புதிய புத்தகம் இலட்சக்கணக்கானோரை கிளர்ச்சியடையச் செய்கிறது
கடந்த ஜூன் மாதம் ஆரம்பமான “சுயாதீனப் பிரியர்” மாநாடுகளின் விசேஷ அம்சம் “எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்” என்ற பேச்சாகும். அதே தலைப்பைக் கொண்ட ஒரு புத்தக வெளியீடு அதன் சிறப்பு அம்சமாக இருந்தது. உலகம் முழுவதிலும் அறுபது லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் ஏற்கனவே இந்தத் தொடர் மாநாடுகளுக்கு ஆஜராயிருந்து பேச்சை கேட்டிருக்கின்றனர். இந்தப் பேச்சு பத்திரிகையின் முந்தைய இரண்டு கட்டுரைகளில் சிறிய மாற்றங்களோடு வெளியாகியிருக்கிறது.
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம் 1 கோடி 20 லட்சம் பிரதிகள் சுமார் 60 மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பிய மொழிகளான அல்பேனியன், க்ரோஷியன், ஹங்கேரியன், மேசிடோனியன், போலிஷ், ரஷ்யன், செர்பியன் மற்றும் ஸ்லோவியனிலும் கூட அது கிடைக்கிறது. விசேஷமாக சோவியத் யூனியனில் நடந்த ஏழு மாநாடுகளில் ஆஜராயிருந்த 74,000-க்கும் மேற்பட்டவர்கள் ரஷ்ய மொழியில் அதைப் பெற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
புத்தகத்தின் ஆரம்பம்
1985, ஏப்ரல் 1 முதற்கொண்டு புத்தகத்திலுள்ள தகவல், தொடர் கட்டுரை வடிவில் தொடர்ச்சியாக காவற்கோபுரம் பிரதிகளில் வெளி வந்திருக்கிறது. இத்தொடர் 1991, ஜூன் 1 பிரதியில் முடிவுற்ற போது அநேக வாசகர்கள் வருத்தமடைந்ததாகச் சொன்னார்கள். இத்தாலியிலுள்ள 12-வயது மெலிஸாவுக்கு காவற்கோபுரத்தில் கடைசி பதிவை வாசிக்கையில் கண் கலங்கியது. “நமது மாநாட்டுக்கு முந்தின இரவு, இயேசுவின் வாழ்க்கைப் பற்றி ஒரு புத்தகம் கேட்டு யெகோவாவிடம் ஜெபித்தேன். புத்தகம் வெளியிடப்பட்ட போது, என்னால் கைத்தட்ட முடியாமல் போகும்வரை என் கைகளைத் தட்டினேன்.”
காவற்கோபுரத்தில் தொடராக வந்த தகவல் தொகுத்து அமைக்கப்பட்டு அழகான படங்களோடு 133 அதிகாரங்கள் கொண்ட 448-பக்க புதிய புத்தகத்தில் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இயேசு ஆற்றிய ஒவ்வொரு பேச்சையும் எல்லா உவமைகளும் அற்புதங்களும் உட்பட அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு சம்பவத்தையும் அளிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. கூடிய வரை, அனைத்துமே அது சம்பவித்த வரிசை கிரமத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும், அதிகாரத்தின் ஆதாரமாக இருக்கும் பைபிள் வசனங்களின் ஒரு பட்டியல் இருக்கிறது.
‘சரி, காவற்கோபுரத்தில் தொடர் கட்டுரைகளை நான் வாசித்திருக்கிறபடியால் ஏற்கனவே நான் புத்தகத்தை வாசித்துவிட்டேன்’ என்பதாக எவராவது ஒருவர் யோசித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் காவற்கோபுரம் வாசகர்கள், ஆறு வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த கட்டுரைகளில் அளிக்கப்பட்டிருந்த இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய பதிவுகளை சிறு பகுதிகளாக பெற்றுக்கொண்டார்கள். தொடர் கட்டுரைகளாக இவை தகவல் நிறைந்தவையாக இருந்தபோதிலும், முழு பதிவையும் குறுகிய காலப்பகுதியில் வாசித்து எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதரின் முழு வருணனையைக் காண்பதிலிருக்கும் கிளர்ச்சியை கற்பனைச் செய்து பாருங்கள்!
விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது
“நான் பிரசுரத்தை இரண்டே வாரங்களில் வாசித்து முடித்துவிட்டேன்,” என்பதாக அ.ஐ.மா.-ல் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து வரும் பெண்மணி தெரிவிக்கிறார். “நான் வாசித்துக் கொண்டிருக்கையில் என் கண்களில் நீர் வழியும். நான் வாசிப்பதை நிறுத்திவிட்டு ஜெபம் செய்து பின்னர் அழுவேன். நான் அங்கே இயேசுவோடு கூட வேதனையை அனுபவித்தது போல அது என்னை உணரச் செய்தது. புத்தகத்தை வாசித்து ஒரு வாரத்துக்குப் பிறகும்கூட, நான் வாசித்ததைப் பற்றி யோசிக்கையில் என் கண்கள் இன்னும் கலங்கின. தம்முடைய குமாரனை கொடுத்தமைக்காக நான் யெகோவாவிடம் இன்னும் நெருக்கமாக உணருகிறேன்.”
“இயேசுவைப் பற்றிய புத்தகத்தை நான் இன்று முடித்துவிட்டேன்,” அ.ஐ.மா-ல் பென்சில்வேனியா, பிட்ஸ்பர்க்கிலிருந்து வரும் ஒரு பெண்மணி எழுதினார். “அது அற்புதமாக இருந்தது. கடைசி சில அதிகாரங்களை நான் வாசிக்கையில் கண்ணீர் வடித்தேன். முழு புத்தகத்தையும் ஒரே சமயத்தில் வாசிப்பது அவ்வளவு நன்றாக இருந்தது. அதைக் குறித்து நான் எவ்வாறு உணருகிறேன் என்பதை என்னால் உண்மையில் விவரிக்க முடியாது—நான் அதை அவ்வளவு விரும்பினேன் என்று மட்டுமே சொல்லமுடியும்!”
போற்றுதலுள்ள வாசகர் ஒருவர் குறிப்பிடும் வண்ணமாக, புத்தகத்திலுள்ள அழகான படங்கள் உணர்ச்சிப் பூர்வமான பாதிப்பை ஏற்படுத்த காரணமாயிருக்கிறது: “மரித்துப் போன ஒரு குழந்தைக்காக அவர்கள் அழுவதை ஏறக்குறைய என்னால் கேட்க முடிவது போல என்னை உணரச் செய்கிறது (அதிகாரம் 47) அல்லது இரத்தப் போக்குள்ள ஒரு ஸ்திரீ இயேசுவைத் தொட்டு, குணமானபோது இயேசு என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிந்திருப்பது போல உணரச்செய்கிறது. (அதிகாரம் 46) அவர்களுடைய முகபாவனைகள் அத்தனை நிஜமாக இருப்பதால் அது வேதனையடையச் செய்கிறது. . . . வாசிப்பது ஒரு வேலையாக இருப்பதற்கு பதிலாக, இந்தப் புத்தகம் அதிகமாக ஒரு பொழுதுபோக்கைப் போல அல்லது என்னுடைய நாளின் முடிவில் ஒரு விருந்தைப் போல இருக்கிறது. புத்தகம் உணர்ச்சிகளோடு எழுதப்பட்டிருப்பது இயேசு என்ன செய்தார் என்பதை மட்டுமல்ல, ஆனால் அவர் என்ன நினைத்தார் மற்றும் உணர்ந்தார் என்பதைப் பற்றிய ஒரு காட்சியை தருகிறது.”
பல்வேறு உபயோகங்கள்
அநேகர் தங்கள் குடும்ப பைபிள் படிப்பில் புத்தகத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டிருக்கிறார்கள். “எங்களுக்கு மூன்று சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்தப் புத்தகம், தினசரி இரவு குடும்ப படிப்புக்கு நேர்த்தியாக இருக்கிறது” என்பதாக அ.ஐ.மா., ஓரிகானில், சில்வாடரிலிருக்கும் பெற்றோர் எழுதினார்கள். உண்மையாகவே, நம்முடைய அன்புள்ள அரசராகிய கிறிஸ்து இயேசுவின் பின்னணியை கவனமாக படிப்பது எத்தனைப் பொருத்தமாக இருக்கிறது.”
ஜப்பானிலிருந்து ஒரு பருவ வயது பெண் விளக்குகிறாள்: “மாலை உணவுக்குப் பின் நாங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் என் அப்பா இதை வாசித்துக் காண்பிப்பார். ஒரு குடும்பமாக நாங்கள் ஆரம்பத்திலிருந்து வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நான் தூங்கப் போவதற்கு முன் புத்தகத்தின் பின்பக்கத்திலிருந்து இரவில் ஓர் அதிகாரம் வாசிக்க தீர்மானித்தேன். என்றபோதிலும், புத்தகம் அத்தனை கவர்ச்சியுள்ளதாக இருப்பதன் காரணமாக, அநேகமாக நான் நேரத்தைப் பார்ப்பதற்குள் ஒரு மணியாகிவிடுகிறது.”
அநேகர் பதிவில் எத்தனை விவரங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர். “எனக்குத் தெரிந்திராத அநேக காரியங்களை நான் கற்றுக்கொண்டேன்” என்பதாக ஒரு சாட்சி எழுதினார். அ.ஐ.மா.-ல் கலிபோர்னியாவிலிருந்து வந்த கடிதம் சொன்னதாவது: “என் மனைவியும் நானும் 35-க்கும் மேலான வருடங்களாக சத்தியத்தில் இருக்கிறோம். ஆனால் இதுபோன்று அத்தனை கிளர்ச்சியூட்டுவதாய் இருந்த எந்த ஒரு பிரசுரத்தையும் நாங்கள் கொண்டிருந்தது கிடையாது என்று நேர்மையாக எங்களால் சொல்ல முடியும்.”
யெகோவாவின் சாட்சிகள் இயேசுவை நம்புவது கிடையாது என்ற பொய்யை தகர்த்திட புத்தகம் உதவியாக இருக்க வேண்டும். நன்றியுள்ள ஒரு வாசகர் இவ்விதமாகச் சொன்னார்: “யெகோவாவின் மக்கள் இயேசுவை விசுவாசிப்பதோ அல்லது கனப்படுத்துவதோ இல்லை என்று சொல்லும் ஆட்களின் அறியாமைக்கு இது மிகப் பெரிய எதிரடியாக இருந்த காரணத்தால் அதை என்னால் கீழே வைக்க முடியவில்லை.” நாம் இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் அவர்களுடைய அறியாமைக்கான இந்தப் பதிலை அவர்களுக்குக் கொடுப்பதே ஆகும்.”
நிச்சயமாகவே இந்தப் புத்தகம் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தில் முக்கியமான ஓரிடத்தைக் கொண்டிருக்கும். “நான் பைபிள் படிப்பை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணிக்கு இதன் பிரதி ஒன்றை நான் கொடுத்தேன்” என்று ஒரு சாட்சி எழுதினார். “அது அவள் மீது ஏற்படுத்திய பாதிப்பு ஓர் அற்புதம் போல தோன்றுகிறது. அவள் ஒரு வருடமாக படித்துக் கொண்டிருக்கிறாள், கூட்டங்களுக்கு அவளை வரச்செய்வதில் எனக்கு பிரச்னை இருந்தது.” புதிய புத்தகத்தில் 45 அதிகாரங்களை மாணாக்கர் வாசித்தப் பிறகு, தன்னுடைய நிலைநிற்கையை எடுப்பதற்குரிய நேரமாக அது இருந்தபடியால் தான் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் இருக்கப் போவதாக சொன்னாள் என்று சாட்சி விளக்கினார்.