9/89, மற்றும் 8/86 ஆகியவற்றிலுள்ள தகவலையும் பார்க்கவும்.)
பாட்டு 183 (73), முடிவு ஜெபம்.
ஜனவரி 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 151 (25)
10 நிமி: சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும். வார இறுதி நாள் ஊழியத்துக்கான சபை ஏற்பாடுகளை அறிவிக்கவும்.
20 நிமி: “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்திரிகைகளை அளியுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 4-ஐ சிந்திக்கும்போது பேரூந்துக்காக காத்து நிற்கும் ஒருவரை அல்லது அதற்கு ஒப்பான ஒரு சூழ்நிலையில் உள்ள ஒருவரை எப்படி அணுகுவது என்பதை நடித்துக் காட்டுங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்திரிகைகளை அளிக்கும் உணர்வுள்ளவர்களாக இருக்கும் அவசியத்தை உயர்த்திக் காட்டுங்கள்.
15 நிமி: “இளைஞரே, போலியான இரு வாழ்க்கை நடத்துவதற்கு எதிராக எச்சரிக்கையாயிருங்கள்.” ஆங்கில காவற்கோபுரம் ஆகஸ்ட் 1, 1988. கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. (இந்திய மொழிகளில்: மார்ச் 1, 1989 காவற்கோபுரம்.)
பாட்டு 53 (27), முடிவு ஜெபம்.
ஜனவரி 29-ல் துவங்கும் வாரம்
பாட்டு 30 (117)
10 நிமி: சபை அறிவிப்புகள். பிப்ரவரி மாதத்துக்கான பிரசுர அளிப்பை குறிப்பிடுங்கள். உங்கள் சபையில் எந்தப் புத்தகங்கள் கையிருப்பிலிருக்கிறதென்பதை தெரியப்படுத்துங்கள். வார இறுதி நாள் ஊழியத்தைப் பற்றி குறிப்பிடுங்கள்.
25 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பழைய பிரசுரங்களோடு.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 6-ஐ சிந்திக்கும்போது இந்த மாத பிரசுர அளிப்பை சிறப்பித்துக்காட்டும் சுருக்கமான நடிப்புக்காக ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: “சிறைக் கைதிகளுடன் கடிதத் தொடர்பு கொள்ளுதல்.” மூப்பரின் பேச்சு. சபையார் பங்கெடுத்தலோடு.
பாட்டு 18 (108), முடிவு ஜெபம்.