உங்கள் அவசர உணர்வைக் காத்துக்கொள்ளுங்கள்
யெகோவாவை தொடர்ந்து முழு-ஆத்துமாவோடு சேவிப்பதற்கு எது நிச்சயமான கடவுள்-அங்கீகரிக்கும் ஒரு வழியாக உள்ளது? அது நம்முடைய இருதயங்களின் ஆழத்தில் மெய்யான அவசர உணர்வைக் கொண்டிருப்பது ஆகும். கடவுளை முழு-ஆத்துமாவோடு சேவிக்க வேண்டும் என்பது, நம்மை நாமே முழுமையாக அளிப்பதை அர்த்தப்படுத்துகிறது. அவர் நாம் செய்யும்படி நம்மிடம் கேட்கும் எல்லா காரியங்களுக்கும் மனமார்ந்த பூரணமான கீழ்ப்படிதலை அது தேவைப்படுத்துகிறது.
தீர்க்கதரிசியாகிய மோசே இஸ்ரவேல் தேசத்தாருக்கு கட்டளையிட்டபோது அவர் இந்தத் தேவையை அழுத்தியுரைத்தார்: “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.” (உபாகமம் 6:5) பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு அதே கட்டளை கிறிஸ்து இயேசுவால் திரும்பவுமாக சொல்லப்பட்டது: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:37) அப்போஸ்தலனாகிய பவுல் ‘தேவனுடைய சித்தத்தை முழு-ஆத்துமாவோடு’ செய்யும்படி எபேசியர்களுக்கு கூறியபோதும், “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்,” என்று கொலோசெயர்களை ஊக்குவித்தபோதும் அவர் இதே தேவையை குறிப்பாகத் தெரிவித்தார்.—எபேசியர் 6:6; கொலோசெயர் 3:23.
இருப்பினும், இந்த அவசர உணர்வை நாம் நமக்குள்ளே ஆழமாகக் கொண்டிராவிட்டால் அல்லது ஒரு சமயம் நாம் கொண்டிருந்த அவசர உணர்வு இப்போது மந்தமாகியிருந்தால் அல்லது ஒருவேளை முழுவதுமாக இழந்துவிட்டிருந்தால், கடவுளுடைய சேவையில் நம்முடைய இருதயத்தையும் ஆத்துமாவையும் உட்படுத்துவது கடினமாய் இருக்கும். மனிதனுடைய சரித்திரத்தில் எந்த காலப்பகுதியிலும் இல்லாத அளவு அவசர உணர்வு தேவைப்படும் காலத்தில் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
திட்டவட்டமான அவசர காலங்கள்
கிறிஸ்தவத்துக்கு முன்னான காலங்களில் அவசர உணர்வு தேவைப்பட்ட காலப்பகுதிகள் அநேகம் இருந்திருக்கின்றன. நோவாவின் நாட்கள் மற்றும் சோதோம், கொமோரா பட்டணங்கள் அழிக்கப்படுவதற்கு வழிநடத்திய காலப்பகுதி ஆகியவை நிச்சயமாகவே அவசர உணர்வு தேவைப்பட்ட காலப்பகுதிகளாய் இருந்தன. (2 பேதுரு 2:5, 6; யூதா 7) சந்தேகத்துக்கு இடமின்றி, ஜலப்பிரளயத்துக்கு முற்பட்ட ஆண்டுகள் அவசரமான வேலைகளால் நிரப்பப்பட்டிருந்தன. ஜலப்பிரளயம் எப்போது ஆரம்பிக்கும் என்பதைக் குறித்து நோவாவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் திட்டவட்டமாக தெரிந்திருக்கவில்லை என்றாலும்கூட, அவர்கள் அதை தள்ளிப்போடக்கூடாது என்பதை அவர்களுடைய “தேவ பயம்” உறுதிப்படுத்தியிருக்கும்.—எபிரெயர் 11:7.
அதே போல், சோதோம், கொமோரா பட்டணங்களின் அழிவுக்கு முன், தேவதூதர்கள் ‘லோத்தை துரிதப்படுத்தி’ அவரிடம் இவ்வாறு சொன்னார்கள்: “உன் ஜீவன் தப்ப ஓடிப்போ!” (ஆதியாகமம் 19:15, 17) ஆம், அந்த சந்தர்ப்பத்திலும்கூட அவசர உணர்வு நீதிமான்களின் உயிர்களைப் பாதுகாத்தது. பல நூற்றாண்டுகளுக்குப் பின் பாபிலோனில் இருந்த யூத கைதிகளுக்கு இந்த அறிவுரை கொடுக்கப்பட்டது: “புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.” (ஏசாயா 52:11) பொ.ச.மு. 537-ல் நாடுகடத்தப்பட்ட சுமார் 2,00,000 பேர் அந்த அவசரமான தீர்க்கதரிசன கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பாபிலோனை விட்டு அவசரமாக வெளியேறினர்.
அந்த சூழ்நிலைகள் ஒவ்வொன்றிலும் அவசர உணர்வு, முழு-ஆத்துமாவோடுகூடிய சேவை செய்யப்படுவதில் விளைவடைந்தது, தாங்கள் அவசர காலங்களில் வாழ்ந்துகொண்டிருந்ததாக உணர்ந்து ஒரு திட நம்பிக்கையை தொடர்ந்து ஊக்கத்துடன் வைத்திருந்தவர்களால் அது செய்யப்பட்டது.
கிறிஸ்தவ காலங்களில் அவசர உணர்வு
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்கள் முழுவதிலும் அவசர உணர்வுக்கான தேவை திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்டிருக்கிறது. “விழித்திருங்கள்,” “எச்சரிக்கையாயிருங்கள்,” “நீங்களும் ஆயத்தமாயிருங்கள்”—தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குள் ஒரு சரியான அவசர உணர்வை படிப்படியாக பதியச்செய்வதற்கு இவையனைத்தும் கிறிஸ்து இயேசு பயன்படுத்திய சொற்றொடர்கள். (மத்தேயு 24:42-44; மாற்கு 13:32-37) கூடுதலாக, பத்துக் கன்னிகைகள், பொல்லாத ஊழியக்காரன், தாலந்துகள், செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பது ஆகியவற்றைப் பற்றிய அவருடைய உவமைகள் எல்லாம் எதிர்பார்ப்பைத் தூண்டி அவசர உணர்வை தோற்றுவிக்கின்றன.—மத்தேயு 25:1, 14, 15, 32, 33.
இயேசு அவசர உணர்வைப் பற்றி பேசிக்கொண்டு மட்டுமல்லாமல், அவசர உணர்வோடு வேலை செய்வதன் மூலமும் அவருடைய வார்த்தைகளின் உண்மைத்தன்மையின் மூலமும் ஆதரித்தார். ஒரு சமயம் ஜனக்கூட்டத்தார் அவரைத் தடுத்து நிறுத்த முயற்சிசெய்தபோது அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்.” (லூக்கா 4:42, 43) மேலும், அறுவடைக்கு கூடுதலான ஆட்களை அனுப்பும்படி அறுப்புக்கு எஜமானை கெஞ்சிக்கேட்கும்படி அவர் தம் சீஷர்களை உற்சாகப்படுத்தினார், ஏனென்றால், “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.” (மத்தேயு 9:37, 38) உண்மையிலேயே கடவுளிடம் இப்படிப்பட்ட ஜெபசிந்தையோடு வேண்டுதல் செய்வது அவசர உணர்வை வெளிப்படுத்துகிறது.
அப்படிப்பட்ட அவசர உணர்வு பொருத்தமற்றதாய் இருந்ததா?
முன்னுரைக்கப்பட்ட “மிகுந்த உபத்திரவம்” பல நூற்றாண்டுகளுக்கு அப்பால் இருக்கப் போகிறதென்றால், இயேசுவின் காலத்திலேயே அந்த அவசர உணர்வு ஏன் தேவைப்பட்டது என்ற நியாயமான கேள்வியை சிலர் கேட்கலாம்.—மத்தேயு 24:21.
அது தம்மைப் பின்பற்றுகிறவர்களை பிரசங்க வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் வெறுமனே சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இயேசு உபயோகித்த சூழ்ச்சி ஏற்பாடு அல்ல என்பதைக் குறித்து நாம் நிச்சயமாய் இருக்கலாம். அது கிறிஸ்து தம் சீஷர்கள் பேரில் கொண்டிருந்த அன்பு மற்றும் காலத்தைக் குறித்து யெகோவாவின் நோக்குநிலையை பூரணமாய் அறிந்துகொள்வது ஆகியவைதானே அவசர உணர்வின் பேரில் அவர் கொடுத்த புத்திமதிக்கு அடிப்படையாய் அமைந்தது. ஆம், கடவுளுடைய நோக்கத்துக்கு இசைவாக யெகோவாவின் சித்தத்தை செய்துமுடிப்பதற்கு அவசர உணர்வு தேவைப்பட்டது என்பதை கிறிஸ்து இயேசு அறிந்திருந்தார். கூடுதலாக, அவர் திரும்பி வரும்வரை அவசர உணர்வைக் காத்துவருவதன் மூலம் அவருடைய சீஷர்கள்தாமே பயனடைவர் என்பதை அவர் அறிந்திருந்தார்.
உலகளாவிய சாட்சிகொடுக்கும் வேலை செய்யப்படவேண்டும் என்பதையும், அது வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள்ளாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையும் இயேசு கிறிஸ்து தெளிவாக குறிப்பிட்டுக் காட்டியிருந்தார். (மத்தேயு 24:14; மாற்கு 13:10) வேலை வளர்ச்சியுற்றபோது மட்டுமே இந்த நியமிப்பின் படிப்படியான நிலைகள் வெளிப்படுத்தப்பட்டன. ஆனால் ஒவ்வொரு படியையும் நிறைவேற்றுவதற்கு அவசர உணர்வு தேவைப்பட்டது. இயேசு இவ்வாறு சொன்னபோது இந்த நியமிப்பின் முன்னேற்றத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார்: “நீங்கள் எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (அப்போஸ்தலர் 1:8) அவ்வாறுதான் இந்நாள்வரையாக அந்த வேலை படிப்படியாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இது காலப்போக்கில் கடவுளுடைய ஊழியர்களுக்கு எதிர்பாரா ஆச்சரியங்களைக் கொண்டுவந்திருக்கிறது, இது சில சமயங்களில் புரிந்துகொள்ளுதலில் சரிப்படுத்தல்களைத் தேவைப்படுத்தியிருக்கிறது.
கிறிஸ்தவ அவசர உணர்வு யெகோவாவின் நோக்கத்தைச் சேவித்திருக்கிறது. கிறிஸ்தவ சீஷர்கள் தங்கள் நியமிப்பை யெகோவாவின் தவறாத அட்டவணையின்படி படிப்படியாக முன்னேற்றுவித்து நிறைவேற்றி முடிப்பதில் அது அவர்களுக்கு உதவியிருக்கிறது. ஆகையால் இன்று கடந்துசென்ற சுமார் 2,000 வருடங்களைச் சிந்தித்துப் பார்க்கையில், நாம் அந்த தெய்வீக அட்டவணையை அதிக முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்.
இஸ்ரவேலரிடமாக காட்டப்பட்ட விசேஷ தயவு முடிவுக்கு வந்தபோது, எருசலேம், யூதேயா, சமாரியா, சிதறடிக்கப்பட்டிருந்த யூதர்கள் ஆகிய இடங்களில் பொ.ச. 36-ஆம் ஆண்டுக்கு முன்பு சீஷர்கள் முழுமையான சாட்சிகொடுப்பதற்கு கிறிஸ்தவ அவசர உணர்வு உதவியது. (தானியேல் 9:27; அப்போஸ்தலர் 2:46, 47) அதே போல், யூதர்களுடைய ஒழுங்குமுறை சீக்கிரத்தில் முடிவடையும் என்ற தெளிவான எச்சரிப்பை எல்லா யூதர்களுக்கும் கொடுப்பதில் கிறிஸ்தவ அவசர உணர்வு பூர்வ கிறிஸ்தவ சபைக்கு உதவியது. (லூக்கா 19:43, 44; கொலோசெயர் 1:5, 6, 23) அது எதிர்பாராதவிதத்தில் பொ.ச. 70-ல் முடிவடைந்தபிறகு, முன்னறிவிக்கப்பட்டிருந்த விசுவாச துரோகம் அதன் மரணத்தை- விளைவிக்கும் ஆவிக்குரிய இருளைப் பரவச்செய்வதற்கு முன்பு பரலோக நம்பிக்கையைப் பற்றி அநேகருக்கு அறிவிப்பதற்கு கிறிஸ்துவின் முதல் நூற்றாண்டு சாட்சிகளுக்கு அவசர உணர்வு உதவியது. (2 தெசலோனிக்கேயர் 2:3; 2 தீமோத்தேயு 4:2) பிறகு, இருண்ட காலப்பகுதியின் நூற்றாண்டுகளினூடே, கோதுமை போன்றிருந்த வெகுசில கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து முன்னறிவித்தபடி ராஜ்ய நம்பிக்கையை ஊக்கத்துடன் வைத்திருந்தனர். (மத்தேயு 13:28-30) இறுதியில், அவருடைய குறிக்கப்பட்ட காலத்தில், யெகோவா ஒரு சுறுசுறுப்பான, நவீன-நாளைய சபையை இந்த இறுதி சந்ததியில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு அவருடைய அவசரமான நியாயத்தீர்ப்பு செய்தியை அறிவிப்பதற்கு எழுப்பினார்.—மத்தேயு 24:34.
பண்டைய கால தாவீதைப் போன்று, கடவுளுடைய உண்மையுள்ள நவீனநாளைய சாட்சிகள் யெகோவாவிடம், ‘என்ன செய்கிறீர்?’ என்று துணிந்து கேட்கமாட்டார்கள். (தானியேல் 4:35) யெகோவா தம் அட்டவணையின்படி சரியாக தம்முடைய வேலையை செய்துமுடிப்பதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை திட்டவட்டமாக அறிந்திருக்கிறார் என்பதைக் குறித்து அவர்கள் நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்கின்றனர். ஆகையால் விஷயங்களை யெகோவா ஏற்பாடு செய்யும் விதத்தைக் குறித்து கேள்வி கேட்பதற்கு பதிலாக, கடவுள் தம்மோடு சேர்ந்து இந்த மிக முக்கியமான காலங்களில் வேலைசெய்வதற்கு தங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்திருப்பதற்காக அவர்கள் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கின்றனர்.—1 கொரிந்தியர் 3:9.
அவசர உணர்வுக்கு ஒரு கூடுதலான உற்சாகம்
மிகுந்த உபத்திரவம் திடீரென எதிர்பாராது வெளிப்படப்போகும் நாளையும் நாழிகையையும் சரியாக நம்மால் குறிப்பிட முடியாதது, அவசரத்தன்மைக்கு மற்றொரு காரணமாய் இருக்கிறது. முன்னால் தீர்மானிக்கப்பட்டிருக்கும் அந்த முடிவுக்கட்டமான சம்பவத்தின் ஆரம்பமாகப்போகும் நாளையும் நாழிகையையும் பூமியில் எவருமே அறிந்திருக்கமாட்டார்கள் என்பதைக் குறித்து கிறிஸ்து இயேசு திட்டவட்டமாய் அறிந்திருந்தார். (மத்தேயு 24:36) மற்றொரு சமயம் ஆர்வமாயிருந்த தம் அப்போஸ்தலரிடம் அவர் இவ்வாறு கூறினார்: “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.” (அப்போஸ்தலர் 1:7) ஆம், விளைவு தெளிவாக இருக்கிறது, ஆனால் எல்லா விவரங்களும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அல்ல.
அப்போஸ்தலனாகிய பவுலுக்கு அவசர உணர்வைக் குறித்து சரியான மனநிலை இருந்தது. கிறிஸ்துவின் பிரசன்னத்தைக் குறித்து தெசலோனிக்கேயர்களுக்கு எழுதுகையில் அவருக்கு ஒருவேளை இயேசுவின் வார்த்தைகள் மனதில் இருந்திருக்கும்: “சகோதரரே, இவைகள் நடக்குங் காலங்களையும் சமயங்களையும் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுவதில்லை.” (1 தெசலோனிக்கேயர் 5:1) அவர் இக்கடிதத்தை, “நீங்கள் பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று இயேசு சொல்லியிருந்த பின்பு சுமார் 17 வருடங்கள் கழித்து எழுதினார். (அப்போஸ்தலர் 1:8) அந்த சமயத்தில் அதற்கும் மேலாக கூடுதலான விஷயங்கள் எழுத முடியாமல் இருந்தது, ஏனென்றால் அதற்கும் மேல் கூடுதலாக அப்போது வெளிப்படுத்தப்படவில்லை. அப்படியிருந்தும்கூட, கிறிஸ்தவர்கள் அவசர உணர்வோடு இன்னும் பிரசங்கித்துக்கொண்டே இருக்கையில் யெகோவாவின் நாள் நிச்சயமாக “இரவிலே திருடன் வருகிறவிதமாய்” வரும் என்று அவர்கள் நம்பிக்கையோடு இருக்க முடிந்தது.—1 தெசலோனிக்கேயர் 5:2.
இந்த வார்த்தைகளை மனதில்கொண்டு, அவர்கள் யெகோவாவின் நாள் பல நூற்றாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் என்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நினைத்தது கூடாத காரியமாய் இருந்திருக்கும். பிரபுவாகிய ஒருவன் தன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் புறப்பட்டதைப் பற்றியும், புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போன ஒரு மனுஷனைப் பற்றியுமான இயேசுவின் உவமைகளை அவர்கள் அறிந்திருந்தனர் என்பது உண்மைதான். ராஜா ‘திரும்பி வருவார்’ என்றும் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் “வெகுகாலமான பின்பு” திரும்பி வருவார் என்றும் அந்த உவமைகள் காண்பித்தன என்பதையும்கூட அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் “திரும்பி வருவது” எப்போது? “வெகு காலத்திற்குப் பின்பு” என்பதன் அர்த்தம் என்ன? பத்து வருடங்களா? இருபது வருடங்களா? ஐம்பது வருடங்களா? அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளா? என்பதைக் குறித்து அவர்கள் குழப்பமடைந்திருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. (லூக்கா 19:12, 15; மத்தேயு 25:14, 19) இயேசுவின் வார்த்தைகள் தொடர்ந்து அவர்களுடைய காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்: “அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.”—லூக்கா 12:40.
அவசரத்தன்மையின் உடன்பாடான பாதிப்பு
ஆம், கடவுள் தூண்டி எழுப்பிய அவசர உணர்வு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மீது அற்புதமான உற்சாகமூட்டும் பாதிப்பைக் கொண்டதாயிருந்தது, பிரசங்கிக்கும் மற்றும் கற்பிக்கும் அதிமுக்கியமான வேலையில் சுறுசுறுப்பாய் இருக்கும்படி அவர்களுக்கு உதவியது. அது இன்றைக்கு நம்மை அநேக வழிகளில் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நாம் திருப்தியடைந்தவர்களாய் ஆகிவிடாமல் அல்லது “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல்” இருக்கும்படி செய்விக்கிறது. (கலாத்தியர் 6:9) அது உலகத்தோடும் அதன் நயவஞ்சகமான பொருளாசையோடும் அளவுக்கு மீறி ஈடுபடுவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. அது நம்முடைய மனங்களை ‘நித்திய ஜீவன்’ மீது வைக்கிறது. (1 தீமோத்தேயு 6:19) அவருடைய சீஷர்கள் ‘ஓநாய்களுக்குள்ளே ஆடுகளைப்’ போல் இருப்பார்கள் என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார், உலகத்தை எதிர்த்து நிற்பதற்கு நாம் ஒரு தீர்மானமான, உறுதியான நோக்குநிலையைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் அறிந்திருந்தார். ஆம், நாம் நம்முடைய கிறிஸ்தவ அவசர உணர்வால் பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறோம்.—மத்தேயு 10:16.
முடிவற்ற ஞானத்தையுடைய யெகோவா தேவன் தம்முடைய ஊழியர்கள் தங்கள் அவசர உணர்வை ஊக்கத்துடன் வைத்திருப்பதற்கு எப்போதும் போதுமான தகவலைக் கொடுத்திருக்கிறார். இந்த கறைபடிந்த ஒழுங்குமுறையின் “கடைசிநாட்களில்” நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை அவர் நமக்கு தயவாக உறுதிப்படுத்தியிருக்கிறார். (2 தீமோத்தேயு 3:1) நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த சந்ததி மிகுந்த உபத்திரவத்திலும் அதன் உச்சக்கட்டமாகிய அர்மகெதோனிலும் கடந்து செல்லும்வரை நாம் ஒளிவீசுபவர்களாக பிரகாசிக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து நினைப்பூட்டப்படுகிறோம்.—பிலிப்பியர் 2:15; வெளிப்படுத்துதல் 7:14; 16:14, 16.
ஆம், ஒரு தெய்வீக அவசர உணர்வு யெகோவாவுக்கு ஏறெடுக்கும் முழு-ஆத்துமாவோடுகூடிய சேவையின் மிகவும் அவசியமான பாகமாயிருக்கிறது. கடவுளுடைய ஊழியர்கள் “இளைப்புள்ளவர்களாய் [தங்கள்] ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு” சாத்தானின் முயற்சிகளை தடைசெய்து காப்பாற்றுகிறது. (எபிரெயர் 12:3) முழு-ஆத்துமாவோடுகூடிய பக்தி நித்தியத்துக்குமாக யெகோவாவின் ஊழியர்கள் அவருக்கு கீழ்ப்படியும்படி அவர்களைச் செய்விக்கும், ஆனால் இப்போது, அர்மகெதோனுக்கு முன்பாக இருக்கும் இந்த நாட்களில் ஒரு ஆழமான, மெய்யான அவசர உணர்வு முழு-ஆத்துமாவோடுகூடிய பக்தியின் ஒரு இன்றியமையாத பாகமாயிருக்கிறது.
அப்போஸ்தலனாகிய யோவானின் பின்வரும் வார்த்தைகளை நாம் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கையில் நம்முடைய கடவுளாகிய யெகோவாதாமே நம்முடைய அவசர உணர்வை பாதுகாத்துக்கொள்வதற்கு நம் அனைவருக்கும் உதவி செய்வாராக: “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”—வெளிப்படுத்துதல் 22:20.