உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்திய காவற்கோபுர இதழ்களை ஆழ்ந்த கவனத்தோடு படித்தீர்களா? அப்படியானால் கீழ்வருபவற்றை மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவருவது அதிக ஆர்வத்தை தூண்டும்:
◻ நிச்சயம் செய்து கொள்வதைப்பற்றி சிந்திப்பதற்கு முன்பு இரண்டு கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள் யாவை?
‘அவருடைய ஆவிக்குரிய நிலையையும் கடவுளுக்கான பக்தியைப் பற்றியும் எனக்கு நன்றாக தெரியுமா? வாழ்நாள் முழுவதும் அவரோடு சேர்ந்து கடவுளைச் சேவிப்பதை என்னால் கற்பனை செய்துபார்க்க முடியுமா? ஒருவர் மற்றவருடைய இயல்புகளைப் பற்றி போதுமானளவு தெரிந்திருக்கிறோமா? நித்தியகாலம் வரைக்கும் ஒத்துவாழ்வோம் என்பதைப் பற்றி நிச்சயமாக இருக்கிறேனா? ஒருவர் மற்றவருடைய கடந்தகால நடவடிக்கைகள் பற்றியும் தற்போதைய சூழ்நிலைகள் பற்றியும் அறிந்திருக்கிறோமா?’—8/15, பக்கம் 31.
◻ “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்று தம்முடைய சீஷர்களிடம் இயேசு சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார்? (மத்தேயு 5:13)
தம்முடைய சீஷர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பது, செவிகொடுப்பவர்களை பாதுகாக்கும் அல்லது உயிர்காக்கும் என்பதை இயேசு அர்த்தப்படுத்தினார். உண்மையில் இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக நடப்பவர்கள் ஒழுக்க ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் சீர்கெட்ட உலகத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.—8/15, பக்கம் 32.
◻ காதலிப்பவர்கள் பாலின ஒழுக்கக்கேட்டின் கண்ணியை எவ்வாறு தவிர்க்கலாம்?
நீங்கள் காதலில் ஈடுபடுகிறீர்கள் என்றால், உங்கள் வருங்கால துணையுடன் பொருத்தமற்ற சூழ்நிலைகளில் தனிமையில் இருப்பதைத் தவிர்ப்பது ஞானமானது. எல்லாரும் இருக்கும்போதோ அல்லது பொது இடங்களிலோ இருவரும் சேர்ந்திருந்து மகிழ்வது சாலச் சிறந்தது. அன்புமழை பொழிகையில் வரையறை வையுங்கள். ஒவ்வொருவரும் பிறருடைய உணர்ச்சிகளையும் மனசாட்சியையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.—9/1, பக்கங்கள் 17, 18.
◻ புரிந்துகொள்ளுதல் என்பது என்ன?
புரிந்துகொள்ளுதல் என்பது ஒரு விஷயத்தை ஆராய்ந்து அதன் எல்லா அம்சங்களையும் பகுத்துணர்ந்து இவற்றிற்கும் முழுவிஷயத்திற்கும் இடையேயுள்ள பொருத்தங்களை கிரகித்துக் கொள்வதாகும். (நீதிமொழிகள் 4:1)—9/15, பக்கம் 13.
◻ யெகோவா இன்று நம்மிடம் எதைக் கேட்கிறார்?
உண்மையில் தம்முடைய குமாரனுக்குச் செவிகொடுத்து அவருடைய முன்மாதிரியையும் போதனைகளையும் பின்பற்றும்படியே யெகோவா நம்மிடம் கேட்கிறார். (மத்தேயு 16:24; 1 பேதுரு 2:21)—9/15, பக்கம் 22.
◻ யார் மாத்திரமே சமாதானத்தை அனுபவிக்க முடியும்?
யெகோவாவே ‘சமாதானம் அருளும் கடவுளாக’ இருப்பதால் கடவுளில் அன்புகூருவோரும் அவருடைய நீதியுள்ள நியமங்களுக்கு ஆழ்ந்த மதிப்புடையோருமே சமாதானத்தை அனுபவிக்க முடியும். (ரோமர் 15.33)—10/1, பக்கம் 11.
◻ போத்திபாரின் மனைவி தினம் தினம் நச்சரித்தும் தப்பு செய்ய மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு யோசேப்பின் மனதில் ஒழுக்க நெறிகள் குடிகொண்டது எப்படி?
யோசேப்பு கணநேர சுகத்தை அல்ல, ஆனால் யெகோவாவோடு தனக்கிருக்கும் உறவையே பெரிதும் மதித்தார். கடவுளுடைய சட்டம் என்ற வேலி இல்லாத போதும், யோசேப்பு ஒழுக்க நெறிகளைப்பற்றி தெளிவாக அறிந்திருந்தார். (ஆதியாகமம் 39:9)—10/1, பக்கம் 29.
◻ நம் சகோதரர்களை மன்னிக்க மனமுள்ளவர்களாயிருப்பது எவ்வளவு முக்கியம்?
நாம் தொடர்ந்து கடவுளுடைய மன்னிப்பைப் பெறுவது, நாம் எந்தளவுக்கு மற்றவர்களை மன்னிக்க மனமுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதன் மீதே பெருமளவு சார்ந்திருக்கிறது. (மத்தேயு 6:12, 14; லூக்கா 11:4)—10/15, பக்கம் 17.
◻ மத்தேயு 18:15-17-ல் எப்படிப்பட்ட பாவங்களைப் பற்றி பேசுகிறது, எது அதை குறித்துக் காட்டுகிறது?
இயேசு குறிப்பிட்ட பாவம் தவறு செய்தவரை, “புறதேசத்தானைப் போலவும், வரிவசூலிப்பவனைப் போலவும்” கருதும்படி செய்ததென்றால் அது உண்மையாகவே வினைமையானதுதான். யூதர்கள் புறமதத்தினரோடு சம்பந்தம் வைத்துக்கொள்ள மாட்டார்கள். வரிவசூலிப்பவர்களை அவர்கள் தவிர்த்தனர். ஆகவே, உங்களால் எளிதில் மன்னித்து மறந்துவிடக்கூடிய தனிப்பட்ட குற்றங்களையோ மனவருத்தங்களையோ அல்ல, வினைமையான பாவங்களைப் பற்றியே மத்தேயு 18:15-17 குறிக்கிறது. (மத்தேயு 18:21, 22)—10/15, பக்கம் 19.
◻ கடவுளுடைய வார்த்தையில் உண்மையாக பிரியங்கொள்வது எதை உட்படுத்துகிறது?
கடவுளுடைய வார்த்தையில் பிரியங்கொள்வது, அது தேவைப்படுத்தும் காரியங்களுக்கு இசைவாக வாழ்வதற்கு ஒருவரை வழிநடத்துகிறது. (சங்கீதம் 119:97, 101, 105) ஒருவருடைய சிந்தையிலும் செயலிலும் தொடர்ந்து மாற்றம் செய்வதையும் இது தேவைப்படுத்துகிறது.—11/1, பக்கம் 14.
◻ ஏக சக்கரவர்த்தியும் மிகப் பெரிய கொடையாளருமாகிய யெகோவாவின் கரத்திலிருந்து அதிகத்தைப் பெற்றவர்களாய் அவருக்குக் கைமாறாக நாம் என்ன கொடுக்க முடியும்?
“ஸ்தோத்திர பலி”யே யெகோவாவுக்கு அளிக்கும் மிகச் சிறந்த பரிசு என பைபிள் காட்டுகிறது. (எபிரெயர் 13:15) ஏன்? ஏனென்றால் இந்த முடிவு காலத்தில் யெகோவாவுக்கு அதிக அக்கறைக்குரிய விஷயமான உயிரை காப்பதோடு இந்தப் பலி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. (எசேக்கியேல் 18:23)—11/1, பக்கம் 21.
◻ “ஞானவான்களின் மொழிகள் தாற்றுக்கோல் போல்வன” என எழுதியபோது சாலொமோன் எதை அர்த்தப்படுத்தினார்? (பிரசங்கி 12:11, தி.மொ.)
தேவபக்திக்குரிய ஞானமுடையோரின் வார்த்தைகள், வாசித்த அல்லது கேட்ட ஞானமான வார்த்தைகளுக்கு இசைய முன்னேற்றம் செய்வதற்கு வாசகர்களை அல்லது செவிசாய்ப்போரை தூண்டுவிக்கின்றன.—11/15, பக்கம் 21.
◻ கடவுள் அளிக்கும் விவேகம் என்பது என்ன?
இது தீமையிலிருந்து நன்மையை வேறுபடுத்தி அறிந்துகொள்வதோடு, நடப்பதற்கு சரியான வழியைத் தேர்ந்தெடுப்பதற்குரிய திறமையாகும். கடவுளுடைய வார்த்தையைப் படித்து, அதன்படி நடக்கையில் விவேகத்தை பெறுகிறோம்.—11/15, பக்கம் 25.
◻ பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனவிருப்பத்தோடு எதுவும் தேவைப்படுகிறது? (1 தீமோத்தேயு 3:1)
இதை நல்ல தீர்மானத்தோடு சமநிலைப்படுத்த வேண்டும். ஒருவர் யெகோவாவின் சேவையில் சந்தோஷத்தை இழக்கும் அளவுக்கு ஏராளமான நியமிப்புகளை ஏற்கக்கூடாது. எதையும் மனமுவந்து செய்வது போற்றத்தக்கதே. ஆனால் மனமுவந்து செயல்படும் குணத்தோடு பணிவும் “தெளிந்த புத்தியும்” தேவை. (தீத்து 2:12; வெளிப்படுத்துதல் 3:15, 16)—12/1, பக்கம் 28.
◻ பிள்ளைகளை வளர்க்கும் சவாலை எதிர்ப்படுவது எப்படி?
முன்மாதிரி வைப்பவர்களாய், நண்பர்களாய், பாசத்தோடு நெருங்கிப் பழகுபவர்களாய், ஆசிரியர்களாய் பெற்றோர் இருக்கும்படி கடவுள் புத்தி சொல்கிறார். (உபாகமம் 6:6, 7)—12/1, பக்கம் 32.