அறிவிப்புகள்
● பிரசுர அளிப்புகள்: டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் அத்துடன் பத்திரிகையளவு புரோஷூர் ஒன்றும். பைபிள் எண் 12 (ஒத்துவாக்கிய பைபிள்) பயன்படுத்தப்படுகையில் புரோஷூருடன் சேர்த்து நன்கொடை ரூ43. 1971 அல்லது 1981 பதிப்பு பைபிள் அளிக்கையில், புரோஷூருடன் சேர்த்து அதன் நன்கொடை ரூ38. ஜனவரி 1990: மெய்ச் சமதாதானம் பாதுகாப்பு—நீங்கள் அதை எப்படிக் கண்டடையலாம்? நன்கொடை ரூ10. (மெய்ச் சமாதானம் புத்தகம் இல்லாத இடங்களில் 192 பக்க இரண்டு பழைய விசேஷ அளிப்பு புத்தகங்களை ரூ10-க்கு அளிக்கலாம்.) பிப்ரவரி, மார்ச்: ஆங்கிலத்தில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்கள் ரூ10. இந்திய மொழிகளில் ஒன்று ரூ5.
● ஏப்ரல்: புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் என்ற ஆங்கில புத்தகம் நன்கொடை ரூ10. (இந்தப் பிரசுரம் இல்லாத இடங்களில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களை ரூ10-க்கு அளிக்கவும்.) இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பாக பழைய 192 பக்க புத்தகம் ஒன்றுக்கு ரூ5.
● வரக்கூடிய மாதங்களில் கூடுதலாக தேவைப்படும் பத்திரிகைகளுக்கான ஆர்டர்களை சபைகள் அனுப்ப வேண்டும். ஏப்ரல், மே, போன்ற இந்தக் காலப்பகுதியில் அநேகர் துணைப்பயனியர் சேவையில் ஈடுபடுவதால் இந்த விசேஷ மாதங்களில் போதுமான பத்திரிகைகள் கையிருப்பில் இருப்பதை சபைகள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
● எல்லாச் சபைகளும் தங்களுடைய வருடாந்தர தேவைக்குரிய பாரம்களைப் சீக்கிரத்தில் பெற்றுக்கொள்வார்கள். இதற்குரிய கட்டணம் டிசம்பர் ஸ்டேட்மெண்டில் காட்டப்படும். சம்பந்தப்பட்ட சகோதரர்களிடம் அந்தப் பாரங்களை ஒப்படைக்க நிச்சயமாயிருக்க உதவியாக ஒரு பட்டியல் ஒன்று எல்லாச் சபை காரியதரிசிகளுக்கும் அனுப்பப்படும். ஞாபகார்த்த அழைப்பிதழும் இத்துடன் அனுப்பப்படுகிறது.
● டார்ஜீலிங்கில் டிசம்பர் 29-31-ல் நடைபெற முன்பு திட்டமிடப்பட்டிருந்த மாவட்ட மாநாடு, இப்போது அதே தேதிகளில் சிலிகுரி என்னும் இடத்தில் நடைபெறும்.
● காலிகட் மாவட்ட மாநாடு ஜனவரி 5-7, 1990-ல், டாகூர் சென்டினரி தியேட்டரில் நடைபெறும்.
● புதிய வருடாந்தர வசனத்தை ஜனவரி 1, 1990-க்குள் சபைகள் எழுதி மாட்டிவிடும்படி சிபார்சு செய்யப்படுகிறது: “நாம் தைரியங்கொண்டு ‘யெகோவா எனக்கு சகாயர்’ என்று சொல்வோமாக.”—எபிரேயர் 13:6.
● 1989 மே மாத நம் ராஜ்ய ஊழியத்தில் எழுத்து விமர்சனத்துக்கான புதிய ஏற்பாடுகளைக் குறித்தும் மேலும் இந்த எழுத்து விமர்சன கேள்வி தாள்கள் எப்படி ஜனவரி, மே மற்றும் செப்டம்பர் மாதங்களின் நம் ராஜ்ய ஊழியத்தின் ஒரு பாகமாக இருக்கும் என்பதையும் விவரித்தது. ஆகிலும், தேவராஜ்ய ஊழியப்பள்ளி கண்காணிகளுக்கு விடைத்தாள்கள் முன்கூட்டியே அனுப்பப்படுகின்றன. இதற்குக் காரணம், அவர்கள் பின்னால் கேள்வித் தாளில் விமர்சிக்கப்பட இருக்கும் முக்கிய குறிப்புகளை முன்கூட்டியே பள்ளியில் எடுத்துரைக்க பயன்படுத்துவதற்காகவே.
● இப்பொழுது கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
வாழ்க்கைக்கு இன்னும் அதிகமிருக்கிறது! —குஜராத்தி, ஹிந்தி
பாதுகாப்பான ஓர் எதிர்காலம் —குஜராத்தி
யெகோவாவின் சாட்சிகளும் இரத்தம் பற்றிய கேள்விகளும் —ஆங்கிலம்
● கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:
நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் —ஆங்கிலம் (சிறிய அளவு)
பூமியில் வாழ்க்கை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள் —ஆங்கிலம், மராத்தி
உங்களை மகிழ்விக்க நற்செய்தி —மராத்தி, மலையாளம்
“ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி”—பெங்காலி
அக்கறையுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறாரா? —மலையாளம்
பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம் —ஹிந்தி