உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/89 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1989
  • இதே தகவல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1997
  • கிறிஸ்தவ சவ அடக்கம் கண்ணியமாய், எளிமையாய், கடவுளுக்குப் பிரியமாய் . . .
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • சவ அடக்க பழக்கவழக்கங்களைப் பற்றிய கிறிஸ்தவ கருத்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • சவ அடக்க நிகழ்ச்சியைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய கருத்து என்ன?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1989
km 12/89 பக். 7

கேள்விப் பெட்டி

● பிரபலமான கொலைக் குற்றவாளியாகிய இவ்வுலகத்து மனிதன் ஒருவருக்கு சவ அடக்க ஆராதனையை ஒரு சகோதரன் நடத்துவது பொருத்தமானதா?

மரித்தோருக்கு, உதாரணமாக, சாட்சிகளோடு கொஞ்சம் கூட்டுறவு கொண்ட அல்லது கூட்டுறவே கொள்ளாத யெகோவாவின் சாட்சி ஒருவருடைய அவிசுவாசியான உறவினர் ஒருவருக்கு சவ அடக்க ஆராதனை நடத்துவதன் சம்பந்தமாக அடிக்கடி கேள்விகள் எழும்பியிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு நபருக்கு சவ அடக்க ஆராதனை நடத்துவதன் பேரில் ஒரு சமநிலையான அணுகுமுறை ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 1, 1977, பக்கம் 346-7-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தகா வழிக்கு பேர்போனவரான குற்றவாளி ஒருவருக்கு சவ அடக்க ஆராதனை நடத்தும்படி கேட்கப்பட்டால் நாம் அதை மறுத்துவிடவேண்டும். ஏனெனில் இது யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் எதிர் மறையான பிரதிபலிப்பைக் கொண்டுவரும்.—நீதி. 18:3.

ஒப்புக்கொடுத்தலை செய்திராத ஒருவர் கடந்த காலத்தில் தவறிழைத்தலில் ஈடுபட்டவராக இருந்தால் எப்படி? தொடர்ந்து தவறிழைக்கும் வாழ்க்கையை வாழ்ந்த ஒருவருக்கும் மற்றும் கடந்த காலத்தில் அசுத்தமான வாழ்க்கை நடத்திவிட்டு, ஆவிக்குரிய விதத்தில் மறுரூபமடைந்து புதிய மனுஷத் தன்மையை தரித்துக்கொள்வதற்கு பிரயாசப்பட்டுக் கொண்டிருப்பவருக்கும் இடையே வித்தியாசமுண்டு. (ரோமர் 12:2; எபே. 4:17, 20-24) அவன் ஒருவேளை இன்னும் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றிராத கிறிஸ்தவனாக நேர்மையான நடத்தையுள்ளவனாக தன்னை சுத்திகரித்துக்கொண்டவனாக இருக்கக்கூடும். (1 கொரி. 6:9-11; வெளி. 7:9, 10) ஆனால் தன் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்ளுவதற்கு படிகளை எடுப்பவனாக இருக்கக்கூடும். அவனுக்கு சவ அடக்க ஆராதனை நடத்தும்படி கேட்கப்பட்டால், மேற்சொன்ன இவற்றை கருத்தில் எடுத்துக்கொள்ளலாம். இது சபையின் சமாதானத்தையோ அமைதியையோ குலைக்காது என்றும் கடவுளுடைய ஜனங்கள் பேரில் அது நிந்தையை கொண்டுவராது என்றும் மூப்பர்கள் உணருவர்களேயானால் தன் மனசாட்சி அதைச் செய்யும்படி அனுமதிக்குமேயானால் ஒரு மூப்பர் அவ்வாறு செய்வதில் எவ்வித தடையுமில்லை.—1 கொரி. 10:23, 24, 29, 32, 33.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்