புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்!
“அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை” என்பதாக பண்டைய ஞானியான சாலொமோன் ராஜா எழுதினார். (பிரசங்கி 12:12) 1995-ல் பிரிட்டனின் மக்கள் தொகையில் ஒவ்வொரு 580 பேருக்கும் சராசரியாக ஒரு புதிய புத்தகம் என்ற விகிதத்தில் அங்கு வெளியிடப்பட்டது, இது புதிய புத்தகங்களை வெளியிடுவதில் அந்த தேசத்தை உலகில் முதல் நிலைக்கு கொண்டுசென்றுள்ளது. பிரிட்டனின் 95,015 பதிப்புகளுடன் ஒப்பிடுகையில் அதிக மக்கள் தொகைக் கொண்ட சீனா 92,972 பதிப்புகளோடு இரண்டாவது இடத்தில் வந்தது. அடுத்து ஜெர்மனியும் (67,206), அதைத் தொடர்ந்து ஐக்கிய மாகாணங்களும் (49,276), அதை அடுத்து பிரான்சும் (41,234) வந்தன. “உலகிலேயே பிரிட்டன் முன்னிலையில் இருப்பதற்கு காரணம் ஆங்கில மொழியே” என்பதாக லண்டன் செய்தித்தாளான தி டெய்லி டெலிகிராஃப் குறிப்பிடுகிறது.
புத்தகங்களின் விற்பனை பல வருடங்களாக சரிந்துகொண்டே வந்திருக்கிறது என்றும் இப்பொழுது பிரிட்டனில் 80 சதவீதமான பெரியவர்கள் வருடத்துக்கு ஒன்று அல்லது அதற்கும் அதிகமான புத்தகங்களை வாங்குவதாகவும் அறிக்கைகள் காண்பிக்கின்றன. ஆனால் மக்கள் தாங்கள் வாங்கும் எல்லா புத்தகங்களையும் வாசிக்கிறார்களா?
தொடர்ந்து மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்டும் வாசிக்கப்பட்டும் வரும் ஒரு புத்தகம் பைபிளாகும், இப்பொழுது பகுதிகளாகவோ அல்லது முழுமையாகவோ 2,120-க்கும் மேற்பட்ட மொழிகளில் இது கிடைக்கிறது. இன்னும் சொந்தமாக ஒரு பிரதி உங்களிடம் இல்லாமல் இருந்தால், உங்களுக்கு அருகாமையில் இருக்கும் உவாட்ச் டவர் சொஸைட்டியின் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களிடம் ஒரு பைபிள் இருந்தால், அதை வெளியே எடுத்து இந்தப் பத்திரிகையிலுள்ள கட்டுரைகளில் காணப்படும் வேதவசனங்களை எடுத்துப் பாருங்கள். அப்படி செய்தால், பைபிளின் உயிரளிக்கும் அறிவை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.