சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஜனவரி 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 8(65)
8 நிமி: சபை அறிவிப்புகள், “பத்திரிகை விலை ஏற்றம்” மற்றும் தேவராஜ்ய செய்திகள் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்திற்காக சகோதரர்களை ஞாபகப்படுத்துங்கள்.
20 நிமி: “வழி இதுவே” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. கடவுளுடைய சித்தத்தை செய்தல் புரோஷரை பயன்படுத்தி அமைப்பினிடமாக ஆர்வத்தை தூண்டுவது எப்படி என்பதைக் காட்டக்கூடிய ஓரிரண்டு சுருக்கமான நடிப்புகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
17 நிமி: “உங்களுடைய கொடுத்தல் ஒரு தியாகமா?” அக்டோபர் 1, 1998 (தமிழ்) காவற்கோபுரம் கட்டுரையின்பேரில் பேச்சு. பாட்டு 42(71), முடிவு ஜெபம்
ஜனவரி 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 65(36)
12 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கையும் அத்துடன் சபை கொடுத்திருக்கும் காணிக்கைகளுக்கு சங்கத்தினிடமிருந்து ஏற்பு கடிதம் வந்திருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
15 நிமி: “கடை-கடையாகவும் வீதிகளிலும் பத்திரிகைகளுடன் சாட்சி பகருதல்” உற்சாகமான பேச்சு மூப்பரால் கொடுக்கப்பட வேண்டும். நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகம் பக்கங்கள் 87-88; ஆகஸ்ட் 1984 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 8 ஆகியவற்றிலுள்ள தகவல்களைப் பயன்படுத்துங்கள். கடை-கடையாக மற்றும் வீதிகளில் சாட்சி பகரும் இரண்டு நடிப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
18 நிமி: “பயன் தரக்கூடிய அந்த தேவ ராஜ்ய ஊழியப்பள்ளி கண்காணியின் பேச்சு. நன்மைகளை அழுத்திக் காண்பிக்க வேண்டும். இந்த ஆண்டின் சில சரிமாற்றங்களைச் சுட்டிக் காட்டவேண்டும். பள்ளி சேர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிடலாம்.
பாட்டு 118(99), முடிவு ஜெபம்.
ஜனவரி 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 162(89)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். நான்காவது சனிக்கிழமையன்று பத்திரிகை வேலையில் பங்கு கொள்ள உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “உன் உபதேசத்தைக் குறித்து எச்சரிக்கையாயிரு” ஜூலை 15, 1988-ம் ஆண்டு காவற்கோபுரம் கட்டுரையிலிருந்து நடைமுறையான கறிப்புகளைப் பள்ளி கண்காணி கலந்தாலோசிக்கிறார். கட்டுரையின் பக்கங்கள் 16, 17-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி முன்னுரைகளில் முன்னேற்றம் செய்வதற்கு நியாயங்கள் புத்தகத்தை பயன்படுத்துவதை வலியுருத்துங்கள். (இந்திய மொழிகளில் காவற்கோபுரம் 88 மார்ச்: “திறமையோடும் வைராக்கியத்தோடும் போதியுங்கள்.”)
20 நிமி: “கற்றுக்கொண்ட காரியங்களை நீங்கள் கடைபிடிக்கிறீர்களா?” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு “தெய்வீக நீதி” மாவட்ட மாநாட்டில் கற்றுக் கொண்டவைகளைத் தனிப்பட்ட விதத்தில் பொருத்துவதற்குச் சகோதரர்களுக்கு உதவி செய்யுங்கள்.
பாட்டு 224 (106), முடிவு ஜெபம்.
ஜனவரி 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 26(9)
12 நிமி: சபை அறிவிப்புகள், பிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயிறு அன்று அனைவரும் ஊழியத்தில் பங்கு கொள்ள உற்சாகப்படுத்துங்கள். நியாயங்கள் புத்தகத்திலிருந்து முன்னுரைகளைப் பயன்படுத்தி பிப்ரவரி மாதத்துக்கான அளிப்பை நடித்துக் காட்டுங்கள். அளிப்புடன் பயன்படுத்தக்கூடிய மற்ற முன்னுரைகளை சிபாரிசு செய்யுங்கள்.
18 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—அடிக்கடி ஊழியம் செய்யப்படும் பிராந்தியங்களில்” கேள்வி பதில் உள்ளூர் தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். பிராந்தியத்தை முழுமையாக செய்ய வேண்டிய அவசியத்தையும் பிரசுரம் அளிக்கப்பட்டிருக்கும் அனைவரையும் திரும்பபோய் சந்திக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துங்கள்
15 நிமி: சபையின் தேவைகள் அல்லது “கிறிஸ்தவ நியமங்களை நினைவு கூருங்கள்.” காவற்கோபுரம் அக்டோபர் 1. 1998 பக்கங்கள் 26-29 (இந்திய மொழிகளில் காவற்கோபுரம் 87 பிப்ரவரி, “யெகோவாவை நாம் முழுமையாக பிரியப்படுத்துவது எப்படி?”)
பாட்டு 206(111), முடிவு ஜெபம்.