ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டார்கள்
அவர்கள் தெருக்களில் மற்றவர்களிடம் பேசுவதையும், வீட்டுக்கு வீடு சென்று பேசுவதையும், அல்லது அவர்களுடைய ராஜ்ய மன்றங்களில் கூட்டங்களுக்கு ஆஜராயிருப்பதையும் நீங்கள் தவறாமல் பார்த்திருப்பீர்கள். நேர்த்தியாக உடுத்தியிருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் இளைஞரைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்களுடைய பெற்றோர் அவ்வாறு இருக்கும்படி பயிற்றுவித்தக் காரணத்தால் அவர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள் என்பதாக நீங்கள் முடிவு செய்திருக்கலாம்; அவர்களில் அநேகருடைய காரியத்தில் அது உண்மையாக இருக்கிறது. மறுபட்சத்தில், அவர்கள் இப்போது வாழ்கிற வாழ்க்கைக்கு முற்றிலும் மாறானதாக இருந்த பழைய வாழ்க்கைமுறையைக் கொண்டிருந்த வெகு வித்தியாசமான பின்னணியை உடைய சிலரும் இந்த இளைஞர் மத்தியில் இருக்கின்றனர். உண்மையில், அடுத்த பக்கத்தில் காண்பிக்கப்பட்டுள்ளவர்கள், வன்முறையும் போதைப்பொருள் துர்ப்பிரயோகமும் தினசரி சம்பவங்களாக இருக்கும் தொகுதிகளுடன் கூட்டுறவு கொண்டிருந்தவர்களாவர். அவர்களுடைய வாழ்க்கையை அவ்வளவு முற்றிலுமாக மாற செய்தது எது? நார்வேயிலுள்ள ஒரு பட்டணத்திற்குச் சென்று, அத்தகைய மாற்றங்களைச் செய்துள்ள அங்குள்ள சில இளைஞரை நாம் சந்திப்போம்.
மாற்றத்திற்கான அஸ்திவாரம்
வீட்டுக்கு வீடு ஊழியத்தில், ஆனெட்டை இரண்டு சாட்சிகள் சந்தித்தபோது அவளுக்கு வயது 19. “யெகோவாவின் சாட்சிகளிடம் ஒருபோதும் பேசக்கூடாது என்பதாக நான் அடிக்கடி சொல்லப்பட்டேன், ஆனால் நான் அறிவார்வமுள்ளவளாய் இருந்தபடியால் அவர்களை உள்ளே அழைத்தேன்,” என்பதாக அவள் நினைவுகூருகிறாள். அவள் 11 வயது முதற்கொண்டு போதைப்பொருட்களை உபயோகிப்பவளாகவும், பல கொள்ளையடிப்புகளிலும் கார் திருட்டுகளிலும் உட்பட்டவளாகவும் இருந்திருக்கிறாள்.
ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தி அவளுக்குக் கவர்ச்சியூட்டுவதாய் இருந்தது. தன்னுடைய ஐந்தாவது வயதில் தன் தாயை இழந்திருக்கும் அவளுக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை குறிப்பாக உற்சாகமளிப்பதாய் இருந்தது. எனவே அவள் ஓர் இலவச பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு வரவும் துவங்கினாள். தன்னுடைய காதலனிடமும் மற்றவர்களிடமும் தான் கற்றுக்கொண்டிருந்ததைச் சொன்னாள். அதன் பிரதிபலன்? அவர்கள் அதோடு எவ்வித சம்பந்தமும் கொண்டிருக்க விரும்பவில்லை; மேலும் ஆனெட்டின் மனதையே மாற்றிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினர். இருந்தாலும், அவர்களில் மிகவும் எதிர்ப்பவர்களாக இருந்தவர்களில் சிலர், பின்னர் பைபிளைப் படிக்கத் துவங்கினர்.
ஓர் உதாரணத்திற்கு, 20 வயது இளைஞனான எஸ்பென்னை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் ஆனெட்டின் காதலனிடமிருந்து ராஜ்ய நற்செய்தியைப்பற்றி கேட்டு, உடனடியாக ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருக்க விரும்பினான். ஆயினும், அவன் போதைப்பொருட்களைக் கடத்துவதிலும் ஆனெட்டைப்போலவே பல கொள்ளையடிப்புகளிலும் ஈடுபட்டிருந்ததால், ஒரு நான்கு மாத சிறை தண்டனையைச் சேவிக்க காத்திருந்தான். அவன் புகையிலை, மரிஹுவானா, இன்னும் மற்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவனாகவும் இருந்தான். இப்போது, அத்தகைய காரியங்களில் உட்பட்டிருந்த ஒருவர் பைபிளைப் படிக்கத் துவங்க விரும்பும்படி செய்வது எது? எஸ்பென் தன்னுடைய வாழ்க்கை முறையின் வெறுமை மற்றும் நோக்கமற்ற தன்மையை உணர ஆரம்பித்தான். அவன் குறிப்பிடுகிறான்: “வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தைக் கொடுத்த, ஓர் எதிர்காலத்தைப்பற்றிய பைபிளின் வாக்குறுதிகளால் நான் கவரப்பட்டேன். ஆகவே என்னிடம் உண்மை சொல்லப்படுகிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக நான் படிக்க ஆரம்பித்தேன்.”
மற்றவர்கள் பைபிளைப் படிக்க விரும்பினார்கள்
ஏறக்குறைய இந்தச் சமயத்தில்தானே, அதே இளவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் நற்செய்தியைக் கேட்டு, அவனும் படிக்கவும் கூட்டங்களுக்குச் செல்லவும் துவங்கினான். பின்பு, ஒரு படிப்பு இந்த இளைஞரில் மற்றொருவனிடம் தொடங்கப்பட்டு, அவனும் கூட்டங்களுக்குச் செல்லத் துவங்கினான். சிறிது காலத்திற்குப்பின், இன்னுமொரு இளைஞன் பைபிள் படிப்பதிலும் ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்வதிலும் அவனுடைய நண்பர்களைச் சேர்ந்துகொண்டான். பின்னர் அதே தொகுதியிலுள்ள மற்றொரு இளைஞன், அவனுடைய நண்பர்கள் செய்யும் நல்ல மாற்றங்களால் கவரப்பட்டு, சிறிது காலத்தில், அவனும் ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருக்க விரும்பினான்.
அதே தொகுதியிலுள்ள கில்பெர்ட் என்ற ஓர் இளம் பாடகன், இப்போது பைபிளைப் படிக்க ஆரம்பித்தான். அவனுடைய பெற்றோர் இருவரும் புற்றுநோயால் மரணமடைந்திருந்தனர்; ஆகவே பைபிளின் உயிர்த்தெழுதல் நம்பிக்கையால் அவன் ஆறுதலளிக்கப்பட்டான். (யோவான் 5:28, 29) அவனும் மரிஹுவானா பயன்படுத்துபவனாக, ஓர் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்பவனாக இருந்தான்; ஒரு ராக் இசையின் பிரபல பாடகனாக வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருந்தான். இருந்தாலும், காலப்போக்கில், அவன் நல்ல ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்து, சீக்கிரத்தில் யெகோவாவுக்கு ஒரு சாட்சியாகவேண்டும் என்று தீர்மானித்தான். முடிவாக, எஸ்பென்னின் தம்பி பைபிளைக் குறித்து விசாரிக்கவும் சாட்சிகளுடன் கூட்டுறவு கொள்ளவும் துவங்கினான்.
பைபிள் சத்தியம் வாழ்க்கைகளை மாற்றியமைக்கிறது
ஒழுங்காக உடுத்திக்கொள்ளாமல், தலை சீவாமல், போதைப்பொருட்கள், திருட்டுகள், இன்னும் மற்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த இந்த இளைஞரில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஆனெட் ஒரு நல்ல ராஜ்ய பிரஸ்தாபியாக இருந்து சுமார் ஒரு வருடமாக ஒரு பயனியராக சேவித்திருக்கிறாள். எஸ்பென்னும் கில்பெர்ட்டும் துணை பயனியர்களாக சேவித்திருக்கின்றனர்; அவர்கள் உதவி ஊழியராகவும் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் கிறிஸ்தவ சபைக்குள் திருமணம் செய்திருக்கின்றனர். அந்தப் பழைய தொகுதியிலுள்ள மேலும் நான்கு பேர் வைராக்கியமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகள்!
எஸ்பென் சேவிக்க வேண்டியதாயிருந்த அந்த நான்கு மாத சிறை தண்டனையைப் பற்றியதென்ன? அவன் தன்னுடைய வாழ்க்கையில் செய்த மாற்றங்களுக்காக, அவனுடைய தண்டனை 80 மணிநேர சமூக வேலையாக மாற்றப்பட்டது. போலீஸார், இன்னும் மற்றவர்களுடைய ஒப்புதலுடன், அவன் இந்த மணிநேரங்களை யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் வேலை செய்து கழித்தான். போலீஸார் இந்த ஏற்பாட்டில் மிகவும் திருப்தியடைந்தனர்.
ஆம், உலகம் முழுவதிலும் இன்னும் அநேக இளைஞர் ஒரு குற்றவாளி பின்னணியைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கடவுளுடைய வார்த்தையின் சத்தியம் அவர்களுடைய அத்தியாவசிய கேள்விகளுக்குப் பதிலளித்து, எதிர்காலத்திற்கான ஒரு நிச்சயமான நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. எனவே, அவர்கள் இனிமேலும் குற்றவாளிகளோ போதைப்பொருட்களைப் பயன்படுத்துவோரோ அல்ல, அவர்கள் ஒழுங்கற்றவிதத்தில் உடுத்திக்கொண்டு திரிவதுமில்லை. தங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தவர்களாக, அவர்கள் மேற்சொல்லப்பட்ட மக்களைப் போலவே—இளைஞராக, நன்கு உடுத்தியவர்களாக, யெகோவாவின் சுறுசுறுப்பான சாட்சிகளாக—இருக்கிறார்கள். இன்று பல இளைஞருக்கு இருக்கும் பிரச்னைகளுக்குப் பைபிள் நிலையான பரிகாரங்களைக் கொண்டிருக்கிறது என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறார்கள்.—1 கொரிந்தியர் 6:9-11-ஐ பாருங்கள்.
[பக்கம் 8-ன் படம்]
எஸ்பென், ஆனெட், கில்பெர்ட்