மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்
1 மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு சிறந்த ஒன்றை கொண்டிருப்பது ஊக்கம் நிறைந்த செயலுக்கு வழிநடத்துகிறது. ஆகையால் ஜனவரி மாதத்தின்போது அழகிய படங்களுடன்கூடிய திருத்தியமைக்கப்பட்ட மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—நீங்கள் அதை எவ்வாறு கண்டடையலாம்? என்ற புத்தகத்தை உற்சாகத்துடன் அளிப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. உலக சூழ்நிலைமைகள் மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும் என்ற பேச்சுப்பொருளை காலத்துக்கேற்ற ஒன்றாக ஆக்குகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளினூடே ஏற்பட்டிருக்கும் மனித தோல்விகள் மனிதனுடைய இன்றியமையாத தேவைகளுக்கு மனிதனிடம் பரிகாரம் இல்லை என்ற உண்மையை அநேகர் உணரும்படி செய்கிறது. கடவுளுடைய ராஜ்யமே பரிகாரம் என்று நமக்குத் தெரியும். கடவுளுடைய வார்த்தையின் மூலமாக நாம் இதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவதும் மேலும் அளிப்பதற்கு இந்தச் சிறந்த பிரசுரத்தைக் கொண்டிருப்பதும் ஜனவரி மாதத்தின்போது நம்முடைய சேவையில் வைராக்கியத்தோடிருக்க நமக்கு உதவும்.
2 ஐக்கிய நாட்டு சங்கம் “சர்வதேச சமாதான ஆண்டை” அறிக்கை செய்த சமயத்தில் ஜனங்களிடம் அளிப்பதற்கு இந்தப் புத்தகத்தை நாம் கொண்டிருந்ததானது எவ்வளவு பொருத்தமானதாக இருந்தது! சமாதானமும் பாதுகாப்பும் என்ற இந்தப் பொருளானது அநேகருடைய மனதில் இன்னும் இருந்துகொண்டிருக்கிறது. ஐக்கிய நாட்டு சங்கம் அதைக் கொண்டுவரும்படி சிலர் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால் கிறிஸ்துவின் கரங்களிலுள்ள கடவுளுடைய ராஜ்யமாகிய அந்த கருவியையே நிலையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கு யெகோவா பயன்படுத்துவார் என்பதை யெகோவாவின் ஊழியர்கள் அறிந்திருக்கின்றனர்.
3 1985-ம் ஆண்டு “உத்தமத்தைக் காத்துகொள்பவர்கள்” மாவட்ட மாநாட்டில் ஓர் எச்சரிக்கை குறிப்பு சொல்லப்பட்டதை நாம் நினைவு கூருகிறோம். அதாவது 1986-ம் ஆண்டைக் குறித்த ஐ.நா.-வின் அறிக்கை 1 தெசலோனிக்கேயர் 5:3-ன் நிறைவேற்றமாக இருக்கிறதென்று சொல்லமுடியாது. அது சொல்வதாவது: “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது அழிவு சடுதியாய் அவர்கள் மேல் வரும்.” சமாதானமும் பாதுகாப்பும் என்ற திட்டத்தில் தேசங்கள் எவ்வளவு காலம் செல்லும்படி யெகோவா அனுமதிப்பார் என்று நமக்குத் தெரியாது; என்றபோதிலும் “மிகுந்த உபத்திரவத்தை” நெருங்கி வருகையில் கூடுதலான மற்ற நடவடிக்கைகளுக்கு வழிநடத்தக்கூடிய முக்கியமான படிகளில் ஒன்றாக இது இருக்கக்கூடும்.—மத். 24:21.
புத்தகத்தை அளிக்க ஆயத்தம் செய்யுங்கள்
4 ஜனவரி மாத பிரசுர அளிப்பின்போது மெய்ச் சமாதானம் புத்தகத்தின் பகுதிகள் சிலவற்றை நாம் வாசித்து அதன் உள்ளடக்கத்தை மேலோட்டமாக தெரிந்துகொள்ள வேண்டும். முதல் இரண்டு அதிகாரங்களின் விஷயங்களை நாம் வாசிப்போமானால் ஜனவரி மாதத்தின்போது இந்தப் புத்தகத்தை அளிப்பதற்கு சந்தேகமின்றி அநேக தலைச்சிறந்த குறிப்புகளை நாம் காண்போம்.
5 வீட்டுக்காரருடன் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை கலந்தாலோசித்தப் பின்பு நாம் பின்வருமாறு சொல்லலாம்: “இந்த மகிழ்ச்சியான எதிர்காலம் சமீபத்திலிருக்கிறது. அப்பொழுது மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும் இருக்கும். இந்தப் பொருளின்பேரில் இந்தக் காலத்துக்கு பொருத்தமான ஒரு பிரசுரம் என்னிடம் இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் முதல் பாராவில் உள்ள இந்தக் குறிப்பை கவனியுங்கள்.” நாம் பாரா 1-ஐ வாசித்துவிட்டு பின்பு பின்வருமாறு சொல்லலாம்: “இங்கே முதல் அதிகாரத்தின் ஆரம்பத்திலேயே இந்தப் பூமிக்குரிய பரதீஸ் எப்படியிருக்கும் என்பதைப் பற்றிய ஓவியரின் கருத்துப் படம் காணப்படுகிறது. இப்படிப்பட்ட சமாதானமும் பாதுகாப்புமுள்ள ஒரு சுற்றுப்புற சூழ்நிலைமையின் கீழ் உங்கள் அன்பானவர்களுடன் வாழ நீங்கள் விரும்புமாட்டீர்களா? [பதிலுக்காக காத்திருங்கள்.] இப்படிப்பட்ட சமாதானத்தையும் பாதுகாப்பையும் நீங்கள் எப்படி கண்டடையலாம் என்பதை காண இந்தப் பிரசுரம் உங்களுக்கு உதவிசெய்யும். இதற்கு நாங்கள் நன்கொடை ரூ10-ஐ பெற்றுக்கொள்கிறோம்.”
6 மற்றொரு அளிப்பு முறையானது நீதிமொழிகள் 1:8-ஐ வாசித்தப் பின்பு நாம் பக்கம் 19-க்கு திருப்பி பின்வருமாறு சொல்லலாம்: “கடவுளால் வாக்களிக்கப்பட்டிருக்கும் அந்தச் சந்தோஷமான பரதீஸ் நமக்கு எவ்வளவாய் தேவை என்ற குறிப்பை விளக்கக்கூடிய அக்கறையைக் தூண்டும் பாரா ஒன்று இருக்கிறது.” பாரா 24-ஐ வாசித்தப் பின்பு நாம் பின்வருமாறு தொடர்ந்து சொல்லலாம்: “அடுத்தப் பக்கம் பாரா 28-ல் உள்ள கருத்தையும் கவனியுங்கள். [பாராவை வாசியுங்கள்.] உலக பிரச்னைகளுக்குக் கடவுள் கொடுக்கும் பரிகாரத்தைக் குறித்தும் எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது என்பதைக் குறித்தும் நீங்கள் கற்றுக்கொள்வதற்கு உதவி செய்வதற்காகவே இந்தப் புத்தகம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. நன்கொடை ரூ10-க்கு இதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.”
7 முன்பாக ஆர்வம் காண்பித்த ஆட்களையும் திரும்பப்போய் சந்தித்து அவர்களிடம் இந்தப் புத்தகத்தை அளிக்க நிச்சயமாயிருங்கள். கடவுள் வாக்களித்திருக்கும் பரதீஸைப் பற்றி நீங்கள் முந்தின சந்திப்பில் பேசின காரியத்தை வீட்டுக்காரருக்கு ஞாபகப்படுத்துவதை நீங்கள் பொருத்தமானதாக காணக்கூடும். பின்பு மெய்ச் சமாதானம் பாதுகாப்பைக் கண்டடைய நாம் என்ன செய்யவேண்டும் என்பதை குறித்துக் காட்டக்கூடிய ஒரு புத்தகம் உங்களிடம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். நாம் பக்கம் 91-க்கு திருப்பி பாரா 12-ஐ வாசித்த பின்பு பின்வருமாறு சொல்லலாம்: “தப்பிப் பிழைப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு வேறு என்ன தேவைப்படுகிறது? இந்தக் குறிப்பு முதற்கொண்டு இந்த புத்தகம் கடவுள் எதிர்பார்க்கும் தேவைகளை விவரமாக சொல்லுகிறது. இதை நாங்கள் ரூ10-க்கு கொடுக்கிறோம்.”
8 இந்தப் புத்தகம், கடந்த காலங்களில் பைபிள் படிப்பை படித்துக்கொண்டிருந்தவர்களும் யெகோவாவின் பக்கமாக நிலைநிற்கை எடுக்காமலிருந்துவிட்ட ஆட்களுக்கும்கூட ஒரு சிறந்த பிரசுரமாக இருக்கும். பக்கம் 175-ல் பாரா 1-ஐ நாம் வாசிக்கலாம். மெய்ச் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கண்டடைவதற்காக சரியான தெரிவை செய்வதற்கு அவர்கள் இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்பதை புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் அவர்களுக்கு உதவிசெய்யும்.
9 மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—நீங்கள் எவ்வாறு அதைக் கண்டடையலாம்? என்ற புத்தக அளிப்பை ஜனவரி மாதம் ஒரு விசேஷ முயற்சியாக்க இப்பொழுதே திட்டமிடுவோமாக. “சமாதானத்தைக் கொடுக்கும் தேவனிடமிருந்து” மெய்யான சமாதானத்தையும் பாதுகாப்பையும் மற்றவர்கள் கண்டடையும்படியாக நாம் உதவுவோமாக.—ரோ. 16:20.