உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 8/1 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • இதே தகவல்
  • உங்கள் வியாபாரத்தினால் உங்களுக்கு எவ்வளவு செலவாகும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • பாருக் எரேமியாவின் உண்மையுள்ள காரியதரிசி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • என் சகோதரனிடம் கடன் கேட்கலாமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 8/1 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

யெகோவாவின் சாட்சிகள் நேர்மையுடனிருக்க முயற்சிசெய்கிறவர்களாகவும் ஒருவரையொருவர் நம்புகிறவர்களாகவும் இருப்பதால், அவர்களிடையே உள்ள வியாபார தொடர்புகளில் எழுத்துமூலம் ஒப்பந்தம் செய்வது முக்கியம் என்பதாக அவர்கள் நினைப்பதற்கு காரணம் என்ன?

அவர்கள் அவ்வாறு செய்வது வேதப்பூர்வமானதாயும், நடைமுறையானதாயும், அன்பானதாயும் இருக்கிறது. எந்த விதத்தில் அவ்வாறு இருக்கிறது? சரி, வியாபார ஒப்பந்தங்களின் அம்சங்களை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தம்முடைய உடன்படிக்கையின் ஜனங்களாகிய இஸ்ரவேலருடன் கடவுள் கொண்டிருந்த செயல் தொடர்புகளைப் பற்றி எழுதப்பட்ட ஒரு பதிவை பைபிள் அளிக்கிறது. உண்மை வணக்கத்தாரை உட்படுத்திய வியாபார தொடர்புகளை அது விவரிக்கிறது. நாம் ஆராயக்கூடிய ஒரு விவரப்பதிவு ஆதியாகமம் 23-ஆம் அதிகாரத்தில் அடங்கியிருக்கிறது. ஆபிரகாம், அவர் மிகவும் நேசித்த அவரது மனைவி சாராள் இறந்தபோது புதைப்பதற்காக ஒரு இடத்தை வாங்குவதற்கு விரும்பினார். எப்ரானுக்கு அருகில் வாழ்ந்த கானானியர்களுடன் அவர் தொடர்புகொள்ள ஆரம்பித்தார். அவருக்குத் தேவையான ஒரு சிறு நிலத்திற்கான விலையை எந்தச் சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் கொடுக்க முன்வந்தார் என்பதை வசனங்கள் 7-9 காண்பிக்கின்றன. பட்டணத்து வாசலில் மற்றவர்கள் காதுகேட்கும் விதத்தில், வெளிப்படையாக அவர் இதைக் கொடுக்க முன்வந்தார் என்பதாக 10-ஆம் வசனம் காண்பிக்கிறது. நிலத்தின் சொந்தக்காரர் ஆபிரகாமுக்கு நிலத்தைக் கொடுக்க மனமுள்ளவராக இருந்தார், அந்த நிலத்தை விலை கொடுத்து மட்டுமே வாங்கிக்கொள்வேன் என்பதாக ஆபிரகாம் சொன்னதாக வசனம் 13 காண்பிக்கிறது. “அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் புத்திரர் எல்லாரும் அறிய” உறுதிப்படுத்தப்பட்டு, ஆபிரகாம் அந்த நிலத்தை வாங்கினார் என்பதை 17, 18, 20-ஆம் வசனங்கள் விளக்குகின்றன.

என்றபோதிலும், இப்படிப்பட்ட வியாபார தொடர்புகளைச் செய்கிற இருவரும் உண்மை வணக்கத்தாராக இருக்கும்போது, அது வித்தியாசமாக இருக்குமா? எரேமியா 32-ஆம் அதிகாரம் பதிலை அளிக்கிறது. 6-ஆம் வசனம் முதற்கொண்டு நிலத்தை எரேமியா தன்னுடைய பெரியப்பா மகனிடமிருந்து வாங்க வேண்டியதாய் இருந்தது என்பதை நாம் காண்கிறோம். நேர்மையான ஒரு விலை ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதை 9-ஆம் வசனம் காண்பிக்கிறது. இப்பொழுது 10-12 வசனங்களை வாசியுங்கள்: “நான் [எரேமியா] பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்த பின்பு, நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து, என் பெரியதகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்[தேன்].”

ஆம், எரேமியா தன்னுடைய உடன் வணக்கத்தானிடம், சொந்தக்காரனிடமே வாங்கியபோதிலும்கூட, நியாயமாக இருந்த சட்டப்பூர்வமான காரியங்களை அவர் செய்துமுடித்தார். எழுத்துவடிவிலான இரண்டு பதிவுகள் செய்யப்பட்டன—ஒன்று எளிதாக எடுத்துப் பார்ப்பதற்கு, இரண்டாவது எளிதாக எடுத்துப்பார்ப்பதற்கான பதிவின் திருத்தமானத் தன்மையைக் குறித்து எப்பொழுதாவது எந்தச் சந்தேகம் எழும்பினாலும் அதை உறுதிப்படுத்துவதற்கான அத்தாட்சியளிக்கும் பொருட்டு முத்திரையிடப்பட்டது. 13-ஆம் வசனம் சொல்லுகிறபடி, இவையனைத்தும் “அவர்களுடைய கண்களுக்கு முன்பாக” செய்யப்பட்டன. ஆகவே, இது சாட்சிகளுடன் செய்யப்பட்ட பொதுப்படையான, சட்டப்பூர்வமான வியாபார தொடர்பாய் இருந்தது. அப்படியானால், தெளிவாகவே, உண்மை வணக்கத்தார், உறுதிப்படுத்தப்பட்டதும் எழுத்துப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டதுமான இத்தகைய ஒரு முறையில் காரியங்களைக் கையாளுவது முன்பு நடந்த வேதப்பூர்வமான சம்பவத்துக்கு ஒத்திருக்கிறது.

அது நடைமுறையானதாகவும் இருக்கிறது. சமயமும் ‘எதிர்பாரா சம்பவங்களும் நம் அனைவருக்கும் நேரிடுகிறது.’ இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (பிரசங்கி 9:11, NW) அது பக்தியுள்ளவர்களாயும் உண்மையுள்ளவர்களாயும் இருக்கும் கிறிஸ்தவர்களையும் உட்படுத்துகிறது. யாக்கோபு 4:13, 14 அதை இவ்வாறு சொல்லுகிறது: “நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே.” ஆகவே ஒரு பொருளை வாங்குதல், ஒப்புக்கொண்டதன் பேரில் ஒரு வேலையை அல்லது சேவையை செய்தல், அல்லது பிறருக்காக ஏதாவதொன்றைத் தயாரித்தல் போன்ற ஒரு திட்டத்தை நாம் ஆரம்பிக்கலாம். ஆனால் நாளை—அல்லது அடுத்த மாதம் அல்லது அடுத்த வருஷம்—என்ன நடக்கும்? நமக்கோ அந்த நபருக்கோ ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டால் அப்போது என்ன செய்வது? ஒப்பந்தத்தைக் காத்துக்கொள்வது கூடாத காரியமாக தோன்றலாம். நம்மால் அந்த வேலையை அல்லது அந்தச் சேவையை செய்ய முடியவில்லை, அல்லது ஒருவேளை அந்த நபரால் பணங்கட்ட முடியவில்லை அல்லது ஒப்பந்தத்தின்படி செய்துமுடிக்க முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். எழுத்து வடிவிலான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லையென்றால், உண்மையான பிரச்சினைகள் எழும்பக்கூடும், அவை எழுதப்பட்ட ஒரு எளிய ஒப்பந்தத்தின் மூலம் தீர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

வாழ்க்கையிலுள்ள அநேக அம்சங்களின் அதிக நிச்சயமற்ற இயல்பின் காரணமாக நம்முடைய (அல்லது அவருடைய) வியாபார விவகாரங்களுக்கு மற்றொருவர் பொறுப்பேற்க வேண்டியதாய் அல்லது கணக்குத்தீர்க்க வேண்டியதாய் இருக்கலாம் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. 14-ஆம் வசனத்தில் யாக்கோபு தொடர்ந்து சொன்னார்: “உங்கள் ஜீவன் . . . கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.” உண்மையில், நாம் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிடலாம். எவராவது ஒருவருடைய பக்கத்தில் எதிர்பாராத ஒரு சம்பவம் ஏற்பட்டால், எழுதப்பட்ட ஒரு உடன்படிக்கை, ஒரு ஒப்பந்தம், காரியங்களை சரியாக கையாளுவதற்கு உண்மையில் மற்றவர்களை அனுமதிக்கும்.

ஒரு கருத்தில், இது மூன்றாவது அம்சத்திற்கும் வழிநடத்துகிறது—எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறவையாய் இருக்கின்றன. நிச்சயமாகவே, ஒரு ஒப்பந்தத்தில் எந்தவொரு தரப்பினர் இறந்துபோனாலோ அல்லது சட்டப்படி செயலற்றவராக்கும் ஒரு விபத்து ஏற்பட்டாலோ, அவருடைய கடமைகளை அல்லது பண சம்பந்தமான எதிர்பார்ப்புகளைப் பற்றிய எழுதப்பட்ட ஒரு பதிவைக் கொடுத்திருப்பதானது ஒரு கிறிஸ்தவராக அவர் பங்கில் செய்யப்பட்ட அன்பான காரியமாக இருந்திருக்கும். நாம் தொடர்புகள் வைத்துக்கொள்ளும் சகோதரர் என்ன செய்ய கடமைப்பட்டிருக்கிறார் அல்லது அவர் என்ன பெற வேண்டும் என்பதைத் தெளிவாகவும் சரியாகவும் குறிப்பிடுகிற எழுத்து வடிவிலான ஒரு ஒப்பந்தம் செய்யப்படும்போது, அது அந்தச் சகோதரர்பேரில் அவநம்பிக்கையை வெளிக்காட்டாமல் அன்பைக் காண்பிக்கிறது. அபூரணமான ஒருவர் ஒரு சில விவரங்களை அல்லது பொறுப்புகளை மறந்துவிடுவாராகில், இந்த அன்பான நடவடிக்கை மனக்கசப்புக்குரிய எந்த உணர்ச்சிகளையும் குறைத்துவிடும். நம்மில் யார்தான் அபூரணராக, மறக்காதவராக, விவரங்களை அல்லது கருத்துக்களை தவறாக புரிந்துகொள்ளும் மனச்சாய்வு கொண்டவராக இல்லை?—மத்தேயு 16:5.

எழுத்து வடிவிலான வியாபார ஒப்பந்தங்கள் செய்வது வேறு வழிகளிலும் நம்முடைய சகோதரருக்கு, நம்முடைய குடும்பத்திற்கு, பொதுவாக சபைக்கு அன்பைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆனால் அன்பானதாக இருப்பதைக் காட்டிலும், போதுமான விவரங்களுடன் எழுதப்படும் இத்தகைய பதிவுகள் நடைமுறையானதாகவும் வேதப்பூர்வமானதாகவும் இருப்பது தெளிவாக இருக்கவேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்