உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசித்தல்
ஒழுக்கத்தில் கோணலும் மாறுபாடுமாக சீரழிந்துள்ள ஓர் உலகில் மெய்க் கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதிலும் ஒளியின் ஊற்றாக இருக்கவேண்டும், இருண்ட உலகில் அவர்கள் சுடர்களாக இருக்கவேண்டும். (பிலிப்பியர் 2:14) அநேக ஆயிரக்கணக்கானோர் பயனியர்களாக அல்லது முழுநேர பிரசங்கிப்போராக இதைச் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் இந்த ஊழியத்தில் அதிகமான வருடங்களைச் செலவழித்து, எல்லா வகையான ஆட்களும் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாவதற்கு தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வதைக் காண்பதன் மூலம் பலனளிக்கப்பட்டிருக்கிறார்கள்.—மத்தேயு 28:19.
இந்தப் பரிசுத்த சேவையில் தொடர்ந்திருப்பதற்கும் தங்கள் போதிக்கும் திறமைகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் இந்தப் பயனியர்களை ஊக்கிவிப்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் பயனியர் ஊழியப் பள்ளியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது பயனியர்களுக்குப் பின்வரும் மூன்று பகுதிகளில் உதவி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட பைபிள் அடிப்படையிலான பத்து நாள் பயிற்சி ஆகும்: இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக யெகோவாவோடு நடத்தல்; முழு சகோதர கூட்டுறவுக்காகவும் அன்பில் பெருகுதல்; உலகத்தில் சுடர்களைப் போல பிரகாசித்தல்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பயனியர் பள்ளி
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரான பங்குய்-ல் 48 மாணாக்கர்களும் 2 போதனையாளர்களும் ஆகஸ்ட் 1991-ல் ஒன்றாக கூடிவந்தார்கள். மாணாக்கர்கள் அவர்களுடைய வேலைக்கு அறிவுரைகளையும் நடைமுறையான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள இருந்தார்கள். பங்குய் வகுப்பைப் பற்றியதில் கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது என்ன?
ஒரு காரியமானது, மாணாக்கரில் 21 பேர் இன்னும் உலகப்பிரகாரமான பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்கள். பள்ளியில் இருக்கையிலே அவர்களால் ஒழுங்கான பயனியர் ஊழியத்துக்கு இடமளிக்க முடிந்திருக்கிறது. அவர்கள் பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்கும் விடுமுறை மாதங்களையும் வார இறுதி நாட்களையும் பிற்பகல் நேரத்தையும் பயன்படுத்திக்கொண்டார்கள்.
இந்த இளைஞர், தங்கள் சிருஷ்டிகரை இப்பொழுது சேவிப்பதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். (பிரசங்கி 12:1; 1 கொரிந்தியர் 7:29 ஒப்பிடவும்.) இவர்களில் 12 பேர் அவிசுவாசிகளான பெற்றோரை உடையவர்களாக இருப்பது கவனிக்கத்தக்கதாகும். வீட்டில் அவர்கள் சத்தியத்தில் தன்னந்தனியாக இருந்தார்கள். இரண்டு இளம் பையன்கள், உடன்பிறந்த சகோதரர்கள், அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக அவர்களுடைய தந்தையால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சபையிலுள்ள ஓர் இளம் தம்பதியினர் இந்த இரண்டு பையன்களை தங்களோடு வந்து தங்க அனுமதித்திருக்கின்றனர்.
மீகே மற்றும் சூலாமீட் காலெப்பின் விஷயம் வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள் இருவரும் பயனியர்களாக இருக்கின்றனர், அவர்களும்கூட பள்ளிக்குச் செல்கின்றனர், ஆனால் அவர்களுடைய பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கின்றனர். உண்மையில் அவர்களுடைய தந்தை அதே வகுப்பில் மாணாக்கராக இருந்தார்!
பங்குய்-லுள்ள சபைகளும்கூட பள்ளியில், வித்தியாசமான முறையில் பங்குகொண்டன. அவை உணவு போன்ற சரீர தேவைகளைக் கவனித்துக்கொண்டன. பணமும், கோழி இறைச்சியும், சர்க்கரையும், அரிசியும், கிழங்கும் வகுப்பிலுள்ளவர்களைப் போஷிப்பதற்காக நன்கொடையாக வழங்கப்பட்டன.
எளிமையான ஆனால் சுவையான உணவு தயாரிப்பதற்குச் சமையலறை பணியாளர் தொகுதிகளை அருகாமையிலுள்ள சபைகள் ஒழுங்குசெய்தன. மத்திய ஆப்பிரிக்க குடியரசு எங்கூன்ஸ்-விற்குப் பிரபலானது, இது அனைவரும் விரும்பும் ஒரு பதார்த்தமாகும். செய்முறை? கிழங்கு இலைகள், பாம் எண்ணெய், வெங்காயம், நிறைய வெள்ளைப் பூண்டுகள், கணிசமான அளவு நிலக்கடலை வெண்ணெய் மற்றும் இவற்றை முழுமையாக சமைக்க பொறுமை, ஒவ்வொரு பணியாளர் தொகுதியும் தன் சொந்த விசேஷித்த முறையில் இதைத் தயார் செய்தது. அது மிகவும் வெற்றிகரமாக இருந்தது; எவராலும் அதைச் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை.
பங்குய்-க்கு வெளியே பவாரில் ஒன்றும் பாம்பாரியில் ஒன்றுமாக வேறு இரண்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. மொத்த மாணாக்கரின் எண்ணிக்கை 68 ஆக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளின்போது மத்திய ஆப்பிரிக்க குடியரசு பயனியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் கண்டிருக்கிறது. ஜனவரி 1992-ன்போது, 149 ஒழுங்கான பயனியர்களும் 17 விசேஷித்த பயனியர்களும் 78 துணைப் பயனியர்களும் இருந்தனர். இது பிரஸ்தாபிகள், மணிநேரங்கள், மறு சந்திப்புகள் மற்றும் பைபிள் படிப்புகளில் புதிய உச்சநிலைகளோடு முழு தேசத்திலும் அதிகரிக்கப்பட்ட நடவடிக்கையில் விளைவடைந்திருக்கிறது. வேலையாட்கள் அதிகமாக இருக்கையில், அறுப்பு அதிகரிக்கிறது.—ஏசாயா 60:21, 22; மத்தேயு 9:37, 38.
இந்த ஏற்பாடுகளுக்காக யெகோவா தேவனுக்கும் இந்த வகுப்புகளை ஏற்பாடு செய்ததற்காக அவருடைய பூமிக்குரிய அமைப்புக்கும் நம்முடைய நன்றி உரித்தாகுகிறது. அவை இருண்ட இந்த உலகில் சுடர்களைப் போல பிரகாசிக்க மாணாக்கருக்கும் போதனையாளர்களுக்கும் ஒன்றுபோல் உதவிசெய்கின்றன.
[பக்கம் 24-ன் படம்]
இருபத்தோரு பயனியர்-பள்ளி மாணாக்கர்கள் இன்னும் உயர்நிலைப் பள்ளியில் இருக்கின்றனர்
[பக்கம் 25-ன் படம்]
இந்த இரண்டு பையன்கள் சத்தியத்தின் நிமித்தமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று