ஜனவரி மாதத்திற்காக முன்னரே திட்டமிடுதல்
1 ஓர் இலக்கை உண்மையிலேயே நிறைவேற்ற முற்படுவதற்கு முன்பாக, நாம் திட்டங்களைத் தீட்ட வேண்டும். உதாரணமாக, நாம் விடுப்பு எடுக்க விரும்பலாம். இது ஒருவேளை மாநாட்டுக்கு செல்வதையும் உட்படுத்தக்கூடும். இது பணசேமிப்பு, தங்கும் அறை வசதி ஏற்பாடு, பயணத்துக்காக நமது வாகனத்தை பழுதுபார்த்தல் போன்றவற்றிற்காக திட்டமிடுதலை உட்படுத்தக்கூடும். நம்முடைய இலக்கு நிறைவேற வேண்டுமானால் இந்த எல்லாத் திட்டமிடுதலும் அவசியமானவை.—நீதி. 21:5.
2 அதேப் போன்று துணைப்பயனியர் சேவையில் பங்குகொள்வதில் நாம் வெற்றியடைய வேண்டுமானால் திட்டமிடுதல் அத்தியாவசியமானது. உலக முழுவதிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான நமது சகோதர சகோதரிகள் இந்த ஊழிய அம்சத்தில் ஒழுங்காக ஈடுபடுவதன் மூலம் அநேக நன்மைகளை அறுவடைச் செய்கின்றனர். துணைப் பயனியர் சேவையில் ஒருவேளை அடுத்த மாதமே பங்கு கொள்வதற்காக நீங்கள் திட்டமிடுகையில் பின்வரும் ஆலோசனைகள் ஒருவேளை உங்களுக்கு உதவக்கூடும்.
3 வெளி ஊழியத்தில் மிகுதியான நேரத்தை அதாவது 60 மணிநேர இலக்கை எட்டக்கூடிய அளவுக்கு வசதியான ஒரு காலப்பகுதியை தேர்ந்தெடுக்க நீங்கள் ஏற்பாடு செய்யலாம். இது ஒருவேளை உங்களுக்கு மீதமாக இருக்கும் விடுப்பு நாட்களை பயன்படுத்துவதை உட்படுத்தக்கூடும். பள்ளியில் உள்ள இளைஞர் துணைபயனியர் செய்வதற்கு குளிர்கால மற்றும் இளவேனிற்கால விடுப்பு நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
4 ஐந்து முழு வார இறுதி நாட்களைக் கொண்ட மாதங்கள் வழக்கமாக வெளி ஊழியத்துக்குரிய அதிகப்படியான நேரத்தைக் கொடுக்கிறது. அந்தச் சமயத்தில் உங்களோடு சேர்ந்துகொள்ளக்கூடிய மற்றவர்களோடு ஒருவேளை பயனியர்களோ அல்லது பிரஸ்தாபிகளோ அவர்களிடம் கலந்துபேசுங்கள்.—நீதி. 20:18.
5 உங்களுடைய பெரும்பாலான நேரத்தை ஞானமாக பயன்படுத்துவதற்காக வேண்டி நடைமுறையான அட்டவணையை தயார் செய்யுங்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பெருமளவான உங்கள் நேரத்தை செலவிடுவதற்கு திட்டமிடுங்கள். தெரு மற்றும் கடைகடையாக செல்லும் ஊழியம் அதோடு மறுசந்திப்புகளும் வேதப் படிப்புகளும் திட்டமிடப்படலாம். கூடுமானால் மாலை வெளி ஊழியத்தைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். வாராந்தர மற்றும் வாரக்கடைசி நாட்களின்போது வெளி ஊழிய நடவடிக்கைக்கான சபை ஏற்பாடுகளுடன் ஒத்துழையுங்கள். உங்களுடைய ஆதரவை கொடுப்பதும் மற்றும் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து வேலை செய்வதும் பரஸ்பர உற்சாகமூட்டுதலாக இருக்கும். இந்த விஷயத்தை யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபத்தில் வையுங்கள். (கொலோ. 4:2) துணைப் பயனியர் சேவையில் ஈடுபட நீங்கள் திட்டமிடுகையில் அவருடைய வழிநடத்துதலுக்காக கேளுங்கள்.
6 அநேகர் முழுநேர சேவையை முதலில் துணைப்பயனியராக ருசித்துப் பார்த்திருக்கின்றனர். இது அவர்களை ஒழுங்கான பயனியராகும்படி ஊக்குவித்திருக்கிறது. இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையினுடைய முடிவின் சம்பந்தமாகவும் கிறிஸ்து இயேசுவின் மூலமாக வந்துகொண்டிருக்கும் நீதியான ராஜ்யத்தின் சம்பந்தமாகவும் யெகோவா கொடுத்திருக்கும் மகத்தான வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தினிடமாக ஒவ்வொரு நாளும் நம்மை அருகாமையில் கொண்டுவருகிறது. ஏதோ ஒரு வகையான முழுநேர சேவையை அனுபவித்து மகிழக்கூடியவர்களுக்கு அது என்னே ஆசீர்வாதமாக இருக்கக்கூடும்! அதற்காக முன்னரே திட்டமிடுங்கள். உங்கள் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பாராக.