சந்தாதாரர்கள் சந்தாவை ஒழுங்காக பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்
1 பத்திரிகைகள் உலக முழுவதிலும் விநியோகிக்கப்படுவதை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1984-ல் நாம் 3,92,737 பத்திரிகைகளை விநியோகித்திருக்கிறோம். 1988-ம் ஆண்டின்போது 6,89,592 பத்திரிகைகளை அளித்திருக்கிறோம். இது 75%-க்கும் மேலான அதிகரிப்பு. 1988-ல் 12,245 சந்தாக்களைப் பெற்றிருக்கிறோம். 1984-ல் 5,906 சந்தாக்களுடன் ஒப்பிடுகையில் 5 ஆண்டுகளில் 107% அதிகரிப்பு. இந்த வளர்ச்சி கூடுதலான அதிகரிப்புக்குரிய வாய்ப்பையும் மற்றும் சந்தா எடுப்பவர்கள் சந்தாவை ஒழுங்காக பெறுவதற்காக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியத்தையும் காட்டுகிறது.
2 ஒரு நபர் பத்திரிகைக்கு சந்தா எடுக்கையில் அவர் தனது முதல் பத்திரிகையை பெறும்வரையில் தன்னுடைய சந்தா ஆர்டரை சங்கம் உண்மையில் பெற்றுக்கொண்டதா என்பது அவருக்குத் தெரியாது. எனவே பிரஸ்தாபிகள் தாங்கள் பெறும் அந்தச் சந்தாவை உடனடியாக கூடுமானால் முதல் கூட்டத்திலேயே சபையிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சந்தாக்கள் வாரந்தோறும் சங்கத்திற்கு அனுப்பப்படுவதை சபைகள் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3 அப்படி செய்யப்படுமானால், அப்பொழுது சந்தாதாரர் தனது முதல் பிரதியை சுமார் 6 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே 8 வார காலங்களுக்கு அவரை சந்தித்து அவருக்குப் பத்திரிகை வர ஆரம்பித்து விட்டதா என்பதை கண்டறிவது பயனுள்ளதாக இருக்கும். அதற்குள்ளாக அவருக்குப் பத்திரிகை வரவில்லையானால் தயவுசெய்து விவரங்களைக் கொடுத்து சங்கத்துக்கு எழுதுங்கள்.
4 முழு விலாசமும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் எழுதப்படவேண்டியது அவசியம். எளிதில் படிக்கக்கூடியதாகவும் திருத்தமானதாகவும் எல்லா அம்சங்களிலும் முழுமை பெற்றதாகவும் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வது காரியதரிசியின் உத்தரவாதம். சந்தா சீட்டு சரியாக எழுதப்படவில்லையெனில் அதை சங்கத்துக்கு அனுப்பும் முன்பு தேவையான திருத்தங்களை அவர் செய்வது நல்லது.
5 சந்தாதாரர்களின் புகார்களைக் குறித்து சங்கத்துக்கு எழுதுகையில் பின்வரும் தகவல்களைக் கொடுக்க நிச்சயமாயிருங்கள்: (எ) சந்தாதாரரின் பெயரும் முழு விலாசமும், அஞ்சல் நிலையமும் பின்கோட் எண்ணும் கொடுக்கப்படவேண்டும். (பி) மொழி. (சி) பிரஸ்தாபி சந்தா பெற்ற தேதி மற்றும் அது சங்கத்துக்கு அனுப்பப்பட்ட தேதி. (டி) சபையின் பெயரும் எண்ணும். அந்தப் புகார் திட்டவட்டமாக என்ன என்பதை கொடுப்பதும்கூட உதவியாக இருக்கும். உதாரணமாக “சந்தாதாரர் இன்னும் ஓர் இதழையும் கூட பெறவில்லை,” “இரண்டு இதழ்களைப் பெற்றபின்பு சந்தா நின்றுவிட்டது,” “ஆங்கிலத்துக்காக சந்தாவை பெற்றார், ஆனால் அவருக்கு மலையாளப் பத்திரிகை வருகிறது,” போன்ற தகவல்கள்.
6 நம்பிக்கையான மனநிலையுடன் நாம் பத்திரிகைக்குச் சந்தாவை அளித்து தாங்கள் பணம் கட்டிய அந்தச் சந்தாவை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள அவர்களைச் சென்று பார்ப்பதன் மூலம் யெகோவாவின் அறிவு தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கும் என்பதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம்.