யெகோவாவின் சாட்சிகள்—பெயருக்குப் பின்னாலிருக்கும் அந்த அமைப்பு
அக்டோபர் 6, 1990 அன்று உவாட்ச்டவர் பைபிள் அண்டு ட்டிராக்ட் சொஸையிட்டியின் வருடாந்தர கூட்டத்துக்காக அ.ஐ.மா., நியூ ஜெர்சியில், ஜெர்சி நகரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டு மன்றத்தில் கூடியிருந்த கிட்டத்தட்ட 5,000 பேர் அடங்கிய கூட்டத்துக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அக்கிராசனர் ஜான். E. பார், யெகோவாவின் சாட்சிகள்—பெயருக்கு பின்னாலிருக்கும் அந்த அமைப்பு என்ற தலைப்புடைய 55-நிமிட வீடியோ வெளியீடு பற்றி சபையாருக்குத் தெரிவித்தார். இதுவே சங்கம் வெளியிட்டிருக்கும் முதல் வீடியோ, ஆனால் நிச்சயமாகவே கடைசியானது அல்ல.
யெகோவாவின் மக்கள் எவ்விதமாக தெய்வீக நாமத்துக்கு சாட்சி கொடுக்கவும், “ராஜ்யத்தின் நற்செய்தி”யை அறிவிக்கவும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வீடியோ காண்பிக்கிறது. (மத்தேயு 24:14) நியூ யார்க், புரூக்லினிலுள்ள தலைமைக் காரியாலயமும் உவாட்ச்டவர் பண்ணைகளிலுள்ள வசதிகளும் உயர்த்திக் காண்பிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் 5,00,000-க்கும் அதிகமான டேப் பிரதிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது (அல்லது விரைவில்) இன்னும் 26 மொழிகளில் இது கிடைக்கும்.a
பிரதிபலிப்பு எப்படி இருந்திருக்கிறது?
யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்கள் வீடியோவுக்கு எவ்விதமாக பிரதிபலித்திருக்கிறார்கள்? வியாபாரி ஒருவர் பின்வருமாறு எழுதினார்:
“டேப் மிகச் சிறந்த தரமுள்ளதாக இருப்பதை நான் கண்டேன். உருவங்களின் தெளிவும் சிறப்பான தொகுப்பும் குறிப்பாக என்னைக் கவர்ந்தது. அது ஒரு டேப் என்பதையே மறந்து அதிகமாக அதை ஒரு திரைப்படமாகவே கருதும் மனச்சாய்வு எனக்கிருந்தது. உங்கள் நியூ யார்க் தலைமைக் காரியாலயத்தின் நோக்கத்தை விளக்குவதில் இந்த டேப் தனிச்சிறப்பு வாய்ந்த முறையில் பயனுள்ளதாக இருக்கவேண்டும். குறிப்பிடத்தக்க இந்தப் படைப்புக்கு உங்களுக்குப் பாராட்டுக்கள்.”—J. J.
யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கிறவர்கள் இந்த வீடியோவை பார்ப்பதன் மூலம் பயனடைந்திருக்கிறார்கள். ஏன் என்பதை பின்வருவது விளக்குகிறது:
“நான் உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் 20 வயது நிரம்பிய ஓர் இளம் மனிதனோடு பைபிளை படித்துவருகிறேன். மோசமாகிக்கொண்டே போகும் உலக நிலைமைகளைக் குறித்து அவன் கவலையுள்ளவனாக இருந்தான். ஆனால் அந்த டேப்பைப் பார்த்து வாழ்க்கையில் உண்மையான ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்த இளம் பெத்தேல் சகோதரர்களைப் பார்த்தப் பிறகு அவனுடைய முழுமனநிலையும் மாறிவிட்டிருக்கிறது. அவன் நம்முடைய விசேஷ மாநாட்டுத் தினத்துக்கு வந்திருந்து வாரத்துக்கு இரண்டுமுறை அவனோடு பைபிளைப் படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருக்கும் மற்றொரு பைபிள் மாணாக்கர், தன் உறவினர்களுக்கு காண்பிக்க வீடியோவை இரவல் வாங்கிக்கொண்டு போனார். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் ஏதோ ஒரு வலிமையற்ற, பிரபலமாக இல்லாத, ஒரு சிறிய அமைப்பு என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். யெகோவாவுக்கு நன்றியுண்டாக, நம்முடைய வேலையின் உலகளாவிய தன்மையும் நம்முடைய வெற்றியையும் பார்த்து அவர்கள் பிரமித்துப்போனார்கள்.”—J. B.
“இந்த வீடியோவைப் பார்த்தப் பிறகு நான் பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி ஆனந்தக் கண்ணீரோடும் போற்றுதலோடும் பொங்கிவழிந்ததை நான் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவள் கண்ணீரோடுச் சொன்னாள்: ‘இதுவே மெய்க் கடவுளாகிய யெகோவாவின் அமைப்பு என்பதை எப்படி எவரும் காணாமல் இருக்கமுடியும்? இப்படிப்பட்ட ஆட்கள் இருப்பது எனக்கு ஒருபோதும் தெரியாது.’ பின்னர் அவள் சொன்னாள்: ‘நான் முழுக்காட்டுதல் பெற விரும்புகிறேன்.’”—C. D.
“பைபிள் மாணாக்கரோடு வீடியோவைப் பயன்படுத்தி நாங்கள் அதிகமாக வெற்றி கண்டிருக்கிறோம். நேற்றிரவு என்னுடைய மனைவியின் பைபிள் மாணாக்கருடைய கணவர் இங்கே வந்திருந்தார். அவர் மிகவும் எதிர்க்கிறவராக இருந்திருக்கிறார். அவர் வீடியோ பார்த்தார். அதன் பின்னர் கேள்விகளைக் கேட்டார். ஒரு பைபிள் மற்றும் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற பைபிள் உதவி புத்தகத்தையும் அவர் எடுத்துச்சென்றிருக்கிறார். இதற்கு முன்னால் அவர் தன்னுடைய மனைவியின் பைபிள் பிரசுரங்கள் அனைத்தையும் எரித்துவிட்டிருந்தார்!”—D. H.
இளைஞரும்கூட பின்வரும் குறிப்புகள் காண்பிக்கிறபடி, வீடியோ கருத்தைக் கவருவதாக இருப்பதைக் கண்டிருக்கிறார்கள்:
“எனக்கு ஆறரை வயதாகிறது. பைபிள்களைப் பற்றியும் பெட்டிகள் வேகமாக இடம் மாறிய அந்தப் பகுதியும் எனக்குப் பிடித்திருந்தது.”—K. W.
“எங்களுடைய இளம் பிள்ளைகள் அவர்கள் டிவி-யில் பார்க்கும் எந்த நிகழ்ச்சியையும்விட அது மேம்பட்டதாக இருந்ததாகச் சொன்னார்கள்.”—R. C.
“இரண்டாவது தடவை வீடியோவை பார்த்தப் பிறகு மிகவும் கூர்ந்து முழுவதுமாக கவனித்துக்கொண்டிருந்த எங்கள் ஐந்து வயது மகன், ‘இதை ஒவ்வொரு நாளும் நாங்கள் பார்க்கலாமா?’ என்று கேட்டான். எங்கள் மூன்று வயது மகள் அவனைச் சேர்ந்துகொண்டு ‘நான் பெத்தேலுக்குச் சென்று புத்தகங்கள் செய்யப்போகிறேன்,’ என்ற சொன்னாள்.”—M. E.
“என்னுடைய பிள்ளைகள் ராபின் மற்றும் ஷன்னன், 12 மற்றும் 9 வயதிலிருப்பவர்கள், திரும்பத் திரும்ப இந்த டேப்பைப் போட்டு பார்க்கிறார்கள். என் இளைய மகள் டேப்பைப் பார்த்தப் பின், ‘நான் வெளிஊழியத்துக்குச் செல்ல ஆசைப்படுகிறேன். அது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது,’ என்றாள். இந்த வீடியோ எங்கள் குடும்ப வாழ்க்கையின்மீது நேரடியான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பார்ப்பதற்கு பாதுகாப்பானது என்பதாக நீங்கள் உணரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிநிரல் ஒன்றைப் பார்த்து எத்தனை புத்துயிரளிப்பதாக இருக்கிறது!”—N. B.
“எனக்கு 131/2 வயது ஆகிறது. புதிய வீடியோ, யெகோவாவிடமிருந்து வரும் அதிசயமான ஏற்பாடுகளை நான் எத்தனை சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிடுகிறேன் என்பதை உணரவைத்தது. கடவுளுடைய ஜனங்களில் ஒருவராக இருப்பது ஒரு சிலாக்கியமாக இருக்கிறது.”—K. W.
“எனக்கு 16 வயதாகிறது. இந்த வீடியோ, இப்பொழுது செய்யப்பட்டுவரும் வேலையானது உலகளாவியது என்பதை என் மனதில் ஆழமாக பதிய வைக்க உதவியிருக்கிறது.”—A. M.
“உண்மையான தேவராஜ்ய பொழுதுபோக்குகள் எவ்விதமாக இருக்கக்கூடும் என்பதைப் பார்த்ததன் விளைவாக வழக்கமாக அவர்கள் பார்க்கும் டிவி கவர்ச்சி இழந்துவிட்டதாக எங்கள் பிள்ளைகள் சொன்னார்கள். முழு நேர ஊழியத்தில் பிரவேசிப்பதற்கு அவர்களுக்கிருந்த ஆசையையும்கூட அது பலப்படுத்தியிருக்கிறது.”—L. M.
அநேக வருடங்களாக யெகோவாவின் சாட்சிகளாக இருந்துவருகிறவர்களும்கூட அவர்கள் பார்த்தக் காரியத்தால் உந்துவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
“வீடியோ, யெகோவாவின் மக்களாக எங்கள்மீது இத்தகைய ஒரு விளைவை விட்டுச்செல்லுமானால் அது மற்றவர்களை எத்தனை அதிகம் பாதிக்கும்? இந்த ஒழுங்குமுறையைச் சமாளிப்பது அதிக கடினமாக இருக்கையில் நான் 1 மணிநேரம் செலவழித்து என் பகல்நேர அறையில் வசதியாக இருந்துகொண்டே பெத்தேலுக்குச் செல்கிறேன்!”—K. B.
“ஒவ்வொரு வேலையிலும் உட்பட்டிருக்கும் கவனத்தையும் நுணுக்கத்தையும் பார்த்தப் பிறகு, எனக்கு அறைக்குள் சென்று என் பைபிள் பிரசுரங்களை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.”—L. P.
யெகோவாவின் சாட்சிகள்—பெயருக்குப் பின்னாலிருக்கும் அந்த அமைப்பு என்ற வீடியோவைப் பார்க்க நேரமெடுத்துக்கொள்ளுமாறு உங்களையும்கூட நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். அது வாழ்க்கையின்மீது வித்தியாசமான ஒரு நோக்குநிலையை உங்களுக்கு அளித்து பாதுகாப்பான ஓர் எதிர்காலத்தில் நம்பிக்கை வைப்பதற்கு உங்களுக்கு உதவிசெய்யும்.
[அடிக்குறிப்புகள்]
a அமெரிக்க அடையாள மொழி, அரபிக், பாஸ்க், கான்டோனீஸ், கட்டாலியன், குரோவேஷன், செக், (போஷிமியன்), டேனிஷ், டச், ஃபின்னிஷ், ஃபிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கு, ஹங்கேரியன், இத்தாலியன், ஜப்பானீஸ், கொரியன், மான்டரின், நார்வீஜியன், போலிஷ், போர்ச்சுகீஸ் (பிரேஸில்), போர்ச்சுகீஸ் (ஐரோப்பா), ருமேனியன், ஸ்லோவாக், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ்.