தெய்வீக போதனையின் நன்மைகளை அனுபவியுங்கள்
‘உனக்கு நன்மையானதைப் போதிக்கிற உன் கடவுளாகிய யெகோவா நானே.’—ஏசாயா 48:17, NW.
1. நம்முடைய வாழ்க்கையில் தெய்வீக போதனையைப் பொருத்திப் பிரயோகித்தால், நாம் எவ்வாறு பாதுகாக்கப்படுவோம்?
“யெகோவா தேவன் மிகச் சிறந்ததை அறிந்திருக்கிறார். சிந்தையிலோ வார்த்தையிலோ செயலிலோ அவரை ஒருவரும் மிஞ்சமுடியாது. நம்முடைய சிருஷ்டிகராக, அவர் நம்முடைய தேவைகளை அறிந்து அவற்றை அபரிமிதமாக அளிக்கிறார். நமக்கு எவ்வாறு போதிப்பது என்பதை அவர் நிச்சயமாகவே அறிந்திருக்கிறார். மேலும் தெய்வீக போதனையை நாம் பொருத்திப் பிரயோகித்தால், நாம்தாமே நன்மையடைந்து உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்போம்.
2, 3. (அ) கடவுளுடைய பூர்வீக மக்கள் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், எவ்வாறு அவர்கள்தாமே நன்மையடைந்திருப்பார்கள்? (ஆ) இன்றைய நாளில் நம்முடைய வாழ்க்கையில் நாம் தெய்வீக போதனையைப் பொருத்திப் பிரயோகித்தால், என்ன நிகழும்?
2 கடவுளுடைய ஊழியர்கள் பேரிடரைத் தவிர்த்து அவருடைய சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு இசைந்து நடப்பதன்மூலம் வாழ்க்கையை மகிழ்ந்தனுபவிக்கவேண்டும் என்ற கடவுளுடைய ஊக்கமான ஆசையை தெய்வீக போதனை வெளிப்படுத்துகிறது. யெகோவாவின் பூர்வீக மக்கள் அவருக்குச் செவிகொடுத்திருந்தால், அவர்கள் முழு நிறைவான ஆசீர்வாதங்களை அனுபவித்திருப்பார்கள்; ஏனென்றால் அவர்களிடம் அவர் இவ்வாறு சொல்லியிருந்தார்: “உனக்கு நன்மையானதைப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் கடவுளாகிய யெகோவா நானே. ஆ, நீ மட்டும் என்னுடைய கட்டளைகளுக்கு உண்மையில் கவனம்செலுத்தினால் நலமாயிருக்கும்! அப்பொழுது உன்னுடைய சமாதானம் நதியைப்போலவும் உன்னுடைய நீதி கடலலைகளைப்போலவும் ஆகும்.”—ஏசாயா 48:17, 18, NW.
3 கடவுளுடைய பூர்வீக மக்கள் அவருடைய கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கவனம்செலுத்தியிருந்தால், அவர்கள்தாமே நன்மையடைந்திருப்பார்கள். பாபிலோனியரிடம் துன்பம் அனுபவிப்பதற்குப் பதிலாக, ஆழமான, வற்றாத ஒரு நதியைப்போல சமாதானத்தையும் செழுமையையும் நிறைவாக அனுபவித்திருப்பார்கள். மேலுமாக, அவர்களுடைய நீதியான கிரியைகள் சமுத்திரத்தின் அலைகளைப்போல எண்ணற்றவையாக இருந்திருக்கும். அதேவிதமாகவே, நம்முடைய வாழ்க்கையில் நாம் தெய்வீக போதனையைப் பொருத்திப் பிரயோகிப்போமாகில், அதன் அநேக நன்மைகளை நாம் அனுபவிக்கலாம். அவற்றில் சில யாவை?
அது வாழ்க்கையை மாற்றுகிறது
4. எவ்விதமாக தெய்வீக போதனை அநேக மக்களுடைய வாழ்க்கையை பாதித்துவருகிறது?
4 அநேக மக்களுடைய வாழ்க்கையை மேம்பட்டதாக மாற்றுவதன்மூலம் தெய்வீக போதனை அவர்களுக்கு நன்மையளித்துவருகிறது. யெகோவாவின் அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிப்பவர்கள் “மாம்சத்தின் கிரியை”களாகிய காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், விரோதங்கள், வைராக்கியங்கள் ஆகியவற்றை கைவிடுகிறார்கள். பதிலாக, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற ஆவியின் கனிகளை வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள். (கலாத்தியர் 5:19-23) எபேசியர் 4:17-24-ல் (NW) உள்ள ஆலோசனைக்கும் அவர்கள் செவிசாய்க்கிறார்கள். அதில் பவுல், தேவனுக்குரிய ஜீவனிலிருந்து பிரிந்து தங்களுடைய இலாபமற்ற சிந்தைகளினாலே, மனதின் பிரகாரமாக இருளிலே உள்ள புறஜாதிகளைப்போல நடவாமலிருக்கும்படி உடன் விசுவாசிகளைத் துரிதப்படுத்துகிறார். உணர்ச்சியற்ற இருதயங்களினால் வழிநடத்தப்படாமல், கிறிஸ்துவைப்போன்ற தனிப்பட்ட நபர்கள் ‘முந்தின நடத்தைப்போக்குக்கு இசைவான பழைய ஆளுமையைக் களைந்துபோட்டு உள்ளத்தை உந்துவிக்கிற சக்தியினாலே புதிதாக்கப்படுகிறார்கள்.’ அவர்கள் ‘உண்மையான நீதியிலும் பற்றுறுதியிலும் உள்ள தேவனுடைய சித்தத்தின்படி சிருஷ்டிக்கப்பட்ட புதிய ஆளுமையைத் தரித்துக்கொள்கிறார்கள்.’
5. மக்கள் சஞ்சரிக்கிற முறையை தெய்வீக போதனை எவ்வாறு பாதிக்கிறது?
5 தெய்வீக போதனையை பொருத்திப் பிரயோகிப்பதன் சிறந்த ஒரு நன்மை என்னவென்றால், கடவுளோடு எவ்வாறு சஞ்சரிப்பது என்பதை அது நமக்குக் காண்பிப்பதாகும். நோவாவைப்போல நாம் யெகோவாவோடு சஞ்சரிப்போமானால், நம்முடைய மகத்தான போதகரால் முக்கியப்படுத்திக் காட்டப்பட்ட வாழ்க்கை முறையை நாம் பின்பற்றுவோம். (ஆதியாகமம் 6:9; ஏசாயா 30:20, 21) அப்போஸ்தலன் பவுல் சொன்னதுபோல, புறஜாதியார் ‘தங்களுடைய இலாபமற்ற சிந்தைகளினாலே நடக்கிறார்கள்.’ அந்தச் சிந்தைகளின் சில எழுத்துக்கள் எவ்வளவு இலாபமற்றவையாய் இருக்கக்கூடும்! பாம்ப்பேயில் சுவரின்மீதுள்ள மற்றவர்களுடைய சில கல்வெட்டுக்களை கவனித்து, ஒரு பார்வையாளர்தாமே இவ்வாறு எழுதினார்: “இது ஆச்சரியமாய் இருக்கிறது, சுவரே, இவ்வளவு அதிகமாக எழுதப்பட்ட மடமை என்னும் பாரத்தின்கீழ் இன்னும் நொறுங்காமல் இருக்கிறாயே.” ஆனால் “யெகோவாவின் போதனை”யிலும் அது கூடியகாரியமாக்குகிற ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் எந்தவித மடமையும் இல்லை. (அப்போஸ்தலர் 13:12, NW) அந்த வேலையின்மூலம், சத்தியத்தை நேசிக்கும் மக்கள் தங்களுடைய உணர்வுகளுக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். அவர்கள் தங்களுடைய பாவமுள்ள வழிகளில், கடவுளுடைய நோக்கங்களின் அறியாமையில் சஞ்சரிப்பதை எவ்வாறு நிறுத்துவது என்று போதிக்கப்படுகிறார்கள். அவர்கள் இனிமேலும் மனதுக்குரிய இருளிலும் இல்லை, இலாபமற்ற இலக்குகளை நாடித்தேடுகிற உணர்வற்ற இருதயங்களினால் அவர்கள் தூண்டப்படுவதுமில்லை.
6. யெகோவாவின் போதனைக்கான நம்முடைய கீழ்ப்படிதலுக்கும் நம்முடைய மகிழ்ச்சிக்கும் இடையே என்ன சம்பந்தம் இருக்கிறது?
6 யெகோவாவுடனும் அவருடைய செயல்தொடர்புகளுடனும் பழக்கப்பட்டவர்களாய் ஆவதற்கும்கூட தெய்வீக போதனை நமக்கு நன்மையளிக்கிறது. இத்தகைய அறிவு கடவுளிடம் நாம் நெருங்கிவரும்படி செய்கிறது, அவருக்கான நம்முடைய அன்பை அதிகரிக்கச் செய்கிறது, அவருக்குக் கீழ்ப்படிவதற்கான நம்முடைய ஆசையையும் அதிகரிக்கச் செய்கிறது. 1 யோவான் 5:3 சொல்லுகிறது: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” நாம் இயேசுவின் கட்டளைகளுக்கும்கூட இணங்கி நடக்கிறோம், ஏனென்றால் அவருடைய போதனை கடவுளிடத்திலிருந்து வருகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (யோவான் 7:16-18) இப்படிப்பட்ட கீழ்ப்படிதல் ஆவிக்குரிய தீங்கிலிருந்து நம்மைப் பாதுகாத்து, நம்முடைய மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.
வாழ்க்கையில் ஓர் உண்மையான நோக்கம்
7, 8. (அ) சங்கீதம் 90:12-ஐ நாம் எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும்? (ஆ) நாம் எவ்வாறு ஞான இருதயமுள்ளவர்களாய் இருக்கலாம்?
7 யெகோவாவின் போதனை, நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு ஒரு நோக்கமுள்ள முறையில் பயன்படுத்துவது என்பதைக் காண்பிப்பதில் பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறது. உண்மையில், நம்முடைய நாட்களை எவ்விதமாக ஒரு விசேஷித்த முறையில் எண்ணுவது என்பதை தெய்வீக போதனை நமக்குக் காட்டுகிறது. ஓர் ஆளுடைய 70 ஆண்டுகளின் வாழ்க்கை எதிர்பார்ப்பு ஏறக்குறைய 25,550 நாட்களை உறுதியளிக்கிறது. ஐம்பது வயதுடைய ஓர் ஆள் ஏற்கெனவே அவற்றில் 18,250 நாட்களை செலவழித்துவிட்டார், எதிர்பார்த்திருந்த அவருடைய மீதமுள்ள 7,300 நாட்களும் உண்மையில் குறைவாகவே தோன்றுகின்றன. விசேஷமாக அந்தச் சமயத்தில், சங்கீதம் 90:12-ல் தீர்க்கதரிசி மோசே ஏன் இவ்வாறு ஜெபம்செய்தார் என்பதை அவர் அதிக முழுமையாய் மதித்துணரக்கூடும்: “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.” அதன்மூலம் மோசே எதை அர்த்தப்படுத்தினார்?
8 ஒவ்வொரு இஸ்ரவேலனின் வாழ்நாட்காலத்தில் இருக்கும் நாட்களின் சரியான எண்ணிக்கையை கடவுள் வெளிப்படுத்துவார் என்பதை மோசே அர்த்தப்படுத்தவில்லை. சங்கீதம் 90, வசனங்கள் 9, 10-ன்படி, வாழ்நாட்காலம் கிட்டத்தட்ட 70 அல்லது 80 ஆண்டுகளே என்று அந்த எபிரெய தீர்க்கதரிசி உணர்ந்திருந்தார்—உண்மையில் குறைவானதே. ஆகவே, சங்கீதம் 90:12-ன் வார்த்தைகள், மோசேயும் அவருடைய மக்களும், ‘தங்களுடைய வருஷங்களின் நாட்களை’ மதிப்பிடுவதில் ஞானத்தைப் பிரயோகித்து, கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட முறையில் அவற்றைப் பயன்படுத்த யெகோவா காண்பிப்பார் அல்லது போதிப்பார் என்ற அவருடைய ஜெபசிந்தையுள்ள ஆசையையே தெளிவாகத் தெரியப்படுத்தியது. சரி, அப்படியானால் நம்மைப்பற்றி என்ன? விலையேறப்பெற்ற ஒவ்வொரு நாளையும் நாம் மதித்துணருகிறோமா? நம்முடைய மகத்தான போதகராகிய யெகோவா தேவனின் மகிமைக்காக ஒவ்வொரு நாளையும் பலன்தரத்தக்க ஒரு முறையில் செலவழிக்க முயற்சிசெய்வதன்மூலம், நாம் ஞான இருதயமுள்ளவர்களாகிறோமா? தெய்வீக போதனை அதையே செய்வதற்கு நமக்கு உதவிசெய்யும்.
9. யெகோவாவின் மகிமைக்காக நம்முடைய நாட்களை எண்ணுவதற்கு நாம் கற்றுக்கொள்வோமானால், என்ன எதிர்பார்க்கப்படலாம்?
9 நம்முடைய நாட்களை யெகோவாவின் மகிமைக்கென்றே எண்ணுவதற்கு நாம் கற்றுக்கொள்வோமாகில், ஒருவேளை தொடர்ந்து நம்முடைய நாட்களை எண்ணிக்கொண்டிருக்க முடியும், ஏனென்றால் நித்தியகால ஜீவனுக்கான அறிவை தெய்வீக போதனை அளிக்கிறது. இயேசு சொன்னார், “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) நிச்சயமாகவே, கிடைக்கக்கூடிய உலகப்பிரகாரமான எல்லா அறிவையும் நாம் பெற்றிருப்போமாகில், அது நமக்கு நித்தியகால வாழ்க்கையைக் கொண்டுவராது. ஆனால் சர்வலோகத்திலுள்ள இரண்டு அதிமுக்கியமான நபர்களைப்பற்றிய திருத்தமான அறிவைப்பெற்று, பொருத்திப் பிரயோகித்து, உண்மையில் விசுவாசத்தை நாம் காட்டுவோமாகில், நித்திய ஜீவன் நம்முடையதாய் இருக்கும்.
10. கல்வியைக்குறித்து ஓர் என்ஸைக்ளோப்பீடியா என்ன சொல்கிறது, தெய்வீக போதனையின் நன்மைகளோடு இது எவ்வாறு ஒத்திருக்கிறது?
10 நாம் ஏற்கெனவே எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும் சரி, தெய்வீக போதனையின் இந்தக் குறிப்பிடத்தக்க நன்மையை மனதிற்கொள்வோமாக: அதைப் பொருத்திப் பிரயோகிப்பவர்களுக்கு வாழ்க்கையில் ஓர் உண்மையான நோக்கத்தை அது அளிக்கிறது. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “சமுதாயத்தின் பயனுள்ள அங்கத்தினர்களாய் ஆவதற்கு கல்வி மக்களுக்கு உதவிசெய்யவேண்டும். அவர்களுடைய பண்பாட்டு சுதந்தரத்தின் மதித்துணர்வை வளர்த்துக்கொள்ளவும் அதிக திருப்தியளிக்கும் வாழ்க்கையை வாழ்வதற்கும்கூட அது அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்.” தெய்வீக போதனை திருப்தியான வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு உதவிசெய்வதில் பிரயோஜனமாய் இருக்கிறது. கடவுளுடைய மக்களாக நம்முடைய ஆவிக்குரிய சுதந்தரத்தின் ஆழ்ந்த மதித்துணர்வை நமக்குள் அது வளர்க்கிறது. நிச்சயமாகவே நம்மை சமுதாயத்தின் பயனுள்ள அங்கத்தினர்களாய் ஆக்குகிறது, ஏனென்றால் உலகளாவிய மக்களின் தேவைகளை நிறைவுசெய்வதில் ஓர் இன்றியமையாதப் பங்கை வகிப்பதற்கு அது நமக்கு உதவிசெய்கிறது. ஏன் அவ்வாறு சொல்லப்படலாம்?
உலகளாவிய கற்பிக்கும் திட்டம்
11. தகுதிவாய்ந்த கல்விக்கான அவசியத்தை தாமஸ் ஜெஃபர்ஸன் எவ்வாறு சிறப்பித்துக் காண்பித்தார்?
11 வேறெந்த போதனைத் திட்டத்தைப் போலில்லாமல், தெய்வீக போதனை மக்களுடைய கல்வித் தேவைகளைப் பூர்த்திசெய்கிறது. மக்களுக்குப் போதிப்பதன் அவசியமானது ஐக்கிய மாகாணங்களின் மூன்றாவது ஜனாதிபதியான தாமஸ் ஜெஃபர்ஸன் என்பவரால் குறிப்பிடப்பட்டது. ஆகஸ்டு 13, 1786 கடிதத்தில், நண்பரும் சுதந்திர உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டவருமான ஜார்ஜ் உவித்துக்கு ஜெஃபர்ஸன் இவ்விதமாய் எழுதினார்: “மக்களுடைய மத்தியில் அறிவைப் பரப்புவதற்கான சட்டமே நம்முடைய முழுச் சட்டத்தொகுப்பிலுள்ள மிக முக்கியமான சட்டம் என்று நான் நினைக்கிறேன். சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் பாதுகாப்பதற்காக வேறெந்த உறுதியான அஸ்திபாரத்தையும் திட்டமிட முடியாது. . . . எனது அன்புக்குரிய நண்பரே, அறியாமைக்கு எதிராகத் தீவிர பிரச்சாரத்தை ஆதரித்துப் பேசுங்கள்; பொது மக்களுக்கு கல்விபுகட்டுவதற்கானச் சட்டத்தை ஏற்படுத்தி முன்னேற்றுவியுங்கள். [கல்வியின்] நோக்கத்திற்காக செலுத்தப்படுகிற வரியானது, ராஜாக்கள், பாதிரிமார்கள், பிரபுக்கள் ஆகியோருக்குச் செலுத்தப்படுகிறவற்றில் ஆயிரத்தில் ஒரு பாகத்தைவிட மேலானதல்ல, நாம் மக்களை அறியாமையில் விட்டுவிடுவோமாகில், இவர்கள் நம் மத்தியில் எழும்புவார்கள் என்பதை நம்முடைய நாட்டு மக்கள் அறியட்டும்.”
12. தெய்வீக போதனை உலகளாவிய கல்விக்கு அதிக வெற்றிகரமான மற்றும் நன்மையளிக்கிற ஒன்று என்று ஏன் சொல்லப்படலாம்?
12 நீதியுடன் பிரதிபலிக்கிற மக்களை அறியாமையில் விட்டுவிடுவதற்குப் பதிலாக, யெகோவாவின் போதனை அவர்களுடைய நன்மைக்காக உலகளாவிய கல்விக்கான மிகச் சிறந்த திட்டத்தை அளிக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப்போர் இன்னும் சீற்றங்கொண்டிருந்தபோது, கல்வி மறுகட்டமைவு முறையின்பேரிலான ஐ.மா.-வின் குழு, “உலகளாவிய கல்வி”க்கான அவசரத் தேவையைக் கண்டது. அந்தத் தேவை இன்னும் இருந்துகொண்டிருக்கிறது, ஆனால் தெய்வீக போதனை மட்டுமே உலகளாவிய கல்விக்கான வெற்றிகரமான திட்டமாக இருக்கிறது. அது மிகப் பிரயோஜனமாகவும் இருக்கிறது, ஏனென்றால் அது மக்களை மனமுறிவிலிருந்து எழுப்புகிறது, ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய பிரகாரமாக அவர்களை முன்னேற்றுவிக்கிறது, உலகின் தற்பெருமை மற்றும் தப்பெண்ணத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது, மேலும் நித்திய ஜீவனுக்கான அறிவையும் அளிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவா தேவனைச் சேவிக்க போதிப்பதன்மூலம் எல்லா இடங்களிலுமுள்ள மக்களுக்கு இந்தத் திட்டம் நன்மையளித்துவருகிறது.
13. ஏசாயா 2:2-4 இன்றைய நாளில் எவ்வாறு நிறைவேற்றமடைந்து வருகிறது?
13 இப்பொழுது கடவுளுடைய ஊழியக்காரர்களாய் ஆகிவருகிற திரளான மக்களால் தெய்வீக போதனையின் நன்மை அனுபவிக்கப்பட்டுவருகிறது. அவர்கள் தங்களுடைய ஆவிக்குரியத் தேவையைக்குறித்து உணர்வுடையவர்களாயும் யெகோவாவின் நாள் சமீபமாய் இருக்கிறது என்பதை முழுமையாக அறிந்தவர்களாயும் இருக்கிறார்கள். (மத்தேயு 5:3; 1 தெசலோனிக்கேயர் 5:1-6) இப்பொழுதே, “கடைசிநாட்களில்,” இந்த எல்லா தேசங்களின் மக்களும் யெகோவாவின் பர்வதமாகிய தூய்மையான வணக்கத்திற்குத் திரண்டுவந்துகொண்டிருக்கின்றனர். அது உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது, கடவுளுடைய சித்தத்திற்கு முரணாகவுள்ள அனைத்து வணக்கத்திற்கும் மேலாக உயர்த்தப்பட்டுமிருக்கிறது. (ஏசாயா 2:2-4) நீங்கள் யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு சாட்சியாக இருந்தால், அவரைத் தொழுதுகொண்டு தெய்வீக போதனையிலிருந்து நன்மையடைந்துவருகிற, என்றும் அதிகரித்துக்கொண்டிருக்கும் கூட்டத்தினரில் இருப்பதைக்குறித்து நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? “ஜனங்களே, யாவைத் துதியுங்கள்” என்ற வெற்றிகளிப்புடன் குரலெழுப்புகிறவர்களின் மத்தியில் இருப்பது எவ்வளவு அதிசயமானது!—சங்கீதம் 150:6, NW.
நம்முடைய ஆவியின்மீது நன்மையான விளைவு
14. 1 கொரிந்தியர் 14:20-ல் உள்ள பவுலினுடைய அறிவுரையைப் பின்பற்றுவதினால் உண்டாகும் நன்மை என்ன?
14 தெய்வீக போதனையின் அநேக நன்மைகளில் சில, நம்முடைய சிந்தனை மற்றும் ஆவியின்மீது அது கொண்டிருக்கும் சிறந்த விளைவாகும். நீதியுள்ள, கற்புள்ள, உண்மையுள்ள, புகழுள்ள காரியங்களின்மீதே சிந்தனைசெய்ய அது நமக்கு உதவுகிறது. (பிலிப்பியர் 4:8) யெகோவாவின் போதனை பவுலினுடைய பின்வரும் அறிவுரையைப் பின்பற்ற நமக்கு உதவுகிறது: “துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.” (1 கொரிந்தியர் 14:20) நாம் இந்தப் புத்திமதியைப் பொருத்திப் பிரயோகித்தால், துர்க்குணத்திலுள்ள அறிவை நாம் நாடமாட்டோம். பவுல் இவ்விதமாகவும் எழுதினார்: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.” (எபேசியர் 4:31) இத்தகைய அறிவுரையைச் செவிகொடுத்துக் கேட்பது ஒழுக்கயீனத்தையும் மற்ற வினைமையான பாவங்களையும் தவிர்ப்பதற்கு நமக்கு உதவும். சரீரப்பிரகாரமாயும் மனதின் பிரகாரமாயும் இது நன்மையளிப்பதாய் இருக்கிறபோதிலும், விசேஷமாக அது, நாம் கடவுளைப் பிரியப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று அறிவதன் சந்தோஷத்தை நமக்குக் கொண்டுவரும்.
15. சிந்தனையில் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க எது நமக்கு உதவிசெய்யக்கூடும்?
15 நாம் சிந்தனையில் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க வேண்டுமானால், ஓர் உதவியானது ‘பயனுள்ள பழக்கவழக்கங்களைக் கெடுக்கிற கெட்ட கூட்டுறவுகளைத்’ தவிர்ப்பதாகும். (1 கொரிந்தியர் 15:33, NW) கிறிஸ்தவர்களாக, நாம் வேசித்தனக்காரர்கள், விபச்சாரக்காரர்கள், தவறுசெய்கிற மற்றவர்கள் ஆகியோருடன் தோழமை கொள்ளமாட்டோம். அப்படியானால், நியாயமாகவே, புலன் இன்பத்திற்காக அவர்களைக்குறித்து வாசிப்பதன்மூலமோ தொலைக்காட்சியில் அல்லது திரைப்படங்களில் அவர்களைப் பார்ப்பதன்மூலமோ இப்படிப்பட்ட தனிப்பட்ட ஆட்களோடு நாம் கூட்டுறவுகொள்ளக்கூடாது. இருதயம் திருக்குள்ளது, தவறான காரியங்களுக்கான ஓர் ஆசையை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம், அவற்றைச் செய்வதற்கு தூண்டுவிக்கவும்படலாம். (எரேமியா 17:9) ஆகவே நாம் தெய்வீக போதனையைப் பின்பற்றுவதன்மூலம் இப்படிப்பட்ட தூண்டுதல்களைத் தவிர்ப்போமாக. ‘யெகோவாவை நேசிப்பவர்கள் தீமையை வெறுக்கும்படியான’ இதுபோன்ற நன்மையளிக்குமளவுக்கு அவர்களுடைய சிந்தனையை அது பாதிக்கலாம்.—சங்கீதம் 97:10.
16. நாம் காண்பிக்கிற ஆவியை கடவுளுடைய போதனை எவ்வாறு பாதிக்கக்கூடும்?
16 பவுல் தம்முடைய உடன் வேலைசெய்பவராகிய தீமோத்தேயுவுக்கு இவ்வாறு சொன்னார்: “கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக.” (2 தீமோத்தேயு 4:22) கடவுள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம், தீமோத்தேயுவையும் மற்ற கிறிஸ்தவர்களையும் தூண்டுவிக்கிற உந்துவிக்கும் சக்தியை அங்கீகரிக்கும்படி அப்போஸ்தலன் விரும்பினார். கடவுளுடைய போதனை அன்பு, தயவு, மற்றும் சாந்தமுள்ள ஆவியை வெளிப்படுத்திக் காட்டும்படி நமக்கு உதவிசெய்கிறது. (கொலோசெயர் 3:9-14) இந்தக் கடைசி நாட்களிலுள்ள அநேகருடைய ஆவியிலிருந்து இது எவ்வளவு வேறுபடுகிறது! அவர்கள் அகந்தையுள்ளவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், சுகபோகப்பிரியராயும், உண்மையான தேவபக்தியை இழந்தவர்களாயும் இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5) என்றபோதிலும், தெய்வீக போதனையின் நன்மைகளை நம்முடைய வாழ்க்கையில் நாம் தொடர்ந்து பொருத்திப் பிரயோகிக்கிறபடியால், கடவுளுக்கும் உடன் மானிடருக்கும் பிரியமுள்ளவர்களாக்குகிற ஓர் ஆவியை நாம் வெளிக்காட்டுகிறோம்.
மானிட உறவுகளில் பிரயோஜனமுள்ளது
17. தாழ்மையோடு ஒத்துழைப்பது ஏன் அவ்வளவு இன்றியமையாதது?
17 உடன் வணக்கத்தாரோடு மனத்தாழ்மையோடு ஒத்துழைப்பதன் நன்மைகளைக் காணும்படிக்கு யெகோவாவின் போதனை நமக்கு உதவிசெய்கிறது. (சங்கீதம் 138:6) இன்றுள்ள அநேக மக்களைப் போலில்லாமல், நாம் நீதியான நியமங்களை மீறாமல் இணங்கிச்செல்பவர்களாய் இருக்கிறோம். உதாரணமாக, மூப்பர்கள் கூட்டங்களின்போது நியமிக்கப்பட்ட கண்காணிகள் இணங்கிச்செல்பவர்களாய் இருப்பதனால் அநேக நற்பலன்கள் உண்டாகின்றன. இந்த மனிதர்கள் சத்தியத்தின் நன்மைக்காக அமைதலாகப் பேசலாம், அதேசமயத்தில் நியாயம் மறைக்கப்படுவதற்கு அல்லது ஐக்கியமின்மைக்குரிய உணர்ச்சிக்கு இடமளிக்கக்கூடாது. நாம் அனைவரும் தொடர்ந்து தெய்வீக போதனையைப் பொருத்திப் பிரயோகித்தால், நாம் அனுபவிக்கிற ஐக்கியத்தின் ஆவியிலிருந்து சபையிலுள்ள அனைத்து அங்கத்தினர்களும் நன்மையடைவார்கள்.—சங்கீதம் 133:1-3.
18. உடன் விசுவாசிகளைக்குறித்த என்ன நோக்குநிலையைக் கொண்டிருக்கும்படி தெய்வீக போதனை நமக்கு உதவிசெய்கிறது?
18 உடன் விசுவாசிகளைக் குறித்த சரியான நோக்குநிலையைக் கொண்டிருப்பதற்கு நமக்கு உதவிசெய்வதிலும் தெய்வீக போதனை பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறது. இயேசு சொன்னார்: “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” (யோவான் 6:44) குறிப்பாக 1919 முதற்கொண்டு, யெகோவா தம்முடைய நியாயத்தீர்ப்புகளை அறிவிப்பதற்கு தம்முடைய ஊழியக்காரர்களைக் கொண்டிருக்கிறார், மேலும் இந்த உலகளாவிய எச்சரிப்பின் மூலமாக சாத்தானுடைய உலக ஒழுங்குமுறை அசைவிக்கப்பட்டும் அதிர்ச்சியூட்டப்பட்டும் இருக்கிறது. அதேசமயத்தில், கடவுள் பயமுள்ள மனிதர்கள்—‘விரும்பப்பட்டவர்கள்’—புறஜாதிகளிலிருந்து தங்களைப் பிரித்து யெகோவாவின் வணக்கத்துக்குரிய வீட்டை மகிமையால் நிரப்புவதில் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களோடு பங்குகொள்வதற்கு கடவுளால் இழுக்கப்பட்டும் இருக்கிறார்கள். (ஆகாய் 2:7) நிச்சயமாகவே, கடவுளால் இழுக்கப்பட்டவர்களாக இருக்கிற இத்தகைய விரும்பப்பட்டவர்களை அன்பான கூட்டாளிகளாக நாம் நோக்கவேண்டும்.
19. உடன் கிறிஸ்தவர்களோடு தனிப்பட்ட பிரச்னைகளை சரிசெய்வதைக்குறித்து கடவுளுடைய போதனை என்ன வெளிப்படுத்துகிறது?
19 நாம் அனைவரும் அபூரணராக இருப்பதால், நிச்சயமாகவே காரியங்கள் எப்பொழுதும் அமைதலாகச் செல்லாது. பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்திற்கு கிளம்ப இருக்கும்போது, பர்னபா மாற்கை கூட்டிக்கொண்டுசெல்வதில் தீர்மானமாய் இருந்தார். ‘பம்பலியா நாட்டிலே தன்னை விட்டுப் பிரிந்து தன்னோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே,’ பவுல் மாற்கை கூட்டிக்கொண்டுசெல்ல சம்மதிக்கவில்லை. அப்பொழுது, ‘கடுங்கோபமூண்டது.’ பர்னபா மாற்கை தன்னுடன் சீப்புருவுக்கு கூட்டிச்சென்றார், பவுலோ சீலாவைத் தெரிந்துகொண்டு சீரியாவுக்கும் சிலிசியாவுக்கும் சென்றார். (அப்போஸ்தலர் 15:36-41) பிறகு, இந்த முறிவானது தெளிவாகவே சரிசெய்யப்பட்டது, ஏனென்றால் மாற்கு பவுலோடு ரோமில் இருந்தார், மேலும் அந்த அப்போஸ்தலன் அவரைக்குறித்து உயர்வாகப் பேசினார். (கொலோசெயர் 4:10) தெய்வீக போதனையின் ஒரு நன்மையானது, மத்தேயு 5:23, 24 மற்றும் மத்தேயு 18:15-17-ல் இயேசு கொடுத்தது போன்ற இத்தகைய ஆலோசனையைப் பின்பற்றுவதன்மூலம் கிறிஸ்தவர்களுக்கு இடையேயுள்ள தனிப்பட்ட பிரச்னைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பதை அது நமக்குக் காட்டுவதாகும்.
என்றும் பயனுள்ளது மற்றும் வெற்றிசிறப்பது
20, 21. தெய்வீக போதனையை நாம் கலந்தாலோசிப்பது எதைச் செய்வதற்கு நம்மைத் தூண்டவேண்டும்?
20 தெய்வீக போதனையின் சில நன்மைகள் மற்றும் வெற்றிசிறத்தல்களின் நம்முடைய சுருக்கமான கலந்தாலோசிப்பிலிருந்தும்கூட, நம்முடைய வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பதில் விடாமுயற்சியாய் இருக்கவேண்டியதன் அவசியத்தை சந்தேகமில்லாமல் நாம் அனைவரும் காணமுடியும். அப்படியானால் ஜெபசிந்தையுள்ள ஆவியோடு, நம்முடைய மகத்தான போதகரிடமிருந்து நாம் தொடர்ந்து கற்றுக்கொள்வோமாக. சீக்கிரத்தில், முன்னொருபோதும் இல்லாத அளவுக்குத் தெய்வீக போதனை வெற்றிசிறக்கும். இந்த உலகத்தின் அறிவுஜீவிகள் தங்களுடைய கடைசி மூச்சை விட்டிருக்கும்போது அது வெற்றிசிறந்திருக்கும். (1 கொரிந்தியர் 1:19-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) மேலுமாக, லட்சக்கணக்கானோர் கடவுளுடைய சித்தத்தைக் கற்று, அதைச் செய்கிறபடியால், சமுத்திரத்தைத் தண்ணீர் நிரப்புகிறதுபோலவே, யெகோவாவின் அறிவு இந்தப் பூமியை நிரப்பும். (ஏசாயா 11:9) கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு எவ்வளவு மகத்துவமாக நன்மையளித்து, சர்வலோக அரசராக யெகோவாவை இது நியாயநிரூபணஞ்செய்யும்!
21 தெய்வீக போதனை என்றைக்கும் நன்மையளிப்பதாயும் வெற்றிசிறப்பதாயும் இருக்கும். கடவுளுடைய தலைசிறந்த பாடநூலின் ஓர் ஆர்வமிக்க மாணாக்கராக நீங்கள் அதிலிருந்து தொடர்ந்து பயனடைவீர்களா? பைபிளுக்கு இசைவாக நீங்கள் வாழ்ந்து, அதன் சத்தியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டுவருகிறீர்களா? அப்படியானால், நம்முடைய மகத்தான போதகர், சர்வலோக அரசர் கர்த்தராகிய யெகோவாவுடைய மகிமைக்காக, நீங்கள் தெய்வீக போதனையின் முழுமையான வெற்றியை எதிர்நோக்கியவர்களாய் இருக்கலாம்.
நீங்கள் என்ன கற்றிருக்கிறீர்கள்?
◻ தெய்வீக போதனை நம்முடைய வாழ்க்கையின்மீது என்ன விளைவைக் கொண்டிருக்கக்கூடும்?
◻ எவ்விதமாக யெகோவாவின் போதனை கல்விக்கான தேவைகளைப் பூர்த்திசெய்கிறது?
◻ நம்முடைய சிந்தனை மற்றும் மனப்பான்மையின்மீது தெய்வீக போதனை என்ன விளைவைக் கொண்டிருக்கக்கூடும்?
◻ மானிட உறவுகள் சம்பந்தமாக கடவுளுடைய போதனை எவ்விதமாக நன்மையளிப்பதாய் நிரூபிக்கிறது?
[பக்கம் 15-ன் படம்]
நோவாவைப்போல, கடவுளோடு சஞ்சரிப்பது எவ்வாறு என்பதைத் தெய்வீக போதனை
நமக்குக் காண்பிக்கிறது
[பக்கம் 17-ன் படம்]
எல்லா தேசத்து மக்களும் யெகோவாவின் பர்வதத்திற்கு திரண்டுவந்துகொண்டிருக்கின்றனர்