சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
அக்டோபர் 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 154(30)
7 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்தில் பங்குகொள்ள உற்சாகப்படுத்துங்கள். நேரம் அனுமதிக்கும் வரையில் புதிய பத்திரிகையில் பொருத்தமான பேச்சுக் குறிப்புகளை சிபாரிசு செய்யுங்கள்.
18 நிமி: “நம்முடைய மகத்தான சிருஷ்டிகரை மதித்துணருவதற்கு மற்றவர்களுக்கு உதவுங்கள்.” கட்டுரையின் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 5-ஐ கலந்தாலோசித்த பின் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை பிரஸ்தாபி நடித்துக் காட்டும்படிச் செய்யுங்கள். படைப்பு புத்தகத்தை அளிக்கையில் பக்கம் 130 மற்றும் 251-ல் உள்ள படத்தையும் அதன் விளக்கக் குறிப்பையும் காட்டுங்கள் இந்த மாத படைப்பு புத்தகத்தை அளிக்கையில் முழுபங்கைக் கொண்டிருங்கள்.
20. நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்” வியாபார பிராந்தியங்களில் தைரியமாக சாட்சிகொடுப்பதன் மூலம்.” ஊழிய கண்காணி இந்தக் கட்டுரையை கேள்வி-பதில் மூலமாக கலந்தாலோசிக்கிறார். பிராந்தியத்திலிருக்கும் வியாபார தொழிலிலுள்ள ஆட்களைச் சந்திப்பதில் மிகுதியாக பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள். பாராக்கள் 6 மற்றும் 7-ஐ சிந்தித்துப் பிறகு வியாபார பிராந்தியங்களில் பத்திரிகை மற்றும் படைப்பு புத்தக அளிப்பை நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 92(51), முடிவு ஜெபம்.
அக்டோபர் 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 211(105)
15 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை. சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் நன்கொடைகளைப் பற்றி அறிவிக்கவும். உள்ளூர் சபை மற்றும் உலகளாவிய பிரசங்க வேலை ஆகியவற்றின் பண சம்பந்தமான தேவைகளைக் குறித்து சகோதரர்கள் விழிப்புணர்வுள்ளவர்களாக இருப்பதைக் குறித்து பாராட்டுதல் தெரிவியுங்கள். நீங்கள் எவ்வாறு நடக்கிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாயிருங்கள்.” கட்டுரையைச் சிந்தியுங்கள். வெளி ஊழிய ஏற்பாடுகளை அறிவிக்கவும்.
18 நிமி: “சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. இரண்டு பயனியர்களைப் பேட்டி காணவும். சபை பிராந்தியத்தில் எந்தச் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருட்களை அவர்கள் பயனுள்ள விதத்தில் உபயோகித்திருக்கிறார்கள் என்பதைக் கேளுங்கள். கட்டுரையின் 5-ம் பாரவில் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறபடி படைப்பு புத்தக அளிப்பை நடித்துக் காட்டுங்கள்.
12 நிமி: கேள்விப் பெட்டி நடத்தும் கண்காணி கேள்வி-பதில் மூலமாக கலந்தாராய்வார். சங்கத்திடமிருந்து வரும் தகவலைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்துரைப்பதன் காரணத்தை உயர்த்திக் காட்டுவார்.
பாட்டு 128(10), முடிவு ஜெபம்.
அக்டோபர் 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 133(68)
12 நிமி: சபை அறிவிப்புகள். சிபார்சு செய்யப்பட்டிருக்கும் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு சபை பிராந்தியத்தில் பயன்படுத்தப்படக்கூடிய பொருத்தமான முன்னுரைகளை நியாயங்கள் புத்தகத்திலிருந்து கலந்தாலோசியுங்கள். இந்தச் சனிக்கிழமையன்று எல்லாரும் பத்திரிகை ஊழியத்தில் பங்குகொள்ள உற்சாகப்படுத்துங்கள். நேரம் அனுமதிக்கும் வரையில் தேவராஜ்ய செய்திகளிலிருந்து குறிப்புகளை உயர்த்திக் காட்டுங்கள்.
18 நிமி: நம்முடைய சபையின் வளர்ச்சி காரியதரிசி கடந்த ஊழிய ஆண்டு நடவடிக்கைகளைக் கலந்தாலோசிக்கிறார். சபையின் அனாலிஸிஸ் ரிப்போர்ட்டில் (Analysis Report, s-10) உள்ள அறிக்கையின்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்குரிய எண்ணிக்கைகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார். எங்கே முன்னேற்றம் செய்யப்பட்டிருக்கிறது எதற்கு கவனம் தேவைப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டவும் வட்டார கண்காணியால் செய்யப்பட்ட ஆலோசனைகளை விமர்சிக்கவும்.
15 நிமி: வெளி ஊழியத்திற்காக நன்கு தயார் செய்யுங்கள். வெளிஊழியத்தில் திறம்பட்டவராக இருக்கக்கூடிய மூப்பரின் பேச்சு. எபேசியர் 6:18 19-ஐ கலந்தாலோசிக்கவும். பேசுவதற்கான திறமை தனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காக விண்ணப்பம்பண்ணுங்கள் என்று பவுல் சகோதரர்களிடம் கேட்டுக்கொண்டான் என்பதை கவனியுங்கள். அப்படியே நாமும் ஒருவருக்காக ஒருவர் ஜெபம்செய்யவேண்டும். தயாரிப்புக்காக தனிப்பட்டவர்களாகவும் குடும்ப அங்கத்தினர்களாகவும் நேரத்தைத் திட்டமிட வேண்டிய அவசியத்தை கலந்து பேசுங்கள். (1 கொரிந்தியர் 14:40) ஒரு சிலர் புதியவர்களோடு வீட்டிலேயே பேசி பழகிக் கொள்ளும் ஏற்பாடுகளை கொண்டிருக்கின்றனர். பின்பு இந்தப் புதியவர்களோடு ஊழியம் செய்யும்போது அங்கே எதிர்பார்க்கக்கூடிய பல்வேறு சூழ்நிலைமைகளை குறித்து கலந்து பேசுகின்றனர். (sg. பக். 39, பா 3; qm பாடம் 44, 45) சபை பிராந்தியத்திற்கு பொருத்தக்கூடிய முன்னுரைகளையும் நாம் அடிக்கடி கேட்கக்கூடிய உரையாடலை நிறுத்தும் கூற்றுகள் கையாளக்கூடிய முறைகளைப் பற்றியும் கலந்தாலோசிக்கும்போது நியாயங்கள் புத்தகத்தைப் பயன்படுத்துங்கள். ஊழியத்தின் ஏதாவதொரு அம்சத்தில் உங்களுக்குப் பிரச்னை இருக்குமானால் அனுபவம்வாய்ந்த பிரஸ்தாபிகள் அல்லது பயனியர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்ய ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். எந்தப் பிராந்தியத்தில் உங்களுக்கு உதவி தேவைப்படுகிறதோ அதைக் குறித்து திட்டவட்டமாக விசாரியுங்கள். வெளிஊழியத்தில் யெகோவாவை சேவிக்க ஆயத்தம் செய்வது மகிழ்ச்சியான ஒரு காரியம். நாமனைவருமே அதிக வேலையாக இருக்கிறோம். ஆகவே நேரத்தை ஒதுக்குவதைக் கடினமானதாக காணக்கூடும். ஆனால் கருத்தூன்றிய சிந்தனையுடன் செலவழிக்கப்படும். ஒருசில மணிநேரங்கள் அதிகப்படியான முன்னேற்றத்தில் விளைவடையக்கூடும். தங்களுடைய ஊழியத்துக்காக நன்றாக தயாரிக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 156(10), முடிவு ஜெபம்.
அக்டோபர் 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 20(46)
10 நிமி: சபை அறிவிப்புகள், மற்றும் இன்றைய தினவாக்கியத்தை ஆராய்தல். வார கடைசி நாட்களுக்குரிய வெளி ஊழிய ஏற்பாடுகளை சொல்லுங்கள். நவம்பர் மாத பிரசுர அளிப்பையும் புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளையும் சுருக்கமாக குறிப்பிடுங்கள்.
20 நிமி: “பத்திரிகை விநியோகிப்பை அதிகரிப்பதன் மூலம் மகிழ்ச்சியை அடைதல்.” கேள்வி-பதில் கடந்த ஆறுமாதங்களில் சபை பெற்றுக்கொண்ட பத்திரிகைகளில் எண்ணிக்கையோடு சபையின் பத்திரிகை விநியோகிப்பின் சராசரியை ஒப்பிடவும். பாரா 6-ஐ கலந்தாலோசிக்கையில் இரண்டு பயனியர்கள் ஏப்ரல் 1984 நம் ராஜ்ய ஊழியம் சேர்க்கையிலிருந்து ஒரு சில குறிப்புகளைக் கலந்து பேசும்படிச் செய்யுங்கள். ஒவ்வொரு பயனியரும் தன் முறையாக 30 முதல் 60 வினாடி பத்திரிகை அளிப்பைச் செய்துகாட்ட வேண்டும். நேரம் அனுமதிக்குமானால் முக்கியமாக பத்திரிகை விநியோகிப்பில் சிறந்து விளங்கக்கூடிய ஓரிரண்டு பிரஸ்தாபிகளை பேட்டி காணலாம். அவசியமானால் சபை பிராந்தியத்துக்குப் பொருத்திக் காட்டுங்கள்.
15 நிமி: சபையின் தேவைகள் அல்லது ஜூலை 1, 1989 “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியிலுள்ள முக்கிய குறிப்புகளைக் கலந்தாலோசிக்கிறார். பெரிய ஊழிய சிலாக்கியங்களை அடைய முயற்சி செய்யும்படி முன்மாதிரியுள்ள இளைஞரை உற்சாகப்படுத்துகிறார். (இந்திய மொழிகளில்: பிப்ரவரி 1987 காவற்கோபுரம். “உதவி ஊழியர்களே நல்ல நிலையைக் காத்துக் கொள்ளுங்கள்”)
பாட்டு 53(27), முடிவு ஜெபம்.